அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட CGV தைப் பொங்கல் திருவிழா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் சமீபத்தில் நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் சமயத்தில் கிடைத்த அனுபவங்களை, நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
CGV தைப் பொங்கல் திருவிழா - கொண்டாட்டங்கள்:
CGV garden இல் 15th மாலை நாலு மணிக்கு நாங்கள் அனைவரும் (11 பேர். ஒரு பெண்மணி கடைசியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் வர முடியவில்லை) சகல ஆடை ஆபரணங்கள் ஜொலிக்க ஆஜர். நல்ல வெயில்🌞. சூரியன் (அதை அன்று சிறப்பாக வழிபட்டு கொஞ்சி தாஜா செய்தும்) கருணை காட்டவில்லை...🙄 💥
பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வர, மண் அடுப்பு, அதன்மேல் அழகாக பெயிண்ட் செய்யப்பட்ட மண் பானை ஜம்மென்று அமர்ந்திருக்க, அதன்முன்னே அழகான பெரிய கலர் கோலம் போடப்பட்டு, அதன் நடுவில் இரு குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, பெண்மணிகள் பானையில் பாலை ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்தனர். பால் காய்ந்து லேசாக பானையின் மேற்புறம் நுரை தன் முகத்தைக் காண்பித்தது..
வந்த நுரை மேல் நோக்கி உயர்ந்தது. பார்க்க 5 star hotel chef இன் தொப்பி போல் காட்சியளிக்க தெர்மோகோல் நுரை போல் அது ஆடவில்லை அசையவில்லை.
சிலர் அடுப்பின் பக்கத்தில் போய் விசிறியால் தீயை நன்கு விசிறிவிட்டு, பின் அதாலேயே நுரையின் அருகே சென்று மகுடி வாசிக்க… அது உனக்கும் பெப்பே உன் பாட்டிக்கும் பெப்பே... என்றது....
சுற்றிவர நின்று அனைவரும் அதனை உற்றுப் பார்த்ததால் ஏற்பட்ட கூச்சத்தினால் பொங்கவில்லையா அல்லது பொங்கினால் சுற்றிலும் நிற்கும் அழகான(!!😊) இளம் பெண்கள் நம்மை விட்டு போய்விடுவார்களே என்பதாலா என்று தெரியவில்லை..😜😊
அரை மணி ஆயிற்று, ஒரு மணி ஆயிற்று, ம்ஹும்... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இதோ பொங்கி வழியும் இப்ப வழிஞ்சிடும் என்று காத்திருந்த அனைவரின் முகம், கழுத்தில் வியர்வைதான் வஞ்சனையில்லாமல் வழிந்தது...🥵
இதற்கு நடுவில் (நுரை பொங்கும் வரை) பொழுதைக் கழிக்க, Smt ஜெயஶ்ரீ வைத்யநாதன் மைக்கை கையிலெடுத்து சுற்றிலும் நடப்பதை, (+ நிற்பதை, ஓடுவதை) சுவைபட running commentary கொடுக்க ஆரம்பித்தாள்.
kutties களிடம் Mike கொடுத்து பொங்கல்னா என்ன என்று கேட்க காலையில்தான சாப்பிட்டோம், திருப்பியுமா🙄 என்று அவர்கள் முக (b)பாவத்தால் கேட்க பாவமாக இருந்தது பார்க்க...
சிறுமி பத்மினி இசைக்கப்பட்ட ஒரு பாடலுக்கு அழகாக ஆடினாள்.
போகிப் பண்டிகையின் போது வீட்டு வாசல் நிலையில் ஏன் காப்பு கட்டுகிறோம், அதில் என்னென்ன இலை, பூக்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் அதன் தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி, CGV வாசி திரு.நடராஜன் அவர்கள் அழகாக விவரித்தார்...
Retd science professor Smt.Rajathi அந்த இலை மற்றும் பூக்களின் மருத்துவ குணங்கள் பற்றி விவரித்தார்… நம் தமிழ் கலாச்சாரம், பண்பாடு குறித்து பெருமையில் மனம் விம்மியது...
பொறுத்தது போதும் பொங்கியெழு என்று நாங்கள் அதைச் செல்லமாக அதட்ட ஒரு வழியாக பால் பொங்கி வழிந்தது. அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கத்த சிலர் குலுவை சப்தமிட பானைக்குள் அரிசி,பருப்பு போன்றவை பெண்மணிகள் கைவழி அடைக்கலம் புகுந்தன.
எங்களை அணிவகுக்கச் செய்து ஒவ்வொருவரையும் வித்யாசமான முறையில் Smt.ஜெயஶ்ரீ அறிமுகம் செய்ய (எழுத்து - Smt.லதா - நன்றிகள்🙏🏻) நாங்கள் ஒவ்வொருவரும் முன்னே நகர்ந்து பணிந்து வணங்கி திரும்பி எங்கள் இடத்திற்கு வந்தோம். வராத பெண்மணியின் இடத்தை எங்கள் நடன ஆசிரியை no.2 திவ்யாவே நிரப்பியது pleasant surprise. அது எங்கள் அணிக்கு ஒரு திவ்யமான சோபையளித்தது நிஜம்..👌🏻❤️
பின் மெல்ல பாட்டு இசைக்க ஆரம்பிக்க எங்கள் performance தொடங்கிற்று....
காற்று வீசாமல், பறவைகள் சப்தமிடாமல், அணில் ஓடாமல், இலைகள் அசையாமல் ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுதுமே எங்களை, எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஸ்தம்பித்தது, (திருவிளையாடல் படப்பாடல் - பாட்டும் நானே - காட்சி உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது🙂) பிரமித்தது.... ரசித்தது....(இப்படியெல்லாம் மசாலா போட்டாத்தான் படிக்க சுவாரசியம் இருக்கும்.... பொங்கலுக்கு முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போல...😊 மற்றபடி எனக்கோ / என் தோழிகளுக்கோ சுயபெருமை, சுயப்பிரதாபம் என்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது...😌)
பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி விசிலடித்து ரசித்துப் பாராட்டினர்.. (அப்படித்தானே அன்பர்களே??)
அதற்குள் பொங்கல் செய்து முடிக்கும் வேலையை அக்கறையாக பொங்கல் பானை அருகிருந்து Smt.ஜெயப்பிரியாவும் அவர் கணவர் திரு.கண்ணனும் கவனித்தனர். நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
பெண்கள் மலர் தூவி பூஜை செய்து, சூடம் காண்பித்து பொங்கலை சூரியனுக்குப் படைத்து வழிபட்டனர். கதிரவனும் தன் கதிர்க்கரங்களால் ஆசிர்வதித்தான்..
அனைவருக்கும் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. லேசான புகை மணத்துடன் பொங்கல் சுவையோ சுவை😋👌🏻👌🏻
மறுபுறம் உறியடி நிகழ்ச்சி. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் அனைவரும் வரிசையாக நின்று ஒவ்வொருவராக கண்கள் கட்டப்பட்டு கையில் தடி கொடுக்கப்பட்டு பானையை அடிக்க முயல இங்கும் Smt.ஜெயஶ்ரீயின் வெண்கல (கலாயக்கும்)க்குரல் running commentary யாக ஒலித்தது. அடிக்கக் கொடுக்கப்பட்ட தடி ஒரு சிறு மரம்போல் இருந்தது! குழந்தைகள் அதைத் தூக்குவதே கடினம்! தூக்கி, அடித்து வெற்றியும் பெற்ற சிறுவர்களுக்கு special பாராட்டுக்கள்💐💐
வெற்றிகரமாக பானையை அடித்து பரிசைத் தட்டிச் சென்றவர்கள்:
1. Master.மித்ரன்
2. Smt.ஶ்ரீவித்யா
3. Master.சச்சித்
4. செல்வி.அர்பிதா
5. Smt.ஜெயஶ்ரீ
6. Sri.சண்முகம்
7. Sri.குணசேகரன்
வெற்றி பெற்ற அனைவருக்கும் CGV சார்பில் மனம் நிறைந்த பாராட்டுக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐
இவ்வாறு மிக சுவாரசியமாக இந்த ஆண்டின் CGV பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது....
ஒரு பாடலை பல முறை கேட்கும்போது அது நம் காதில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருப்பது (haunting) சகஜம். இம்முறை மண்வாசனையுடன் கூடிய இந்த அழகான கிராமிய மணம் கமிழும் நாட்டுப்புறப் பாடல் கும்மிச் சத்தத்துடன் 👏🏻 சேர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.....
*காட்டரட்டான் பூத்திருச்சே...
கண்திறந்து சூரியனும் பாத்திருச்சே...
காட்டுத் தட்டான் கூடு வெச்சே..
சேவலெல்லாம் கூவு தம்மா கூத்தடிச்சே...🎼*
பாடலை நீங்களும் கேட்டு/பார்த்து மகிழ வசதியாக பாடலின் காணொளி 👇🏻
அனைவருக்கும் மனம் நிறைந்த புது வருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்💐 நன்றிகள் 🙏🏻
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
22 ஜனவரி 2026



.jpeg)
.jpeg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....