தொகுப்புகள்

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடிசா – தௌலிகிரி – ஷாந்தி ஸ்தூபா – புவனேஷ்வர்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 30

பகுதி 29 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்கள்...
ரகுராஜ்பூரிலிருந்து புவனேஷ்வர் வரும் சாலையோரத்தில்....


வறுமையும் ஒடிஷாவும்.....
ஒரு சாலைக் காட்சி....

ரகுராஜ்பூரில் ஓவியக் கலைஞர்களிடம் பேசி, அவர்களது திறமையைக் காண்பித்து வரைந்த சில ஓவியங்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். சாலையின் இரு மருங்கிலும் நிறைய தென்னை மரங்கள்! கடற்கரையிலிருந்து வரும் காற்றில் தென்னை மரங்கள் ஆடிக்கொண்டிருக்க, சுகமான பயணமாக இருந்தது. ஒடிசாவில் நான் பார்த்த இன்னுமொரு விஷயம் அங்கே இருக்கும் வறுமை. பார்த்த பல ஆண்கள், சிகப்பு வண்ணத்தில் இருக்கும் துண்டு கட்டிக்கொண்டு தான் இருந்தார்கள். குறிப்பாக கிராமங்களில்! நிறைய கிராமங்கள் சுதந்திரம் கிடைத்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமையில் தத்தளிப்பது சோகமான ஒரு விஷயம். எல்லாம் அரசியல், எங்கும் அரசியல்! என்ன சொல்ல!



புத்தர் சிலை....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


பயணத்தினை துவங்கிய நாங்கள் புவனேஷ்வர் நகருக்கு வந்த பிறகு நேராக தங்குமிடம் செல்லாது, புவனேஷ்வர் நகரிலிருக்கும் ஒரு மலைப்பகுதியான DHதௌலி கிரி என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கே என்ன விசேஷம்? தௌலி எனும் சிறிய மலைப்பகுதி வரலாற்றில் மிக முக்கியமான இடம் வகித்த இடம். “அசோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார்” என்று வரலாற்றுப் பாடத்தில் படித்ததைத் தவிர அவரைப் பற்றிய நினைவு நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை.  அந்த அசோகர் வாழ்விலும் முக்கிய இடம் வகித்த இடம் இந்த தௌலி மலை!


படுத்துக் கொண்டிருக்கும் புத்தர்....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


அசோகர் ஆயுதங்களைத் துறந்த காட்சி.....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....

இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு போர் என்றால் மௌர்ய பேரரசரான அசோகருக்கும் கலிங்கத்து ராஜாவிற்கும் நடந்த கலிங்கத்துப் போர் தான். பலத்த போரில் உயிரிழந்த மனிதர்கள், யானைகள், குதிரைகள் என கலிங்கமே ரத்த வெள்ளமாக இருந்ததைப் பார்த்த அசோகர் “எதற்காக இந்தப் போரும், வெறியும் என சிந்திக்க ஆரம்பித்தார். இனிமேல் போர் புரிய மாட்டேன், அஹிம்சை வழியில் மட்டுமே பயணிப்பது என்று முடிவெடுத்து, புத்த மதத்தினைத் தழுவியவர், தனது ஆயுதங்களை விடுத்த இடம் இந்த தௌலகிரி என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 84000 ஸ்தூபாக்களை அமைத்து அவற்றை பல இடங்களில் நிறுவினார் என்றும் சொல்கிறார்கள். அந்தச் சிறிய மலையான தௌலகிரி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இடத்திற்குத் தான் நாங்கள் சென்றோம்.


சிற்பங்கள்....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்தூபா அமையக் காரணம் யார், எப்போது அமைக்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம். புத்தர் மறைந்த 2500 ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம், தோன்றிய இடமான இந்தியாவில் மீண்டும் தழைத்தெழும் என்ற நம்பிக்கை கொண்ட புத்தமத குரு [Mahabikshu Nichiren] ஒருவரின் வாக்குப்படி, அந்த வழியில் வந்தவரான ஃப்யூஜி குருஜி என்பவர் இந்தியாவிற்கு, 1930-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக, மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழிப்போராட்டத்தில் பங்கு கொண்டார்.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜவஹர்லால் நேரு அவர்களால் அமைக்கப்பட்ட Rajgiri Stupa Samiti-யின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, பீஹார் மாநிலத்தில் ஒரு ஷாந்தி ஸ்தூபா அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.


சிற்பங்கள்....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....

அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஷாந்தி ஸ்தூபாவினை திறந்து வைத்த அம்மாநில ஆளுநரான, ஒடிசாவைச் சேர்ந்த ஸ்ரீ நித்யானந்த கானுங்கோ, தனது மாநிலத்திலும் ஷாந்தி ஸ்தூபா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, அசோகர் தனது ஆயுதங்களை விடுத்து அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுத்த தௌலி மலைப் பகுதியில் ஷாந்தி ஸ்தூபா அமைக்க முடிவானது. ஃப்யூஜி குருஜி அவர்களின் வழிகாட்டுதலில், மலைப்பகுதியில் அற்புதமான வடிவத்தில் தற்போதைய ஷாந்தி ஸ்தூபா அமைக்கப்பட்டது.  மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஸ்தூபாவினை அப்போதைய ஒடிசா மாநில முதல்வர் 8 நவம்பர் 1972-ல் திறந்து வைத்தார். ஸ்தூபாவிற்குச் செல்ல, மலைப்பாதையும் இருப்பதால் சுலபமாக வாகனத்திலேயே சென்று விட முடியும்!


தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....

அசோக மன்னரின் காலத்திலேயே இங்கே சிற்பங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அருகிலேயே இருக்கும் தவலேஸ்வரர் கோவிலும் புனரமைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்தூபா, புவனேஷ்வர் நகரிலிருந்து பார்க்கும்போதே தெரியும்படி அமைந்திருக்கிறது. நிறைய சிற்பங்களும் அங்கே பார்த்தோம். மாலை நேரத்தில் அங்கே சென்ற போது, நல்ல அமைதி – பெயருக்கு ஏற்ற அமைதி நிலவ, சிறிது நேரம் அங்கே இருந்தோம். சிறிய மலை என்றாலும், நன்றாகவே பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு தான் அங்கிருந்து புறப்பட்டோம். தௌலகிரியில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு என்னுடைய முகநூல் பக்கத்தில் இருக்கின்றது. பார்க்க விருப்பம் இருந்தால், இங்கே சென்று பார்க்கலாம்!


பழைய சிற்பம் ஒன்று...
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


Dhதயா நதி....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


விளையாடும் சிறுமி....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


கரும்புச் சாறு.....
தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....

இந்த இடத்தில் மாலை நேரங்களில் Light and Sound Show உண்டு. சமீப காலத்தில் சேர்க்கப்பட்ட இந்த வசதி ஒரு நல்ல விஷயம். எந்த விஷயத்தையும் கண்களால் பார்த்து, காதால் கேட்க முடிந்தால், நமது மனதில் சுலபமாகப் பதியும். இந்தியாவின் சில வரலாற்றுத் தலங்களில் இப்படி Light and Show பார்த்திருக்கிறேன் – அது இப்போதும் மனதில் பசுமையாக உண்டு! அதுவும் அமிதாப் Bபச்சன் அவர்களின் குரலில் கேட்கும்போது, நாமே அந்த வரலாற்று நிகழ்வுகளின் போது இருந்த ஒரு உணர்வு கிடைக்கும். மலைப்பகுதியிலிருந்து அங்கே அடிவாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் Dhதயா நதியையும் ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சிறுமி ஒருவர் படிக்கட்டின் பக்கக்கம்பிகளில் சறுக்க அதையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, வாசலில் இருந்த கரும்பு ஜூஸ் கடையில் கொஞ்சம் ஜூஸ்! அதன் பிறகு அங்கே இருந்து புறப்பட்ட நாங்கள் நேராகச் சென்ற இடம் ஒரு கடைக்கு! அது என்ன கடை, அங்கே என்ன வாங்கினோம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. சுதந்திரம் கிடைத்து இவ்வளவு வருடங்கள் கழிந்தும் அவர்கள் வறுமையில் வாடுவது சோகம் அல்ல, கேவலம்! என்ன அரசுகளோ!

    இரண்டு நாட்கள் முன்புதான் இந்த "அசோகர் மரங்களை நாட்டார்" பற்றி எங்கள் வீட்டில் ஒரு உரையாடலில் பேச்சு வந்தது!

    விவரங்கள் சுவாரஸ்யம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகம் அல்ல கேவலம்! உண்மை தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

    2. வறுமையில் மக்கள் வாடுவது இந்தியாவில் மட்டுமல்ல வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்காவிலும் காணமுடியும்..இங்கும் பள்ளிக்கு சென்றாலாவது ஒரு வேளை உணவாஅவது கிடைக்கும் என்று குழந்தைகளை அனுப்பும் குடுமப்ங்களும் உணடு... அரசியல் தலைவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் கொஞ்சம் அதிகமாகவே சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்

      நீக்கு
    3. //நாங்கள் நேராகச் சென்ற இடம் ஒரு கடைக்கு! அது என்ன கடை,//

      ஹீஹீ நிச்சயம் ;சரக்கு' கடையாக இருக்காது

      நீக்கு
    4. தம முதலாம் வாக்கை அளித்து விட்டேன்.

      நீக்கு
    5. அரசியல்வாதிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரி - இந்தியாவில் ரொம்பவே சுயநலவாதிகள் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    6. நிச்சயம் சரக்குக் கடை இல்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    7. தமிழ் மணம் சில நாட்கள் கழித்து மீண்டு வந்திருக்கிறது.... மகிழ்ச்சி!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  2. தௌலி ஷாந்தி ஸ்தூபா அழகு.
    எல்லா படங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    2. //சுதந்திரம் கிடைத்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமையில் தத்தளிப்பது சோகமான ஒரு விஷயம். //
      உண்மையில் நாம் விரும்பிய சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன்.

      தௌலிகிரி யில் எடுக்கப்பட்ட படங்கள் அருமை. தொடர்கிறேன்.

      நீக்கு
    3. உண்மையில் நாம் விரும்பிய சுதந்திரம் கிடைக்கவில்லை! இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. தமிழகத்தைப் பொறுத்தவரை நின்ற நிலை, அமர்ந்த நிலையில் தியான கோலம், அமர்ந்த நிலையில் தரையைத் தொட்ட கோலம், கிடந்த நிலை என்ற வகையிலே புத்தரின் கற்சிலைகள் உள்ளன. (கிடந்த நிலை புத்தர், காஞ்சீபுரத்தில் இருந்தது மண்ணைப் போட்டு மூடிவிட்டனர்) புத்தகயா சென்றபோது தரையைத் தொட்டமர்ந்த கோலத்தினை அதிகமாகக் கண்டேன். உங்கள் மூலமாக பல அரிய சிலைகளைக் காண முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தர் மீது ஈடுபாடு கொண்ட உங்களுக்கு,இப்பதிவிலிருந்து சில அரிய சிலைகள் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. மூன்றாவது படம் மனதை வதைக்கிறது ஜி
    கேட்டால் டிஜிடல் இந்தியா என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. வறுமைக்கு வறுமை வாராதோ?..

    தௌலி ஷாந்தி ஸ்தூபா பற்றிய தகவல்களுடன் அழகான படங்கள்...

    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வறுமைக்கு வறுமை வாராதோ? நல்ல கேள்வி! பதில் தான் யாரிடமும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. தௌலி ஷாந்தி ஸ்தூபா அழகு! படங்களும் அழகு! பல விவரங்களை அறிய முடிந்தது ஜி!

    கீதா: விவரங்களுடன் புதியதோர் இடத்தைப் பற்றி அறிய முடிந்தது. குறித்துக் கொண்டுவிட்டேன். படம் அருமை அதுவும் அந்த ஆறு பார்க்க அழ்காக இருக்கிறது.

    சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம்மூரில் தென்னகத்திலும் சரி வடக்கே இன்னும் மோசமாகப் பல கிராமங்கள் வறுமையில் என்பது நிச்சயமாக இந்தியா வளர்ச்சி அடைகிறது என்று சொல்லவே முடியாது. பணக்கார, ஏழககளுக்கு இடையே யான இடைவெளி அதிகமாகி உள்ளது என்பதே உண்மை. எல்லாம் அரசியல் அரசியல் ஆதாயங்கள்...வேதனைதான்...

    அடுத்து என்ன கடை? ஆவல் !!!தொடர்கிறோம் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கே இன்னும் பல கிராமங்கள் வறுமையில்... உண்மை தான். பல பகுதிகளில் இதே நிலை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்.

      நீக்கு
  8. சுதந்திரம் கிடைத்தபின் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்களை மறுதளிக்க முடியாது என்ன .... எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போய் விட்டன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. அரை வட்ட 'டூம்',அதற்கு மேல் மூன்று காளான் குடைபோல் ,ஷாந்தி ஸ்தூபா கம்பீரமான அழகுதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  11. நான் என்பதுகளில் தௌல கிரியைப்பார்த்திருக்கிறேன். அங்கு ஜப்பானின் பங்களிப்புடன் கூடிய ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்ட்டதாகத்தான் அந்தவழிகாட்டி சொன்னதாக நினைவு! என்வசம் புகைப்படங்கள் எதுவும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாடுகளிலிருந்தும் புத்த மதத்தினைச் சார்ந்தவர்கள் இந்தக் கோவிலுக்கான நிதியுதவி செய்திருக்கிறார்கள்.

      உங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமயவரம்பன் ஜி!

      நீக்கு
  12. ரெண்டு வருஷத்துக்குள்ளே வந்துட்டேன் உங்க தௌலகிரி பதிவுக்கு..... படங்கள் அருமை! நாங்க போனப்ப.... நல்ல கூட்டம்.....

    உங்க பதிவுகள் ஏராளமா இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கு.... மன்னிக்கணும்..... எப்படியும் முடிச்சுருவேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....