ஷாப்பிங் அனுபவம் - 14 ஜூலை
2019
இன்னிக்கு ஷாப்பிங் போன போது வாங்கியது இவை. Bபேக்கிங் செய்வதற்கு
தேவையான பொருட்களான baking pan, measuring cups, oil brush, sieve போன்றவற்றை வாங்கி
வந்தோம்.
பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளதால் குழந்தைகளின்
ஃபீடிங் பாட்டில் கூட எவர்சில்வரில் இருந்தது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. இரும்பு,
பீங்கான், பித்தளை, கண்ணாடி, செப்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் தான் எங்கும் காணப்படுகிறது.
Measuring Cups ஏனோ பிளாஸ்டிக் தான் கிடைத்தது. அமேசான்-ல தேடணும்.
Baking pan எடுப்பதை பார்த்து அங்கு பணியில் இருந்த பெண்மணி,
"அக்கா! கேக் செய்யறது அவ்வளவு ஈஸியா?? எல்லாரும் வாங்கறாங்க?? என்றார். ஆமாங்க!
ஈஸி தான். இட்லிபானையிலும் செய்யலாம். குக்கரிலும், தோசைக்கல்லிலும் கூட செய்யலாம்
என்றேன்.
"என்னென்ன போட்டு செய்யணும்" என்றார்... சொன்னேன்
:)
"தேங்க்ஸ்க்கா! வீட்டுல குழந்தைகளின் பிறந்தநாளுல நாமே
செய்யலாம் இல்லையா! அரைக்கிலோ மாவு வாங்கி செஞ்சு பாக்கறேன். என்றார். 1/4 கிலோ வாங்கினால்
இரண்டு தடவையா செய்யலாம்னு சொல்லி விட்டு வந்தேன்.
ஆதியின் அடுக்களையிலிருந்து -
18 ஜூலை 2019
கொள்ளுப் பொடி!! (For
weight loss)
தேவையற்ற
கொழுப்பை குறைப்பதற்கும், உடல் வலிமைக்கும் கொள்ளு உதவுகிறது. கொள்ளை வைத்து ரசம்,
சுண்டல், இட்லி, தோசை போன்றவை செய்வது போல் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள இதோ கொள்ளுப்
பொடி. சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பொடியும், நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிடலாம்.
ஸ்டார் மருத்துவர் – 19 ஜூலை
2019
நேற்று
நல்லதொரு மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரிடம் மாமனாரை அழைத்துச் சென்றிருந்தேன்.
வயது மூப்பின் காரணமாக சிற்சில பிரச்சனைகள் இருந்தது.
சிறிய
மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களும் நோயாளிகளிடம் பணிவாக நடந்து
கொண்டனர்.
இங்கு
மின்னஞ்சல் மூலம் அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். பல மணிநேரம் காத்திருக்க வைக்காமல்,
சொன்ன நேரத்தில் பார்க்க முடிந்தது. ஏறக்குறைய 15 நிமிடங்களை எங்களுடன் செலவிட்டார்.
ஏகப்பட்ட
டெஸ்ட்களுக்கு பரிந்துரைக்காமல் தேவையான விஷயங்களை மட்டுமே சொல்கிறார். அவரே கையைப்
பிடித்து வெளியே அழைத்தும் வந்து விட்டார்.
இந்த
மருத்துவரைப் பற்றி முதல் நாள் கூகுளில் தேடியதிலும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது.
5 ஸ்டார்களில் 4.7 ஸ்டார் கிடைத்துள்ளது. மருத்துவர் பெயர் சுந்தரராஜன், நரம்பியல்
மருத்துவர்.
பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே
நாளில்…
பதிவுலகம்
பரபரப்பாக இருந்த நாட்கள் அவை. எப்போதும் ஏதாவது தொடர்பதிவு பதிவுலகத்தில் ஓடிக் கொண்டு
இருக்கும். யாரையாவது கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது அடிக்கடி நடக்கும் விஷயம்.
அப்படி, இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு தொடர்பதிவு – ஒன்றுக்கு மூன்று!
பயப்படும் மூன்று விஷயங்கள்?
தெனாலி கமலஹாசன் மாதிரி பெரிய அட்டவணையே இருக்கு… எதைச்சொல்ல?
எதை விட?
1. பல்லி [என்னைப் பார்த்து பயந்த பல்லி, தனது வாலை விட்டுவிட,
துடித்துக் கொண்டு இருக்கும் பல்லி வாலைப் பார்த்து அலறிய சத்தத்தில் மொத்த கட்டடமும்
வீட்டு வாசலில்…].
2. இருட்டு.
3. ”பேய் இருக்கா? இல்லையா?” என்ற விவாதமே இல்லை மனதுள். யாராவது ”பே” என்று ஆரம்பித்தாலே பயந்து விடுவேன்.
என்ன
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி வெங்கட்