அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 27
பகுதி
26 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
நிகழ்வு பற்றிய மணல் சிற்பம்
படம்: இணையத்திலிருந்து....
சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது
இக்கோவிலில் இருக்கும் மரச் சிலைகள் ஏன் என்ற காரணத்தினையும் கதையையும் பார்த்தோம். இந்தப் பகுதியில் மரச்சிலைகள் மாற்றப்படுவது பற்றியும்
வருடா வருடம் நடக்கும் ரத யாத்திரை பற்றியும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
நப களேபரா
நப என்றால் புதிய [பெங்காலிகளைப் போலவே ஒடிஷா மாநிலத்தவர்களும்
“வ” எனும் எழுத்தை “ப” என்றே படிக்கவும் எழுதவும் செய்கிறார்கள்!] என்று அர்த்தம்.
சிற்பங்கள் மரத்தினால் ஆனவை என்பதால் இச்சிற்பங்களில் சிதிலங்கள் உண்டாவது இயல்புதானே. அதனால் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை சிற்பங்கள்
மாற்றப்படுகின்றன. ஏன் பன்னிரெண்டு வருடங்கள்? சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு
முறை ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். அப்படி வரும் மாதம் ஆஷாட மாதம் என அழைக்கப்படுகிறது.
அப்படி வரும் ஆடி மாதத்தில் தான் சிலைகள் மாற்றம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில்
முன்னரே கூட வரலாம் – இப்படி இரண்டு ஆடி அமாவாசைகள். அப்படியான மாதத்தில் சுமார் ஐம்பது
நாள் விழாவாக இந்தச் சிலைமாற்றம் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவின் பெயர் நபகளேபரா!
சமீபத்தில் சிலைகள் மாற்றப்பட்டது 2015-ஆம் வருடத்தில்.
என்ன செய்வார்கள்?
நபகளேபரா நிகழ்வுக்கு முன்னர் சிலைகள் செய்ய வேண்டிய மரமான வேப்ப
மரத்தினைத் தேர்வு செய்ய கோவிலிலிருந்து ஒரு குழு புறப்பட்டு காகதபூர் என அழைக்கப்படும்
ஒரு சிறிய ஊருக்குச் செல்வார்கள். விமலை பீட
நாயகி என அழைக்கப்படும் தேவியின் அனுமதியைப் பெற்ற பிறகு தான் இந்தப் பயணம் அமையும்.
சிலைகள் செய்ய வேண்டிய வேப்ப மரம் இருக்கும், இடம், சூழல், உயரம், மரத்தின் வயது போன்ற
பல விஷயங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகே சிலைகள் செய்வதற்கான வேப்ப மரம் தேர்ந்தெடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தினை வெட்டுவதற்கு
முன்னர் பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள் ஆகியவை கோலாகலமாக நிகழ்த்துவார்கள்.
அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரம் வெட்டப்பட்டு, கோவிலுக்குக்
கொண்டு வரப்படும். விஸ்வகர்மா என அழைக்கப்படும் கோவிலின் தச்சர்கள் கடும் விரதம் பூண்டு,
21 நாட்கள் உழைப்பில் புதிய சிலைகளை உருவாக்குவார்கள். பரம்பரை பரம்பரையாக சிலைகளைச்
செய்யும் இந்த தச்சர்கள் தவிர வேறு யாரும் இவ்விடத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. விஷ்ணுபகவானின்
அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம மூர்த்தியின் அருள் வேண்டியும் பூஜைகள் நடத்திய பிறகு
இந்த சிலா ரூபங்கள் கோவிலுக்குள்ளே எடுத்துச் செல்லப்படும். ஒவ்வொரு சிலைக்கும் அளவு
உண்டு – ஜகன்னாத் உருவம் ஐந்து அடி ஏழு அங்குலம், பலராமர் ஐந்து அடி, ஐந்து அங்குலம்,
சுபத்ரா ஐந்து அடி நான்கு அங்குல அளவிலும் செய்வார்கள்.
சிலைகள் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட
மூன்று தச்சர்கள் மட்டுமே உள்ளே இருக்க, மற்றவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். அடுத்தது
என்ன? இது தான் மிக முக்கியமான விஷயம். மூன்று பேரும், பழைய சிலைகளின் உடைகளால் தங்களை
கண்களை இறுக்கக் கட்டிக்கொண்டு, கைகளிலும் உடைகளைச் சுற்றிக் கொண்டு சிலைகளுக்குள்ளே
வைக்கப்பட்டிருக்கும் “பிரம்மம்” எனப்படும் பொருளை புதிய சிலைகளுக்குள்ளே மாற்றுவார்கள்.
பிரம்மம் எதனால் ஆனது, எப்படி இருக்கும்? போன்ற எந்தத் தகவல்கள் யாருக்குமே தெரியாது!
மாற்றி வைக்கும் தச்சர்கள் உட்பட! அப்படி யாராவது பார்த்துவிட்டால், அவர்கள் கண்கள்
குருடாகி விடும் என்பது நம்பிக்கை. அதனால் பூரி நகர நிர்வாகமே, சிலைகள் மாற்றி வைக்கும்
இரவில் மின்சாரத்தினை துண்டித்து விடுகிறார்கள்!
பிரம்மம் புதிய சிலைகளுக்குள் மாற்றப்பட்ட பிறகு, பல பேர் கொண்டு
வைத்த பழைய சிலைகள், அத்தனை பெரிய உருவமாக இருந்த மரச் சிலைகளை மூன்று தச்சர்கள் மட்டுமே
வெளியே கொண்டு வரும் அளவிற்கு இலகுவாக மாறி விடுமாம். மூன்று பேரும் பழைய சிலைகளைக்
கொண்டு வந்து, கோவில் வளாகத்திற்குள் இருக்கும் கோயிலி வைகுந்தம் எனும் இடத்தில் சடங்குகள்
செய்து சிலைகளைப் புதைத்து விடுவார்கள். இந்தப் பகுதியில் தான் கிருஷ்ண பகவானின் உடலும்
புதைக்கப்பட்டது என்பது நம்பிக்கை. அன்றிலிருந்து மூன்று நாட்கள் மூன்று தச்சர்களும்,
மொத்த பூரி நகர மக்களும் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். பிறகு மீண்டும் நபகளேபரா என
அழைக்கப்படும் விழாவின் மற்ற விஷயங்கள் தொடர்கின்றன.
மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த விழா மிகச் சமீபத்தில்,
அதாவது 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது. விழா சமயத்தில் ஐம்பது லட்சத்திற்கு மேற்பட்டவர்கள்
வந்திருக்கிறார்கள்! அடுத்த விழாவிற்கு இன்னும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
ரத யாத்திரை:
ரத யாத்திரை - 2017
படம்: இணையத்திலிருந்து....
இங்கே நடக்கும் ரத யாத்திரை மிகவும் புகழ் பெற்ற ஒன்றாயிற்றே. ஒவ்வொரு வருடமும் ஜூன்-ஜூலை மாதங்களில் பூரி ஜகன்னாத்
கோவிலின் மூன்று பிரதான தெய்வங்களும் [ஜகன்னாத், பாலபத்ர, சுபத்ரா] அவரவர்களுக்கான
ரதங்களான நந்திகோஷா, தாளத்வஜா மற்றும் தேவதளனா ஆகியவற்றில் ஊர்வலம் வருவார்கள். கூடவே
சுதர்ஷனர், மதன்மோகன், ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சிலைகளும் எடுத்துச் செல்லப்படும்
ரத யாத்திரை மிகவும் சிறப்பான ஒன்று. இந்த ரத யாத்திரை மிகவும் கோலாகலமான ஒரு விழா.
ஒடிஷா மட்டுமல்லாது இப்புவியின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து விழாவினைக்
கண்டுகளிப்பது வழக்கம்.
ஒவ்வொரு ரதமும் வித்தியாசமாக இருக்கும் – நந்திகோஷாவில் 16 சக்கரங்கள்
எனில், தாளத்வஜாவிற்கு 14 சக்கரங்கள்! சுபத்ரா வரும் ரதத்திற்கு 12 சக்கரங்கள் மட்டுமே!
அதே போல, ரதங்களின் மேலே அலங்கரிக்கப்படும் துணிகளின் வண்ணங்களும் மாறுபடும். ஜகன்னாத்
உலா வரும் நந்திகோஷாவில் சிவப்பும் மஞ்சளும் கொண்ட துணிகளால் அலங்காரம், பாலபத்ரா உலா
வரும் ரதம் சிவப்பும் பச்சையும் மற்றும் சுபத்ரா உலா வரும் ரதம் சிகப்பு, கருப்பு வண்ணங்களிலும்
அலங்காரம் செய்யப்படும். மொத்தம் 13 நாட்கள்
நடைபெறும் இந்த ரத் யாத்திரா மிகவும் கோலாகலமான ஒன்று. ரத யாத்திரை சமயத்திலும் ஒடிஷா
மட்டுமல்லாது இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள், சுற்றுலாப்
பயணிகள் இங்கே வருகிறார்கள்.
பூரி ஜகன்னாத் கோவில் பற்றியும் கோவில் சார்ந்த சில விஷயங்கள்
பற்றியும் இன்னும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்!
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
தங்களால் நாங்களும் பயணித்த உணர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்ஐயா
தம 1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநபகளேபரா பற்றிய தகவல் தெரிந்துகொண்டேன். தொடர்கிறேன். த ம
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதகவல்கள் நன்று தொடர்கிறேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குபிரம்மம் மாற்றும் விஷயங்கள் ஆச்சர்யம். எடை குறிக்கிறது என்னும் தகவலும் ஆச்சர்யம். நமக்கு இது மாதிரி விஷயங்களுக்கு நிரூபணம் தேவையாய் இருக்கிறது. யார் தருவார்! நம்பிக்கைகள்!
பதிலளிநீக்குநிரூபணம் தேவையாய் இருக்கிறது! யார் தருவார்.... நம்பிக்கை தான் எல்லாமே இல்லையா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நப என்றால் புதிய என்று பொருள். களேபரா என்றால்? ஆர்ப்பாட்டங்கள் என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! இந்தக் களேபரத்துக்கு நிர்வாகமே துணை நிற்கிறதே...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வான்மதி மதிவாணன்.
நீக்குதெரியாத தகவல்கள் தந்ததற்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குவெங்கட்,
பதிலளிநீக்குஅனைத்தும் புதிய தகவல்கள் எனக்கு.
பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்தும்.
தச்சர்களுக்கு விஸ்வகர்மா என்பது நம்ம ஊர்களிலும் சொல்வதை கேட்டிருக்கின்றேன்.
கோ
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோ.....
நீக்குஅருமையான விபரங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபூரி ஜகந்நாதர் கோவிலில் மரச்சிலைகள் மாற்றப்படும் காரணத்தையும் மாற்றும் முறையையும் விரிவாக விளக்கியமைக்கு நன்றி. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குரதயாத்திரையின் வருட வ்ருடம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்ப்பேன்.
பதிலளிநீக்குராஜா வந்து தேரின் உள் புறம் கூட்டி சுத்தம் செய்வார். சிலைகள் எடுத்து போவதையும் பார்த்து இருக்கிறேன்.
மேலும் விவரங்கள் உங்கல் பதிவில் படித்து அறிய முடிந்தது.பகிர்வுக்கு நன்றி.
படங்கள் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குபழைய சிலைகளில் உள்ள பிரம்மத்தைப் புதிய சிலைகளுக்கு மாற்றும் நிகழ்வு உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. அரிய பாரம்பரிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! பதிவு மிக அருமை. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.
நீக்குமண் சிற்பம் அழகு. ரத யாத்திரை என்ன்ன்ன்ன்ன சனத்திரள்.. இதுக்குள் பலர் காணாமல் போய் விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குரத யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கில் வருவார்கள் இங்கே.... காணாமல் போனவர்களைக் கண்டிபிடித்துக் கொடுக்கும் வசதிகளும் இருக்கும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
அருமை.....புதிய தகவல்கள் !!!
பதிலளிநீக்குஉள்ளம் பூரித்தது, பூரி ஜகன்னாத் மகிமை அறிந்து !!!
வாழ்க....வளர்க !!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷங்கர் ஜி!
நீக்குஹப்பா....மிக மிக வியப்பான தகவல்கள்.... அதுவும் நப களேபரா...வியப்பு. குறிப்பாக....பிரம்மம் மாற்றுவது மற்று ம் சிலையின் எடை குறைவது.....கேள்விகள் பல எழுந்தாலும்.....நம்பிக்கைதான் எல்லாமே....
பதிலளிநீக்குஇங்கும் தச்சரை விஸ்வகர்மா என்றுதான் சொல்கிறார்கள் இல்லையா. தேவர்களின் ஆர்கிடெக்ட் விஸ்வகர்மா என்பதாலோ....
கேள்விகள் பல எழுந்தாலும்.... நம்பிக்கை தானே எல்லாம்! உண்மை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!