எனது பெங்காலி நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு பிள்ளையார் மீது அப்படி ஒரு
காதல்... அதுவும் தீராக் காதல்! அதனாலேயே
பிள்ளையார் பொம்மைகள் சேகரிப்பதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார். எங்கே வித்தியாசமாக பிள்ளையார் பொம்மையினைப்
பார்த்தாலும் வாங்கிவிடுவார். அவருக்காகவே
எருக்கம் வேரில் செய்த பிள்ளையார், நவதானியங்களில் செய்த பிள்ளையார் என
திருச்சியிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கேன். இப்போது ஒரு விநாயகி
பொம்மை வேண்டும் என கேட்டு இருக்கிறார். தமிழகத்தில் எங்கே கிடைக்கும் என்று பார்க்க
வேண்டும்!
சென்ற
வருடத்தில் சூரஜ்குண்ட் மேளாவில் பார்த்த பல பிள்ளையார் பொம்மைகளை ஒரு ஞாயிறில்
புகைப்படப் பகிர்வாக ”பிள்ளையார்பட்டி ஹீரோ” என்று பதிவு
செய்திருந்தேன். சமீபத்தில் எனது மகள் வரைந்த பிள்ளையார் ஓவியங்களையும் “மகளின் ஓவியங்கள் – Saturday Jolly Corner” பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது!
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் ஒருவராயிற்றே – மஞ்சள் தூள்
முதல் தானியங்கள் வரை எதை வைத்து வேண்டுமானாலும் பிள்ளையார் செய்து விடுகிறார்கள்.
நண்பருக்கு பிள்ளையார் பொம்மைகள் வாங்கி சேகரிப்பது
பழக்கம் என்றால், எனது வழக்கம் எங்கே வெளியே சென்றாலும், பிள்ளையார் பொம்மைகளை
படம் எடுப்பது.
அப்படி நான் எடுத்த சில பிள்ளையார் படங்கள் சிலவற்றை
இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பதிவர் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கும் பிள்ளையார் தான் மிகவும்
பிடித்தமான தெய்வம் என்று அவர் பதிவில் சொல்லி இருந்தார். அப்பதிவில் என்னிடம் இருக்கும் படங்களை பதிவாக
வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன் – அதன் விளைவே இந்தப் பதிவு!
ஹலோ மைக் டெஸ்டிங்..... சகோ தேனம்மை லக்ஷ்மணன்
எங்கிருந்தாலும் உடனே இங்கே வரவும்!
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் என்று ஒரு ஊர். அங்கே இருக்கும் கோவிலில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர்.
திருச்சியில் ஒரு கண்காட்சி - பல பொம்மைகள் அங்கே இருந்தன. அவற்றில் எனக்குப் பிடித்த இப்பிள்ளையார் பொம்மை!
சென்னையில் நண்பர் வீட்டு கிரஹப் பிரவேசம் - அங்கே சென்றபோது ஒரு வாயிற்கதவு - அதில் இருந்த பிள்ளையார் தான் மேலே!
குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டபோது ஒரு கடையில் நிறைய படங்களும், அலங்காரப் பொருட்களும் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். அங்கே மாட்டியிருந்த பிள்ளையார் - அட ரொம்ப அழகு!
பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். எனக்கும் தான்! - குஜராத்தில் சாலை ஓர உணவகம் ஒன்றில் மாட்டியிருந்த பிள்ளையார் படம்.
ஹிமாச்சலப் பிரதேசம் - சிந்த்பூர்ணி என்று ஒரு இடம் உண்டு. அங்கே காலை உணவு சாப்பிட ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தேன். அங்கே வைத்திருந்த ஒரு பிள்ளையார் சிலை!
தமிழகம் போலவே ஹிமாச்சலத்திலும் பிள்ளையார் திருடும் பழக்கம் உண்டு போல! சிறைக்குள் பிள்ளையார் - எடுத்த இடம் காங்க்ரா[டா]
”என்னைச் சிறை வைத்தவன் எவன்?” என்று இப்பிள்ளையார் கேட்க மாட்டார் போலும் - இவரும் காங்க்ரா[டா] பிள்ளையார் தான்
[cha]சாமுண்டா தேவி கோவில் வாசலில் நுழைவாயிலில் வீற்றிருக்கும் பிள்ளையார்.... இவரும் ஹிமாச்சலம் தான்..
ஹிமாச்சலத்தில் [B]பைஜ்நாத் என்று ஒரு கோவில் - அங்கே இருக்கும் சிற்பங்கள் அற்புதமானவை. அவற்றில் ஒன்றாக இருந்த பிள்ளையார் சிலை
ஹிமாச்சலத்தில் [B]பைஜ்நாத் என்று ஒரு கோவில் - கோவிலின் வெளியே இருந்த கடையில் விற்பனைக்கு வீற்றிருந்த பிள்ளையார் சிலை
”ஹலோ என்னை அந்தரத்தில் தொங்க விட்டது யாருலே!” என்று இவர் கேட்டாலும் கேட்பார் - கடையில் விற்பனைக்கு மாட்டி வைத்திருந்த பிள்ளையார் - காரில் மாட்டிக் கொள்ளலாமாம்!
என்ன நண்பர்களே, பிள்ளையார் படங்களை
ரசித்தீர்களா.... பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
முதாகரார்த்த மோதகம்.. சதாதி முக்தி சாதகம்...
பதிலளிநீக்குஉங்களுக்கு பிள்ளையாரை ரொம்பப் பிடிக்கும்.
எனக்குக் கொழுக்கட்டைகளை ரொம்பப் பிடிக்கும்!!
:)))))))))))))
எனக்கும் கொழுக்கட்டைகள் பிடிக்கும்! உங்களுக்குப் பாதி எனக்குப் பாதி சரியா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆஹா, பிள்ளையார்னதும் உடனே ஓடிவந்துட மாட்டோமா? எல்லாப் பிள்ளையார்களும் அருமை. என்றாலும் என் அருமை நண்பர் மதுரை வடக்கு மாசி வீதி/மேலமாசி வீதி முனையிலிருக்கும்நேரு ஆலால சுந்தர விநாயகருக்கு ஈடு ஆகுமா? :)))) அவர் எங்கோ இருக்கார், நான் எங்கோ இருக்கேன் என்றாலும் நட்புத் தொடர்கிறது. :))))
பதிலளிநீக்குஉங்கள் நண்பர் மதுரையிலா! சரி அவரையும் அடுத்த முறை பார்த்து விடலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அஹா மிக அருமை சகோ.. விநாயகர் ஆனந்தத்தில் மூழ்கி எழுந்தேன். தேன் :)
பதிலளிநீக்குவிழுப்புரம் மரத்தடிப் பிள்ளையார் கொள்ளை அழகு. பளிங்குப் பிள்ளையார் மரத்தில் பிள்ளையார் பாசிப் பிள்ளையார் என்று அனைவரும் அழகு
செந்தூரப் பிள்ளையார் ஆஞ்சநேயர் ஸ்டைலில் இருக்கார். ஆமா கூண்டுக்குள் போட்டு வைச்சிருக்காங்களே பாவம். :(
பைஜ்நாத் தூண் பிள்ளையாரும். என்னத் தொங்கவிட்டது யார்லேன்னு கேக்குற புள்ளயாரும் கொள்ள அழகு. :)
அப்புறம் ஒண்ணு சொல்ல நினைச்சேன் சகோ . குமுதம் பக்தி ஸ்பெஷலில் யங் ரவிவர்மாக்கள் நு கடைசிப்பக்கத்தில் போடுறாங்க. அதுக்கு ரோஷிணி வரைஞ்ச பிள்ளையார் ஓவியமும் கிருஷ்ணர் ஓவியமும் இன்னும் இருந்தா அதையும் சேர்த்து அவ புகைப்படத்தோட அனுப்புங்க.
ஆமா ஸ்ரீராம் சதாவி முக்தி சாதகமா சதாதி முக்தி சாதகமா.. நான் தினம் தப்பா சொல்றேனா. திருத்தவும் ப்ளீஸ்.
அனைத்து படங்களையும் ரசித்தமைக்கு நன்றி சகோ..... ரோஷ்ணி வரைந்த படம் அனுப்புகிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களே.
சதா விமுக்தி சாதகம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருப்பதுதான் சரி தேனம்மை.
எனக்கும் கொஞ்சம் குழப்பமாகிவிட்டது! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.
பதிலளிநீக்குஅத்தனை பிள்ளையாரும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குபிள்ளையார் புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே....
பதிலளிநீக்குஎனது புதிய பதிவு பாண்டியூர், பாண்டித்துரை Weds பாண்டியம்மாள்.
தமிழ் மணம் - நாலு பேருக்கு நன்றி
சில நாட்களாகவே வலைப்பக்கம் வர இயலவில்லை. பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு குறிப்பிட்ட பதிவினையும் படிக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
பிள்ளையார் ஒவ்வொன்றும் அருமை
பதிலளிநீக்குந்ன்றி ஐயா
தம 5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமலை உச்சியில் அமர்ந்திருப்பவரும் ,ஸ்ரீரங்கம் உருவாகக் காரணமாகவிருந்த்குவருமான விநாயகர் ந்ம்
பதிலளிநீக்குஉள்ளத்த்திலும் ஆட்க்ஷீசெலுத்த்தட்டும்..பிள்ளையார் படங்களை மிகவும் ரசித்த்தேன்..
மாலி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாலி ஜி!
நீக்குபிள்ளையாரைப் பற்றிக் கேட்கவும் படிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..
பதிலளிநீக்குஇனிய பதிவு.. மகிழ்ச்சி..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஒவ்வொரு பிள்ளையாரும் ஒவ்வொரு அழகு.விநாயக தரிசனத்துக்கு மிக நன்றி.வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குபிளையாரைப் பிடிக்காமல் இருக்குமா ! அதனால் அவர் இருக்கும் பதிவுமே ரொம்பரொம்ப பிடிச்சு போச்சு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=lNOt-l76OFQ
பதிலளிநீக்குyour pictures combined with the lyrics provided by Mrs.Thenammai Lakshmanan (translation of Ganesa Bhujangam)
Thank U both
subbu thatha
www.menakasury.blogspot.com
காணொளியையும் உங்கள் குரலில் கணேச புஜங்கமும் கண்டு/கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
ஆஹா... அழகான பிள்ளையார்(கள்).
பதிலளிநீக்குபடிக்கும் போதே தேனக்காவுக்கு பிடித்தது போல வெங்கட் அண்ணனுக்கும் பிள்ளையாரைப் பிடிச்சிருக்கு என்று நினைத்தேன்... பின்னர்தான் தேனக்காவுக்காக தாங்கள் பதிவு செய்தது தெரிந்தது... அழகுப் பிள்ளையார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.
நீக்குஅனைத்தும் அழகு...
பதிலளிநீக்குசகோதரி தேன்னம்மை கருத்துரையும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஒவ்வொரு விநாயகரும் ஒவ்வொரு அழகு. தாங்கள் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்துள்ள விதம் அருமை. பெரும்பாலும் வீடுகளில் அதிகம் காணப்படும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில்கூட விநாயகரைக் காணமுடிவதை நாம் அறிவோம். நல்ல பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குஉண்மை தான். எங்கும் விநாயகரைக் காண முடிகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
‘பிள்ளையார் எத்தனை பிள்ளையாரடி!’ எனப் பாடத் தோன்றுகிறது. அனைத்து பிள்ளையார்களையும் இரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குமனதைக் கவரும் பிள்ளையார்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குமுழுமுதற் கடவுளை பல வடிவங்களில் தரிசிக்க படமெடுத்துப் பகிர்ந்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி! படங்கள் அனைத்தும் அருமை! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குஅட்டகாசமான படங்கள்... பிள்ளையாரைக் கொண்டு எத்தனைவிதமான கலைப் படைப்புகள் :-) நானும் கூட பாபநாசம் அகஸ்தியர் அருவி அருகே இருக்கும் ஒரு விநாயகரை படம் பிடித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஅகஸ்தியர் அருவி பிள்ளையார் - அதையும் பகிரலாமே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
அழகான பிள்ளையார் படங்கள். பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஎங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண்மணி வீடு முழுக்க பிள்ளையார் பொம்மைகளை சேமித்து வைத்திருக்கிறார். வேறு வேறு ஊர்களில் வாங்கிய, ஸ்படிக, கண்ணாடி, பிளாஸ்டிக், மண் என்று எல்லாவற்றிலும் செய்த பிள்ளையார்கள். முழுவதையும் பார்க்க ஒரு நாள் போதாது.
பதிலளிநீக்குநீங்கள் போட்டிருக்கும் படங்களும் நன்றாக இருக்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குபிள்ளையாரின் படங்கள் ரசிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்கு