தொகுப்புகள்

ஞாயிறு, 25 ஜூன், 2023

குவாரி பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


எனது அலுவலக நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணங்களில் ஒன்றாக உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் குவாரி பாஸ்  சென்ற போது எடுத்த படங்களில் சிலவற்றையும், அந்த இடம் குறித்த சில தகவல்களையும் சென்ற ஞாயிறில் பதிவாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த வாரம் மேலும் சில தகவல்களையும் படங்களையும் பார்க்கலாம்.  


பயணத் திட்டம் எப்படி இருக்கலாம்?


சென்ற பகுதியில் இந்தப் பயணத்தினை ரிஷிகேஷிலிருந்து தொடங்கி ரிஷிகேஷில் முடிக்க மொத்தம் ஆறு நாட்கள் தேவை என்று எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் இந்த ஆறு நாட்கள் எப்படி பயணிக்கலாம், எவ்வளவு நடக்க வேண்டியிருக்கும், வழியில் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன போன்ற சில தகவல்களைப் பார்க்கலாம். இந்தத் திட்டங்கள் ஒவ்வொரு பயண ஏற்பாட்டாளருக்கும் மாறுபடலாம்.  நீங்களாகவே திட்டமிட்டாலும், இந்தப் பயணத்தில் மாறுபாடுகள் - வசதிக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளலாம்.  


முதல் நாள்:  ரிஷிகேஷிலிருந்து கர்ச்சி (KARCHI) எனும் சிற்றூர் வரையான 255 கிலோமீட்டர் சாலை வழிப்பயணம். இரவு தங்குவது கர்ச்சியில் உள்ள தங்குமிடத்தில். இந்தப் பயணத்திற்குக் குறைந்த பட்சம் ஒன்பது மணி நேரம் ஆகலாம்.  இந்தப் பயணத்தில் நீங்கள் பஞ்ச் ப்ரயாக் எனப்படும் ஐந்து ப்ரயாகை அதாவது நதிகளின் சங்கமங்களான தேவ் ப்ரயாக், ருத்ர ப்ரயாக், நந்த் ப்ரயாக், கர்ண் ப்ரயாக் மற்றும் விஷ்ணு ப்ரயாக் ஆகிய சங்கமங்களைக் கடந்து செல்வீர்கள்.  இவை எல்லாவற்றையும் இறங்கிச் சென்று பார்த்தால் மாலைக்குள் கர்ச்சி செல்ல இயலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!


இரண்டாம் நாள்: கர்ச்சியிலிருந்து அக்ரோட்கேட்டா எனும் இடத்திற்கு மலையேற்றம் - சுமார் மூன்று கிலோமீட்டர் நடை!  இந்த மலையேற்றத்திற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகலாம்! கடல் மட்டத்திலிருந்து 6200 அடி உயரத்திலிருந்து மலையேற்றம் முடிந்த பிறகு நீங்கள் கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்திற்கு சென்று சேர்ந்திருப்பீர்கள். 


மூன்றாம் நாள்: மூன்றாம் நாளும் மலையேற்றம் தான்! மூன்றாம் நாளில் மலையேற்றப் பாதை சுமார் மூன்று கிலோ மீட்டர்.  கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்திலிருந்து நீங்கள் 11000 அடி உயரத்திற்கு சென்று சேர்ந்திருப்பீர்கள்.  அக்ரோட்கேட்டாவிலிருந்து புறப்பட்டு, சேரும் இடத்தின் பெயர் குல்லாடா! பெயர்கள் வித்தியாசமாகவே இருக்கும் - இதுவரை கேள்விப்படாததால்! 


அடுத்த மூன்று நாட்கள் பயணம் எங்கே போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  இந்தப் பகுதியில் இன்னும் கொஞ்சம் படங்களைக் காணலாம் வாருங்கள். 









































******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அழகு. உடம்பு ஃபிட்டாக இருந்தால்தான் இந்த மாதிரி பயணங்களை நினைத்துப்பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடம்பு ஃபிட்டாக இருப்பது நிச்சயம் அவசியம் தான் நெல்லைத் தமிழன். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது ஜி

    பயண விவரணங்களும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பயண விவரங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. படத்துலே பார்த்துக்கறேன் ! அவ்ளோதான் முடியும் ! இது நாந்தான் துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படத்துலே பார்த்துக்கறேன்// - சில இடங்கள் இப்படித்தான் பார்க்க முடியும் துளசி டீச்சர். வேறு வழியில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பட்ங்கள் எல்லாம் அழகூஊஊஊ...தகவல்களையும் நோட் செய்து கொண்டேன்! எனக்கு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு ஒரு மலையேற்றமாவது (சில சின்ன சின்னவை செய்திருக்கிறேன் Manali யில், பர்வதமலை, சின்னாரில் என்றாலும்) அதாவது இப்படியான மலையேற்றம் வாழ்வில் ஒரு முறையேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்படி இத்தனை அடி உயரத்திற்கு நமக்கு நல்ல மூச்சுப் பயிற்சி தேவை. நுரையீரல் இதயம் எல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இப்போதைக்குப் படங்களைப் பார்த்துக்க வேண்டியதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பயணிக்கமுடியாத இடங்களை படங்கள், காணொளி வழி பார்த்துக் கொள்வதே இப்போதைக்கு சாத்தியம். எனக்கும் இப்படியான பயணங்கள் குறித்த கனவுகள் உண்டு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பயணத் திட்டம் சிறப்பு. படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....