தொகுப்புகள்

வியாழன், 25 மே, 2023

தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட 22ஆம் ஆண்டில் அடியெடுத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



மகளுக்கு சில நாட்களாகவே ரொம்ப அதிகமான முடியுதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தது! அடர்த்தியும் குறைந்து கொண்டே வருகிறது! நீளமான இந்தக் கூந்தலை பராமரிக்க நான் எவ்வளவு வருடங்கள் பாடுபட்டிருப்பேன்! வெட்டிக் கொள்வதில் அவளுக்கும் விருப்பமில்லை! என்ன செய்யலாம் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது!!


சமீபத்திய டெல்லி பயணத்தில் உறவினரை சந்தித்த போது எண்ணெய் காய்ச்சி பயன்படுத்த  டிப்ஸ் கொடுத்தார்! என் அம்மாவும் எனக்கு கறிவேப்பிலை, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதாணி என்று எல்லாவற்றையும் அரைத்து எண்ணெய் காய்ச்சி தான் குடுப்பாள்! கைகொள்ளாத அடர்த்தியுடன் இடுப்பு வரை இருந்தது! அதெல்லாம் இப்போது கனவாய் போன விஷயம்! சொல்லிப் பிரயோஜனமில்லை!  ஹார்மோனல் இம்பேலன்ஸில் எல்லாமே மாறி விட்டது..🙁


மகளின் முடியையாவது பாதுகாக்கணுமே! என்ன செய்யலாம்! உறவினர் சொன்ன பக்குவத்தை நினைவில் கொண்டு ஆன்லைனில் எண்ணெய் தேடினால் ஆனை விலை! குதிரை விலை! என்று அம்மா சொல்வது போல் அவ்வளவு விலை!! சரி! இதெல்லாம் சரிபட்டு வராது!  நாமே களத்தில் இறங்கிட வேண்டியது தான்..🙂


அதே காம்பினேஷனில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கின சூப்பரான எண்ணெய் இது! 10 சின்ன வெங்காயத்துடன், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையும், சிறிதளவு  கருஞ்சீரகமும், வெந்தயமும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து தேங்காயெண்ணையுடன் காய்ச்ச வேண்டியது தான்! Small onion black seed oil ரெடி..🙂 


சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாறை தலையில் தடவிக் கொண்டு அரை மணி ஊறியதும் குளிக்கலாம்! ஆனால் அது சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒத்து  வராது என்பதால் இப்படி எண்ணெயில் காய்ச்சி பயன்படுத்துவதே சிறந்தது! 


வெங்காயம் எண்ணெயில் பொரிவதனால் அதை பயன்படுத்தும் போது பக்கோடாவின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை...🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

10 கருத்துகள்:

  1. பரவாயில்லை, எல்லாம் அறிந்த்து வைத்திருக்கிறீர்கள்.  பலன் எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலன் எப்படி - இனிமேல் தான் தெரியும் என நினைக்கிறேன் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எனக்கும் 17 வயதிலேயே இளநறை ஆரம்பித்துவிட்டது மேடம்.
    இப்போது 37 வயதுவரை இந்த வெங்காய நல்லென்னெய் காம்பினேஶனை வாரம் ஒருமுறை தலையில் வைத்து வாக்கிங் சென்ரு வந்து குளிக்கிறேன்.
    இப்போது வெள்ளை மடி 37 வயதிலும் வெளியே தெரியவில்லை.
    3 வயதில் வந்த சொட்டை மட்டும் தீராது என தோன்றுகிறது.
    இவையெல்லாம் வெளிப்பூச்சு மட்டுமே. உடல் குளிரும்படி உணவுமுறையை அமைத்துக்கொள்ளவேண்டும். புளிப்பு, சூடு, வறுத்த உணவுகளை முடிந்தமட்டும் குறைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நீண்டநாள் நிவாரனம் கிடைக்கும் என சொல்கிறார்கள். செயர்க்கை இனி்ப்புதான் முடியின் மிகப்பெரிய எதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளநரை எனக்கு இருபதில் - தலைநகர் வந்ததும் ஆரம்பித்து விட்டது அரவிந்த். தங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. நேற்றைய பதிவு - மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    ஊரில் இருந்த வரை, மருதாணி, வெந்தயம் கரிசலங்கண்ணி எல்லாம் போட்டு க் காய்ச்சிய தேங்காய் எண்ணைதான் பயன்படுத்தியதுண்டு.

    நீங்கள் செய்திருக்கும் முறையும் நல்லாருக்கே...பலன் தெரிந்ததும் சொல்லுங்கள். (எனக்கில்லை - என் தங்கை மகளுக்கு, பேத்திக்கு!!!). இதைக் குறித்து வைத்துக் கொண்டேன்.

    நான் இப்பலாம் crop - boy cut என்பதால் எண்ணை வெறும் தேங்காய் எண்ணைதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நானும் சிறு வயதில் தலைமுடியை பராமரிக்க எண்ணை மற்று சீயாக்காய் பொடி எல்லாம் அரைத்து வைத்து பயன்படுத்தி இருக்கிறேன்.

    உங்கள் குறிப்புகள் பிறருக்கு பயன் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....