எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 31, 2014

ஃப்ரூட் சாலட் – 112 – மனைவி – கதவை மூடலாமே! - [B]பாஜ்ராஇந்த வார செய்தி:

குப்பை பொறுக்கும் சிறுவர்களை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றும் நல்ல பணியைச் செய்து வரும் Sylvester Peter என்பவரைப் பற்றி இந்த வாரம் படித்தேன். மகத்தான பணியைச் செய்து வரும் அவர் பற்றிய முழு கட்டுரையும் இங்கே நீங்களும் படிக்கலாம்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!!  இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா................   பயம்..! 
எலிக்கு பூனையக் கண்டா ..............................பயம்..!
பூனைக்கு நாயக் கண்டா .................................பயம்..!
 
நாய்க்கு மனுஷனைக்கண்டா .....................  பயம்..!
மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! 
அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா....   பயம்..!!   

இப்ப நம்பறீங்களா...

இந்த வார காணொளி:

கதவைத் திற காற்று வரட்டும்! என்று நான் சொல்லப் போவது கடைசியில். இங்கே கதவை மூடுங்கள் லிஃப்ட் பயணிக்கட்டும் என்று தான் சொல்லப் போகிறேன் – நான் பார்த்து ரசித்த இந்தக் காணொளி மூலமாக! 
 


இந்த வார உழைப்பாளி/புகைப்படம்:குஜராத் மாநிலத்திலுள்ள நாகேஷ்வர் எனும் ஜோதிர்லிங்க ஸ்தலம். அங்கே கோவிலின் வெளியே பிரம்மாண்டமான சிவன் சிலை அமைத்திருக்கிறார்கள். சிவன் சிலை மேலும், அக்கம்பக்கத்திலும் நிறைய புறாக்கள். கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் புறாக்களுக்கு தானியங்களை இறைக்கிறார்கள் – குறிப்பாக ஹிந்தியில் “[B]பாஜ்ரா என அழைக்கப்படும் கம்பு புறாக்களுக்குப் போடுகிறார்கள்.  ஒரு சிறிய டப்பாவில் பாதி நிறைத்து 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார் இந்த சிறிய உழைப்பாளி. அப்படி ஒரு சுறுசுறுப்பு. ஒரு டப்பா காலியானவுடன் மீண்டும் நிறைத்து வைத்து அடுத்த வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் அவரை நான் எடுத்த புகைப்படம் மேலே! சிவன் சிலையின் புகைப்படம் பிறிதொரு சமயத்தில்!

ராஜா காது கழுதை காது:
 
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு தொழிலாளி தனது சக தொழிலாளியிடம் சொல்லும்போது கேட்டது!

“ஏண்டா குளிக்கக் கூடாதா?அப்படின்னு என் பையன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் லீவு நாள்ல குளிக்கிறேன்னு.  இவனோ வேலைக்கும்போல, படிப்பும் முடிஞ்சாச்சு. வீட்டுல சும்மா இருக்கான் – அப்புறம் எங்கேந்து லீவு! குளிக்காம இருக்க இப்படி ஒரு பதில்.  என்னத்த சொல்ல! :(

படித்ததில் பிடித்தது:

ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார். அந்த நதிக்கரையோரத்தில், துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும் என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.

முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும் என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.

உடனே அந்த ஞானி, அடடே…. ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.

வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்கள் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.

குடிசையை விட்டு வெளியே வாஅழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் கேட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம் என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?

அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய வழிதான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது என்று கத்தியது.

விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.
நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது.
கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. //கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.//

  ஃப்ரூட் சாலட் அருமை.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. ஃப்ரூட் சாலட் ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. படித்ததில் பிடித்தது :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete

 5. பழக்கலவை அருமை! உதவுவதற்கு ‘வயது ஒரு பொருட்டல்ல’ என்ற செய்தியைத் தந்த அந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி. ஜென் கதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. வணக்கம் !

  மனத்தைக் கவர்ந்த ஃப்ரூட் சலாட் ! வாழ்த்துக்கள் சகோதரா .
  படம் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது அதற்கும் என்
  மனமார்ந்த பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   Delete
 7. சிறப்பான தொகுப்பு. கதை நன்று. சிறுவன் வாழ்வு சிறக்கட்டும். சிவன் படங்களைப் பகிரக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. நல்ல பதிவு...

  இப்ப நம்பறீங்களா...?///

  சத்தியமா நம்புறேன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தினேஷ் குமார்.

   Delete
 9. //கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.//
  அர்த்தமுள்ள வார்த்தைகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. இந்த வாரமும் fruit சாலட் அருமை. அதுவும் அந்த முகநூல் வாசகம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 11. புருட் சாலட்டின் சுவை சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. வணக்கம் சகோதரரே.!

  நல்லதை செய்யும் நல்ல மனங்களுக்கு வாழ்த்துக்கள்.! வாழ்க்கை ஒரு வட்டமானதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.! இத்தனை சின்ன வயதிலும், உழைப்புக்கு மரியாதை தரும் அவரை பாராட்டலாம்.! படித்தலில் பிடித்தது, எனக்கும் பிடித்தது.! மொத்தத்தில் ஃப்ரூட் சால்ட் இந்த வாரமும் இனிக்கிறது.! பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 13. ஃப்ரூட் சாலட் வழக்கம் போல அருமை.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. கதவைத்திற காற்று வரட்டும் மறுபடியுமா ... அந்த கடைசி வரிகள் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 15. அனைத்தும் அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்....

   Delete
 16. எப்போதும் போல அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. கதவைத் திறந்து வைப்போம் காற்று வரட்டும்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. அற்புதமான கதை

  குடிசைகள் எரியட்டும்


  மலர்த்தரு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 19. கதவைத் திறங்கள்.... ஏறக்குறைய தத்துவம்.
  விடியோவில் நடப்பது சாதாரணம் போலிருக்கிறதே? சமீப இந்தியப் பயணத்தில் இப்படி நடந்தது. தானியங்கி கதவுகளை பொருத்தியிருக்கலாமென நினைத்தேன் - எப்படியும் செலவு செய்கிறார்கள்..

  ReplyDelete
  Replies
  1. கட்டிடங்கள் கட்டுபவர்கள் இப்படிப்பட்ட லிஃப்ட் மட்டுமே அமைக்கிறார்கள். சமீபத்தில் அஹமதாபாத் சென்றபோதும் பார்த்தேன் - ஒரு வேளை காசு மிச்சம் பார்க்கிறார்களோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை அப்துல்லா.... தங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.

   Delete
  2. முதல் வருகை அல்ல. ஆரம்பம் முதல் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறேன். முதல் கமெண்ட் என்று சொல்லுங்கள் :)

   Delete
  3. ஓ.... the silent observer? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்துல்லா...

   Delete
 21. வீடியோ ரசிக்க வைத்தது. நல்ல மனம் வாழ்க. ! கேரளாவில் ஒரு கோவில் குளத்தருகே மீனூட்டு என்று கூறி ஒரு கைப்பிடி பொரியை ரூபாய் ஐந்துக்கு விற்பார்கள் புண்ணியம் என்று கூறி ஏமாறுபவர்கள் ஏராளம்.இங்கு பொரி அங்கு பஜ்ரா. எல்லா இடத்திலும் எக்ஸ்ப்லாய்டேஷன் இருக்கிறது. ஃப்ரூட் சலாட் ரசித்தேன். மதுரையில் காணவில்லையே

  ReplyDelete
  Replies
  1. அலுவலகப் பணி காரணமாக தமிழகம் வர இயலவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 22. காணொளியும் ஜென் கதையும் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 23. வாழ்க்கை ஒரு வட்டம்தான்! நான் நம்பறேன்.
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 24. சில்வெஸ்டர் பீட்டர் வாழ்க!

  முதப்புத்தக இற்றை அருமை!

  காணொளி மிகவும் ரசித்தோம்!...உழைப்பாளி புகைப்படம்...ஜிஎம்பி சார் சொல்லுவதை வழி மொழிகின்றோம். மீனுட்டி...

  படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிட்த்தது!

  அனைத்துமே அருமை! காணொளி டாப்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 25. .லிஃப்ட் கதவை மூடி அந்த பெண்ணுக்கு உதவிய பையன் மனம் கவர்ந்தான்.

  விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
  புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது//

  வெகு அருமை.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....