ஞாயிறு, 18 ஜனவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி மூன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



ஏம்மா, ஊஞ்சல்ல ஆடறதே ஜாலியா சந்தோஷமா free யா இருக்கத்தான்.. அப்பவும் இத்தன நகை, மாலை,கிரீடம் எல்லாம் தேவையா???  (அதுவும் கொலுசு நாளுக்கு நாள் அகலாமாகிக்கிட்டே போகுது😟)


இல்லடா செல்லம், அப்புறம் அது நீதான்னு எல்லோர்க்கும் எப்படித் தெரியும்?


மயில் பீலி இருக்கே! போறாதா.... படுத்தற மா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



எல்லோர் முன்னாலயும் பூ, பழத் தட்டெல்லாம் வெச்சுட்டு மெனக்கெட்டு என் முன்னால பலகாரத் தட்ட வெச்சிருக்காங்க, இந்த மூஞ்சூறு வேற கொர கொரன்னு சத்தம் போட்டுக்கிட்டு! ஒரு மனுஷன் எவ்வளவுதான் கட்டுப்பாடா இருக்கறது! இனி அலங்காரம் முடிஞ்சு பூஜை முடிஞ்சு அப்புறம்தான் நைவேத்யம்… ஹ்ம்ம்...


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



இவங்க அரட்டை அடிக்கற மாதிரியும் தெரியல.

கொண்டு வந்தத சாப்பிடற மாதிரியும் தெரியல.

அந்த  பாத்திரங்கள கொஞ்சம் பின்னாடி வெச்சாங்கன்னா நல்லா இருக்கும். நிலாச்சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.....


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



இன்னிக்கி தியானம் கத்துக்கிட்டது போதும் நாதா மடக்கி உக்காந்ததுல காலே வீங்கிட்ட மாதிரி இருக்கு… கிளம்பலாமா? ஆமா உங்களுக்கு மூணு கண்ணு இருக்கு சரி,

காலும் மூணா? இல்ல எனக்குத்தான் கண்ணுல கோளாறா??


அது ரொம்ப நேரம் கண்ண மூடிட்டு இருந்ததுல உனக்கு வித்தியாசமா எல்லாம் தெரியுது தேவி.... packup...


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா, கர்வா சௌத் நல்லபடியா முடிஞ்சுது, இனி சாப்பிடலாம்..


ஓ, சல்லடைல எத்தனை ஓட்டை இருக்குன்னு எண்றன்னு நெனச்சேன் ராதா😊


ஒரு நாளாவது கொஞ்சம் சீரியசா இரு கிருஷ்ணா என்னைக் கலாய்க்காம..


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏம்மா தீபாவளிக்கு sweets இவ்வளவுதானா?


ஏன் கிருஷ்ணா இது  போறாதா? ரொம்ப கம்மியோ?


இல்ல, variety  இருக்கு ஆனா அளவு கொஞ்சம் கம்மி.நான் ஒவ்வொண்ணுத்தையும் light ஆ taste பண்ணினாலே தீர்ந்துடும் போல இருக்கு.. நமக்கு friends வேற ஜாஸ்தியா … அதான்..


சரி கிருஷ்ணா ஆர்டர் பண்ணிடலாம், இப்ப எழுந்து வா பாக்கலாம்..சமத்து..  (எப்ப போய் அங்க உக்காந்தான்???)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா இன்னிக்கி சாயந்திரம் நாமெல்லாம் சேர்ந்து பட்டாசு வெடிக்கலாம்னு  சொல்லிட்டு எந்த இடத்துக்கு வருவேன்னு சொன்ன?


அதெல்லாம் ஒரு தடவ தான் சொல்லமுடியும் (யாருக்கு ஞாபகம் இருக்கு...🤨. ஒரு flow ல சொல்றதுதான்...)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....