எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 28, 2014

மகளின் ஓவியங்கள் – Saturday Jolly Corner
சில வாரங்கள் முன்பு, பதிவர் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அவர்களது Saturday Jolly Corner பதிவுகளில் எனது மகளின் ஓவியத் திறமை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புவதாகச் சொல்லி கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார்கள். அவரது கேள்வி என்ன தெரியுமா?

/// ரோஷிணியின் ஓவியத் திறமையை எப்போது கண்டுபிடித்தீர்கள். அவளுக்கு எவற்றை வரைவதில் விருப்பம் அதிகம்? சில ஸ்பெஷல் ஓவியங்களையும் அவள் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ///

இந்த கேள்விக்கு நான் அளித்த பதிலும் எனது மகளின் சில ஓவியங்களையிம் அவரது பதிவில் பார்க்கலாம். இந்த மாதம் நான்காம் தேதியே அவரது பக்கத்தில் வெளி வந்துவிட்டது – இத்தனை தாமதமாக இங்கேயும் ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்! – அதற்கு நானே பதில் சொல்லி விடுகிறேன்!

எனது பக்கத்திலும் ஒரு சேமிப்பாக இன்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கூடவே சமீபத்தில் என் மகள் வரைந்த மேலும் சில ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பதிவு. தினசரி காலண்டரில், புத்தகங்களில் பார்க்கும் படங்களை அவளுக்குத் தோன்றும் சில மாற்றங்களோடு வரைந்து வருகிறாள்.  அப்படி வரைந்த சில படங்கள் கீழே.....

மகளின் ஓவியங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். சமீப காலமாக Quilling தோடுகள் செய்வதிலும் அவளது ஆர்வம் திரும்பி இருக்கிறது. சமீபத்தில் செய்த இரண்டு தோடுகளும் இங்கே உங்கள் பார்வைக்கு!மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 comments:

 1. மறுபடியும் இங்கே மகளின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தேன். அற்புதம். கடவுளின் அருள் இருக்கிறது உங்கள் மகளுக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை. காதணிகளும் அழகாகச் செய்துள்ளார். அவரது கைத்திறனுக்குப் பாராட்டுகள். தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. ரோஷிணியின் படங்களை இரசித்தேன். விநாயகரை வெவ்வேறு கோலத்தில் வரைந்ததை பார்க்கும்போது இவர் நிச்சயம் பிரபலமான ஓவியராக மட்டுமல்ல கேலிச்சித்திர ஓவியராகவும் வருவார் என்பதில் ஐயமில்லை. திருமதி தேனம்மை லக்ஷ்மணன்அவர்களின் பதிவில் வெளியிட்டுள்ள ரோஷிணியின் படங்களையும் பார்த்து இரசித்தேன். செல்வி ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. வணக்கம்
  ஐயா.
  தங்கள் மகளின் ஓவியத்தை இரசித்தேன்.. மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. மிகவும் அழகான ஓவியங்கள்.
  என்னமா வரைகிறார் ரோஷினி. என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 6. அன்பின் வெங்கட்..
  தங்கள் செல்லமகளின் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தேன்.
  அருமை.. நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. ரா.ஈ. பத்மநாபன்October 28, 2014 at 10:10 AM

  பிள்ளையாரை வரைந்திருக்கும் சிறு பிள்ளை யாரு?
  நன்றாக வரைந்ததனால் ரோஷ்ணிக்கு நல்ல பேரு!
  வாழ்த்துகிறோம் நாங்க நாலு பேரு!
  அவளுக்கு அழகான ஆயுசு நூறு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 8. Quilling தோடுகள் , ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை...
  பாராட்டுகள். தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. வணக்கம் !

  மிக மிக அருமையாக வரைந்துள்ளார் !தங்களின் செல்ல மகளிற்கு என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 10. கார்ட்டூன் படங்கள் வரைய வரும் போல் தெரிகிறது. கணினியில் அனிமேஷன் கற்றுக் கொடுத்தால் வெளுத்துக் கட்டுவா. தோடுகளும் அருமை. பல்கலை வித்தகியாகத் திகழ வாழ்த்துகள், ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 11. ஓவியங்கள் மிகவும் அருமை. தங்கள் மகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 12. பெண் குழந்தைகளின் திறமை வியக்க வைக்கிறது.அவளுக்கு கலைகளில் ஆர்வமும் இருக்கிறது நன்றாகவும் வெளிப்படுகிறது. மேன் மேலும் அவளை ஊக்கப்படுத்தவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்....

   உங்கள் முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.

   Delete
 13. நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த சில ஓவியங்களைப் பார்த்து வியந்தேன்.. ரோஷ்னிக்கு வரைவதில் ஆர்வம் அதிகம் என்றால் நன்றாக ஊக்கபடுத்துங்கள்... என் வாழ்த்துக்கள் ரோஷ்னிக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 14. ஓவியங்கள் அருமை. ரோஷனியின் திறமையை கண்டறிந்து ஊக்கப் படுத்தும் பெற்றோராக அமைந்தது ரோஷனியின் அதிர்ஷ்டம். தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 15. ரோஷனியின் விரல்களுக்கு இந்தப் பெரியப்பனின் அன்பு முத்தங்கள். குழந்தைக்கு நல்ல ஊக்கம் கொடுங்கள். அவளால் நீங்கள் கவனிக்கப்படும் நன்னாள் சீக்கிரம் வர என் ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா!

   Delete
 16. ஸ்கிப்பிங் கணபதி சூப்பர். 'க்வில்லிங்'கிலும் அசத்துறாங்க. ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா.

   Delete
 17. ஆஹா ! அருமை அங்கும் பார்த்தேன் மகளின் கைவண்ணத்தை ..ஸ்கிப்பிங் ஆடும் பிள்ளையார்,ஸ்வீட்ஸ் சாப்பிடும் பிள்ளையார் எல்லாம் ரொம்ப அழகு .குழந்தையின் மனதில் உள்ள சந்தோஷம் அப்படியே அழகிய ஓவியமாக வெளிப்பட்டுள்ளது .
  வாழ்த்துக்கள் ரோஷினிம்மா :)
  ரோஷினி .. க்வில்லிங்கிலும் அசத்துகிறார் !! ரொம்ப அழகான காதணிகள் !பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 18. வெகு அழகாக இருக்கின்றன ஓவியங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. மகளின் கைவண்ணம் மனம் கவர்கிறது! மேலும் வளர்ந்து சிறப்படைய எங்களின் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 20. அஹா ஸ்கிப்பிங் ஆடும் விநாயகர் கொள்ளை அழகு. மோதகப் ப்ரியனும் கூட.

  மத்த ஓவியங்களும் க்வில்லிங் காதணிகளும் அழகு. வாழ்த்துகள். :)

  என்னுடைய சாட்டர்டே ஜாலிகார்னரைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வெங்கட் சகோ. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!

   Delete
 21. அருமையான புள்ளையார்கள்!!!

  காதணிகள் அழகாக உள்ளன.

  ரோஷ்ணிக்கு எங்கள் இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 22. மகளின் ஓவியங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 23. வணக்கம் சகோதரரே.!

  தங்கள் மகள் வரைந்துள்ள ஓவியங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.!
  அவரின் திறமைக்கு என் வாழ்த்துக்கள்.! பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 24. ரோஷினியின் ஓவியங்களைப்பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கிறது ,அவர் திறமையை திருமதி தேனம்மை லக்ஷ்மணன் வெளிக் கொணர்ந்து இருப்பது சிறப்பு !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....