எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 3, 2014

ஃப்ரூட் சாலட் – 108 – கர்நாடக காந்தி – உருவம் – காதலியும் மனைவியும்


இந்த வார செய்தி:கர்நாடக மாநிலம் – சிக்மகளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான கடூரில் வசிப்பவர் பாகதஹெள்ளி பசவராஜூ. கடூரில் இருக்கும் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர். ஆனால் தனது மணாவர்களுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதைத் தவிர மாணாக்கர்களுக்கும், மக்களுக்கும் காந்திய வழிமுறைகளையும், கொள்கைகளையும் பரப்புவதில் தான் இவருக்கு அலாதியான மகிழ்ச்சி. 

கடந்த பதினான்கு வருடங்களாக காந்தி போலவே வேஷம் தரித்துக் கொண்டு மக்களுக்கு காந்தியின் வழி நடக்க ஒரு பாதையை அமைத்துக் கொடுக்கிறார்.  பல இடங்களில் இவர் காந்தி சிலை போலவே நின்று கொண்டோ, அல்லது அமர்ந்து கொண்டோ இருக்கிறார்! அதற்காக தனது உடலில் வண்ணங்களைப் பூசிக்கொள்கிறார்.  அதற்கு அவரது குடும்பத்தினரும் உதவியாக இருக்கிறார்களாம்!

இவரது நடவடிக்கைகளைப் பார்த்த சிலர் கிண்டலும், கேலியும் செய்தாலும் காந்தி வேஷம் தரிப்பதும், காந்தியின் கொள்கைகளைப் பரப்புவதும் தொடர்ந்த படியே இருக்கிறது. ஒரு சிலர் இது பிச்சை எடுப்பதில் நூதன வழியோ என இவரை நோக்கி சில்லறைகளை வீசுவதும் நடந்திருக்கிறது.  ஒரு சிலர் மட்டும் இவரை நோக்கி வந்து “ஏன் இந்த வேஷம்என்ற கேள்விக்கணைகளை வீச, அவர்களுக்கு காந்திய வழியின் சிறப்பினையும் அதற்கான தேவையையும் பிரச்சாரம் செய்கிறார்.  அதில் இவரது மனதும் குளிர்கிறதாம்.

காந்தியைப் போலவே ஒரு எளிதான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டு அதைப் போலவே எளிய வாழ்க்கையும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். 

அவரது ஊரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் முதல், காய்கறி வியாபாரிகள் வரை அனைவரிடத்தும் இவர் பிரபலம். இவரை காந்தி என்றே அழைக்கிறார்களாம்!

இவரைப் பற்றிய முழு கட்டுரையையும் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

கணக்கு வாத்தியார் : உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுதால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்
பையன் : ஆயிரம் ரூபா சார்
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலயா?
பையன் : சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல

இந்த வார குறுஞ்செய்தி:

PAST IS A WASTE PAPER, PRESENT IS A NEWS PAPER, FUTURE IS A QUESTION PAPER.  SO, READ AND WRITE CAREFULLY, OTHERWISE LIFE WILL BE A TISSUE PAPER.

ராஜா காது கழுதை காது:

நேற்று சாலையில் நடந்து கொண்டிருந்த போது, எங்கள் பகுதியில் பழங்கள் விற்கும் ஒரு குண்டான மனிதர், தன்னைக் கடந்து சென்ற மற்றொரு மனிதரை கோபத்துடன் அழைத்தார்.  என்ன ஆயிற்று என கவனிக்க, அவர் சொல்லிக் கொண்டிருந்தார் –

“நான் உன்னை மரியாதையா, சகோதரனேஅப்படின்னு கூப்பிட்டு பேசறேன், நீ என்னடான்னா எப்பவும் என்னை குண்டான்னு கூப்பிடற! உன்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன்....  இனிமே அப்படி கூப்பிட்ட, கழுத்தை முறிச்சு அடுப்புல வைச்சுடுவேன் ஜாக்கிரதை!

உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் நல்லது!

ரசித்த பாடல்:

பகலில் ஒரு நிலவு படத்திலிருந்து பூ மாலையே தோள் சேரவா இளையராஜா மற்றும் எஸ். ஜானகி அவர்களின் குரலில் இந்த இனிய பாடல் இந்த வார ரசித்த பாடலாய்....  இதோ உங்கள் ரசனைக்கு!
இந்த வார புகைப்படம்:தலைநகரில் இரண்டு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களும் இனிமேல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சட்டம் கொண்டு வந்து விட்டார்கள் – கேட்டதால் சைக்கிள் ஓட்டும் இந்தப் பெண்ணும் ஹெல்மெட் அணிந்து கொண்டுவிட்டாள் போல!


படித்ததில் பிடித்தது:

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.

பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.

அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.

பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.

இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.

இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.
-   ஓஷோ கதைகளிலிருந்து....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 comments:

 1. கடைசிக் கதை ஆங்கிலத்தில் படிச்சது. முகப்புத்தக இற்றை அருமை. ஹெல்மெட் அணிவதைப் போல் கஷ்டமான விஷயம் ஏதுமில்லை! :( காந்தி மனிதர் பற்றியும் ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன்.

  குண்டாய் இருப்பவர்களுக்குப் பல விதங்களிலும் சிரமம் இருந்தாலும் மக்கள் அவர்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள் என்றும் ஆரோக்கியமானவர்கள் என்றும் நினைக்கின்றனர். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 2. காந்திச் செய்தி நானும் அங்கு படித்தேன்.

  குறுஞ்செய்தி ரசிக்க வைத்தது.

  "குண்டா"க்கு ஹிந்தியில என்ன? மோட்டே?

  ரசனையான பாடல்.

  ப.பி - படித்திருக்கிறேன். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மோட்டே, மோட்டு.... என்று தான் அழைப்பார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஃபரூட் சாலடில் பகிர்ந்த அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 4. ராஜா காது கழுதைக் காது-எங்கப்பா குதிருக்குள் இல்லை என்கிறாரோ.
  படித்ததில் பிடித்தது- பெண்களை நம்பாதே கண்களேப் பெண்களை நம்பாதே. வாத்தியாருக்குக் கணக்கு தெரியலை கர்நாடக காந்தி ரசிக்க வைக்கிறார். மொத்தத்தில் ஃப்ரூட் சலாட் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 5. இவ்வார பழக்கலவை அருமை. அதுவும் ‘கடூர் காந்தி’ பற்றிய செய்தியும் நீங்கள் படித்ததில் பிடித்த துணுக்கும் மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. திருப்பதியிலும் இப்படி ஒருவர் காந்தியைப் போல வண்ணம் பூசி நிற்பதை பலமுறை பார்த்ததுண்டு.
  குட்டிக் கதை அருமை.
  பின்னல் அம்ர்பவரும் ஹெல்மெட்! கொடுமைதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 7. paper பொன்மொழி நல்லாயிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. ஃப்ரூட் சாலட் ரசிக்கவைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. ப்ரூட் சாலட் அருமை அண்ணா...
  கடைசி நகைச்சுவை அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 10. வியந்து பார்க்க வைத்த காந்தி ! முற்றிலும் இன்றைய படைப்பு மிகவும்
  ரசிக்க வைத்தது .வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 11. அன்புள்ள அய்யா திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,
  வணக்கம்.
  கர்நாடக காந்தி அருமையாகக் காட்டியிருந்தீர்கள். அவர் பற்றிய செய்தி...போற்றுவார் போற்றட்டும்...தூற்றுவார் தூற்றட்டும்... என்று அவர் எண்ணியதை எண்ணியபடி செய்யும் துணிவு பாராட்டுதலுக்கு உரியது.

  நான் காந்தி பிறந்த நாளுக்காக ஒரு கவிதையும்...மீண்டும் மகாத்மா .... என்று மற்றொரு கவிதையும் எழுதியுள்ளேன்.

  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வலைப்பூவையும் விரைவில் படிக்கிறேன் ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஐயா.

   Delete
 12. இன்றைய ப்ரூட் சாலட்டில் சில படித்ததாய் இருந்தது... மற்றபடி சுவைதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 13. கர்நாடக காந்தி போற்றுதலுக்குரியவராகத் திகழ்கிறார்!
  குறுஞ்செய்தி ரொம்பவும் அருமை!!
  ஃப்ரூட் சாலட் மிகவும்- இனிமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. ஃப்ரூட் சாலட் மிக அருமை!

  க்ளோனிங்க்(!?) காந்தி வாழ்க!

  முகப்புத்தக இற்றை ரசித்தோம். குறுஞ்ச்செய்தி அருமை! டாப்!

  பாடல் ராஜா கேட்கவும் வேண்டுமோ இனிய பாடல்!

  படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது...ரசித்தோம்.

  சைக்கிளுக்கும் ஹெல்மெட் அவசியம்தான்...ஏன் போகிற போக்கைப் பார்த்தால் ரோட்டில் நடப்பவர்கள் கூட ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமோ என்று தோன்றுகிறது.....வரும் காலத்தில் நடப்பதற்கும் லைசன்ஸ் எடுக்கச் சொல்லுவார்களோ?!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 15. கடைசி கதை சூப்பர் அண்ணா! ஏற்கனவே இதை படித்திருக்கிறேன் என்றாலும் நீங்க சொன்ன விதம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 16. பசவராஜு போற்றப்பட வேண்டியவர்
  போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. இந்த வார ஃப்ரூட் சாலட்டில் நிறைய புதிய தகவல்கள். நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 19. நல்ல தொகுப்பு. வேடம் இட மெனக்கிடாமல் காந்தி போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் காந்தியாகக் கம்புடன் பொது இடங்களில் தோன்றும் பெரியவர் ஒருவரைப் படம் பிடித்திருக்கிறேன், பெங்களூர் சித்திரச் சந்தையில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. வணக்கம் சகோதரரே.!

  இந்த வார ஃப்ரூட்சால்ட் வழக்கம் போல் நன்றாக இருந்தது.! குறிப்பாக தாங்கள் படித்ததில் பிடித்தது, மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மற்றவையும் வெகு சிறப்பு.! பகிர்வுக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 21. கர்நாடக காந்தி அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 22. ஓஷோ கதை ஓஹோ தான் )

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....