புதன், 31 ஜூலை, 2019

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…


சின்னச் சின்ன ஆசை...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். ”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை”ன்னு ஒரு பழைய பாட்டு உங்களுக்கு எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும். சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில், எஸ்.பி.பி-வாணி ஜெயராம் குரலில், ஷங்கர் கணேஷ் இசையமைப்பில் “என்னடி மீனாக்ஷி” என்ற படத்தில் வரும் பாட்டு. இங்கே அந்தப் பாடலைப் பற்றி பேசப் போவதில்லை. எனக்கு இருந்த – ரொம்ப நாளாக – இல்லை இல்லை ரொம்ப வருடங்களாக இருந்த ஒரு ஆசை பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் கண்ணதாசன் ஆசை பற்றி சொன்ன ஒரு விஷயத்துடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!

”எதையாவது அடைய ரொம்ப ஆசைப்படும்போது, அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என நிச்சயப் படுத்திக்கொள்ளுங்கள் ” – கண்ணதாசன்

செவ்வாய், 30 ஜூலை, 2019

ஜார்க்கண்ட் உலா – திருட்டு – பாழும் வயிற்றுக்காக…



அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். சென்ற வாரம் ஜார்க்கண்ட் உலாவில், ஜோஹ்னா அருவி அருகே கடை வைத்திருக்கும் இரண்டு உழைப்பாளிகள் பற்றிப் பார்த்தோம். இந்த வாரமும் சில உழைப்பாளிகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம் – ஆனால் இது வேறு வித உழைப்பு. அதற்கு முன்னர் நல்லதொரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!

”வெற்றி என்பது ஒரு பயணம் – அதற்கு எல்லைகளே இல்லை” – Ben Sweetland

திங்கள், 29 ஜூலை, 2019

அலுவலக அனுபவங்கள் – என் பெயர் ஜாலி



இவர் அவரல்ல.... படம் இணையத்திலிருந்து...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். வாரத்தின் முதல் நாள். வேலைக்கு/பள்ளிக்குச் செல்லும் பலருக்கு Monday Morning Blues என்று சொல்லக் கூடிய விஷயம் உண்டு! உங்களுக்கு? ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். எந்த நாளாக இருந்தாலும் அவற்றை நல்ல நாளாக மாற்றிக் கொள்வது உங்கள் கையில் தான்! இந்த நாளை ஒரு நல்ல பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா?

ஞாயிறு, 28 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் – தொடரும் நிழற்பட உலா



அன்பின் நண்பர்களுக்கு இந்த ஞாயிறில் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு நல்ல பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா?

சிதைக்க முயலும் சோதனைகளுக்கிடையே தன்னைச் செதுக்கி உயரும் சாதனை தான் வாழ்க்கை!

சனி, 27 ஜூலை, 2019

வாங்க பேசலாம் – பிங்க் ஸ்லிப் - நாளைல இருந்து வேலைக்கு வராதே...



அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். ”வண்ணங்களில் இல்லை வாழ்க்கை… மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை” என்று சமீபத்தில் ஒரு வாசகத்தினை படித்தேன். வண்ணங்கள் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். மகளுக்கு சிறு வயதில் பிங்க் நிறம் ரொம்பவே பிடிக்கும். எல்லாமே பிங்க் நிறத்தில் வேண்டும் என்பார்! கடைக்குப் போய் துணி வாங்கினால் பெரும்பாலும் அந்த வண்ணத்தில் உள்ள உடையைத் தான் பிடித்ததாகக் காண்பிப்பார். இப்போது இந்த வண்ணம் பிடிக்காமல் போயிருக்கலாம்! ஆனால் இந்த வண்ணத்தின் ஒரு வித பயன்பாடு பற்றி தான் இன்றைக்கு இங்கே பார்க்கப் போகிறோம்.

வெள்ளி, 26 ஜூலை, 2019

காஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்கள் – பதிவர் சந்திப்பு





காஃபி வித் கிட்டு – பகுதி – 38

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வியாழன், 25 ஜூலை, 2019

ஜார்க்கண்ட் – ஜோஹ்னா அருவி - உழைப்பால் உயர்வோம் - உழைப்பாளிகள்


அடுப்பு தயாரா இருக்கு... என்ன வேணும்னு சொன்னா சமைச்சுடலாம்!


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜோஹ்னா அருவி அருகே சந்தித்த இரண்டு சகோதரர்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் உழைப்பு பற்றிய ஒரு பொன்மொழியுடன் இன்றைய பதிவை ஆரம்பிக்கலாமா!

”கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்” – லால் பகதூர் சாஸ்த்ரி

புதன், 24 ஜூலை, 2019

ஜோல்னாவிற்குள் என்ன - பத்மநாபன்



அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு பத்மநாபன் அண்ணாச்சி அவர்களின் ஒரு பதிவு. விவேகானந்தா கேந்திரா அனுபவம் ஒன்றை எழுதி இருக்கிறார். படிக்கலாம் வாங்க! – வெங்கட், புது தில்லி


பண்பொழிலைப் பாடுவேனோ! பாம்பைத்தான் தேடுவேனோ!

செவ்வாய், 23 ஜூலை, 2019

கதம்பம் – ஷாப்பிங் – கொள்ளுப் பொடி – தொடர்பதிவு - மருத்துவர்


ஷாப்பிங் அனுபவம் - 14 ஜூலை 2019



இன்னிக்கு ஷாப்பிங் போன போது வாங்கியது இவை. Bபேக்கிங் செய்வதற்கு தேவையான பொருட்களான baking pan, measuring cups, oil brush, sieve போன்றவற்றை வாங்கி வந்தோம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளதால் குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கூட எவர்சில்வரில் இருந்தது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. இரும்பு, பீங்கான், பித்தளை, கண்ணாடி, செப்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் தான் எங்கும் காணப்படுகிறது. Measuring Cups ஏனோ பிளாஸ்டிக் தான் கிடைத்தது. அமேசான்-ல தேடணும்.

Baking pan எடுப்பதை பார்த்து அங்கு பணியில் இருந்த பெண்மணி, "அக்கா! கேக் செய்யறது அவ்வளவு ஈஸியா?? எல்லாரும் வாங்கறாங்க?? என்றார். ஆமாங்க! ஈஸி தான். இட்லிபானையிலும் செய்யலாம். குக்கரிலும், தோசைக்கல்லிலும் கூட செய்யலாம் என்றேன்.

"என்னென்ன போட்டு செய்யணும்" என்றார்... சொன்னேன் :)

"தேங்க்ஸ்க்கா! வீட்டுல குழந்தைகளின் பிறந்தநாளுல நாமே செய்யலாம் இல்லையா! அரைக்கிலோ மாவு வாங்கி செஞ்சு பாக்கறேன். என்றார். 1/4 கிலோ வாங்கினால் இரண்டு தடவையா செய்யலாம்னு சொல்லி விட்டு வந்தேன்.

ஆதியின் அடுக்களையிலிருந்து - 18 ஜூலை 2019

கொள்ளுப் பொடி!! (For weight loss)




தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கும், உடல் வலிமைக்கும் கொள்ளு உதவுகிறது. கொள்ளை வைத்து ரசம், சுண்டல், இட்லி, தோசை போன்றவை செய்வது போல் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள இதோ கொள்ளுப் பொடி. சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பொடியும், நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிடலாம்.

ஸ்டார் மருத்துவர் – 19 ஜூலை 2019

நேற்று நல்லதொரு மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரிடம் மாமனாரை அழைத்துச் சென்றிருந்தேன். வயது மூப்பின் காரணமாக சிற்சில பிரச்சனைகள் இருந்தது.

சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களும் நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொண்டனர்.

இங்கு மின்னஞ்சல் மூலம் அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். பல மணிநேரம் காத்திருக்க வைக்காமல், சொன்ன நேரத்தில் பார்க்க முடிந்தது. ஏறக்குறைய 15 நிமிடங்களை எங்களுடன் செலவிட்டார்.

ஏகப்பட்ட டெஸ்ட்களுக்கு பரிந்துரைக்காமல் தேவையான விஷயங்களை மட்டுமே சொல்கிறார். அவரே கையைப் பிடித்து வெளியே அழைத்தும் வந்து விட்டார்.

இந்த மருத்துவரைப் பற்றி முதல் நாள் கூகுளில் தேடியதிலும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது. 5 ஸ்டார்களில் 4.7 ஸ்டார் கிடைத்துள்ளது. மருத்துவர் பெயர் சுந்தரராஜன், நரம்பியல் மருத்துவர்.

பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில்…

பதிவுலகம் பரபரப்பாக இருந்த நாட்கள் அவை. எப்போதும் ஏதாவது தொடர்பதிவு பதிவுலகத்தில் ஓடிக் கொண்டு இருக்கும். யாரையாவது கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படி, இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு தொடர்பதிவு – ஒன்றுக்கு மூன்று!

பயப்படும் மூன்று விஷயங்கள்?

தெனாலி கமலஹாசன் மாதிரி பெரிய அட்டவணையே இருக்கு… எதைச்சொல்ல? எதை விட?

1. பல்லி [என்னைப் பார்த்து பயந்த பல்லி, தனது வாலை விட்டுவிட, துடித்துக் கொண்டு இருக்கும் பல்லி வாலைப் பார்த்து அலறிய சத்தத்தில் மொத்த கட்டடமும் வீட்டு வாசலில்…].
2. இருட்டு.
3. ”பேய் இருக்கா? இல்லையா?” என்ற விவாதமே இல்லை மனதுள்.  யாராவது ”பே” என்று ஆரம்பித்தாலே பயந்து விடுவேன்.

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

திங்கள், 22 ஜூலை, 2019

ஜெர்மனிக்கு அழைத்த விதி…


படம்: இணையத்திலிருந்து...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

பல சமயங்களில் ”விதி வலியது” என நமக்கு உணர்த்தும் நிகழ்வுகள் நடந்தபடியே இருக்கின்றன. ஆனாலும் நமக்கு அதன் வலிமை புரிவதில்லை. சமீபத்தில் கேட்ட ஒரு நிகழ்வு “விதி வலியது” என்று மீண்டும் சொன்னது. அந்த நிகழ்வினைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு கதையைப் பார்க்கலாம் வாங்க…

ஞாயிறு, 21 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா


படம்-1: கருடன் – ராஜஸ்தானில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து….

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிற்றுக் கிழமையில் வழமை போல சில நிழற்படங்களின் உலா! பொதுவாக நான் எடுத்த படங்கள் வெளியிடுவதுண்டு. இந்த வாரம் மாறுதலாக, மகள் அவரது அலைபேசி மூலம் எடுத்த சில படங்கள் பதிவில். இவை அனைத்தும் தலைநகர் தில்லியில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டவை.

சனி, 20 ஜூலை, 2019

வாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம்


படம்: இணையத்திலிருந்து...


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும் மற்ற நாட்களில் வராத விழிப்பு, விடுமுறை நாட்களில் சற்று சீக்கிரமாகவே வந்து விடுகிறது! அதுவும் எல்லா சனி, ஞாயிறுகளிலும் இப்படியே என்றால் என்னாவது! விழித்தெழுந்து காஃபி/தேநீர் அருந்திய படியே கொஞ்சம் வலை மேய்ந்தால் மீண்டும் தூக்கம் கண்களை இழுக்க, அப்படியே தூங்கி விடுகிறேன் – பல சமயங்களில் இப்படித் தூங்கி எழும்போது காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிடுகிறது! ”டேய்… சோம்பேறி… எழுந்திருடா, எழுந்து வேலையைப் பாரு..” என எனக்கு நானே சொல்லிக் கொண்டு எழுந்து கடகடவென வேலைகளைப் பார்ப்பது நடக்கிறது! சரி நான் தூங்குவது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு சமீபத்தில் என்னைப் பிடித்திருந்த ஒரு மோகம் பற்றி பேசலாம் வாங்க…

வெள்ளி, 19 ஜூலை, 2019

காஃபி வித் கிட்டு – உலகக் கோப்பை – வடகம் – எழுதுவது எப்போது


காஃபி வித் கிட்டு – பகுதி – 37

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் தானே காஃபி வித் கிட்டு வரும்? இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே? ஆமாம்… சனிக்கிழமைகளில் தான் இப்பதிவு – பரவாயில்லை. வெள்ளிக்கிழமையும் காஃபி குடித்தால் தவறில்லையே! இன்றைக்கு காஃபி வித் கிட்டு பதிவில் சில விஷயங்களைப் பார்க்கலாமா! சூடான காஃபி குடித்தபடியே!

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:




உலகக் கோப்பையும் ஒரு முதியவரும்:

இந்தியா உலகக் கோப்பை போட்டியின் செமி ஃபைனலில் தோற்றதற்கு அடுத்த நாள். ஒரு பெரியவரை சந்தித்தேன். வயது எண்பது வயதிற்கு மேல்! ஆறேழு மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பவர் தான். வருவார், சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பார்.  அவரது வேலை முடிந்த பிறகு சென்று விடுவார். இத்தனைக்கும் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு வர வேண்டாம், நீங்கள் வீட்டில் இருந்த படியே இந்த வேலைகளைச் செய்து விடலாம் என்று சொன்னால் கேட்க மாட்டார். தள்ளாடியபடி வந்து கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு செல்வார்.  இந்த முறை வந்திருந்த சமயத்தில் பக்கத்தில் இருந்த இருவர் உலகக் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது பற்றி தங்களது கருத்துகளைச் சொல்ல, பெரியவருக்கு கோபம் வந்து விட்டது – பொரிந்து தள்ளி விட்டார்.

இங்கே எல்லாருக்கும் கிரிக்கெட் பைத்தியம் பிடித்து விட்டது. கிரிக்கெட் Bபேட்டையே தொடாதவன் கூட இப்படி விளையாடியிருக்கலாம்னு பேசிட்டுத் திரியராங்க… இதெல்லாம் ஒரு விளையாட்டா? அவனுங்க விளையாடறாங்க, காசு சம்பாதிக்கிறாங்க, நீங்க ஏண்டா பைத்தியம் பிடிச்சு அலையறீங்க! ஹாக்கி மாதிரி விளையாட்டு எவ்வளவு நல்லது. அதில் கிடைக்கும் உடல் உறுதி இந்த விளையாட்டில் கிடைக்குமா? நாங்க சின்ன வயசுல ஹாக்கி தான் விளையாடினோம்! இந்தியா ஒலிம்பிக்ல கூட ஹாக்கி விளையாட்டில் தங்கப் பதக்கம் வாங்கி இருக்கே! அதை அப்படியே ஓரங்கட்டிட்டு கிரிக்கெட் பக்கம் போய் சீரழியறாங்களே! சல்லிக்காசுக்கு பிரயோஜனமில்லாம திரியாதிங்கடே…

ரொம்பவும் புலம்ப, தண்ணீர் கொடுத்து ஆஸ்வாஸப்படுத்தி அனுப்பினேன்! கடந்த ஒன்றரை மாதமாக எங்கே பார்த்தாலும் கிரிக்கெட் மயம் தானே! ஒரு வழியா முடிஞ்சது உலகக் கோப்பை!

படித்ததில் ரசித்தது:  



இங்க பாருங்க. இன்னிக்கி வெய்யில் 39 டிகிரி. ரொம்பவே அதிகமா இருக்கு. நீங்க வேலைக்குப் போக வேண்டாம். லீவ் போட்ருங்க.
.
அடியேய். தர்ம பத்தினி. சத்தியமாச் சொல்றேண்டி. எனக்கு வடகம் போடத் தெரியாது. என்னை வுட்டுருடி. நாம் பாட்டுக்கு ஆபீசுக்கே போயிடுறேன், ப்ளீஸ்...

ரசித்த படமும் கவிதையும்:



சமீபத்தில் படித்து ரசித்த ஒரு கவிதை.

கனவொன்றை
வாழ நினைத்தேன்

காணாமல் போனான் அவன்

நிகழ்வொன்றில்
நித்தம் அழிந்தேன்

நேரில் வந்தான் அவன்

கனவுமின்றி
நிஜமுமின்றி
கவிதையான
காதல்

அந்தியின் செங்குருதி கசியும்
அதீத ஈர்ப்பின் இச்சையோடும்
அடைய முடியாததற்கான மனநெகிழ்ச்சியோடும்
அந்தரத்திலாடி

என் நயனங்களில்
நிறையும் இளநீலத்துக்கு
கரிப்புச் சுவையைக்
கொடுக்கிறது

" ஶ்ரீ "


ரசித்த காணொளி:

சில காணொளிகள் பார்க்கும் போதே பிடித்து விடும்.  அவை விளம்பரப்படுத்தும் விஷயம் பிடிக்காது என்றாலும் விளம்பரம் ரசிக்கும்படி அமைந்து விடுவது உண்டு! புது வருடம் புதிய ஆரம்பம் என்று சொல்லும் இந்த காணொளி ரொம்பவும் பிடித்தது! பாருங்களேன்.  



அலைபேசி ரிப்பேரா?


சரியாத் தான் கேட்டு இருக்காங்க அம்மா!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே நாளில் 2013-ஆம் வருடம் எழுதிய ஒரு ஃப்ரூட் சாலட் பதிவு…


இப்பதிவில் பகிர்ந்த ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம். இங்கேயும்…

தி.ஜ.ர. என்று ஒரு பிரபலமான எழுத்தாளர். 1901 ஆம் ஆண்டு பிறந்து 1971 [நான் பிறந்த வருடம்!] மறைந்த இவர் மஞ்சரி இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர்.  எழுதுவது பற்றி இவர் சொன்னது என்ன என்று தெரிந்து கொள்வோமா?

“எழுதுவது என்பது நீந்துகிற மாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டு இருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டு, வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். குதி, குதித்துவிடு!”

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

வியாழன், 18 ஜூலை, 2019

அலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் காகிதங்கள்…


படம்: இணையத்திலிருந்து..


அரசு அலுவலகங்கள் பலவற்றில் இருக்கும் கோப்புகளும் அதில் இருக்கும் காகிதங்களும் பல விஷயங்களை நமக்குச் சொல்பவை. அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் பல பழைய கோப்புகளைப் படித்துப் பார்ப்பதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. இப்போதும் அப்படி பல கோப்புகளைப் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதுண்டு. பல பிரபல அதிகாரிகள், மந்திரிகளில் ஆரம்பித்து பிரதம மந்திரிகளின் கையெழுத்து/கையொப்பம் ஆகியவற்றை பார்க்கும், படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு. நான் அரசு அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் கிடைத்த ஒரு அனுபவம் பற்றி இன்றைக்குப் பார்க்கலாம்! அதற்கு முன்னர் பழைய அலுவலக் அனுபவங்கள் பற்றிய ஒரு சிறு தகவல்!

புதன், 17 ஜூலை, 2019

ஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி



ஆஹா.... இந்த சூழலில் இருந்தால் எவ்வளவு இன்பம்....

மலைச்சாரல்....

ஜார்க்கண்ட் உலா என்ற பெயரில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில இடங்களுக்கு உங்களை பதிவுகள் மூலம் அழைத்துச் சென்றது நினைவிருக்கலாம்! அப்படி கடைசியாக உங்களை அழைத்துச் சென்றது பத்ராது எனும் இடத்திற்கு! அழைத்துச் சென்றது கீழே உள்ள பதிவின் மூலம்!

செவ்வாய், 16 ஜூலை, 2019

திங்கள், 15 ஜூலை, 2019

திறமைசாலிகள் – ஒரு அறிமுகம்


இது உங்களுக்கே நல்லா இருக்கா? தமிழ் வலைப்பூ தானே உங்களுடையது? இதுல என்னமோ ஜாங்கிரி ஜாங்கிரியா எழுதி இருக்கும் ஒரு படத்தை முதல் படமா போட்டா என்ன அர்த்தம்? எல்லாருக்கும் கில்லர்ஜி மாதிரி, நரசிம்மராவ் மாதிரி பல மொழிகள் தெரிந்திருக்குமா என்ன? மேலே எழுதி இருப்பது தமிழ் இல்லை என்று எங்களால் கண்டிப்பாகச் சொல்ல முடியும்! என்ன மொழின்னு நீங்களே சொல்லிடுங்க சரியா?

புதன், 3 ஜூலை, 2019

தாயுமானவன் - வாசிப்பனுபவம்


பரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். ஆரம்பத்தில் டயர்கள் மாற்றும் வேலை, பொருட்களை சரி பார்க்கும் வேலை என்று ஆர்வமுடன் வேலை செய்து இன்று தலைமை ஃபோர்மேனாக இருக்கிறான். யூனியன் லீடராகவும் மாறி உடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக பாடுபடுகிறான். தனிப்பட்ட முறையிலும் உதவுகிறான்.

செவ்வாய், 2 ஜூலை, 2019

தேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வை



தலைநகரின் ஜன்பத் சாலை மிகவும் பிரபலமானது! 10 ஜன்பத் எனும் முகவரி பலரும் அறிந்தது. ஆனால் அந்த முகவரி பற்றியோ, அல்லது அங்கே வசிப்பவர்கள் பற்றியோ நான் எதுவும் எழுதப் போவதில்லை. அது அரசியல் – எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!

திங்கள், 1 ஜூலை, 2019

கதம்பம் – காமதேனுவின் முத்தம் - நகராட்சி - பாலகுமாரன் - பிறந்த நாள் - உயர ஃபேமிலி


படித்ததில் பிடித்தது – காமதேனுவின் முத்தம் - 17 ஜூன் 2019



காதலுடன் மர்மங்களும் பின்னி பிணைந்த கதை. வழிவழியாக ஒரு குடும்பத்தில் மட்டும் கர்ப்பிணிக்கு காட்சி கொடுக்கும் காமதேனுவால் நிகழும் நிகழ்வுகள்.