தொகுப்புகள்

புதன், 4 மார்ச், 2015

சாப்பாட்டுப் புராணம் – நெய் தோசையும் ஒரு கோப்பை தேநீரும்



 நன்றி: கடல்பயணங்கள் சுரேஷ்

ரசித்து சாப்பிடுபவர்கள் ஒரு வகைருசிக்கு சாப்பிடுபவர்கள் சிலர்என்னைப் போல சிலர் பசிக்கு சாப்பிடுபவர்கள்! எப்படி இருந்தாலும் சாப்பாடு இல்லாது யாராலும் இருக்க முடியாதே. என்னைப் போல பசிக்கு மட்டுமே சாப்பிடும் சிலரும் ஒரு சில உணவு வகைகளை ருசித்து, அனுபவித்து சாப்பிடுவது உண்டுஅப்படிப்பட்ட சில உணவு வகைகளை தான் ரசித்து, ருசித்து, மகிழ்ச்சி கொண்டது மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருந்தால் எப்படி இருக்கும்

அப்படி பகிர்ந்து கொள்ளும் நல்லெண்ணத்தோடு 2007-ஆம் ஆண்டுதினமணிநாளிதழின் இணைப்பிதழானகொண்டாட்டத்தில்ஈட்டிங் கார்னர்என்று ஒரு பகுதி துவங்கப்பட்டது. இப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும், மேலை நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி இங்கு தனித்துவம் பெற்ற உணவு வகைகளைப் பற்றியும் தமிழகத்தில் இருந்தகாப்பி க்ளப்புகள், தங்கும் விடுதிகள் அவற்றில் கிடைத்த உணவு என அருமையான பல கட்டுரைகளை சமஸ்அவர்கள் தொடர்ந்து எழுதி வந்தார்



அப்படி 2007-ல் ஆரம்பித்து 2009-ஆம் வருடம் வரை வந்த கட்டுரைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால்? சாப்பாட்டுப் பிரியர்களைஆஹா என்னவொரு வசதிஎன்று சொல்ல வைக்குமே!  அதைதுளி வெளியீடுசெய்திருக்கிறார்கள்நேதாஜி டீ, தஞ்சாவூர் காபி, திருவானைக்கா நெய் தோசை, பாம்பே பாதாம்கீர், விருத்தாசலம் தவலை அடை, பாளையங்கோட்டை முறுக்கு என்று ஒவ்வொன்றாய் அவர் சொல்லிக் கொண்டு வரும்போது நமக்கும் அங்கெல்லாம் சென்று அந்த உணவு வகைகளை சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் நிச்சயம் உண்டாகும்

ஒவ்வொரு உணவு வகை பற்றிச் சொல்லும் போது அவை எப்படி வந்தது? அவ்வுணவை எப்படிச் செய்வது, அதன் பின்னணியில் இருக்கும் கதை என்ன, அவ்வுணவு தயாரித்தவர்கள் பட்ட கஷ்டங்கள், என பல்வேறு சுவையான தகவல்களைச் சொல்லும் இவரது கட்டுரைகள் படிக்கும்போதே நம்மையும் அச்சுவைக்குள் இழுத்துச் சென்று விடுவது நிச்சயம்உதாரணமாகஒரு கோப்பை டீஎன்ற முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே!

தேயிலையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேயிலை விளைந்திருக்கிறது. ஆயினும், டீயை முதன் முதலாக பருகத் தொடங்கியவர்கள் சீனர்களே. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தியர்களை டீ ருசிக்கு அடிமையாக்கிவிட்டால் இந்த வியாபாரத்தில் கொழுத்த லாபம் பார்க்கலாம் என்று திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் ஆரம்ப காலத்தில் ஊர் ஊராக இனாமாகவே டீ கொடுத்தார்கள். திடீரென ஒரு நாள், “இனி டீக்கு விலையுண்டுஎன்று அவர்கள் சொன்னபோதுதான் நம்மாட்களுக்குத் தெரிந்தது நம் நாக்குகள் டீக்கு அடிமையாகிவிட்டன என்று. அப்புறம் தேயிலை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கிக் கண்ட கண்ட நேரத்திலும் காய்ச்சிக் குடித்துவிட்டு இரவெல்லாம் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த கதையை அந்தக் காலத்து பெருசுகளிடம் இன்றைக்கும் கேட்கலாம்.

திருவானைக்கா நெய் தோசை பற்றி அவர் எழுதி இருப்பதை படிக்கும் போது நம் நாசிகளில் தானாகவே நெய் மணம் ஏறிக்கொள்வதை உணர்வீர்கள்ஆஹா என்ன ஒரு மணம்!

பொன்னிறத்தில் ஒரு குழல் போல சுருட்டி இலையில் வைக்கிறார்கள். சமையல்காரரின் கைப்பக்குவம் ரேகையாய் தோசையில் ஓடுகிறது. தொட்டுகையாகத் தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, வெங்காய சாம்பார் தருகிறார்கள். ஆனால் முதல் தோசைக்கு இவை எதுவுமே தேவையில்லை. நெய் மணத்தைத் தொட்டுக் கொண்டே சாப்பிட்டுவிடலாம். ஒரு ஜோடி தோசை, ஒன்று நெய் மணத்தைத் தொட்டுக் கொண்டு, மற்றொன்று சட்னி, சாம்பார் தொட்டுக்கொண்டு திவாயானுபவத்தை உணர்வீர்கள்.” 

இப்படி ஒவ்வொரு கட்டுரையும் படிக்கும்போதே நமக்கு நாவில் நீர் ஊற ஆரம்பித்து விடுவது சர்வ நிச்சயம்பானங்கள், சிற்றுண்டி, சைவ, அசைவ உணவுகள் என்று அனைத்தையும் விடாது எழுதி இருக்கிறார்பெரும்பாலான கட்டுரைகளில் வந்த உணவுகள் தஞ்சை, திருச்சி மாவட்டத்தினைச் சுற்றியே இருக்கின்றனஇருந்தாலும், வடலூரின் அணையா அடுப்பு, திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்று சில கட்டுரைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது

இந்த புத்தகத்தில் இருக்கும் அனைத்து உணவுகளையும் அந்தந்த ஊருக்குச் சென்று அனுபவித்து உண்ண ஆசை உண்டுதமிழகத்திற்கு வந்து போகும் சில நாட்களில் இப்படிப் பட்ட ஆசை நிராசையாகத்தான் இருக்கிறதுஆனாலும் நமது சக வலைப்பதிவர்கடல் பயணங்கள்சுரேஷ் குமார் இப்புத்தகத்தில் சொல்லி இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று அவ்வுணவு வகைகளை ரசித்து ருசிப்பதோடு நம்முடனும் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்மிகச் சமீபத்தில் அப்படி அவர் எழுதிய கட்டுரை ஒன்று அறுசுவை [சமஸ்] – கும்பகோணம் பூரிபாஸந்தி!!  இக்கட்டுரையும் படித்து பாஸந்தியின் சுவையில் நீங்களும் மூழ்கிடலாமே!

இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து உணவு வகைகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் துளி வெளியீடாக நவம்பர் 2014-ல் வந்திருக்கும் மூன்றாம் பதிப்பினை ரூபாய் 80 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்புத்தகம் வாங்க நீங்கள் அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி thuliveliyeedu@gmail.com அலைபேசி எண் – 0 – 9444204501.  புத்தகத்தில் இருக்கும் மொத்த பக்கங்கள் – 112.  மொத்த கட்டுரைகள் – 38.

என்ன நண்பர்களே உடனே மின்னஞ்சல் ஒன்றை தட்டி விடப் போகிறீர்கள் அல்லவா

மீண்டும் வேறொரு வாசிப்பனுவத்துடன் விரைவில் சந்திக்கிறேன்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. பசிக்குச் சாப்பிட்டாலும் ருசித்துச் சாப்பிடுபவன் நான்!

    சுவையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒரு செட் நெய்த்தோசையில் ச்சும்மாத்தின்னும் தோசை எனக்கு. சட்னி சாம்பாரோடுள்ள இன்னொன்னு கோபாலுக்கு.

    கணக்கு சரியா வருதே!

    என்னிடமும் இந்தப் புத்தகம் இருக்கு. அந்தந்த ஊருக்குப்போய் சாப்பிட நேரமில்லை:( பயணத்தில் பசிக்கு எதாவது கிடைச்சால் போதுமென்ற மனம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் பசிக்கு ஏதாவது கிடைச்சல் போதும்... அதே தான் எனக்கும். பயணத்தில் சாப்பிடுவது வெகு குறைவாகவே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  3. ஏங்க போன பதிவுல ஏதோ சுக்டின்னு சொன்னீங்க. உடனே அடுத்த பதிவுல உங்களுக்கு பிடிக்ங்க்ந சாப்பாட்டை எல்லாம் சொல்றீங்க. வெளி நாட்டுல இருக்கிற எங்க மேல கொஞ்சம் இறக்கம் காட்ட வேண்டாமா. இப்படியா சாப்பாட்டு படத்தை எல்லாம் போட்டு, எங்க நாக்குல எச்சில் ஊற வைப்பீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வெளி நாட்டுல.... நான் வெளி ஊர்ல! இரண்டு பேர் நிலையும் ஒரே மாதிரி தான். :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  4. ஸ்ரீராம் சொல்லுவதை வழி மொழிகின்றோம். பசிக்குக், கொஞ்சமே சாப்பிட்டாலும் கூட ரசித்து, அனுபவித்துச் சாப்பிடுவது வழக்கம்.....காலைல எழுந்து பார்த்தா உங்க சாப்பாட்டு புராணம்...ஆஹா நாக்குல நீர் ஊற வைத்த....... அருமையான நூல் விமர்சனம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் படிக்கும் போதே அவ்வுணவுகளை சுவைக்கும் எண்ணமும் வந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  5. அந்தந்த ஊர்களின் பாரம்பரிய உணவு வகைகளை அறியத் தரும் நூலின் அறிமுகம். நன்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.
    உடல் ஆரோக்கியத்துக்கு உரிய உணவு முறை பற்றிய புத்தகத்தின் அறிமுகம் நன்று.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம4
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பக்கமும் வருகிறேன். போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

      நீக்கு
  8. சாப்பாட்டு புராணம் – நூல் விமர்சனம் சுருக்கமாக இருந்தாலும் சிற்றுண்டியாய் சுவைத்தது. நானும் எனக்கு தெரிந்த புத்தக கடையில் இந்த புத்தகத்திற்கு சொல்லி வைத்துள்ளேன்.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  9. அருமையான புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  10. அழகான விமர்சனம்.
    நல்ல ரசனையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  13. திருவானைக்காவில் இந்த நெய் தோசைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த ஹோட்டலுக்கு ஒரு முறை சென்றோம். எங்களுக்கு அப்படி ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  14. காலம் மாறும்போது ரசனையும் மாறிவிடும். திருவானக்காவில் நெய் தோசை மற்றும் சாம்பார் பரவாயில்லாமல் இருந்தது. இரண்டு அல்ல..ஒன்றுதான். 'நான் சாப்பிட்டவரையில் ரொம்ப நல்ல பாஸந்தி திருவல்லிக்கேணி ரத்னா கஃபே யில் கொடுத்தது. அதேபோன்று மயிலாப்பூர் ராயர் மெஸ் ஆகா ஓகோ என்று எழுதுகிறார்கள். எனக்கு அவ்வளவு நன்றாக இருந்தமாதிரித் தெரியவில்லை. உடம்புக்கு ஒன்றும் செய்யாமல் இருக்கலாம் ஆனால் ருசி ஓகோ என்றில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....