வெள்ளி, 3 ஜனவரி, 2025

நட்பின் இழப்பு…


அன்பின் நண்பர்களுக்கு, வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நலம் தானா… நலம் தானா? பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 




******


இன்றைக்கு ஒரு நட்பின் இழப்பு குறித்த தகவலுடன் பதிவுலகம் பக்கம் வர வேண்டிய சூழல்…  சென்ற வருடத்திலிருந்தே ஏதேதோ துக்கச் செய்திகள் என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது.  நண்பர்களின் வீடுகளிலும், எனது வீட்டிலும் ஏதோ இழப்புகள் நிகழ்ந்தபடியே இருந்தது.  இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், விருப்பத்துடனும் இருந்தால், இந்த வருடத்தின் ஆரம்பமே ஒரு இழப்புடன் தொடங்கியிருக்கிறது.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால நட்பை - எனது பள்ளிப்பருவத்திலிருந்து தொடர்ந்த நட்பை நேற்று காலன் தனது பாசக்கயிற்றை வீசி எங்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றிருக்கிறான்.  பள்ளியைத் தொடர்ந்து கல்லூரியில் ஒரே வகுப்பில் மூன்று வருடங்கள். அதன் பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது எங்கள் நட்பு.  ஆனால் இன்றைக்கு அவன் இல்லை! 


எங்கள் கல்லூரியில் எங்களுடன் படித்த அனைவரையும் ஒருங்கிணைக்க நண்பன் குமாரின் பங்கு அளப்பரியது! எங்கள் வாட்ஸப் குழு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க அவனது தொடர் செயல்களும் அவனது இடைவிடாத பங்களிப்பும் மிக மிக முக்கியமான ஒரு காரணம்.  ஆனால் இன்று அவன் இல்லை! நேற்று காலை பதினோரு மணி அளவில் எங்களை விட்டு பிரிந்த அவனது பூத உடல் இன்றைக்கு நெய்வேலியில் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  எனது கல்லூரி நண்பர்கள் அங்கே சென்று இருந்தார்கள்.  என்னால் செல்ல முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான்.  சூழல் என்னை அங்கே இருக்க விடவில்லை என்றாலும் மனதளவில் அங்கே தான் இருந்தேன்.  நண்பர் குமார் ஆத்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாற எனது பிரார்த்தனைகள். 


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 ஜனவரி 2025


10 கருத்துகள்:

  1. குமார் அவர்கள் இப்போது இல்லை என்று ஒத்துக் கொள்ளவே முடியவில்லை...: ( சட்டென்று காலன் அழைத்துச் சென்று விட்டான். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக வருத்தமான செய்தி. நீண்டகால நட்பின் இழப்பு என்பது சட்டென்று ஆறாத ஒன்று. உங்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நட்பின் இழப்பு மிகக் கொடுமை.
    தங்கள் நண்பர் குமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
    இன்றைய வாசகத்தில் சொல்லியிருப்பதை போல இப்போதுள்ள துன்பங்கள் கடந்த பிறகு காலம் ஒளித்து வைத்திருக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு கிட்டட்டும்🙏

    பதிலளிநீக்கு
  4. மிக மிக வருத்தமான செய்தி.தொடர் துக்க நிகழ்வுகளால் மனதளவில் தளர்ந்திருக்கும் உங்களுக்கு சக்தியும்,சமாதானத்தையும் அளிக்கட்டும்.அன்னாரின் ஆன்மா சத்கதி அடையட்டும்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  5. நண்பரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னார் ஆன்மா இறையடி சேரட்டும்!

    பதிலளிநீக்கு
  6. மிக வருத்தமான செய்தி. உங்களுக்கு எங்கள் ஆறுதல்கள்.

    பதிலளிநீக்கு
  7. நண்பரின் இழப்பு கேட்டு வருத்தமாக இருக்கிறது.
    உங்கள் நண்பரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கும் மற்று நட்புகளுக்கும் , உங்களுக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. இழப்பு செய்தி கேட்டு வருத்தமாக இருக்கிறது.ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  9. எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் வருத்தமாக உள்ளது... ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....