அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பாலாமாமி என்கிற அன்பு உ(வெ)ள்ளம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? - 8 ஜனவரி 2025:
மாதம் பிறந்து விட்டால் போதும் வாங்க வேண்டிய மளிகைப்பொருட்கள், மருந்துகள் என்று எப்போதுமே ஒரு லிஸ்ட் நம்மிடம் தான் இருக்குமே! நான் என் அம்மாவைப் போல வீட்டில் எல்லாம் நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவள்! வார இறுதியில் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்கும் கிளம்பி விட்டேன்!
நெரிசலான வீதிக்கு நடுவில் ATM ஒன்றிற்கு அருகில் கூண்டில் அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பச்சைக்கிளிகள்! ஷோகேஸில் வைக்கலாம்! காரில் மாட்டிக் கொள்ளலாம்! கிளிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தன! அந்த வியாபாரி மும்முரமாக கொய்யாப்பழம் ஒன்றை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்!
‘ஏ கித்னா கா ஹை Bபையா?? என்றதும் ‘தீஸ் ருப்யா’ என்றார்! முப்பது ரூபாயாம்! யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை!! எங்கும் எதிலும் வட இந்தியர் தான்! பொதுவாக கட்டிட வேலைகள், சாலையோர வியாபாரம், என எதிலும் உழைக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர்! இவர் எங்கிருந்து வந்தவரோ! நான் கேட்கவில்லை!
மலைக்கோட்டை அருகே துப்பட்டாக்கள், காதணிகள் என்று வரிசையாக நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்கள் அனைவருமே ஜார்கண்ட், பீகார் என்று வந்திருக்கின்றனர்! நமக்கான வேலைவாய்ப்புகளை நாமே தான் இழந்து கொண்டிருக்கிறோம்! அரட்டை அடித்துக் கொண்டும் அரசியல் பேசிக் கொண்டும் நம் பொன்னான நேரங்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தான் புரிய வருகிறது!
இங்கே இப்போது கடை வைத்திருப்பவர்கள் கூட காலைநேரத்தில் சுறுசுறுப்புடன் கடை திறப்பதில்லை! நிதானமாக கடை திறப்பதும் சில நாட்கள் கடையை மூடியே வைத்திருப்பதுமாகத் தான் செல்கிறது!
டெல்லியில் தான் இப்படி பார்த்திருக்கிறேன்! அங்கே மதியம் போல தான் கடைகள், தாபாக்கள் எல்லாமே திறப்பார்கள்! வியாபாரிகளும் தங்களுடைய பிசினஸையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள்! அது அவர்களது வழக்கம்!
எல்லோரிடமும் பணம் இருக்கிறது! வியாபாரத்தை பற்றியோ வேலைவாய்ப்பை பற்றியோ கவலையில்லை என்றால் அரசாங்கத்திடமிருந்து பெறும் இலவசங்களை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறோம்??
*******
மாசில்லா போகி - 13 ஜனவரி 2025:
புத்தாண்டு பிறந்தது முதலாக புது வகுப்பு! புதிதாக இணைந்து கொண்ட அறிமுகமான நட்புகள் என்று சென்று கொண்டிருக்கிறது! இதுவும் ஒரு புது அனுபவம் தான்! வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பாடத்தை கற்று கொடுத்து கொண்டே தான் இருக்கிறது!
சென்ற வகுப்பில் உடன் பயிலும் ஒருவர் ஆசிரியரிடம் ‘நான் போகியன்று வகுப்புக்கு வர மாட்டேன் மேம்! எங்கிட்ட இருக்கற கெட்ட குணங்களை எல்லாம் போட்டு எரிக்கப் போறேன் மேம்’ என்று விளையாட்டாக சொல்லவும் வகுப்பில் உள்ள எல்லோருமே சிரித்தோம்!!
ஆசிரியர் அவரிடம் ‘எல்லார்கிட்டயும் தான் கெட்ட குணங்கள் இருக்கு சார்! நீங்க வெளியே சொல்லிட்டீங்க! நாங்க எல்லாம் சொல்றதில்ல! அவ்வளவு தான்!’ என்றார்! இந்த விஷயம் எனக்கு ஏதோ சொல்வது போலவே இருந்தது! அன்றாடம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்!
யோசித்துப் பார்த்ததில், உண்மை தானே! எல்லோருமே அவ்வப்போது சுய அலசல் செய்து பார்த்துக் கொள்தல் என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே!
போகி என்றால் பிளாஸ்டிக்கையும் டயரையும் போட்டு எரித்து சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்துவது அல்ல! அதற்கு பதிலாக நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை பொசுக்கி எல்லோருக்கும் கெடுதல் எற்படுத்தாத எண்ணங்களை வளர்த்துக் கொள்தல் என்று வைத்துக் கொள்வோமே!
அனைவருக்கும் இனிய போகி மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
நல்லதே நடக்கட்டும்!
நலமே சூழட்டும்!
*******
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! எங்கும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி பெருகட்டும்! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
14 ஜனவரி 2025
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅருமையான வாசகம். கதம்பம் நன்றாக இருக்கிறது.நான் டெல்லிகட்டில் வாங்கிய கூண்டு கிளிகள் இருக்கிறது ஷோகேஸில்.
பதிலளிநீக்குவேலை வாய்ப்பு இருந்தாலும் வேலை செய்ய தயங்கும் மக்கள் இருக்கிறார்கள்.
சுய அலசல் நல்லதுதான். அகத்தூய்மை வேண்டும் என்பார் மகரிஷி. அவ்வப்போது வேண்டாதவைகளை களைய வேண்டும் என்பார்.
பொங்கல் நல் வாழ்த்துக்கு நன்றி.
கூண்டில் அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பச்சைக்கிளிகள்! //
பதிலளிநீக்குஇதைப் பார்த்ததும் ஒரு நொடி மனசு திக் என்றது அப்புறம் தெரிந்தது பொம்மைகள் என்று.
//அன்றாடம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்!//
சுய அலசல் செய்து கொண்டால் நிறைய பளிச்! நிறைய கற்றுக் கொள்ளலாம் செய்யக் கூடியவை அவர்கள் செய்யும் தவறுகளை நாம் செய்யாமல் இருத்தல் என்று.
கீதா