இத்தொடரின் சென்ற பகுதியான மஹா
கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் மற்றும் ராமர் பதிவினை இப்படிச் சொல்லி
முடித்திருந்தேன்.
என்ன நண்பர்களே
பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப்
பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை
மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த
பதிவில் சொல்கிறேன். சரியா?
யோசித்து வைத்திருப்பீர்கள்
என நினைக்கிறேன்! அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச்
செல்ல வேண்டும்! இல்லையெனில் கீழுள்ள விஷயத்தினைப் படித்து விடுங்களேன்.
மன் காமேஷ்வர் மந்திர்
யமுனைக் கரையோரமாகவே
வரும்போது உங்களுக்குத் தெரியும் இன்னுமொரு இடம் தான் நீங்கள் மேலே பார்க்கும்
மன்காமேஷ்வர் மந்திர். இந்தக் கோவிலில்
வழிபட்டால் நீங்கள் நினைக்கும் நல்ல விஷயங்கள் நடக்குமாம். யமுனையில் படகில் சென்று
கொண்டிருந்ததால் நாங்கள் அங்கிருந்து பார்த்து விட்டோம். மனதில் என்ன நினைத்தேன்!
:) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை! நமக்கு என்ன தர
வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!
எருமைக் குளியல்!
நாங்கள் குளித்து விட்டு
படகில் வந்து கொண்டிருந்தபோது 15-20 எருமைகளும் “இவங்களே குளிக்கறாங்க! நாம ஏன்
குளிக்கக் கூடாது?” என்ற
எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன! அவற்றை ஓட்டிக்
கொண்ட மனிதர் கரையோரமாகவே நடந்து வந்தார்! அவருக்கு குளிப்பது பிடிக்காது போல!
இல்லை ”எருமையோட
எருமையா குளிக்கறான் பாருன்னு” யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா
தெரியல!
தேங்கா-மாங்கா பட்டாணி
சுண்டலை நினைவு படுத்துகிறதோ!
கரையில் இறங்கி முந்தைய
பதிவில் சொன்னது போல படகோட்டிக்கு கூலியைக் கொடுத்து விட்டு கொஞ்சம் நடந்து
முக்கிய சாலைக்கு வந்தோம். அங்கே வெளியே சுடச் சுட ”சன்னா சுண்டல்” – தக்காளி, வெங்காயம்,
கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு விற்றுக்
கொண்டிருந்தார். நிறைய முளை விட்டிருந்தது பார்த்தால் பழசாக இருக்குமோ என்ற ஒரு
பயம் நெஞ்சில். பக்கத்திலேயே கொய்யாப் பழம் விற்க, அதை வாங்கி உண்டபடியே நடக்க
ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த வேணி மாதவ் கோவிலை
அடைந்தோம்.
மட்டி!
வரும் வழியில் ஒரு சிறிய
வீடு. வீட்டு வாசலிலேயே விறகு அடுப்பு. அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலி. எண்ணை
நிரம்பியிருக்கிறது. சுடச் சுட இருப்பது அதிலிருந்து வரும் ஆவியிலேயே தெரிகிறது.
அப்படி என்ன தான் இங்கே பொரித்து எடுக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டிப்
பார்த்தார்கள் கூட வந்தவர்கள் [நானும் தான்!] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி
[அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம்! மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம்,
உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக
சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள்.
அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக..... உடனே 10
மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். ”நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல
காட்டினீங்களா?” அப்படின்னு
யாரும் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க! அதனால தான் அந்த
மட்டியோட படத்தை போட்டு இருக்கேன்! :)
சரி சரி
எல்லாருக்கும் பசி வந்துருக்கும்....
அதனால என்ன திட்டாம, ஒழுங்கா சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ள நான் இந்த
தொடரோட அடுத்த பகுதிய எழுதி முடிச்சுடறேன்...
மீண்டும் அடுத்த
வாரம் திங்கள் கிழமை தொடரின் அடுத்த பகுதி மற்றும் கடைசி பகுதியில் சந்திக்கும்
வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.