அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தனது உறவினர் மறைவின் போது எழுதிய கவிதை ஒன்றுடன் இன்று நம்மை சந்திக்க வந்திருக்கிறார் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
பாலாமாமி என்கிற அன்பு உ(வெ)ள்ளம்
கண்ணில் மிளிரும் அன்பு;
உதட்டில் தவழும் புன்னகை;
வாக்கில் உதிரும் பாசம்;
தொடுகையில் வழியும் வாஞ்சை;
இவை மாமியின் குணம் சொல்லும்!
உணர்ந்தார் மனம் விம்மும்!
சிறு வயதிலேயே அன்பின் முதிர்ச்சி!
அது தங்கை தம்பிக்கும் தாயான மலர்ச்சி!
எந்த வயதிலும் மனதால் தாயாக முடியும்!
உதாரணம் அன்னார் வாழ்க்கைப்
பயணம்!
இவருக்கு சங்கீதம் கை(வாய்) வந்த கலை;
பாட்டு ஆசிரியையாய் சில காலம் வேலை!
அழகான உருவம் இவருக்குக் கொடை;
தெய்வீகத் தோற்றம் அதில் நிறை!
இவரின் கைபக்குவம் அசாத்தியம்;
அதன் சுவைக்கு நாம் அடிமை, சத்தியம்!
வடகம்,நெய்ப்பாயசம், புளி இஞ்சியால் எங்கும் கமழும் மணம்;
பிறர்க்கு ஈந்து சுகம் காணும் இவர் மனம்!
பூஜையில் ஆழ்ந்தால் பக்த மீரா சாயல்;
கண்ணனே முன் வந்து நிற்பது நடக்கும் செயல்!
செய்யும் செயல் எதிலும் அழகும் நேர்த்தியும்;
கோலம் வரைந்தால் காணத்
தேவை ஆயிரம் நேத்திரம்!
அன்பைப் பொழிவதில் அந்த மழை தோற்கும்;
நனைந்தோர் மனம் அதில் தன் தாயையே பார்க்கும்;
சுமந்து பெற்றது ஒன்று;
அன்பை ஈந்து பெற்றதோ கணக்கன்று;
பிள்ளைகள் தாயை எப்படி பார்த்துக்கணும்?
இவர் பிள்ளை அதற்கு இலக்கணம்!
மருமகளும் இவருக்கு மகளே;
அம்மகள் பொழிந்த அன்புக்கு எது நிகரே.
சொல்லிக் கொண்டே போகலாம்;
சொன்னது சில.
விட்டது பல.
வார்த்தைகள் எனக்கு வற்றும்;
இவர் புகழ் என்றும் வற்றாது;
குழந்தே (kondhe) எனும் தேன் வார்த்தை செவியில் ரீங்காரமிடும்;
அது மனதைப் பிசைந்து கண்கள் கசியச் செய்யும்;
பெருமூச்சு விட்டு மாளாது;
அம்மா உன் நினைவு தாளாது;
நீ பட்ட பாடு போதும் போய் வா தாயே;
சொர்க்கத்தில் சிலகாலம் இளைப்பாறுவாயே!
உன்னைக் காண்பேன் கனவிலும் நினைவிலும்;
ஆசீர்வதிப்பாய் தாயே என்றென்றும்🙏🏻🙏🏻
நீங்கா நினைவுகளுடன்
உன் சிசுக்களில் ஒன்று😓🙏🏻🙏🏻
4.1.25.
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
10 ஜனவரி 2025
அருமையான வரிகளில் பாலா மாமியின் உள்ளம் பளிச்!
பதிலளிநீக்குவாசகம் ரொம்ப உண்மை.
கீதா
நன்றி.
பதிலளிநீக்குவிஜி