அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் சமீபத்தில் நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் சமயத்தில் கிடைத்த அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
CGV தைப் பொங்கல் திருவிழா - 15 ஜனவரி 2026
இந்த முறை CVG (சர்வஜனப்) பொங்கலுக்கு கும்மியாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பெண்மணிகளால் CGV சத்சங்கத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடனே Smt.லதா ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து Smt. மஹாலக்ஷ்மிக்கு (எங்கள் CGV யின் பத்மினி i.e நாட்டியப் பேரொளி cum பிரபுதேவி i.e நடன இயக்குனர் - எப்போதும் சிறுவர்களையும் அவ்வப்போது வயதில் இளம் பெண்களையும், (மனதால்) இளம் (!!!??) பெண்களையும் ஆட்டுவிப்பது இவருக்கு கை + கால் வந்த கலை).
நாங்கள் அனைவரும் (12 பேர்) பொங்கலுக்கு ஆறு நாட்கள் முன்பு CGV யின் clubhouse இன் யோகா அறையில் practice க்கு assemble ஆனோம்.
அனைவரும் முதல் மாடியிலிருந்த (லிப்ட் இல்லை) யோகா அறைக்கு தஸ், புஸ் என்று மூக்கால் + வாயால் மூச்சு விட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்(தேன்)தோம்...
முதல் நாள் practice இல் பாதிப் பாட்டுக்கு (1 1/2 நிமிடம்) movements சொல்லிக் கொடுத்தாள் மஹா(லக்ஷ்மி).
அழகான movements. ஆரம்பத்தில் fashion parade போல் நாங்கள் இரு வரிசையாக ஒயிலாக இடுப்பை ஒசித்து, இடது இடுப்பில் கைவைத்து வலது கையால் புடவை முந்தானையை அசைத்துக்கொண்டே நடந்து வந்து ஒரு சுற்று சுற்றி நிற்கவேண்டும்.. அதுபோல் இரு முறை.
(ஒரு சுற்றிலேயே கிர் அடித்தது🥴. அதனால் ஒரு முறையோடு நிறுத்திக் கொள்வதுபோல் choreography மாற்றப்பட்டது ( வேற வழி?)
மஹா(குரு), தான் கற்ற பெற்ற அனைத்து அபிநயங்களையும் எங்களுக்கு sincere ஆகப் பயிற்றுவித்தாள்❤️.
நாங்களும் அவள் சொல்லிக் கொடுத்தபடி (!!!???) நடந்து, சுற்றி, கும்மி அடித்து, இடுப்பை அசைத்து (அப்படி நினைத்து - யப்ப்பப்பா 😫) ஆடினோம். (நடன இயக்குனர் எங்களைவிட மிகவும் சிறியவள் - அதான் அவள் - இவள் வயசு சிறுசு,ஆனால் கீர்த்தி பெருசு👍🏻😊)
நாங்கள் ரொம்ப ஆர்வமாக சுழன்று சுழன்று கும்மி அடித்தோம். அவள் முகத்தில் 'என்னது? அவங்கள பாட்டுக்கு கும்மியடிக்கச் சொன்னால் அவங்கபாட்டுக்கு கும்மியடிக்கிறாங்க??😟' எனும் எண்ணம் பிரதிபலித்தது… ஆனால் சொல்லவில்லை.. sweet girl. (சொன்னால் மட்டும் உடனே சரியா ஆடி அசத்தீடுவோமா என்ன??? யாருகிட்ட???)
சும்மா சொல்லக் கூடாது பயங்கரப் பொறுமை மஹாக்கு👌🏻👌🏻
நிலத்தில் காலை உதைத்து உதைத்து ஆடும் எங்களை பூதேவி பொறுக்கும்போது இந்த ஶ்ரீதேவி (அதான் மஹாலக்ஷ்மி) பொறுக்க மாட்டாளா என்ன?
மறுநாளிலிருந்து எங்களை ஆட்டுவிக்க ஒரு நடன ஆசிரியர் போதாது(!!??) என்று Smt.திவ்யாவும் இரண்டாவது நடன ஆசிரியராக (இவர் CGV யின் சொர்ணமுகி😊) மஹாவுடன் இணைந்து எங்களை ஆட்டுவிக்க வந்தாள் (இவளும் இளம் பெண்தான்).
நாங்கள் எப்படி ஆடினாலும் practice இறுதியில் கைதட்டி அருமை, awesome, அட்டகாசம் எனும் வார்த்தைகளால் இருவரும் எங்களை குஷிப் படுத்தினர் (நாங்களும் படுத்தினோம்😜!). நல்ல மனம் வாழ்க🙌🏻
கீழே குனிந்து கை தட்டவேண்டிய போது மேலேயும், இடது, வலது பக்கம் இருப்பவர்கள் பக்கம் திரும்பி கையைத் தட்ட வேண்டியபோது மாத்தி மாத்தி தப்பாகத் திரும்பித் தட்டி (விட்டு) திருப்தியாக சொதப்பினோம்...😌. பின்னர் நாங்களே சிரித்தும் விடுவோம் (பிறர் சிரிப்பதற்கு முன்! நல்ல sportsmanship😊)
கடைசி இரண்டு நாட்கள் திறந்த வெளி பயிற்சி..முதல் நாள் miyawaki gate முன்னால். அப்போது முதல்முறை practice இல் steps சரியாக வராததற்கு புது இடம், கட்டாந்தரையில் (slab இருந்தது!) வெறும் காலோடு ஆடியது (சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் நீ எங்கே என்னன்பே பாடல் காட்சியைக் (minus கண்ணாடிச் சில்லுகள்) கற்பனை செய்து கொள்ளுங்கள்! கற்பனைதானே என்ன நஷ்டம்!) walking போனவர்கள் வேடிக்கை பார்த்தது போன்ற genuine(!!) காரணங்கள் சொல்லப்பட்டன..)
கும்மிச் சத்தம் சரியாகக் கேட்கவில்லை, திறந்தவெளி என்பதால். நன்றாக சத்தமாக கை தட்டுங்கள்👏🏻 என்றாள் மஹா. (சொத்து சொத்தென்று சாணி தட்டும் அரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே - (ஆண்டாள் மன்னிக்க) என்று சொல்லாமல் சொன்னாள்).
மறுநாள் venue மாற்றி garden னுக்குள் கும்மி அடித்தோம். அழகான பசுமையான மரங்கள் சூழ்ந்த இடத்தில் பக்ஷிகள் கானம் பாட, காற்று சிலு சிலுவென தலைமுடியைச் செல்லமாய்க் கலைக்க, சுகமான இயற்கைப் பின்னணியில் பயிற்சி. அன்று practice இல் அனைவரும் நன்றாகவே கும்மி அடித்து ஆடினோம்.ஆகவே அங்குதான் perform செய்வதென்று முடிவாயிற்று.
மஹா, திவ்யா முகத்தில் நிம்மதி கலந்த பெருமூச்சு! தங்கள் குழந்தைகளை exam க்கு prepare பண்ணும்போது கூட அவர்கள் இவ்வளவு கவலைப் பட்டதில்லை!
அடுத்து costumes பற்றி discussions நடந்தது.நிறைய ஜரிகை போட்ட புடவை, பெரிய பொட்டு, ஆரம்,necklace, கொலுசு,உதட்டுச் சாயம், கண்ணாடி வளையல்கள்,
தலையில் பூச்சரம், கொண்டையில் Bun (பின்னணியில் பண் - எப்படி என் pun?😜) என்றெல்லாம் ஒரு அங்கத்தினர் suggestion கொடுக்க பார்வையாளர்களின் மன, இதய ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பலதைக் கைவிட்டு சிலவற்றை மட்டும் ஏற்றோம்.
ஒரு வழியாக அசையாத இடுப்பை அசைய வைத்து நகராத கால்களை நகர வைத்து சுழலாத கைகளைச் சுழல வைத்து ஆறு நாட்கள் கடும் பயிற்சிக்குப்பின் அந்த முக்கியமான நாளின் நிகழ்ச்சிக்குத் தயாரானோம்....
அந்த நாளும் வந்தது... அப்போது நடந்தது என்ன? காத்திருங்கள்… அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
21 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....