தொகுப்புகள்

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி இரண்டு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தங்குமிடம் - சில குறிப்புகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



முருகா உன்னை ஜோ குளிப்பாட்டிட்டு நான் குளிக்கிறேன். நீ கரையில  போய் உக்காந்துக்கோ என்ன?


பரவாயில்லண்ணா இப்படியே உக்காந்து உனக்கு தண்ணி மொண்டு தரேன்… நீ ஜோ குளி... முங்கினா உன் மூக்குக்குள்ள தண்ணி போய்டும்… (என்ன மட்டும் முங்கிக் குளிக்க விடல இல்ல நீ?😏)


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ கார்த்திகேயாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



ஜோ குளிக்கறதுன்னா இப்படித்தான் கன்னுக்குட்டி செல்லம். புரிஞ்சுதா?


ஓ நல்லா புரிஞ்சுடுத்து கிருஷ்ணா, போதும்...,  (நாம  2 மணிநேரம் நல்லா ஆத்துக்குள்ள அமிழ்ந்து உக்காந்துட்டு இப்பத்தான் வெளிய வந்திருக்கோம்...

இவன் கண்ணுல பட்டுட்டேன்..

ஹ்ம்ம் இது 28 ஆவது சொம்பு(தண்ணி). இன்னும் எத்தனை பாக்கியோ😱)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻



*******



என்னது, நான்தான் எப்பவும் ஆடுவேன், இப்ப முருகனும் ஆரம்பிச்சுட்டானா? அப்பா கனக சபேசனாச்சே, அதான் ஜீன் ல யே இருக்கு! .. பரவாயில்ல நான் சொல்லிக்கொடுத்த steps எல்லாம் ஒழுங்காதான் போடறான்...


ஏதாவது சொன்னியா மயிலண்ணா?


உன்னைப் பார்த்தா தில்லை அம்பலத்தானையே பாக்கற மாதிரி இருக்குன்னேன் (எனக்குத் தற்புகழ்ச்சி பிடிக்காது...🙂)


ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த அருவி சத்தத்துலயும் குழந்த தூங்கறான்னா எவ்ளோ அசதி, பாவம்...


(பழைய கதையையே மறுபடி கேக்கறத avoid பண்ண எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன முருகா இத்தன சிரிப்பு?


இல்ல இந்த மாலை இந்த dress க்கு நல்லா இருக்குன்னு போட்டுகிட்டு வந்துட்டேன், அம்மா அங்க தேடிட்டு confuse ஆகியிருப்பா...


ஏன்?


அந்த இடத்துல என் ருத்ராக்ஷ மாலைய வெச்சுட்டு வந்திருக்கேனே😁 நல்லாயிருக்கில்ல மயில் bro?


ம்ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு (நீ செய்யறது

😏...)


ஓம் கார்த்திகேயா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த ஆறு நாளும் only பழ ஆகாரம்தான் எனக்கு. என் பக்தர்கள் விரதமிருக்கும்போது எனக்கு மட்டும் என்ன?  உனக்கும் தான் மயிலண்ணா...


(ஹ்ம்ம் இந்த சஷ்டியை ஒரே நாள் கொண்டாடினாத்தான்  என்ன?)


என்ன மயிலண்ணா?


பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பான்னேன் ஞான பண்டிதா.. 


ஓம் கடம்பா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த family photo ல ஏன் நான் இல்லன்னு

கோச்சுக்கிட்டு சரவணன் பழனிக்கு போயிட்டாம்மா… நல்ல அம்மா இல்ல? அப்பாக்கு தெரியறதுக்கு முன்னாடி அவனைக் கூட்டிண்டு வந்துடு மா.. 


அவனும் இருந்தானே  இதுல, நீ என்ன திரிசமன் பண்ணின கணேசா...


Photoshop கத்துக்கறேனா, ச்சும்மா அவனை remove பண்ணிட்டு பாத்தேன், நல்லா இருந்தது.. frame போட்டு என் ரூம்ல மாட்டினேன், தப்பா மா... 


முடியல கணேசா உங்களோட....


ஓம் விநாயகாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

11 ஜனவரி 2026


4 கருத்துகள்:

  1. சிங்கம் குடும்பம் படம் அழகு.

    உன் சைசுக்கே முங்குவதற்குத் தண்ணியே இல்லையே!!!!! அப்புறம் இல்லையா நான் முங்கிக் குளிக்க!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ இன்று ஜோ குளியல் படங்களா....

    அது சரி மார்கழி தை - குளிர் வெந்நீர் வேண்டாமோ??

    முருகனின் நடனம் படம் வரிகள் சிரித்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பழம் நீயப்பா ஆனதும் ருத்ராட்சம் கழுத்தில் ஏறிவிட்டது போல!!

    எல்லாப் படங்களும் வரிகளும் சூப்பர். ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வரிகளையும் படங்களையும் ரசித்தேன்.  இரண்டாவது படம்  :  28 வது சோம்பா?  கணக்குப்படி இன்னிக்கி 27 தானே வரணும்!!!

    1) என்ன விளையாட்டு கணேசா பாலையெல்லாம் எடுத்து தலையில கொட்டிக்கிட்டு..  சிக்கு பிடிச்சு போகுது..  மறுபடி பழனி போகணும் நான்!
    2) உன் வசதிக்காக என்னை போன்சாய் பசுவாக்கிட்டியே கிருஷ்ணா..  நியாயமா?
    3) சீக்கிரம் போட்டோ புடிப்பா..  மயில் நகர்ந்துடும்..
    4) தூங்கிட்டேன்னு தெரிஞ்சாலாவது கண்றாவியா பாடறதை நிறுத்துவியா பார்க்கிறேன்.
    5) ஹேர் கட்டுக்கு நேரமாச்சு..  அபப்டியே ஒரு போட்டோ...
    6) மயில் கேட்கிறது, "நீ முருகனா, முருகியா?"
    7) "லாங் டூர்மா..  பிளைட்டுக்கு நேரமாச்சு..  கிளம்பரத்துக்கு முன்னாடி ஒரு ஹக்" 

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....