தொகுப்புகள்

புதன், 30 செப்டம்பர், 2015

அந்த ஏழு நாட்கள்!

வாரத்திற்கு ஏழு நாட்கள்!

அட என்னமோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்ல வந்துட்டான் பாரு!

யாருப்பா அது அடுத்த வரியை படிக்காம குரல் உட்றது!

வாரத்தின் முதல் நாள் ஞாயிறா இல்லை திங்களா?

உலகெங்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. பைபிள் சபாத் அல்லது சனிக்கிழமையை வாரத்தின் கடைசி நாளாகச் சொல்வதால், ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என கிறிஸ்தவர்களும் யூதர்களும் நம்புகிறார்கள். ஆனால் International Standards Organization 8601 படி திங்கள் கிழமை தான் வாரத்தின் முதல் நாள். ஞாயிறு வாரத்தின் கடைசி என்பதை இங்கே சொல்வது அவசியமில்லை!

சரி வாங்க திங்க..... அட திங்க இல்லைங்க திங்கள் கிழமைக்குப் போவோம்!


படம்: இணையத்திலிருந்து....

திங்கள்: இந்த திங்கள் கிழமைன்னாலே School-க்குப் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லை Office- போறவங்களுக்கும் மனசு பூறா வெறுப்பு! ஏண்டா இந்த திங்கக் கிழமை வருது.... வேண்டா வெறுப்பா இல்ல, போக வேண்டியதா இருக்கு! ஆனாலும் போய்த் தானே ஆகணும்.  ஒவ்வொரு திங்கக் கிழமையும் இந்த வயசுலயும் கொஞ்சம் அழுவாச்சியாதான் வருது! ஆறு நாள் Office-க்கு [சனிக்கிழமை பொதுவா விடுமுறைன்னாலும் எங்களுக்கு விடுமுறை இல்ல!] போகணுமேன்னு அழுவாச்சி! பாருங்க பல இடத்தில படத்துல இருக்கற மாதிரி தான் நடக்குது!


படம்: இணையத்திலிருந்து....

செவ்வாய்:  நம்ம ஊருல ஒரு பழமொழி உண்டு – “செவ்வாயே வெறும் வாயே அப்படின்னு.  பொதுவா செவ்வாய்க் கிழமைகளில் எந்த நல்ல விஷயத்தையும் தொடங்க மாட்டாங்க! செவ்வாய் தோஷம் இருக்கறவங்களுக்கு கல்யாணம் நடக்கறது கஷ்டம்னு சொல்றதயும் கேட்டு இருக்கோம்.  ஹிந்தியில் இந்த செவ்வாய் கிழமைக்கு பேரு மங்கள்வார்!  [B]பஜ்ரங்க்பலி என அழைக்கபடும் ஹனுமானுக்கு உகந்த நாளாக இங்கே சொல்லப்படுவது செவ்வாய் கிழமையைத் தான். ஹனுமான் கோவிலுக்கு போய் பூந்தி நைவேத்தியம் செய்வது வழக்கம்! எனக்கு அந்த பூந்தி சாப்பிடுவது மட்டும் வழக்கம்!


படம்: இணையத்திலிருந்து....

புதன்: இந்த புதன் கிழமை இருக்கே, இந்த நாள் வாரத்தின் நடுவுல வர நாள்னு சொல்லலாம்! ஒரு வாரத்தில் அதிகமாக வேலை இருக்கற நாள் இந்த புதன் கிழமைன்னு கூட சொல்வாங்க! இந்த நாளை America-Hump Day-ன்னு சொல்வாங்களாம்! இப்படி சொல்ற பழக்கம் 1965-ஆம் வருடத்துல ஆரம்பிச்சதா கூகுள் சொல்லுது! அதாவது புதன் கிழமை முடிஞ்சாலே வார இறுதி வரப்போகுதுன்னு மனசுல கொஞ்சம் சந்தோஷம் வருமாம்!  அட இந்த பதிவு வெளிவற இன்னிக்குக் கூட புதன் கிழமை தாங்க! பதிவு படிச்ச உங்களுக்கும் சந்தோஷமா இருக்குல்ல.....


 படம்: இணையத்திலிருந்து....

வியாழன்: 1997-ஆம் வருஷம்..... Geoff Rickly (vocals), Tom Keeley (guitar, vocals), Steve Pedulla (guitar, vocals), Tim Payne (bass guitar), Andrew Everding (keyboards, vocals), and Tucker Rule (drums) இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு Band ஆரம்பிச்சாங்களாம்! அந்த Band பேர் தெரியுமா?  Thursday!  ஆனாலும் இவங்களோட முதல் Album-ஆன Waiting வெளிவந்தது 1999-ஆம் வருஷம் தான்! அதற்குப் பிறகு Full Collapse, War All the Time, A City by the Light Divided, Common Existence and No Devolución ஆகிய Albums வெளியிட்டாங்க! அதற்குப் பிறகு பிரிஞ்சுட்டாங்க! இந்த பெயரில் வந்திருக்கும் Album எதாவது கேட்கணும்னா Youtube-ல இருக்கு பாருங்க!

படம்: இணையத்திலிருந்து....

வெள்ளி: ராதா ரவி ஒரு படத்துல வெள்ளிக்கிழமை ராமசாமிஎன்ற பெயரோட ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது உங்களுக்கும் தெரியும்.  ஆனா ஆங்கிலத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் உண்டு! அது தாங்க Man Friday.  Robinson Crusoe எனும் நாவல் 1719 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதில் ராபின்சன் க்ரூசோ பயணம் செய்த கப்பல் உடைந்து விட, ஒரு கிளி, ஒரு நாய் மற்றும் ஒரு ஆடுடன் தீவில் இருப்பார். அப்போது அங்கே காட்டுவாசிகள் ஒருவரை உண்ணப் போகும்போது அவனைக் காப்பாற்றி தனது உதவியாளனாக வைத்துக் கொள்வார். விசுவாசி! அந்த நபரை முதன் முதலாக வெள்ளிக்கிழமை அன்று பார்த்ததால் அவருக்குப் பெயரே Man Friday! நம்பிக்கையான உதவியாளரை இந்த பெயரில் அழைப்பது வழக்கமாகி இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து....

சனி: என் கண் முன்னாலே நிக்காதே, சனியனே ஒழிஞ்சு போ!அப்படின்னு சில பேர் திட்டுவதை பார்த்திருக்கிறேன்.  சில அம்மாக்கள் குழந்தைகளை “சனியனேன்னு திட்டுறது கூட உண்டு! இங்க பாருங்களேன் ஒரு அம்மா என்ன சொல்றாங்கன்னு! தமிழருவி ம. ரமேஷ் என்பவர் எழுதிய இந்த கவிதை!

அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்னத்தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை!

அரைமணி நேர இடைவெளியில் –
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்என்றது.

அம்மா:

சனியனே!
ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்!

படம்: இணையத்திலிருந்து....

ஞாயிறு: அப்பாடா ஞாயிறு வந்தாச்சு! அதாங்க வாரத்தின் கடைசி நாள்.... திங்கள் துவங்கும் வாரத்தின் ஏழாம் நாள்!  இந்த ஏழாம் நாள் இருக்கே ரொம்பவே விசேஷம். பல பேர் இந்த ஏழாம் நாள் விடிகாலை பார்த்ததே இல்லை.  லீவு தானே.... மெதுவா எழுந்தா போதும்னு எட்டு எட்டரை மணிக்கு தான் எழுந்திருப்பாங்க! ஆனா நான் இப்ப சொல்லப் போறது அதைப் பத்தி இல்ல! இந்த ஏழு வேற விஷயம்!



ஆமாங்க, இந்த ஏழு வேற! “சந்தித்ததும் சிந்தித்ததும்எனும் எனது வலைப்பூவில் எழுத ஆரம்பித்து ஆறு வருடங்கள் முடிந்து ஏழாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன்! பதிவுலகத்திற்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்து விட்டன.  இந்த ஆறு வருடங்களில் எழுதிய பதிவுகள் எண்ணிக்கை 927.  இது 928-வது பதிவு! என்னைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 354!  பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட 5 லட்சம்! சமீபத்தில் தான் எனது முதல் மின் புத்தகம் ஏரிகள் நகரம்-நைனிதால்வெளி வந்தது!

தொடர்ந்து நீங்கள் அனைவரும் எனக்கு அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பர்களே..... ஆர்வமும் ஆதரவும் இருக்கும் வரை நிச்சயம் பதிவுகள் தொடரும்....

நீங்க படிக்கலைன்னா படிக்க ஏதுவாய், ஒவ்வொரு வருட முடிவிலும் எழுதிய பதிவுகள் கீழே!






தொடர்ந்து சந்திப்போம்.....

என்றென்றும் அன்புடன்




36 கருத்துகள்:

  1. எல்லா நாளும் இனிய நாளே என நினைக்குமளவு ஒவ்வொரு நாளைப் பற்றிய முக்கியத்துவத்தையும், தொடர்பையும் பகிர்ந்தவிதம் அருமை. நன்றி. பதிவைக் கண்டதும் 1980வாக்கில் நான் பார்த்த Friday the Thirteenth என்ற திகில் படம் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. ஆகா
    ஏழாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது
    தங்களின் வலைப் பூ
    வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. ஆஹா வாரத்தின் நாட்களை அறிமுகப்படுத்தியது அருமை...ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. வாரத்தின் ஏழு நாட்களுக்கும் அழகான விளக்கம்.. அருமை..
    ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு

  6. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்த புதன்று பதிவுலகில் 7 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 6 ஆண்டுகளில் 927 பதிவுகள் வெளியிட்டு 354 பேர் தங்களது பதிவை தொடர வைத்திருக்கும் சாதனை பாராட்டுக்குரியதே! இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. ஏழாம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள். வாரத்தின் ஏழு நாட்கள் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. ஆஹா வாழ்த்துக்கள் சகோ,
    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை,,,,,,,
    இன்னும் தொடருங்கள் இந்த ஏழாம் ஆண்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு

  9. வாழ்த்துகள் வெங்கட். ஏழு வருடங்கள் ஆகிவிட்டதா. மிக மகிழ்ச்சி மா. உழைப்புக்கு உங்களையும். தனபாலனையும், ஸ்ரீராமையும் தான் சொல்லணும்.
    ஒரு மொக்கை கிடையாது.. எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் பலன் கொடுப்பதாக இருக்கும்... நன்றியும் பாராட்டுகளும் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  10. "The Seven-Year Itch" தெரியும் தானே! ஹிஹிஹி, இதைப் படிச்சதும் சம்பந்தமில்லாமல் அது நினைவுக்கு வருது! சினிமா கூட வந்திருக்குனு நினைக்கிறேன்.:)

    இப்போ ஜோக்கை விட்டுட்டு,

    உங்களோட ஏழு வருஷ உழைப்புக்கும் இத்தனை பார்வையாளர்களைப் பெற்றிருப்பதற்கும் வாழ்த்துகள். மேலும் மேலும் பல ஊர்களுக்கும் சுத்திட்டு எங்களோடு பகிரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  11. பதிவுலக ஜாம்பவானுக்கு வாழ்த்துக்கள் mother saw father wearing the turban ராகு காலத்தை நினைவில் கொள்ள ஒரு ஃபார்முலா ஞாயிறை அடிப்படையாய் வைத்து பிற நாட்களில் ராகு காலம் எதுவென்று அறியலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாம்பவான்... நிச்சயம் இல்லை. என்னை விட அதிகம் எழுதி இருப்பவர்களும், அதிக காலமாக பதிவுலகில் இருப்பவர்களும் நிறைய பேர்.....

      mother saw father wearing the turban - இதைப் படித்திருந்தாலும் பதிவு எழுதும் போது நினைவுக்கு வரவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. வானவில் நிறங்கள் ஏழு;இசைச் சுரங்கள் ஏழு;உடல் சக்கரங்கள் ஏழு;சமுத்திரங்கள் ஏழு;அதிசயங்கள் ஏழு;வேண்டும் த ம ஓட்டும் ஏழு; உங்கள் வலைப்பூ வயதும் ஏழு!
    வாழ்க,வளர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  13. ஏற்கனவே ஒருமுறை ஆறுஆறுனு வந்த மாதிரியே இந்த பதிவும் இருக்கேன்னு சந்தேகப்பட்டேன், சரிதான்.

    ஏழாம் ஆண்டின் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....

      நீக்கு
  14. கந்தர் அநுபூதியில் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ...... ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல.... என அனைத்து நாட்களையும் நல்ல்தாக சொன்னாலும் எங்களுக்கு வாரத்தின் முதல் நாள் கடைசி நாள் தான் நல்ல நாள் லீவு நாள். பதிவை ரசித்ததோம். வலைப்பூ ஏழாம் ஆண்டில் காலடி வைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    சுதா த்வாரகநாதன், புது தில்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதர்சனா தேவி,

      நான் கந்தர் அனுபூதி படிச்சதில்லை. ஆனால் நீங்கள் கூறி இருப்பவை சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த கோளறு பதிகம் என்பதை மட்டும் அறிவேன். அனுபூதியில் இவை எங்கே வருகின்றன என்பது சொல்ல முடியுமா? தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. ஏழு நாட்கள் தகவல்கள் வெகு சுவாரஸ்யம்!!

    அட 6 ஆண்டுகள் வெற்றி நடை போட்டிருக்கின்றீர்கள்!!! பதிவுலகில் தரமான கட்டுரைகள் பதிந்து வெற்றிக் கொடி நாட்டிவிட்டீர்கள்! இந்த 7 ஆம் ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகள் எல்லாமே தங்களுக்கு வெற்றிகளைக் குவிக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வெங்கட்ஜி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  16. வாரத்தின் ஏழு நாட்களை அழகாகப் பதிவிட்டு ஏழாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் உங்களுக்கு
    நானும் ஏழாவது தமிழ் மண வாக்குடன் இன்னும் பல ஆண்டுகள் பல ஆயிரம் பதிவுகள் படைத்திட உளமார வாழ்த்துகிறேன் சகோதரரே!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  17. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....