தொகுப்புகள்

சனி, 21 டிசம்பர், 2013

ஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த பகிர்வில் இரண்டாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு சேஷாத்ரி [காரஞ்சன்] அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு சேஷாத்ரி புதுவையில் வசிப்பவர்.  இந்த கவிதை அழைப்பில் முதல் கவிதையை எழுதிய திரு இ.சே. இராமன் அவர்களின் உறவினர். இதுவரை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் சில சமயங்களில் அலைபேசி மூலம் பேசியது உண்டு. சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான கவிதைகளை அவ்வப்போது தனது பக்கத்தில் வெளியிடுவார். அத்தனையும் சிறப்பான பகிர்வுகள்.  

திரு சேஷாத்ரி ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

    பொங்கிவரும் அன்புடனே
நங்கையவள் கூந்தலிலே
நறுமண மலர்ச்சரத்தை
நாயகன்தான் சூட்டிவிட

எங்கிருந்து வந்தனவோ?
இத்தனை வண்டினங்கள்!
பூவிதழில் தேனருந்த
போட்டியாய் வந்தனவோ?

வலிமைமிகு கரத்தாலே
வண்டினத்தை அவன் விரட்ட
நாணித் தலைசாய்க்கும்
நங்கையவள் கண்ணிரண்டும்
வண்டுகளாய் மாறி
வாலிபனை மொய்ப்பதென்ன?

                                                -காரஞ்சன் (சேஷ்)

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான இரண்டாம் கவிதை இது. கவிதை படைத்த திரு சேஷாத்ரி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. படத்திற்கு பொருத்தமான அருமையான கவிதை.
    திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கவிதையைப் படித்த பின்தான் வண்டினத்தை கவனித்தேன் ...நாயகன் பெயர் வண்டு முருகனாய் இருக்குமோ ?
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  4. Indha kavidhaiyum padaththirku poruththamaga vulladhu. Vazhththukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  7. க்ண்களிரண்டும் வண்டினங்களாய் மொய்த்த ....
    அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. என்னுடைய கவிதையை தங்கள் வலைப்பூவில் அறிமுகத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! கவிதையைப் படித்து கருத்துரையிட்ட/இடப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி ஜி!

      நீக்கு
  9. அருமையான கவிதை... காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. //நங்கையவள் கண்ணிரண்டும்
    வண்டுகளாய் மாறி
    வாலிபனை மொய்ப்பதென்ன?//

    அருமையான கற்பனை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  11. மிகச் சிறப்பாக இருக்கின்றது கவிதை! சகோதரருக்கு வாழ்த்துக்கள்!

    பகிர்வினுக்கு உங்களுக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  13. சிறப்பான கவிதைக்கும் கவிதைப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  14. ஓவியத்திற்கேற்ற
    அற்புதமான கவிதை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

      நீக்கு
  16. படத்திற்கு பொருத்தமான அருமையான கவிதை.
    திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  17. கவிதை மிக அருமை - திரு.சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நானும் யோசிச்சுப்பார்க்கிறேன், என் மர மண்டைக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று!!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  18. //பூவிதழில் தேனருந்த
    போட்டியாய் வந்தனவோ?//

    அதானே!

    நன்கு ரசித்து எழுதியுள்ள கவிதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  19. இன்னும் சில வரிகள் எழுதியிருக்கலாமோ? நன்றாக இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....