எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 29, 2010

வலைப்பூ உலகில் ஒரு வருடம்


பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் கவிதை, கதை, கட்டுரை என்று எதையேனும் பேப்பரில் கிறுக்கிக் கொண்டு இருப்பேன். வேலை கிடைத்து தில்லி வந்த பிறகு தமிழைத் தவிர வேறு துணை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் புத்தகங்கள், புதினங்கள் ஆகியவற்றை ஒன்று விடாமல் படிக்க ஆரம்பித்தேன்.

எழுதும் பழக்கமும் விடவில்லை. ஆனால் எழுதி வைத்த எதையும் யாரிடமும் படிக்கக் கூடக் காண்பித்ததில்லை. ஒவ்வொரு வீடாக மாறும் போதும், எழுதிய காகித கட்டுக்களை அங்கேயே விட்டு விடுவதும் எனக்கு பழகிப்போனது..

கணினியும், இணைய வசதிகளும் அறிமுகமான பின்னும் மற்றவர்களின் எழுத்துகளைப் படிப்பது தவறவில்லை. தமிழில் உள்ள இணைய தளங்களைத் தேடித் தேடி படிப்பேன். சென்ற வருடத்தில் தான் வலைப்பூ உலகம் எனக்கு அறிமுகமானது. அதனை எனக்கு அறிமுகப்படுத்தியது ரேகா ராகவன் என்ற புனைப் பெயரில் பத்திரிக்கை மற்றும் வலைப்பூக்களில் எழுதி வரும் திரு ராகவன்.

அவரின் ரேகா ராகவன் மற்றும் அன்பேசிவம் வலைப்பூ முகவரிகளை கொடுத்ததுடன் திரு கே.பி.ஜே, ரிஷபன், சத்யராஜ்குமார் போன்ற பிரபலங்களின் வலைப்பூக்களுக்கான சுட்டிகளை எனக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி, அதில் உள்ள நெளிவு-சுளிவுகள் போன்ற விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்.

அவரின் உதவியுடன் வலைப்பூ ஆரம்பித்து, கடந்த 30 செப்டம்பர் 2009 அன்று எனது முதலாவது பதிவாக ”குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும்” வெளியிட்டேன். இன்றுடன் முடியும் இந்த ஒரு வருடத்தில் இப்பதிவுடன் சேர்த்து 85 பதிவுகளை பதிவு செய்திருக்கும் இவ்வேளையில் என் முதற்கண் நன்றியை ரேகா ராகவன் அவர்களுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த ஒரு வருடத்தில் 85 பதிவுகள், என்னைத் தொடரும் 59 பதிவாளர்கள், 766 கருத்துரைகள், கணக்கற்ற முகம் தெரியா நண்பர்கள், தில்லியில் பதிவர் சந்திப்புகள், வலைச்சரத்தில் நான்கு அறிமுகங்கள் என வளர்ந்துள்ளேன்.

இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்தினைப் படித்து, எனக்கு ஆதரவு அளித்த வலைப்பூ உலக நட்புக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இதே ஆதரவினை எனக்குத் தொடர்ந்து அளிக்கவும் வேண்டுகிறேன்.


வெங்கட் நாகராஜ்
புது தில்லி

32 comments:

 1. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வெங்கட்.

  அன்புடன் ஆர்.வி.எஸ்

  ReplyDelete
 2. Congrats Venkat!!!

  ReplyDelete
 3. அழகாய் வளர்ந்து, அடக்கமாய் உணர்ந்து, அமர்க்களமாய் அதை வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் அபார வளர்ச்சி உங்கள் ஆதார தகுதி. எங்கோ நின்று எப்போதும் பார்க்கிற ஒரு பார்வையாளராக இப்போதும் நான் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மேலும் வளர வாழ்த்துகள்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 5. மேன்மேலும் பல ஆண்டுகள் தங்கள் எழுத்து எழுந்து நிற்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள்..வெங்கட்.... ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!

  ReplyDelete
 7. வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ் ஐயா! தொடரட்டும் உங்கள் வலைப்பணி! நாங்களும் தொடர்ந்து வருவோம்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்.. வெங்கட்..
  பல வருடங்களை கொண்டாடட்டும் இந்த வலைப்பூ..

  ReplyDelete
 9. மனமார்ந்த வாழ்த்துக்கள். நிறைய்ய எழுதுங்கள். நாங்க தொடர்ந்து கிட்டேதான் இருக்கோம்

  ReplyDelete
 10. வளர்க! வாழ்க! புதுப் புதுச் சிந்தனைகளுடன் எழுக!

  ReplyDelete
 11. இன்னும் பல சிறந்த படைப்புகளை வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 12. முதல்முறையாக உங்கள் வலைபூவிற்கு வந்துள்ளேன். தமிழிஷ் மூலம் அறிந்து கொண்டேன். புதுப் புது வாசகர்கள் கற்றுக்கொள்ளவும் ஊக்கப்படுத்தவும் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.
  //..புத்தகங்கள், புதினங்கள் ஆகியவற்றை ஒன்று விடாமல் படிக்க ஆரம்பித்தேன்.
  நல்ல எழுத்தாளர்கள் முதலில் நல்ல வாசகர்களாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

  ReplyDelete
 13. என் வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

  ReplyDelete
 14. உங்கள் தொடர்ந்த ஆர்வமும்,உழைப்பும் பாராட்டுக்குரியவை.
  எழுதும் தாகத்தை அணைந்து விடாமல் அடைகாத்து இணையம் வழி அதற்கு வடிகால் அளிக்கும் உங்கள் முயற்சி ஓராண்டின் நிறைவைஎட்டியிருப்பதற்கு என் உளமார் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துக்களும் ஆசிகளும்

  ReplyDelete
 16. ஒரு வயசுக் குழந்தைக்கு வாழ்த்துகள்.
  பின்னாளில் ஓடி விளையாடவும்..

  ReplyDelete
 17. அன்பின் வெங்கட்

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருமையான வலைப்பூ துவங்கி ஓராண்டு முடிந்து விட்டதா ...\

  மேன்மேலும் வளர, ஒளிர நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 18. கலக்குங்க வெங்கட்ணா. May you have more such happy years ahead :)

  ReplyDelete
 19. விதைத்த பயிர் முளைப்பிலேயே காட்டுகிறது தன் வீரியத்தை. விருட்சமாக வாழ்த்துகிறோம்.

  ReplyDelete
 20. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா! தொடரட்டும் உங்கள் வலைப்பணி!

  ReplyDelete
 21. Vaazhthukkal Venkat! Udan padiththa oruvar valaiyil kalakkuvadhu perumaiyaaga ulladhu. Thodarattum..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்,வெங்கட்.

  வாழக வளமுடன்!

  ReplyDelete
 23. ஒரு வருசமகிடுட்சா...
  வாழ்த்துக்கள் வெங்கட்.
  தொடர்ந்து சிறகுகள் விரியட்டும்.

  ReplyDelete
 24. வாழ்த்துகள் வெங்கட்.

  ReplyDelete
 25. வாவ்.. அதுக்குள்ள ஒரு வருடம் ஆயிடுத்தா?

  ReplyDelete
 26. அன்புள்ள வெங்கட்...

  வர்ழ்த்துக்கள். உங்கள் வலைப்பூ
  மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உறரணி.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தற்போது திருச்சியில் இருப்பதால், இரண்டு வாரத்துக்கு பதிவுகள் வராது. எப்போதும் போல் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 28. வாழ்த்துகள் வெங்கட்

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. வாழ்த்துகள். மேலும் எழுதுக. அனுபவங்கள் பகிர்க!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....