வெள்ளி, 9 ஜனவரி, 2026

Indeco Hotels - பழமையும் புதுமையும் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இதுவும் கடந்து போகும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சமீபத்தில் கும்பகோணம் சென்ற போது ஸ்வாமி மலையில் இருக்கும் Indeco Hotels எனும் தங்குமிடத்திற்கு இரண்டு முறை சென்றிருந்தேன்.  ஸ்வாமிமலை அக்ரஹாரத்தில் இருந்த பழமையான வீடுகளை வாங்கி அவற்றின் பழமை மாறாமல், புதுமையும் கலந்து ஒரு அழகான தங்குமிடத்தினை உருவாக்கி இருக்கிறார்கள்.  Indeco Hotels உரிமையாளர் பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறார் என்பதால் மிக மிகப் பழமையான பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.  நான்கு சக்கர வாகனம், விக்ரஹங்கள், ரேடியோக்கள், ஒலிபெருக்கிகள், ஃபேன்கள் என நிறைய விஷயங்கள் இங்கே உண்டு.  தங்குமிடங்களில் இருக்கும் Furniture உட்பட பலவும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கின்றன.  இந்த இடத்தில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு - ஒரு நிழற்பட உலாவின் முதல் பகுதியாக…  மேலும் தகவல்களை அடுத்து வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். 































*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 ஜனவரி 2026


4 கருத்துகள்:

  1. இந்த இடம் பற்றிய தகவல்கள் மிகவும் கவர்கின்றன.  கும்பகோணம் அவ்வப்போது சென்று வருகிறேன்.  இது எங்கு இருக்கிறது என்றும்   .தாங்காமல் ஜஸ்ட் சென்று பார்த்து வர அனுமதி உண்டா, உணவகம் போல வெளியார் வந்து சாப்பிடும் வசதி வைத்திருக்கிறார்களா என்றும் சொல்லவும்.  தங்குவதற்கு என்ன காசு வாங்குகிறார்கள் என்றும் தெரிந்தால் சொல்லுங்கள்.

    V I P தங்கியதால் ஸ்டார் ஹோட்டல் ரேன்ஜோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // .தாங்காமல்//

      கஷ்டம்.. 'தங்காமல்' என்று படிக்கவும்!!!

      நீக்கு
  2. படங்கள் அத்தனையும் கவர்கின்றன தங்கும் இடமும். Home Stay போன்று இருக்கிறது. என் தங்கை பெண் இங்கு 3, 4 வருடங்களுக்கு முன் பொங்கல் சமயத்தில் சென்று அங்கு தங்கினாள். ரொம்ப அழகான இடம் என்று சொன்னாள். பொங்கல் திருவிழாக்கள் முன்பு எப்படிக் கொண்டாடுவாங்களோ அப்படிக் கொண்டாடினார்கள் என்றும் சொன்னாள். அவள் அனுப்பிய ஃபோட்டோக்களில் முதல் ஐந்து படங்களைப் பார்த்ததும்தான் இதே இடம் என்று நினைவுக்கு வந்தது. சாப்பாடு எல்லாமே நன்றாக இருந்ததாகச் சொன்னாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    ஸ்வாமி மலையில் இருக்கும் Indeco Hotels படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பழையப்பொருடகள் எல்லாம் காட்சிப் படுத்தி இருப்பது பார்க்க அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....