படித்ததில் பிடித்தது – காமதேனுவின்
முத்தம் - 17 ஜூன் 2019
காதலுடன்
மர்மங்களும் பின்னி பிணைந்த கதை. வழிவழியாக ஒரு குடும்பத்தில் மட்டும் கர்ப்பிணிக்கு
காட்சி கொடுக்கும் காமதேனுவால் நிகழும் நிகழ்வுகள்.
ஒரு
முத்தத்தால் நிகழும் விபரீதங்கள். அது என்ன? புத்தகத்தை வாசித்தால் உங்களுக்கே தெரிய
வரும்.
'காலச்சக்கரம்'
நரசிம்மா சாரின் எட்டாவது நாவல் இது. 500 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும் இந்நூலில்
வரும் அச்சுப்பிழைகள் மட்டும் தவிர்த்தால் வாசிக்க சுவாரஸ்யம்.
இந்த
பகிர்வை முகநூலில் பகிர்ந்து கொண்ட போது புத்தக ஆசிரியர் தந்த பதில் கீழே:
உங்களை போன்ற பெண் நண்பர்
ஒருவர் தனது பதிப்பகத்திற்காக ஒரு நாவலை கேட்டார். வானதி தவிர நான் வேறு யாருக்கும்
எழுதுவதில்லை. இருந்தாலும் தெரிந்தவர் என்பதால் எழுதி தந்தேன். எனது நாவலை மாற்றாந்தாய்
மனப்பான்மையுடன் வெளியிட்டு விட்டார். Proof Errors பார்த்ததாகவே தெரியவில்லை. இனிமேல்
வானதி் பதிப்பகத்திற்கு தவிர வேறு எந்த பதிப்பகத்திற்கும் முத்தம் கொடுப்பதாக இல்லை.
திருச்சி மாநகராட்சி – 10 ஜூன்
2019
திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் மாநகர குடியிருப்புகளுக்கு காப்பீடு மற்றும் தள்ளுபடி
கூப்பன்கள் தருகிறார்கள் திருச்சி மாநகராட்சி. நல்ல விஷயம். அது பற்றிய செய்தி கீழே.
புதிய குடித்தனம் – 18 ஜூன்
2019
ஊருக்கு
சென்ற சமயம் நூல்கண்டில் கூடு அமைத்து குடியேறிய பூச்சி!!
மறுசுழற்சிக்கு தரலாமே – 18 ஜூன்
2019
சென்ற
தமிழ் புத்தாண்டு முதலே எங்கள் குடியிருப்பில் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சிக்கு
தந்து கொண்டிருக்கிறோம். முதலில் பலரும் ஒத்துழைப்பு தர மறுத்தாலும், வாட்ஸப்பில் பகிர்ந்து
கொண்டு, அவர்களின் குழப்பங்களை தீர்த்ததில் இப்போது பெரும்பாலானோரின் ஒத்துழைப்பு கிடைத்து
வருகிறது.
இந்த
முறை பழகியதால் வெளியூருக்கு போகும் போது தரம் பிரிக்காமல் போட மனம் வருவதில்லை. டெல்லியிலும்
காலை நேரங்களில் "ஸ்வச்சதா" பாட்டு பாடிய படி குப்பை வண்டி வருகிறது. மக்களும்
ஓடிச் சென்று கொடுக்கின்றனர். ஆனால் தரம் பிரித்தெல்லாம் தருவதில்லை. இன்னும் பல இடங்களில்
விழிப்புணர்வு வரவில்லை என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டில்
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடை செய்திருக்கும் இந்த வேளையில் உங்களிடம் இருக்கும்
கேரி பேக், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை ஆங்காங்கே, சாலைகளிலோ, நீர்நிலைகளிலோ வீசியெறிந்து
சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காமல் அதை மறுசுழற்சி செய்யத் தரலாமே.
குப்பைகளை
பிரித்துக் கொடுத்தால் மாநகராட்சிக்கு மறுசுழற்சி செய்ய எளிதாக இருக்கும். அல்லது
Trash N cash போல உங்கள் ஊரில் இருக்கும் செயலி மூலம் அப்புறப்படுத்தலாம்.
வெளியில்
செல்லும் போது சணல் பைகளையும் துணிப்பைகளையும் எடுத்துச் செல்ல மறவாதீர்கள்.
பிறந்த நாள் வாழ்த்து – 27 ஜூன்
2019
அன்புக்
கணவரின் பிறந்தநாள் இன்று!
நல்ல
உடல் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பயணக்காதலர்,
அழகான புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். Sentiment's
துளியும் இல்லாதவர். அப்படியும் இதயத்தில் துளியேனும் இருந்தாலும் அதை வெளிக்காட்டி
விடக்கூடாது என்று அழுத்தமுள்ள நல்ல மனிதர்!
இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்றைய நாள் இனிதான நாளாய் இருக்கட்டும்.
தற்சமயம் வாசிப்பில் – ஆனந்த வயல்
– 19 ஜூன் 2019
ஆனந்த
வயல்! - பாலகுமாரன்.
கிராமத்து
பின்னணியில் பன்னீர் செல்வம் என்கிற பன்னீரும் செண்பகாவும் மனமொத்த தம்பதிகளாய் புரிதலோடு
வலம் வருகிறார்கள்.
பச்சை
பசேலென்ற வயல்வெளிகளும், கிராமத்து மனிதர்களும் மனதை தொட்டுச் செல்கின்றன.
உயர ஃபேமிலி – 28 ஜூன் 2019
நேற்று
வாசலில் வந்த காய்க்காரரிடம் காய்கறி வாங்கிக் கொண்ட பின் அப்படியே படிகளில் அமர்ந்து
சற்று நேரம் குடியிருப்புத் தோழிகளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன்.
என்ன
வேலையெல்லாம் ஆச்சா?? என்று தான் ஆரம்பிப்போம். அப்படியே நூல் பிடித்துப் போய் எங்கெங்கோ
செல்லும் அந்த பேச்சு. நிறைய டிப்ஸ்களும் தெரிந்து கொள்ளலாம், சொல்லலாம்.
அப்படி
பேசும் போது ஒட்டடை அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நானும் நேற்று ஃபேன் எல்லாம்
துடைத்தேன். காற்று அடிப்பதால் தூசி நிறைய வருது என்று சொன்னேன்.
அப்போது
தோழி ஒருவர், "போன தடவை ஒட்டடை அடிக்கும் போது குச்சியை ஒடைச்சிட்டேன், வேற வாங்கினால்
தான் அடிக்க முடியும்" என்று சொல்ல, நான் உடனே, நான் ஒட்டடை குச்சி வாங்கினதேயில்லை
என்றேன்.
இதைக்
கேட்டதும் மற்றொரு தோழி, "ஏன் உங்க வீட்டுல ஒட்டடையே வராதா!!! பரவாயில்லப்பா என்று
வியந்தார்.
நான்
என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க?
அதான் ஒட்டடைக்குச்சி நான்
இருக்கேனே!!! என்றதும் தோழிகளிடம் சிரிப்பு!
என்ன
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி
வெங்கட்
இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஅட! வெங்க்ட்ஜி! ஜூன் 27 பிறந்தநாளா
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! வெங்கட்ஜி! எல்லாம் நல்லதாகவே நடந்திட பிரார்த்தனைகள்
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
காமதேனுவின் முத்தம் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான நாவல்- வழக்கம்போல.
பதிலளிநீக்குஆனந்த வயல் - என்னிடம் இருக்கிறது. எப்போதோ வாங்கியவுடன் படித்த நாவல்.
ஒட்டடைக்குச்சி ஜோக் ரசித்தேன்.
வெண்காட்டுக்கு மறுபடியும்பிஅந்த நாள் வாழ்த்துகளை இங்கும் சொல்லிக்கொள்கிறேன்.
முன்பு நிறைய புத்தகங்கள் படிக்க முடிந்தது. இப்போது படிக்க இயலவில்லை. மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காற்று அடிப்பதால் தூசி நிறைய வருது என்று சொன்னேன்.//
பதிலளிநீக்குஉங்க ஊரிலுமா? இங்குதான் என்று நினைத்தேன். பங்களூரில் ஹையோ தூசி என்றில்லை புழுதி போல மணலும் சேர்ந்து வந்து வீட்டினுள் கொட்டுகிறது. அப்போதுதான் பெருக்கித் துடைத்திருப்பேன். அடுத்த 10 வது நிமிடம் காலில் நற நற என்று மணல் அகப்படும்.
வீடு க்ரவுன்ட் ஃப்ளோர் இத்தனைக்கும் ஜன்னல் எல்லாம் கொசு வலைத் தட்டி போட்டிருக்காங்க ஓனர். அப்படியும் வருது.
பணி செய்யும் இடத்தில் இரண்டாவது மாடி அங்கும் மொபைலை எடுத்து வெளியில் வைத்த உடன் அடுத்து ஒரு லேயர் ஜன்னல் வழி தூசி வந்து படிந்திருக்கும். சென்னை வீட்டில் இப்படி வந்ததில்லை.
ஒட்டடைக்குச்சி// ஹா ஹ ஹா..ஹா...நான் நாலடியார்! பெரிய ஸ்டூல் போட்டாத்தான் ஃபேனே எட்டும்!!! ஹா ஹா ஹாஹ் ஆ
கீதா
தூசி - இங்கே நிறையவே! அதுவும் ஆந்தி அடித்தால் வீடு நிறைய குப்பை! அதனால் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்க வேண்டியிருக்கும் - அப்படியும் குப்பை வந்து விடுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
வெங்கட்ஜி இளைத்திருப்பது போல் இருக்கு!
பதிலளிநீக்குகாமதேனுவின் முத்தம், ஆனந்த வயல் குறித்துக் கொண்டுள்ளேன் உங்கள் வாசிப்பு அபாரம் ஆதி!
திருச்சி மாநகராட்சி நிறைய நல்ல பணிகளை மேற்கொள்கிறது நல்ல விஷயம். குப்பை பிரித்தலும் அதே.
புதிய குடித்தனம் ரசித்தேன்
கீதா
//வெங்கட்ஜி இளைத்திருப்பது போல இருக்கு!// ஆஹா மகிழ்ச்சி. எடை குறைக்க எவ்வளவு நடக்க வேண்டியிருக்கிறது - ஆனாலும் குறைவேனா என அடம் பிடிக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!..
பதிலளிநீக்குஇன்றைய நாள் மட்டுமல்ல...
எல்லா நாட்களும் இனிதான நாட்களாக இருக்கட்டும்!...
தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மற்றும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குவெங்கட் - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதம்பம் ரசித்தேன். எழுத்துப் பிழைகள் நாவலின் தரத்தைக் குறைத்துவிடும்.
எழுத்துப் பிழைகள் நாவலின் தரத்தைக் குறைத்து விடும் - உண்மை தான். படிக்கவும் பிடிக்காமல் போகும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!
நீக்குகதம்பம் அருமை வெங்கட்ஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் எமது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குகதம்பம் அருமை.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட் அண்ணா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே குமார்.
நீக்குஇனிய வாழ்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குகதம்பம் ரசனை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குBelated birthday wishes to Venkat. கதம்பம் மணக்கிறது. பாலகுமாரனுக்கு ஜூலை ஐந்தாம் தேதிதான் பிறந்த நாள். அன்றுதான் பானுமதி வெங்கடேஸ்வரனுக்கும் பிறந்த நாள்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வெங்கட்டுக்கு! பாலகுமாரனுக்கு இல்லை! :) ஆனால் அது போல் புரிஞ்சுக்கறாப்போல் வந்திருக்கு! முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகள் பானுமதி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.
நீக்குஆஹா உங்களுக்கு ஜூலை ஐந்தாம் தேதி தான் பிறந்த நாளா? வாழ்த்துகள் மா...
முதல் வரியிலேயே வாழ்த்துச் சொல்லி இருக்காங்களே கீதாம்மா... அவர்களுக்கும் பாலகுமாரனுக்கும் ஜூலை 5 பிறந்த நாள் என்பதை கூடுதல் தகவலாகச் சொல்லி இருக்கிறார்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவின் விஷயங்கள் முகநூலிலும் பார்த்தேன். நரசிம்மாவின் புதிய நாவல்களை வாய்ப்புக் கிடைத்தால் வாசிக்கணும்! பார்க்கலாம்! இப்போல்லாம் புத்தக வாசிப்பே குறைந்து விட்டது! மறுபடியும் பொன்னியின் செல்வனை எடுத்தால் கொஞ்சம் சுறுசுறுப்பு வரும்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபுத்தக வாசிப்பு எனக்கும் குறைந்திருக்கிறது. சமீப நாட்களாக மீண்டும் சில புத்தகங்களை - மின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன் கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட்ஜி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (தாமதமான!)
பதிலளிநீக்குபதிவில் சொல்லப்பட்ட அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.
நீக்குகாமதேனுவின் முத்தம் புதிய அறிமுகம் ..வாசிக்க வேண்டும் ..
பதிலளிநீக்குஆனந்த வயல் இருக்கிறது ..ஏனோ இன்னும் வாசிக்க வில்லை ..
வெங்கட் சார் க்கு எனது வாழ்த்துக்களும் ..தாமதம் ஆனால் என்ன வாழ்த்து தானே முக்கியம் ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு