பதிவுலகில் நான்
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றிய பகிர்வு இது. 2009 ஆம்
ஆண்டு பதிவுலகிற்கு வந்த பிறகு நான் தொடரும் பதிவர்களில் பல பதிவுகள் எழுதிய சில
பதிவர்கள், மற்றும் அவர்களுடான எனது நட்பு ஆகிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு! வாங்க பார்க்கலாம் :)
1. கீதா சாம்பசிவம்
2005-ஆம்
வருடத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுலகில் தனது முத்திரையைப் பதித்து வரும் திருமதி கீதா
சாம்பசிவம் தனது எண்ணங்கள்
வலைப்பூவில் இது வரை எழுதிய பதிவுகள் 1488. தனது அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்,
கதைகள் என பல தலைப்புகளில் பதிவுகள் எழுதி வரும் இவர், இந்த வலைப்பூ தவிர கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும் பொற்சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என
இன்னும் ஐந்து வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார். சென்னையின் அம்பத்தூர் வாசியான
இவர் தற்போது ஸ்ரீரங்கத்துக்கு வந்த பிறகு நான்கைந்து முறை சந்தித்து விட்டேன்.
ஒவ்வொரு முறையும் நான் திருச்சி வரும் போதும் இவரைச் சந்திக்கா விட்டால், ‘க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று சொல்லும்
இவரது பாசத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
2. துளசி கோபால்
துளசிதளம் எனும்
தளத்தில் 2004 – ஆம் வருடம் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 1402 பதிவுகள் எழுதி
இருக்கிறார். இவர் எழுதும் பயணக் கட்டுரைகளில் எத்தனை எத்தனை விவரங்கள்.
பார்க்கும் அத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இவர் தனது கட்டுரைகளில்
எழுதுவதைப் பார்த்தால் தான் எனக்கு பொறாமை. பயணக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்குப்
பிடித்தம் ஏற்படக் காரணமானவர் இவர் தான். தான் எழுதும் கட்டுரைகளில் அவர் எடுத்த
புகைப்படங்களையே இணைத்து சிறப்பான பதிவுகள் எழுதும் இவரை நான் இதுவரை மூன்று முறை
சந்தித்து இருக்கிறேன் – ஒரு முறை தில்லியில், இரண்டாவது சென்னையில் மூன்றாம் முறை
திருச்சியில். இவருடனான எனது நட்பு தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
3. புதுகைத் தென்றல்
ஹைதை ஆவக்காய் பிரியாணி,
பயணக் கட்டுரைகள், சினிமா, சமையல், கொசுவத்தி என பல தலைப்புகளில் தனது புதுகைத்தென்றல்
வலைப்பூவில் இதுவரை 936 பதிவுகள் வெளியிட்டு இருக்கும் புதுகைத் தென்றல் வலைப்பூவில்
எழுத ஆரம்பித்த்து 2007 – ஆம் வருடம்.
இரண்டு வருடத்திற்கு முன் தில்லி வந்த இவரை நானும் சக தில்லி பதிவர்களும்
சந்தித்து நீண்ட நேரம் அளவளாவினோம். இது பதிவர்கள் சந்திப்பாக இல்லாது குடும்ப
நண்பர்களின் சந்திப்பாகவே அமைந்தது! விரைவிலேயே 1000 பதிவுகள் எழுதிட இவருக்கு
எல்லாம் வல்லவன் வாய்ப்புகள் தரட்டும்!
4. மோகன்குமார்
இவரை உங்களுக்கு
அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலாம் இடத்தினை தக்க
வைத்திருக்கும் இவர் 2008-ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்து இதுவரை 677 பதிவுகளை தனது வீடு
திரும்பல் வலைப்பூவில் எழுதி இருக்கிறார். இவர் எழுதாத விஷயமே
இல்லை எனச் சொல்லலாம்! புத்தகம்/சினிமா விமர்சனங்கள், பல விஷயங்களை தன்னகத்தே
கொண்ட வானவில், தொலைக்காட்சி விமர்சனங்கள், என பல துறைகளில் கலக்கும் இவரது
பதிவுகளில் இவர் எழுதும் சாதாரணமானவர்களின் நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்த
விஷயம். இவரையும் இதுவரை மூன்று – நான்கு முறை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு
சந்திப்பும் சுவாரசியம்!
5. பழனி. கந்தசாமி
2009-ஆம் வருடம்
சாமியின் மன
அலைகள் எனும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை எழுதிய
பதிவுகள் எண்ணிக்கை 536. சிறப்பான பல விஷயங்களை எழுதி வரும் இவரை நான் சந்தித்தது பழைய
தில்லியின் ரயில் நிலையத்தில்! கோவையிலிருந்து ஹரித்வார் செல்லும் போது வழியில்
சந்தித்தேன் இவரை. கோயம்புத்தூருக்கே உண்டான குசும்புடன் எழுதும் இவரது பல
பதிவுகளுக்கு நான் ரசிகன்!
இவர்கள் தவிர
நான் நேரில் சந்திக்காவிட்டாலும் தொடர்ந்து படித்து வரும் வலைப்பூக்களும் அவர்கள்
எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், எழுத ஆரம்பித்த வருடமும் கீழே!
1184 – ஐந்து
ஆசிரியர்கள் குழு – எங்கள் பிளாக்
- 2009
823 -
இராஜராஜேஸ்வரி – மணிராஜ் – 2011
510-சென்னை
பித்தன்–நான் பேச நினைப்பதெல்லாம்–2008
457 – நாஞ்சில் மனோ – 2010
439 – சங்கவி – 2009
406 –
ராமலக்ஷ்மி – முத்துச்சரம் – 2008
சரி, ”இதெல்லாம்
இந்தப் பதிவில் இன்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என
சந்தேகத்தோடு படிக்கும் உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது!
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்ஸில் 400 ரன்கள் எடுத்த
ஒரே வீரர் பிரையன் லாரா மட்டுமே! ஆனால் நமது தமிழ் வலைப்பூக்களில் 400
பதிவுகளுக்கு மேல் எழுதிய லாராக்கள் பலர். அவர்களைப் பற்றி சொல்லி நானும் அந்த பட்டியலில்
இன்று இடம் பெறுகிறேன் எனச் சொல்லவே இந்த பதிவு! ஆமாங்க இது என்னுடைய நானூறாவது
பதிவு!
உங்கள்
வாழ்த்துகளுக்கு முன்கூட்டியே நன்றி சொல்லி விடுகிறேன்!
தொடர்ந்து இந்த
தளத்தில் சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நானூறு நாலாயிரமாக நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரேகா ராகவன்.
தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சித்தப்பா......
நீக்குநன்றி, நாகராஜ்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஅறிமுகங்கள் அருமை... அனைத்து தளங்களுமே நான் ரெகுலராக பார்வையிடும் தளங்களே...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்கு400 தொட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். முன்கூட்டியே வாழ்த்தை எதிர்பார்த்து நன்றி சொல்லிட்டா மட்டும் போறுமா வெங்கட்...? ட்ரீட் தரணுமாக்கும் செமத்தியா!
பதிலளிநீக்குட்ரீட் தானே கணேஷ்... அடுத்த சென்னை பயணத்தின் போது தந்தால் போச்சு! :)
நீக்குதங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
எங்கண்ணா என்னை விட்டுட்டு ட்ரீட்டுக்குலாம் வர மாட்டாராம் சொல்ல சொன்னார். அண்ணன் தங்கையை பிரித்த பாவம் உங்களுக்கு வேணாம் சின்ன சகோ!
நீக்குஉங்க நம்பர் மூணு! ஏற்கனவே கணேஷ், சேட்டை இரண்டு பேரும் சொல்லிட்டாங்க! உங்களுக்கும் சேர்த்து ட்ரீட் கொடுத்துட்டா போச்சு!
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி!
வெங்கட்ஜீ! எனது அபிமானம் மற்றும் மரியாதைக்குரிய பதிவுலக முன்னோடிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, உங்களது 400-ஐயும் சொல்லிட்டீங்க! கணேஷுக்கு ட்ரீட் கொடுக்கும்போது, பக்கத்துலே எனக்கும் ஒரு சீட் கொடுங்க!
பதிலளிநீக்குசீட் தானே போட்டுடுவோம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணே!
நானூறு , பல்கிப்பெருக மனமார வாழ்த்துகின்றேன்.
பதிலளிநீக்குஅடிச்சு ஆடுங்க!!!!
கண்டுக்கிட்டதுக்கு நன்றீஸ்.
நீங்க தானே எங்களுக்கெல்லாம் முன்னோடி!
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி துளசி டீச்சர்......
400-க்கு முதலில் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவலைச்சரம் வந்து விட்டோமா என்று ஒரு நிமிடம் திகைத்தேன்...
மேலும் அடிச்சி ஆட வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஆஹா மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்கு(என்னைப்பத்தியும் சொல்லியிருக்கீங்க நன்றீஸ்)
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.
நீக்குநம்ம ஊருல பாதிப்பேருக்கு மேல நூறு - இருநூறு என்று அடித்து விட்டு ஆடிக்கிட்டு இருக்காங்க. அவர்களையெல்லாம் அடிக்காதீங்க, தள்ளாடாதீங்க என்று அறிவுறுத்துவோம். ஆனா நீங்களும் மற்ற பதிவர்களும் நானூறு, ஐநூறு, ஆயிரம்னு அடிச்சும் ஆடாம ஸ்டெடியா நிக்கிறீங்களே! வாழ்க! வாழ்க! நீங்கள் அனைவரும் இன்னும் நிறைய அடிங்க என்று வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குஅட வாங்க அண்ணாச்சி - அந்த நூறு/இருநூறு வேற விதம்!
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.
பதிலளிநீக்குநானூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
நலமுடன் வாழ்க .. வளமுடன் வளர்க..
// 823 - இராஜராஜேஸ்வரி – மணிராஜ் – 2011 //
எமது பதிவையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தற்கு இனிய நன்றிகள்..
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்கு400க்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு400aaaaaaa.....wow. First century easy thaan. Adukku appuramum ninnu aadaradhu great thaan. Adukku oru special salaam foe u and other munnodigal. Congrats Anna
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.
நீக்குinnaa? first century easyaa? nalla solveengale?!
நீக்குஅப்பாதுரை: அவங்க முதல் சென்சுரி சுலபமா அடிச்சிட்டாங்க போல! :)))
நீக்குவாழ்த்துக்கள் வெங்கட்நாக்ராஜ்.
பதிலளிநீக்குநீங்கள் குறிபிட்டவ்ர்களை போல் நீங்களும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஉங்களது நானூராவது பதிவுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநாலாயிரம், நாற்பதாயிரம் என்று மேலும் மேலும் வளர ஆசிகள்.
'ப்ரையன் லாரா' பதிவர்களையும் நினைவில் கொண்டு அவர்களையும் பாராட்டி, அவர்களுடன் உங்களது நட்பையும் தெரியப் படுத்தியது அருமை!
எல்லோருமே தெரிந்தவர்களாக இருப்பதில் அலாதி மகிழ்ச்சி!
பாராட்டுக்கள்!
தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....
நீக்குபிரமிக்க வைக்கும் சாதனை. பாராட்டுக்கள். மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குகீதா அவர்கள் எழுத்து இணையத்தில் பரவலாக இருப்பதால் அவரை single blog வைத்து எடை போடமுடியாது. துளசி அவர்களின் 'பிஜி' பயணப் புத்தகம் (புண்காட்சியில் வாங்கிய மருந்து) பதிவாக எழுதியது என்பதை நம்பவே முடியவில்லை. கடுமையான உழைப்பு. இவங்க எல்லாருமே விதவிதமா எழுதுறாங்க. prolificனு பார்க்கிறப்ப ஏறக்குறைய ஆஸ்திகம் என்ற வகையில் மட்டும் எழுதிவரும் இராரா அவர்களை அட்ச்சுக்க ஆள்கிடையாத்..........:-)
ஒரு பதிவு எழுதுவதற்குள் ஓய்ந்து விடுகிறது. லாராக்களின் உழைப்பின் பின்னே இருக்கும் தன்முனைப்பு வியக்க வைக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
நீக்குஃபிஜி தீவு பற்றிய பயணப் புத்தகம் அருமையான ஒன்று. துளசி டீச்சர் எழுதிய மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேன்....
400க்கு வாழ்த்துகள். லேட்டா வந்தாலும்....என்னோட வாழ்த்தை முதல் வாழ்த்தா எடுத்துக்கணும்....ரைட்டா!
பதிலளிநீக்குசேம் பின்ச்! இன்னிக்கு இரண்டு பேருமே ”கீதா மாமி” பற்றி எழுதியிருக்கோம்...:))
சரிங்க! ரைட் ரைட்....
நீக்கு400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்னும் மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் .
நீங்கள் சொன்ன பதிவர்களை நான் படித்ததில்லை.
இனி அறிமுகம் செய்து கொள்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்கு400 க்கு வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்கு400-க்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்கு400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே... என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்
சதீஸ் சங்கவி...
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சங்கவி.
நீக்குவாழ்த்துகள் வெங்கட்!
பதிலளிநீக்குஇந்த மாதிரி ’ப்ரெயின்’ லாராக்களைப் பார்த்து தான் என் போன்ற ‘ப்ரெயின்’ இல்லாத லாராக்களும் ஏதாவது எழுத முயற்சிக்கிறோம். இவர்களை மீண்டும் நினைவு படுத்தி உற்சாகமூட்ட முயற்மைக்கு நன்றிகள்!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].
நீக்குநானூறாவது பதிவுக்கு எங்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு'எங்கள்' பெயரும் லிஸ்ட்டில் இருப்பது கண்டு சந்தோஷம் ஏற்பட்டது. உங்கள் மனதில் இடம் பெற்று, பதிவில் இடம்பிடித்த சக பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....
நீக்குரெண்டு பேருமே பேசி வைச்சிண்டீங்களா? :)))) 400 அடித்திருக்கும் வெங்கட் விரைவில் 1000 அடிக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீங்க குறிப்பிட்டிருப்பவர்களில் பழனி.கந்தசாமியையும், நாஞ்சில் மனோவையும் தவிர மற்றப் பதிவர்கள் அறிமுகம் ஆனவர்களே. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
பேசியெல்லாம் வச்சிக்கல.... :) அதுவா அமைஞ்சது!
நீக்குதங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
//400க்கு வாழ்த்துகள். லேட்டா வந்தாலும்....என்னோட வாழ்த்தை முதல் வாழ்த்தா எடுத்துக்கணும்....ரைட்டா!//
பதிலளிநீக்குஹஹ்ஹா, மிரட்டி இருக்காங்க பாருங்க! :)))))
ஆமாம்.... அதான் சரிங்கன்னு பணிவா பதில் எழுதிட்டேன்! :)
நீக்குமகிழ்வும் பிரமிப்பும் சகோ... வாழ்த்துகள்! சக லாராக்களுக்கும்:)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ....:)
பதிலளிநீக்குசிவாவின் கற்றதும் பெற்றதும்
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவா.
நீக்குஅன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
பதிலளிநீக்குதகவலுக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி! காலையில் படித்து விடுகிறேன்.....
நீக்கு400 தொட்டமைக்கு வாழ்த்துக்கள்...Almost every single post of yours has been informative,useful,interesting and entertaining...
பதிலளிநீக்குKeep going bro...
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.
நீக்குஆஹா! நானூறு அருஞ்சாதனை!.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்கு400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் பலர் பதிவுலகில் அறிந்தவர்கள் தான் சிலரை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன் நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி K.s.s.Rajh.
நீக்குநானூறுக்கு நல்வாழ்த்துகள்! என்னையும் பட்டியலில் சேர்த்திருப்பதற்கு நன்றி:)! பதிவில் குறிப்பிட்டிருக்கும் மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசாதனைக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குவாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா.
நீக்குநானூறுக்கு நானொரு வாழ்த்து சொல்லிக்கறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்கு400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.
நீக்குவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு(http://blogintamil.blogspot.in/2013/02/4.html)
வலைச்சரத்தில் அறிமுகம் - தகவலுக்கு நன்றி தனபாலன்.
நீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட். இன்னும் நிறைய பதிவுகள் நன்றாக எழுதி ஆயிரத்தை சீக்கிரமே தாண்ட ஆசிகள்.
பதிலளிநீக்குலாரா எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும்.
டான் ப்ராட்மேன்,டெண்டுல்கர் ரேஞ்சுக்குப் போக வாழ்த்துகள்.
உங்களுக்குப் பிடித்தவர்களை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்கு400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட். பதிவுலகின் மற்ற லாரக்களையூம் நினைவூட்டி பதிவு எழுதியது மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குவாழ்த்துகள் :)
பதிலளிநீக்குதென்றல் வந்து சென்றதுபோல ஒரு சந்திப்பு மீண்டும் எப்பயோ..?
அதே கேள்வி தான் எனது மனதிலும்!
நீக்குவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராய துரை!
நீக்கு
பதிலளிநீக்குநீங்கள் நன்றாக சுவாரசியமாக எழுதுகிறீர்கள். உங்கள் பதிவுகளை பார்த்தபின்தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. என்னுடய முதல் பதிவை ஓரு வாரத்திற்கு முன்புதான் தமிழ்மணத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன்.
உங்களுக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்.
புதுகை ரவி
தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி. உங்கள் பக்கத்திற்கும் வந்து படிக்கிறேன்....
நீக்குவாழ்த்துக்கள். தொடர்ந்து 500, 1000 பதிவுகளை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஹீம் கஸாலி.
நீக்குதங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள், வெங்கட்ஜி. ;)))))
நீக்குதங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.
நீக்குஉங்கள் போன்றவர்கள் தரும் உற்சாகமே காரணம்.
அட? இதுக்கு நானும் பதில் சொல்லி இருக்கேன். அப்படியே ஆதியோட பதிவுக்கும் சுட்டி கொடுத்திருக்கலாமோ? இதிலே கருத்துச் சொன்னவர்களில் பலர் இப்போது எழுதுவது இல்லை. அதே போல் குறிப்பிட்டிருக்கும் பதிவர்களிலும் ஒரு சிலர் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். முக்கியமாய்ப் புதுகைத் தென்றல்! முகநூலில் ஐக்கியம்! :)
பதிலளிநீக்குஆமாம் கீதாம்மா... உங்கள் கருத்தும் இருக்கிறது.
நீக்குஇப்பதிவில் கருத்துச் சொன்னவர்களில் பலர் இப்போது எழுதுவது இல்லை என்பது வேதனை தான். பலரும் முகநூலில் ஐக்கியமாகி விட்டார்கள் தான்.
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மீண்டும் வாழ்த்துகள் அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய பதிவுகள் இட வேண்டும் . அது எல்லோரையும் போய்ச் சேர வேண்டும்.
ஆமாம், நிறைய பதிவர்கள் முக நூலில் அடைக்கலம். எனக்கு வலத்தளம் தான் பிடித்திருக்கிறது.
நன்றி மா.
முகநூலை விட வலைப்பூவே எனக்கும் பிடித்தமானது வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.