சனி, 10 ஜனவரி, 2026

Indeco Hotels - தங்குமிடம் - சில குறிப்புகள் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பழமையும் புதுமையும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நேற்று வெளியிட்ட பதிவில் Indeco Hotels எனும் தங்குமிடம் குறித்த சில விஷயங்களையும் படங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  தங்குமிடத்தின் கட்டணம் என்ன, அங்கே தங்காமல் சென்று பார்த்து வர முடியுமா என்றெல்லாம் ஸ்ரீராம் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலாக சில தகவல்கள் இன்றைய பதிவில் தருகிறேன். கூடவே இன்னும் இந்த இடத்தில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு - ஒரு நிழற்பட உலாவின் இரண்டாம் பகுதியாக…  


ஒவ்வொரு தங்குமறையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புற அமைக்கப்பட்டிருக்கின்றன.  மூன்று கிராமங்களை இணைத்து அந்தப் பகுதியில் இருக்கும் நபர்களுக்கு வேலையும் அளித்து இந்தத் தங்குமிடத்தினை அமைத்திருக்கிறார் இந்தத் தங்குமிடத்தின் உரிமையாளர் ஸ்டீவ் Bபோர்(g)கி. கலைநயம் மிக்க படைப்புகளையும் அவர் உருவாக்குகிறார்.  அவரது கலைநயம் அவர் அங்கே பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களிலும் நமக்குப் புலப்படுகிறது.  தங்குமிடம் தவிர இங்கே ஒரு உணவகமும் இருக்கிறது.  தங்குவதற்கு உங்களுக்கு முடியவில்லையெனில் உணவகத்திற்குச் சென்று உணவு உண்பதோடு, இங்கே ஒரு உலாவும் வரலாம்.  மான்கள், மயில்கள் என கிராமியச் சூழலில் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது இந்த இடம்.  கீழே கொடுத்திருக்கும் இணைய முகவரியில் இவர்களது தங்குமிடம் குறித்த நிறைய தகவல்கள் உண்டு.  தங்குமிடத்திற்கான கட்டணங்கள் சற்றே அதிகம் என்று தோன்றினாலும், அதன் பராமரிப்பிற்காக கட்டணம் இத்தனை இருக்கத்தான் வேண்டும் என்பதுடன், நிச்சயம் ஒரு நாள் தங்கி வரலாம் என்பது எனது எண்ணம்.  


Swamimalai – INDeco Hotels


நேற்றைய நிழற்படங்களின் தொடர்ச்சியாக மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு…


















*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

10 ஜனவரி 2026


5 கருத்துகள்:

  1. நேற்றைய கேள்விக்கு விளக்கமாய் பதில் தந்திருப்பதற்கு நன்றி.   படங்கள் ஓகே.  இணைப்புக்கு சென்று ஒரு வேகமான முன்னோட்டம் விட்டேன்.  அங்கே தங்காமல் ஜஸ்ட் உணவு உண்டு ரசித்து வரலாம் என்கிற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.  எல்லா வகை உணவுகளும் கிடைக்கிறதா, பாரம்பரிய உணவுகள் என்று தருகிறார்களா?

    பதிலளிநீக்கு
  2. ஸ்டீவ் Bபோர்(g)கி.//

    இவர் பொங்கல் சமயத்தில் இங்கு இருந்திருக்கிறார். என் தங்கை பெண் குடும்பம் அவரை அங்கு பார்த்ததாகவும் தகவல்கள் பெற்றதாகவும், அவரே சில tours ஏற்பாடு செய்வதாகவும் சொன்னாள்.

    நான் இவரை கோபிநாத் பேட்டி எடுத்திருக்கும் காணொளி பார்த்திருக்கிறேன்.

    காரைக்குடியிலும் இருக்கிறது செட்டிநாட்டுப் பழமையுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தங்குமிடம் தவிர இங்கே ஒரு உணவகமும் இருக்கிறது. தங்குவதற்கு உங்களுக்கு முடியவில்லையெனில் உணவகத்திற்குச் சென்று உணவு உண்பதோடு, இங்கே ஒரு உலாவும் வரலாம். மான்கள், மயில்கள் என கிராமியச் சூழலில் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது இந்த இடம்.//

    ஆமாம். தங்கை பெண்ணும் சொல்லியிருந்தாள்.

    ரேட் கொஞ்சம் கூடுதல் ஆனால் சீசன் இல்லாத சமயத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கும் பொங்கல் சமயம் என்றால் அறைகளை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் கிடைக்கும் அறை கொடுப்பதற்கு ஏற்ப இருப்பதில்லை என்றும்..இது அவள் அனுபவம். அதை அங்கிருந்த நிர்வாகிகளும் சொன்னார்களாம்...முன்னதாகவே புக் செய்திருந்தால் நல்ல அறை கிடைத்திருக்கும்...என்று சொல்லி ஸாரி சொன்னதாகவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் செமையா இருக்கு ஜி.

    ஆமாம் மூன்று கிராமங்களை இணைத்து செய்திருக்கிறார்கள்.

    சுவாமி மலை என்றால் இது அருகில்

    மற்றொன்றும் இன்னும் கேரளத்து இயற்கையுடன் இருக்கிறதாம் மந்திரக்கூடம் என்றும். அது முழுவதும் கேரளத்து ஸ்டைலில்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகமும் படமும் அருமை.

    தங்கும் இடத்தின் படங்கள் எல்லாம் அருமை.கலைநயம் மிக்க பழம் பொருட்கள் பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....