எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 27, 2014

அத்குவாரி என்றொரு குகைமாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 7

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6

இந்த வார பதிவிற்குள் செல்வதற்கு முன் சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்! முன்பே சொல்வதற்கு ஒரு காரணமும் உண்டு!

 படம்: இணையத்திலிருந்து

[b]பண்[d]டாரா நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறிய வைஷ்ணவ தேவி திரிகூடமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். சிறிது தூரத்தைக் கடந்து சென்ற பின் ஒரு மலைமுகட்டில் நின்று திரும்பிப் பார்த்தால் அப்போதும் பைரோன் நாத் அவரை தொடர்ந்து கொண்டிருந்தார். அப்படி நின்று பார்த்த இடம் தான் “[ch]சரண் பாதுகாஎன்று இப்போது அழைக்கப்படுகிறது.  பாண் கங்காவிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், 3380 அடி உயரத்தில் இருக்கும் இந்த சரண் பாதுகாவில் தேவியின் காலடிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் அந்த பாறையைத் தொட்டு வணங்குவது தேவியின் பாதகமலங்களைத் தொட்டு வணங்குவது போல என்பதால் இங்கே வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். 

தன்னைத் தொடர்ந்து பைரோன் நாத் வந்து கொண்டிருந்ததால், மிக விரைவாக நகர்ந்து சென்றுவிட கண்ணிற்கு தெரியாது மாயமாக மறைந்து போனது போல ஆனது.  அப்படி விரைந்து சென்று அவர் ஒளிந்து கொண்ட இடம் ஒரு சிறிய குகை – அந்த இடத்திற்குப் பெயர் தான் அத்குவாரி! அந்த அத்குவாரி பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் – கதையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


 படம்: இணையத்திலிருந்து

கட்ராவிலிருந்து நாம் தொடங்கிய நடைப்பயணத்தில் பாதி தொலைவு வந்து விட்டோம்.  இந்த இடம் சுமார் 4800 அடி உயரம்.  இடத்திற்குப் பெயர் என்ன தெரியுமா? அத்குவாரி – வைஷ்ணவ தேவி தரிசன வழியில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படுவது இந்த இடம்.  இந்த இடம் நெருங்க நெருங்க, பக்தர்களுக்கான அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒலியை நீங்கள் அதிகமாகக் கேட்கமுடியும்.  

அத்குவாரி எனும் சொல் “ஆதி குமாரிஎனும் சொல்லிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. பைரோன் நாத்திடமிருந்து தப்பிக்க ஓடிவந்த வைஷ்ணவ தேவி கர்ப்பப்பை போன்ற வடிவிலிருந்த சிறிய குகையினுள் அடைக்கலம் புகுந்தாள். அங்கே எந்த வித தொந்தரவும் இன்றி தனது தவத்தினைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து தனது தவத்தினைத் தொடங்கினாள்.  அப்படி அங்கே தவமிருந்தது சுமார் ஒன்பது மாத காலம் – அதாவது குழந்தை தனது தாயின் வயிற்றினுள் இருக்கும் காலம். இப்படி தவமிருந்த அந்த குகைக்குள் சென்று தேவி தவமிருந்த இடத்தில் பிரார்த்தனை செய்தால் தமது பாபங்கள் அனைத்தும் தீரும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை. இவ்விடத்தினை [g]கர்[b]ப்ஜூன் என்றும் அழைப்பதுண்டு.

 படம்: இணையத்திலிருந்து

இந்த குகைக்குள் பயணித்து வெளியே வருவது நிச்சயம் அவள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.  உள்ளே செல்லும் வழி நன்கு அகலமாக இருந்தாலும், உள்ளேப் போகப் போக குறுகிய பாதையாக மாறி, தவழ்ந்து தான் வெளியே வரவேண்டியிருக்கும்.  குழந்தை கர்பத்திலிருந்து வெளியே வருவதைப் போல, அந்த குகைக்குள் இருந்து வெளியே வரவேண்டியிருக்கும். அன்னையின் கருணையை நினைத்தபடியும், நமக்குப் பின்னால் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் மக்களின் உந்துதலினாலும் அந்த குறுகிய வழியாக நீங்கள் வெளியே வந்து விடுவீர்கள்.  உள்ளே இருக்கும்போது சற்றே கடினமாகத் தோன்றியிருந்தாலும், வெளியே வந்தபின் “அப்படி ஒன்றும் கடினமாக இல்லைஎன்று தான் தோன்றும்!

நான் இந்த வைஷ்ணவதேவிக்கு மூன்றாம் முறையாகப் பயணம் செய்யும் இப்பயணத்தில் அத்குவாரியில் தேவியைத் தரிசனம் செய்யாது நேராக மலைக்கு, அன்னையின் இருப்பிடத்திற்குச் சென்று விட்டேன்.  காரணம் இந்த இடத்தில் எப்போதும் அதீதமான அளவில் பக்தர்களின் எண்ணிக்கை இருப்பதால் தான் – குறுகிய வழி என்பதால் இங்கே தரிசனம் செய்ய ஆகும் நேரமும் அதிகம். காத்திருந்து தரிசனம் செய்யும் பொறுமை எனக்கோ நண்பருக்கோ இல்லாத காரணத்தினால் நாங்கள் எங்கள் நடைப்பயணத்தினை மேலும் தொடர்ந்தோம்.

கட்ராவிலிருந்து நடக்க முடியாதவர்கள் போனி [அ] டோலி மூலம் வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்களும் இந்த பாதி வரை வந்து பின்னர் மேலும் பயணிக்க மீண்டும் வேறு போனிவாலாக்களையோ அல்லது டோலி வாலாக்களையோ நியமிக்க வேண்டியிருக்கும்.  சிலர் கீழிருந்து மேல் வரை அதாவது கட்ராவிலிருந்து [b]பவன் வரை பேசிக்கொள்வார்கள். 

ஆறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து விட்டோம். பயணக்களைப்பு உங்களுக்கு இந்தப் பயணக்கட்டுரை படிக்கும்போது இருந்திருக்காது என்று நம்புகிறேன்!    

அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. அத்குவாரி குகைக்குள் நுழைந்துதான் பயணம் தொடர வேண்டுமோ என்று நினைத்தேன். ஓ, அப்படி இல்லையா?

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அக்குகைக்குள் நுழைந்து தான் மேலே செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேராக மேலே சென்று தேவியை தரிசிக்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்ல அனுபவம் தான்..வெங்கட் ஜி. நாங்களும் நண்பர் ஸ்ரீ ராம் நினைத்தது போல் தான் முதலில் நினைத்தோம்....அதன்வ் அழி செல்லாமலும் செல்லலாம்....இல்லையா....ஆனால் அற்புதங்களும், அதிசயங்களும் நிறையவே தான் இமயத்தில் கொட்டிக் கிடக்கின்றனபோலும்.....

  தொடர்கின்றோம்!

  ReplyDelete
  Replies
  1. நமக்குப் புரியாத பல விஷயங்கள் - என்னவென்று சொல்வது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 3. கதையுடன் கூடிய பயண அனுபவம் அருமை.
  தொடருங்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 4. அத்குவாரி குகைக்குள் நாங்களும் செல்லவில்லை.
  அம்மனை தரிசிக்கும் போது இது போன்ற குகை வழியாகத்தான் செல்ல வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
  அனுபவங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மூன்று முறை இங்கே சென்றதுண்டு. முதல் முறை மட்டுமே இந்த வழியாகச் சென்ற நினைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. வணக்கம்
  ஐயா
  அறியமுடியாதபலவிடயங்களை தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. அன்பின் வெங்கட்..
  நெஞ்சம் சிலிர்க்கின்றது.. தொடர்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. ரா.ஈ. பத்மநாபன்October 27, 2014 at 11:45 AM

  மீண்டும் அன்னையைக் கண்டோம்! ஜெய் மாதா தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. மாதா வைஷ்ணோ தேவி பயணத் தொடரைப் படிக்கும்போது நேரில் தங்களோடு பயணிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. ஜெய் மாதா தி
  அருமையான பகிர்வு
  வைஷ்ண தேவி மந்திர் நேரில் தரிசனம் செய்த மாதிரி இருந்தது. மற்ற பகுதிகளையும் படித்து விட்டு எழுதுகிறேன்.ம் தொடரட்டும் உங்கள் பணி.

  விஜயாரகவன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 11. அத்குவாரி குகை வியப்பாக இருந்தது! கதைகளில் படிப்பது போல நிஜமாகவும் ஒரு இடம் இருப்பது ஆச்சர்யம்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. அருமையாகச் செல்கிறது தொடர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. உட்கார்ந்த இடத்தில் உங்களோடு பயணிக்கச் செய்கிறது உங்க எழுத்து. நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 14. வணக்கம் சகோதரரே.!

  பதிவை படிக்கும் போது மாதா வைஷ்ணோ தேவியை தரிசிக்க நாங்களும் உங்களுடன் பயணித்த உணர்வு வருகிறது.! தொடரட்டும் இந்தப் பக்திப்பயணம்.! நன்றி! இனிஒவ்வொரு வாரமும் நானும் தொடர்கிறேன்.!

  தாங்கள் என் வலைத்தளம் வந்து என் பதிவுகளுக்கு கருத்திட்டு வாழ்த்துவதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 15. தங்கள் பயண அனுபவம் நாங்களும் உங்க கூடவே வந்த மாதிரி இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.

   Delete
 16. பயண அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 17. அத்குவாரி குகை அதிசயம் அறிந்தேன் சகோதரரே!
  உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே
  இதெல்லாம் சாத்தியம்!.. அருமை!-

  தொடர்கின்றேன்.. மெதுவாகவே நானும்…!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....