அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மழையே மழையே... பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடம் எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்திட எங்களது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் இருக்க வேண்டிய சூழல். அப்பாவின் உடல் நிலை, அவர் கீழே விழுந்தது, அவர் மருத்துவமனையில் பல நாட்கள் இருந்தது, அவர் கடந்த மாதம் 7-ஆம் தேதி மறைந்தது என பல விஷயங்கள் பதிவுலகம் பக்கம் வர முடியாமல் செய்தது. இந்த வாரம் தான் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தலைநகர் திரும்பியிருக்கிறேன். வந்ததிலிருந்து சில நாட்கள் அலுவலக ஆணிகளை சரி செய்வதில் கழிந்திருக்கிறது. நாளை முதல், மூன்று நாட்களுக்கு அப்பாவின் 27-ஆம் நாள் சம்பந்தப்பட்ட காரியங்கள் இருக்கின்றன. நாட்கள் இப்படியே கடந்து கொண்டிருக்கிறது. எழுத பல விஷயங்கள் இருந்தாலும் சூழலும் கடமைகளும் அதிகம் இருக்கின்றன என்பதால் தொடர்ந்து எழுதாமலேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஏன் எழுதவில்லை என சிலரேனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
வரும் நாட்களில் முடிந்தபோது இங்கே விஷயங்களை, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதைக்கு இந்தப் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்… சிந்திப்போம்!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
2 ஜனவரி 2025
உங்கள் சூழல் புரிந்து கொள்ள முடிகிறது ஜி.
பதிலளிநீக்குபிறந்திருக்கும் வருடம் உங்களுக்கும் நம் எல்லோருக்குமே மகிழ்வான வருடமாக அமைந்திடட்டும்.
வாசகம் மிகவும் உண்மை.
கீதா
இந்த ஆண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான ஆனந்தமான வருஷமாக இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவிஜி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநானே உங்களை வலையுலகில் காணவேயில்லையே என கேட்க நினைத்தேன். தங்கள் தந்தையார் உடல் நலமில்லாமல் இருப்பதை அறிவேன். ஆனால், அவரின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தது. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.
இந்த வருடம் அனைவருக்கும் நல்ல மன மாறுதல்களை தரும்படி இருக்கவும், அனைவரும் உடல் நலத்துடன் இருக்கும்படி செய்ய வேண்டுமெனவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான உண்மையான வரிகள்...
பதிலளிநீக்குவாசகம் அருமை (உண்மை)
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்.
அப்பாவின் காரியங்கள் நல்லபடியாக நடக்கும், இறைவன் எல்லாவற்றையும் நடத்தி வைப்பார்.
அப்பாவின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.
இப்போதைய சூழ்நிலையும், மனநிலையும் இப்படிதான் இருக்கும். சீக்கிரமே மனம் சமாதானப்படும். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநேசிப்பவரின் மரணம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். காலம்தான் இந்த அதிர்ச்சியில் இருந்து நம்மை மீட்கும்
புதிய வருடம் புத்துணர்ச்சியைத் தரட்டும்.
பதிலளிநீக்குஇந்த வருடம் எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்கட்டும்.
பதிலளிநீக்கு