ஞாயிறு, 25 ஜனவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி நான்கு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு - 223 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



படிக்கிறியா சாப்பிட்றயா கணேசா?


ரெண்டும்மா. இடது கை free யாத்தான இருக்கு.. எனக்கு ஒரு சந்தேகம்..


கேளு கேளு, எந்த chapter ல?


இல்ல, இந்த மோத்திசூர் லட்டு  நீயா பண்ணின? நல்லா இருக்கு?


நெனச்சேன்....😏


ஓம் ஶ்ரீகணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******




சஷ்டி விழா இன்றிலிருந்து ஆரம்பம். என்ன தரிசனம் பண்ண, சேர்ந்து சஷ்டி கவசம் பாராயணம் பண்ணன்னு பக்தர்கள் வருவாங்க மயிலண்ணா... 


ஹ்ம்ம் இந்த ஆறு நாள் என்ன கண்டுக்கவே மாட்ட இல்ல கார்த்திகேயா...


சே சே, ரொம்ப feel பண்ணாத மயிலண்ணா.

நீ இல்லாமல் நானா? அதுக்காக என் முதுகை இப்படி உரசி கிச்சு கிச்சு மூட்டாம கொஞ்சம் தள்ளி இரு பாப்போம், சமத்து..


ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



விபூதி குங்குமம் மத்த makeup எல்லாம் perfect

ஆ இருக்கு முருகா கிளம்பு. அங்க பக்தர்கள் காத்திட்டிருப்பாங்க சஷ்டி ரெண்டாவது நாள் இல்லையா?


அது சரிம்மா, கண்ணாடில என்  கழுத்துல மாலை தெரியுது?? எப்படி??


மஹா மாயாவியோட மருமகன் இல்ல அப்படித்தான்...


ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா இப்ப என்னைப் பார்த்தா அப்பா மாதிரியே இருக்கேன் இல்ல?


கந்தா,  முதல்ல மத்தாப்ப

தள்ளிப் பிடி. கண்ணுல பொறி பட்டுடப் போகுது...


என்னம்மா, நானே அப்பாவோட நெத்திலேர்ந்து புறப்பட்ட தீப்பொறி தான? எனக்கேவா??? இதெல்லாம் எனக்கு அவல் பொரி மாதிரி, ஜுஜுபி....


Dialogue போதும்  முருகா… சொன்னதச் செய்... (எப்படி இதுகள சமாளிக்கறதுன்னே தெரியல… எல்லாத்துக்கும் அதுக கிட்ட பதில்  இருக்கு… முடியல😟..)


ஓம் கந்தா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



இத பாரு ராதா நீ நினைக்கிற மாதிரி இது ஒண்ணும்  அனார்கலி tops ம் leggings ம் இல்ல.

நானே ஐடியா குடுத்து தச்சு வாங்கினதுதான், ராசலீலா ஆட சௌகரியமா. இதைப் பார்த்துத்தான்  அப்புறம் அவங்க copy அடிச்சிருக்காங்க… அதுவும் அடுத்த யுகத்துல... சொன்னா நம்பணும்...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



உக்கார்ந்து இல்ல கொஞ்சம் குனிஞ்சு பணிவா அப்பாக்கு அர்ச்சனை பண்ணலாமே கணா...


பண்ணலாம்மா, இந்த பெல்ட் கொஞ்சம் tight..


அதான, நீ உடம்ப நன்னாத்தான flexible ஆ வெச்சுண்டு இருக்க… (எதுக்கு வம்பு...🙂)


ஓம் ஶ்ரீ விநாயகாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



இன்னிக்கி கார்த்திகை கடைசி சோமவாரம் மகேஷ்வரனுக்கு பாலாபிஷேகம் ரொம்ப விசேஷம், ஆனா என்ன பூக்களும் இருக்கு பால் பாத்திரத்துல? 


ஆமா தேவி இது அர்ச்சனாபிஷேகம்.

பூவும் ஜில்லுனு அவர் சிரசுமேல விழுமில்லையா?


அடேயப்பா.. super idea நாதா 👌🏻(சே, நான் laziness னு தப்பா நெனச்சுக்கிட்டேன்...)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

25 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....