தொகுப்புகள்

புதன், 8 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 10 – முருகன்





டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பத்தாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு முருகன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

திரு முருகன் அவர்கள் எனது கவிதை எழுத வாருங்கள் அறிவிப்பினைப் பார்த்து எனக்கு மின்னஞ்சல் மூலம் இக்கவிதையை எழுதி அனுப்பி இருந்தார்.  Muruchandru's Blogspot (mcboy) என்ற அவரது தளத்தின் முகப்பில் அவசியமான மென்பொருட்கள், புதிய தமிழ் திரைப்படங்கள், ஒரு தமிழனின் வலைப்பூ”  என அறிமுகம் செய்திருக்கிறார். அவன் அன்னை இறந்த செய்தியை நண்பரிடம் சொல்லணும்என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.  படித்துப் பாருங்களேன் – என் மனதைத் தொட்ட பதிவு அது!


மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு முருகன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....


என் அன்னை சூட்டிய பூக்களுக்கும்
இன்று என் மணாளன் சூட்டிய பூக்களுக்கும் 
வித்தியாசத்தை அறிந்து கொண்டேன்.

அன்று பாசத்தினால் அகம் மலர்ந்தது
இன்று காதலால் முகம் சிவந்தது.

என்னவன் தாயுமானவன்
நானும்  அவனானவள்.

-          முருகன்.


என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பத்தாம் கவிதை இது. கவிதை படைத்த திரு முருகன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்துவிட்டேன். ஆகையால் ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கிற அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:










44 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அகம் மலர்ந்தது முகம் சிவந்தது....

    சூப்பர் கவிதை... முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான கவிதை படைத்த முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பதிவாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா..
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. தலைவாரி பூச்சூடி அன்னை அனுப்பியது பள்ளிக்கு .தலைவன் பூச்சூடி அழைப்பது பள்ளி அறைக்கு,,கன்னியின் கன்னம் சிவக்காதா என்னா ?
    த.ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி....

      நீக்கு
  5. கவிதை அன்பு, காதல்....ஆஹா அருமை வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  6. என்னவன் தாயுமானவன்
    நானும் அவனானவள்.

    அன்பான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. என்னவன் தாயுமானவன்
    நானும் அவனானவள்.//

    அழகாய் சொன்னார் முருகன் அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மனதை தொட்ட பதிவை வாசிக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. Yennnavan Thayumanavan
    Naanum Avananaval

    Arumaiyana varigal. Rasiththu magizhndhom. MURUGAN Avargalukku paaraattukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  10. "//அன்று பாசத்தினால் அகம் மலர்ந்தது
    இன்று காதலால் முகம் சிவந்தது.//"

    அருமையான கவிதை வரிகள். திரு.முருகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. கவிதை சூப்பர்... திரு முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. அழகிய அருமையான காதல் கவிதை மனத்தைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  13. என்னவன் தாயுமானவன்
    நானும் அவனானவள்.

    அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. கவிதை எழுதியவருக்குப் பாராட்டுக்களும் பகிர்ந்துகொண்ட சகோதரர்
    தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  16. கவிதை எழுதிய முருகனுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

      நீக்கு
  18. வாழ்த்து பாராட்டிய அனைத்து கவிதை பிரியர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி. இந்த வலைபூங்காவில் என்னையும் அங்கம் பெற செய்த தோழி காயத்ரி மற்றும் இந்த வலை பூங்காவின் கதாநாயகன் ஐயா வெங்கட் நாகராஜ் அவருக்கும் எனது வாழ்த்துக்கள் ஒலித்தாகட்டும்.

    இந்த சிறிய கவிதைக்கு பெரிய மனதுடன் வாழ்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி..நன்றி

    மகிழ்ச்சியுடன்,
    முருகன்
    :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை அனுப்பிய உங்களுக்கு நன்றி முருகன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. குறுங்கவிதையாக இருந்தாலும் கூர்மையான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....