அரக்கு
பள்ளத்தாக்கு – பகுதி 9
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop
Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...
சரக்கு இரயிலும், பாசஞ்சரும்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...
காலை
ஏழு மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் K K Line – பாசாஞ்சர், இடையில் இருக்கும்
எல்லா இரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கி விட்டும் தான்
தொடர்ந்தது. பாசஞ்சர் இரயிலில் பயணிப்பது கொஞ்சம் அலாதியான விஷயம். பல விதமான மனிதர்கள்,
காட்சிகள், இரயிலை நம்பியே இருக்கும் விற்பனையாளர்கள், இரயிலில் போகும் நபர்களைப் பார்த்து
ஏங்கி கை அசைக்கும் கிராமத்து சிறுவர்கள் என ஒவ்வொன்றும் இரசிக்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு
நிலையத்திலும் நின்று செல்கிறதே, எவ்வளவு நேரமா இப்படியே போகும், வேகமா போனா என்ன என்று
யோசிப்பவர்களுக்கு இந்த பாசஞ்சர் பயணங்கள்
சரி வராது! ஆனால் இப்படி நின்று நின்று பயணிப்பதும் ஒரு சுகம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு
ஜாலி தான்!