புதன், 15 அக்டோபர், 2014

தலைநகரில் நவராத்திரி கொலுதமிழகத்தை விட்டு தொலை தூரம் வந்துவிட்டாலும், இன்னமும் நவராத்திரி சமயத்தில் கொலு வைப்பதை விட்டுவிடவில்லை தில்லி வாழ் தமிழ் மக்கள். இந்த நவராத்திரி சமயத்தில் சில வீடுகளில் வைத்திருந்த கொலுவினைப் பார்க்க நானும் சென்றிருந்தேன். தினம் ஒரு வித சுண்டல் சாப்பிடத்தான் போனதா சில பட்சிகள் சொல்றத நம்பாதீங்க! நான் நிஜமா கொலு பார்க்க மட்டும் தான் போனேன்!

ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை அழகழாய் பொம்மைகள் – சிரத்தையுடன் பொம்மைகளை பரணில் இருந்து இறக்கி, சரி பார்த்து, படிகள் அமைத்து பொம்மைகளை அவற்றுக்கான இடங்களில் வைத்து, அலங்காரங்கள் செய்து, கொலு பார்க்க தோழிகளை அழைத்து, ஒவ்வொரு நாளும் என்ன சுண்டல் செய்ய வேண்டும் என திட்டமிட்டு, சுண்டல்களை வகைவகையாய் செய்து [சில வீடுகளில் மட்டும் அந்தப் பணியை ஆண்கள் எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்! :)] அப்பப்பா எத்தனை வேலைகள் கொலு வைக்கும் பெண்களுக்கு!

இதற்கு நடுவே தனக்கு அழைப்பு விடுத்தவர்களின் வீட்டுக்கும் சென்று வர வேண்டும், பணிபுரியும் பெண்கள் அலுவலகத்திற்கும் சென்று வர வேண்டும்.  ஒன்பது நாள் திருவிழாவிற்கு பத்து பன்னிரெண்டு நாட்கள் ரொம்பவே Tight Schedule இவர்களுக்கு! இதற்கு நடுவே, ஒவ்வொரு நாளும் என்ன புடவை கட்டுவது, என்னென்ன நகைகள், அலங்காரங்கள் என அதற்கு வேறு திட்டமிடவேண்டுமே! இந்த நாட்களில் இவர்களுக்கு ஓயாத ஓட்டம்!

பெண் குழந்தைகளுக்கும் கொண்டாட்டம் தான் – ஒவ்வொரு நாளும் ஒரு பட்டுப்பாவாடை உடுத்திக்கொண்டு, விதம் விதமாய் அலங்காரம் செய்துகொண்டு இவர்கள் கொலு பார்க்கச் செல்வதே அழகு. 

நவராத்திரி முடிந்த மறுநாள் மீண்டும் எல்லா பொம்மைகளையும் பக்குவமாக பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் – அடுத்த வருட கொலுவிற்காக.

இந்த கோலகல கொலு வைபவத்தினை வருடா வருடம் நடத்திக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும், கொலு வைக்காது சுண்டல் மட்டும் சாப்பிடுவோர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

இந்த வருட கொலு சமயத்தில் சில நண்பர்களின் வீடுகளிலும், தில்லி பிரசாத் நகர் நரசிம்மர் கோவிலிலும் நான் எடுத்த சில புகைப்படங்கள் இந்தப் பதிவில் உங்கள் பார்வைக்கு!
அலுவலக பணிகள் காரணமாக கொலு முடிந்து பத்து நாட்கள் கழித்து தான் வெளியிடுகிறேன். அடுத்த வருடமாவது கொலு சமயத்திலேயே படங்களை வெளியிட அன்னை அருள் புரியட்டும்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. அழகான கொலு படங்கள். பகிர்வுக்கு நன்றி.

  பாசியில் பின்னிய தேர் பார்த்தவுடன் என் அக்கா பின்னிய தேர் நினைவுக்கு வந்து விட்டது முன்பு இது போல் பாசியில் பின்னிய பொம்மைகள் எல்லோர் வீட்டு கொலுவிலும் இடம் பெறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாசியில் பின்னிய கிளிகள், பொம்மைகள் என நிறைய இருந்தது இந்த படம் எடுத்த தோழியின் வீட்டில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 2. போங்க வெங்கட்... தினம் ஒரு சுண்டல் சாப்பிடவா... வெங்காயமே போடா மாட்டாங்க... போரடிக்கும்!

  2 ரூபாய் சுண்டல் வாங்கவா இவ்வளவு செலவு செய்து சென்று வருகிறீர்கள்? என்று என் நண்பர்கள் கேட்டதுண்டு. சுண்டல் இல்லை, உறவுகள் மேம்படவும், நட்புகள் கெட்டிப்படவும்தான் இது போன்ற நிகழ்வுகள் என்று பதில் சொல்வேன்! :))

  படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வீடுகளில் நம்மைப் போன்றவர்களுக்காகவே வெங்காயம் போட்ட சுண்டல் செய்வதுண்டு! இந்த நவராத்திரி சமயத்திலும் கிடைத்தது! :))))

   உறவுகள் மேம்பட - உண்மை தான். இது போன்ற சமயத்திலாவது சில நண்பர்களின் இல்லத்திற்குச் செல்கிறோம். இல்லையென்றால் வீடு, அலுவலகம், வீடு என்றாகி விட்டது இன்றைய வாழ்க்கை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. மிக மிக அழகான படங்கள்! முறத்தில் வெத்தலை பாக்கு!!! பாசியில் தேர்....அருமை...இப்படி எல்லாமே அழகு!

  இதற்கு நடுவே, ஒவ்வொரு நாளும் என்ன புடவை கட்டுவது, என்னென்ன நகைகள், அலங்காரங்கள் என அதற்கு வேறு திட்டமிடவேண்டுமே! இந்த நாட்களில் இவர்களுக்கு ஓயாத ஓட்டம்!// ரதித்தோம்! மிக அழகான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி வெற்றிலை பாக்கு வைத்து தருவதற்கென்றே சின்னச் சின்னதாய் முறங்கள் [தங்க நிற காகிதம் போட்ட] கிடைக்கின்றனவாம். பார்க்கும்போதே பிடித்திருக்க, அதனை படம் பிடித்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 4. வாவ்! அனைத்துப் படங்களும் அருமை!

  அதிலும் ஆண்டாள் மடியில் தலைவைத்துப் படுத்திருக்கும் கிருஷ்ணன், சூப்பர் போங்க!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரங்கமன்னார் - ஆண்டாள் சிலை! பார்த்தவுடன் பிடித்தது எனக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 5. நீங்கள் ஒரு சுற்று பெருத்துவிட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து செய்தி வந்திருக்கிறதே. உண்மையா?
  கொலு படங்கள் அருமை.
  கண்டிப்பாக அடுத்த வருடம் உங்கள் ஆசை நிறைவேறும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயிறு மட்டும் பெருத்துவிட்டதாக நேற்று டைலர் சொன்னார்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 6. தாமதமாக கொலு படங்களை வெளியிட்டாலும் அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். ‘’தினம் ஒரு வித சுண்டல் சாப்பிடத்தான் போனதா சில பட்சிகள் சொல்றத நம்பாதீங்க! நான் நிஜமா கொலு பார்க்க மட்டும் தான் போனேன்!” என்று சொல்லிவிட்டு தகவலின் ஊடே கொலுவைக்காது சுண்டல் மட்டும் சாப்பிடுவோர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருப்பது ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை!’ என்று சொன்னதுபோல் அல்லவா இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை வெளி வந்து தான் ஆக வேண்டும்! :))))

   சுண்டல் சாப்பிடவும் படங்கள் எடுக்கவும் போனேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. முதல்படம் நிறைய பழைய காலத்துப் பொம்மைகளோடு அருமை. மற்ற எல்லா வீட்டுக் கொலுக்களுக்கு நடுவில் இது முதலிடம் பிடிக்கிறது. அத்தனை பொம்மைகளும் கிளி கொஞ்சும் அழகு.மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழையதும் புதியதுமாக கலந்து வைத்திருந்தார்கள் சில வீடுகளில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....   நீக்கு
 8. கோலகல கொலு வைபவத்தினை
  அருமையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 10. கண்கொள்ளாக் காட்சிகள்!
  மனம் இலயித்துவிடப் பார்த்துக் கொண்டே இருந்தேன்!

  இதெல்லாம் இந்திய நாட்டின் தனிச் சிறப்பு!
  பண்டிகைகளில் ஒற்றுமையும் பேணப்படுவது சிறப்பம்சமே!
  பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 11. மனதை மயக்கும் அழகிய கொலுப் படங்கள் !அருமை ! வாழ்த்துக்கள்
  சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 12. முதல் மூன்று படங்களும் ஐந்தாவதும் திறக்கவில்லை. இங்கிருந்து ஒரு சில ப்டங்களைக் கீதைப் பதிவுக்காகச் “சுட” அனுமதி கிடைக்குமா. ?நகரங்களில் இன்ன நாளில் இவர்கள் என்று முறை வைத்து அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. ஒரே நாளில் எதிர்பாராமல் பலரும் வருவதைக்குறைக்க இந்த உத்தி இரண்டு வருடங்களாக எங்கள் வீட்டில்கொலு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட திறக்க வில்லையா? வேண்டுமெனில் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன். படங்களை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
  2. இந்த முறை திறந்துவிட்டது. நன்றி

   நீக்கு
  3. ஓ நல்லது GMB சார். சில சமயங்களில் படங்கள் திறப்பதில் தாமதம் இருக்கலாம்.

   நீக்கு
 13. Naal kazhiththu velittalum arumayana golu bommaigalai paarththu rasiththen. Yella bommaigalum romba azhagu. Idhanai padam pidiththu anaivaruukum magizhchi thandhamaikku parattukkal.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 14. படங்களின் அணிவகுப்பு அருமை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 15. வணக்கம்
  ஐயா.

  பார்க்கும் போது பக்தி உணர்வு வருகிறது மிக அழகாக உள்ளது... படங்கள் சொல்லி கருத்துக்களும் நன்று.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே.!

  விதவிதமான கொலு பொம்மைகளின் அழகு கண்ணைக் கவர்ந்தது.! மிகவும் நன்றாக இருந்தது.!

  இத்துனை அழகான பொம்மைக் கொலுவை எங்களுடன் பகிர்ந்த தங்களுக்கு என் நன்றிகள்.!

  கொலுவை அடுத்து வருவது தீபாவளி பண்டிகை.! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.!

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....