எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 30, 2014

ஆறு.....


நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது.கொலம்பியா நகரில் இருக்கும் Cano Cristales எனும் ஆறு மிகவும் புகழ் பெற்றது.  அப்படி என்ன இதில் சிறப்பு என்று கேட்பவர்களுக்கு, இந்த ஆறு ஒரு வண்ணமயமான ஆறு - ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து அழகிய வண்ணங்களைக் கொண்டது. திரவ வானவில் என்றும், உலகிலேயே மிகவும் அழகிய ஆறு எனவும் சொர்க்கத்திலிருந்து வந்த ஆறு எனவும் இதை அழைக்கிறார்களாம்! நீங்களே படத்தில் பாருங்களேன். “என்ன அழகு!
சூர்யா, த்ரிஷா நடித்த “ஆறுதிரைப்படம் – இந்தப் பட்த்தின் உரிமை வைத்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் அலுக்காது சலுக்காது, மக்கள் ரசிப்பார்களா என்ற யோசனை கூட இல்லாது, 60 முறைக்கு மேல் ஒளிபரப்பி இருப்பார்கள்! சமீபத்தில் கூட இப்படம் ஓடிக்கொண்டிருந்தது! நானும் ஓடினேன்....  அந்த சேனலை விட்டு அடுத்த சேனலுக்கு!ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே  

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா ஆகிய இருவருக்கும் நடனத்தில் நடக்கும் போட்டி! – பாடல் – “கண்ணும் கண்ணும் கலந்து” அப்பாடலின் நடுவே வரும் வரிகள்..... 

என்னா பாட்டு டே! என்ன நடனம் டே!என்று சொல்லுபவர்கள் மீண்டும் இங்கே ரசிக்கலாம்!தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவரான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் - திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய், திருவாவினன்குடி (எ) பழனி, திருவேரகம் (எ) சுவாமிமலை, திருத்தணி அல்லது குன்றுதோறாடல், பழமுதிர்சோலை. கவிஞர் கண்ணதாசன் எத்தனை தத்துவார்த்தமான பாடல்களை எழுதி இருக்கிறார் என வியந்து அவரைப் பாராட்டுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் – அவர் மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் றையாது.  அப்படி ஒரு பாடல் - “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!”  

 என்ன தான் சொல்ல வர!....  ஒண்ணுமே புரியலப்பா!

இந்தப் பதிவில் சம்பந்தமே இல்லாமல் ஆறு விஷயங்களைச் சொல்லி இருப்பது ஏன்என குழப்பம் அடைந்து இருப்பீர்களே!  விம் போட்டு விளக்கி விடுவது நல்லது!

“சந்தித்ததும், சிந்தித்ததும்என்று நான் பதிவுலகில் எழுத ஆரம்பித்தது இதே நாளில்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். 

அவ்வப்போது சில தடங்கல்கள் வந்தாலும் இன்னமும் எழுத உற்சாகப்படுத்துவது தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் கருத்துகளும், ஊக்கமும் தான்....

இந்த வலைப்பயணத்தில் என்னுடன் தொடர்ந்து பயணித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை!

   Delete
 2. வாழ்த்துக்கள் வெங்கட்.
  முதலில் படிக்கும் போதே தெரிந்து விட்டது எனக்கு. வலைத்தளத்திற்கு வயது ஆறு என்று.
  பகிர்ந்த விதம் அருமை.
  செய்திகள், பாடல்கள் எல்லாம் அருமை.
  மேலும் மேலும் தொடர்ந்து உற்சாகத்தோடு எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 3. ஆறுபடையப்பன் அருளால் உங்கள் வலையகப் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 4. ஐந்து ஆண்டுகள் சுவாரஸ்யமாக பதிவில் எழுதி அனைவருடைய பாராட்டையும் பெற்று, ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. வாழ்த்துக்கள் வெங்கட் சார்.
  என்னடா, ஆறு, ஆறுன்னு சொல்லிக்கிட்டே வராருன்னு பார்த்தேன். புரிஞ்சிடுச்சு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 6. வணக்கம்
  ஐயா.

  மேன்மேலும் சிறந்த படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. ஆறுக்கு வாழ்த்துகள்.

  அப்பாதுரை மிகச் சுருக்கமாக வாழ்த்தி இருக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. நல்ல பதிவுகளைத் தந்து மகிழ்விக்கும் தங்களுக்கு
  மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும்..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. ஆறாம் ஆண்டு தொடக்கத்திற்காக 'ஆறு' தலைப்பில் சுவாரசியமாக அசத்தி விட்டீர்கள்!! மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 10. நைல் நதியினையொத்த பரவசமான் நடையில் Cano Cristales நதியின் வண்ணங்கள் போன்ற உங்கள் பதிவுகளை, தனியார் தொலைக்காட்சி சூர்யா நடித்த ஆறு படத்தைப் போடுவதுபோல் திரும்ப திரும்ப படித்தாலும் வஞ்சிக் கோட்டை வாலிபன் பாட்டைப் போல சலிப்பதில்லை. ஆறுபடை முருகன் அருளால் ஆறாம் ஆண்டினை தொடங்கும் நீங்கள் கண்ணதாசன் பாடல் போல நிலைத்து நின்று நூறாம் ஆண்டு காண வாழ்த்துகிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாடிப்படி மாது.

   Delete
 11. தமிழ் ஒரு அழகிய மொழி. இம்மாதிரி ஒவ்வொரு எண்ணுக்கும் சில விசேஷ குண நலன்கள் உண்டு. இன்று இந்தப் பதிவில் நீங்கள் ஆறு ஆண்டுகள் பதிவுலகில் எழுதி வருவதைக் குறிக்க வேறு சில எண்ணங்களும் உங்கள் கருத்தில் உதித்தது பாராட்டத்தக்கதே. ஆறு ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 12. ஆறு போல் வீறு கொண்டு நடக்க வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  வித்தியாசமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 13. 6 avadhu aandil kaladi yeduththu vaiththamaikku vazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 14. வணக்கம் சகோதரரே!

  ஐந்து ஆண்டு கால சாதனைகளுடனும், அற்புதமான எழுத்து நடையுடனும் தொடரும் தங்கள் எழுத்துப்பயணம், ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

  இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் இதுபோன்ற, சிறப்பான பதிவுகளை தாங்கள் தொடர்ந்து தர எல்லாம் வல்ல இறைவனை மனமாற பிராரத்திக்கிறேன்..!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 15. ஆறாம் ஆண்டில் அடி எ‘டுத்து வைத்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கு
  என் தமிழ் மண வாக்கு 6

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 18. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ! ! !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 19. வயது ஆறில் அடியெடுத்து வைக்கும் வலைப்பூவுக்கு வாழ்த்துகள். ஆறெனப் பாயும் பதிவுகள் யாவும் வெள்ளமாய் வாசகர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அதிசயம்! பல்சுவைப் பதிவுகளால் வாசக நெஞ்சங்களைக் கவர்ந்துள்ள தாங்கள் தொடர்ந்து எழுதி பயனுள்ள தகவல்களை மேலும் அள்ளித்தர இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 20. மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட். ஆறு ஆண்டுகளும் பொக்கிஷங்களாகப் பதிவுகள் கொடுத்திருக்கிறீர்கள்.மிக நன்றி. மேன் மேலும் மேன்மை அடையணும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 21. முதலில் வாழ்த்துக்கள்! வெங்கட் ஜி!

  ஆறு! என்று ஆறு விஷயங்கள் சொன்ன விதம் அருமை! எப்படி இப்படி அழகாக எழுதுகின்றீர்கள்! கற்க வேண்டும்! நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை!

  அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் திறமை மெச்சத்தக்கது..... நான் ஒழுங்காய் எழுதவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete


 22. ஹா ஹா ஹா !! அடுத்த தடவ உஷாராயிடுவோமில்ல. அதாங்க ஏழு, எட்டு'ன்னு பதிவுகள் வரும்போது !

  இதேபோல் பல 'ஆறு'களைக் கடந்து சாதனை படைக்க‌ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. அடுத்த தடவை இப்படி பதிவு போடமாட்டோம்ல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 23. ஆறு விஷயங்களைப் பற்றி எழுதிய இந்த பதிவுக்கு விழுந்த த ம வோட்டும் ஆறுதானா ?இதோ என் ஏழாவது வோட்டு )

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   ஏழாவது வாக்கிற்கும்! :)

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....