அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! வாரநாட்களில் காலைநேர பரபரப்பான வேலைகளும் பின்பு மதியம் வரை வரிசையாக வகுப்புகளும் பாடங்களுமாகத் தான் செல்கிறது! வார இறுதியில் கொஞ்சம் நேரம் கிடைக்கவே இடைவெளியாகிப் போன புத்தக வாசிப்பைத் துவங்கலாமே என்று திருச்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகமொன்றை அலமாரியிலிருந்து எடுத்தேன்!
அந்தப் புத்தகம் என்னவென்றால் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் திசை கண்டேன்! வான் கண்டேன்! தலைப்பை வைத்து கதையை நிச்சயம் கணிக்க முடியாது என்பதால் வாசிப்பைத் துவங்கலாமா!!
ஆண்ட்ரமீடா கேலக்ஸியின் நோரா கிரகத்திலிருந்து வேற்று கிரகவாசியான ‘பாரி’ என்பவன் பூமிக்கு வருகிறான்! அவன் எப்படி வந்தான் என்றால் 121 என்ற பெயர் கொண்ட விண்வெளி வாகனத்தில்! சரி! எதற்காக வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வர வேண்டும்???
அவர்களின் நோரா கிரகத்திற்கு செல்லும் பாதையில் குறுக்கே நிற்கும் பூமியை அழித்து விட்டு பாலம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்கான ஆய்வுக்கும் என தெரிய வந்த போது பகீர் என்றிருந்தது!!! அடப்பாவிகளா! என்னடா அநியாயமா இருக்கே என்று நீங்களும் நினைக்கலாம்!
இப்படித்தான் துவங்குகிறது கதை! வேற்று கிரகவாசியான ‘பாரி’ 121 என்ற பெயர் கொண்ட வாகனத்தில் வந்திறங்கியது நம்ம சென்னையின் மெரீனா கடற்கரையில்! அப்போது அவர்களின் கண்ணில் பட்டவர்கள் தான் காதலர்களான மணியும் செங்கமலமும்! தலையில் கொம்பு முளைத்தது போன்ற ஆண்டனாவுடன் பிரம்மாண்ட விண்வெளி வாகனத்தில் வந்திறங்கிய பாரியை பார்த்தது முதல் அவர்களின் வாழ்விலும் பல திருப்பங்கள்!
மக்களோடு மக்களாக ஒன்றிப் போக வேண்டுமென்றால் முதலில் தலையில் இருக்கும் ஆண்டெனாவை மறைக்க வேண்டும் என்ற மணியின் அறிவுறுத்தலின் படி தொப்பி வாங்க கடைக்குச் செல்வது முதல் துவங்குகிறது குழப்பம்!! பணமா?? அப்படின்னா?? காகிதத்துக்கு அலையும் ஜென்மங்கள் என்று முன்பே பூமிக்கு வந்து போன உபகுப்தர் சொன்னது இது தானா என்று பாரி யோசிக்கிறான்!
மாஃர்ப் செய்து 121 வாகனத்தை அப்போது கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த குதிரையாக மாற்றி விடுகிறான் பாரி! இப்படி எட்டு முறை மார்ஃப் செய்து கொள்ளலாம் என்று மேலிடத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதாம்! ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் 121 பருந்தாக, ஆட்டுக்குட்டியாக, மணியாக, செங்கமலமாக என்று மாறி மாறி குழப்பங்களை ஏற்படுத்துகிறது!
பாரியும் தன் பங்குக்கு திட்டங்களை முழு முனைப்புடன் செயல்படுத்த முனைகிறான்! அரசாங்கத்திற்கும் அவனின் செயல்களால் கொஞ்சம் கொஞ்சமாக நிலையின் விபரீதத்தை உணர முடிகிறது! திட்டங்களை தகர்க்க முனைகிறது! ஆர்கான் மூலம் சுவாசிக்கும் பாரியை எதுவும் செய்ய முடியாத நிலை!!
மணியும் செங்கமலமும் கூட முதலில் ஒன்றுமே புரியாமல் இவர்களோடு சுற்றினாலும் பின்பு நிலையின் விபரத்தை உணர்ந்து கொண்டு அவர்களை குழப்பியும் விடுகிறார்கள்! பலப்பல முயற்சிகளுக்குப் பின் பாரி தன் திட்டத்தை செயல்படுத்தியும் விடுகிறான்! ஆமாம் மலையுச்சியில் லொக்கேட்டரை பொருத்தியும் விடுகிறான்!
இன்னும் சில செகண்டுகளில் எல்லாம் தூள் தூளாகி விடும் என்ற நிலை!!!?? அப்புறம் என்ன தான் ஆச்சு??? பாரியும் 121 உம் தப்பிக்க முடிந்ததா?? அவர்களின் திட்டங்களை முறியடிக்க முடிந்ததா?? என்ற உங்களின் பல கேள்விகளுக்கான விடைகளை புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
இது ஒரு அறிவியல் புனைவு கதை தான் என்றாலும் இந்த புத்தகத்தின் முதற் பதிப்பு 1993 ஆம் வருடம் என்றாலும் சமீபகாலமாக நாம் அவ்வப்போது செய்திகளில் கேட்கும் அல்லது பார்க்கும் வேற்றுக்கிரக சம்பந்தமான விஷயங்களையும் நினைவுபடுத்தத் தான் செய்கிறது என்று சொல்லியே ஆகணும்! வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் வாசித்துப் பாருங்களேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
28 ஜனவரி 2025
FaceBookலேயே வாசித்தேன். வாசித்ததும், எப்போதோ படித்த கதை என்பதால் மறந்து விட்டதே என்று மறுபடி வாசிக்க எடுத்து வைத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குஆர்வத்தை தூண்டும் விமர்சனம் நன்று.
பதிலளிநீக்குவிமர்சனம் நன்று ஆதி. நீங்க சொல்லத் தொடங்கியதுமே வாசித்திருக்கிறேனோ என்று நிழலாடியது கொஞ்சம் நிழலாக நினைவுக்கு வருகிறது. கிடைச்சா மீண்டும் ஒரு முறை வாசித்துவிடலாம்
பதிலளிநீக்குகீதா
வாசகம் அருமை.
பதிலளிநீக்குகதை விமர்சனம் அருமை.
வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
விமர்சனம் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. வாசகமும் அருமை. சுஜாதா அவர்களின் கதை நன்றாக உள்ளது. விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலமா தோழர்
பதிலளிநீக்குபடிக்க வேண்டும். நன்றி.
பதிலளிநீக்குபடிக்க வேண்டும். நன்றி.
பதிலளிநீக்கு