வியாழன், 30 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா?

ஹனிமூன் தேசம் – பகுதி 8

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

தங்குமிடத்திலிருந்து பனிபடர்ந்த மலைகளின் தோற்றம்

புதன், 29 மார்ச், 2017

சாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with everything!


 ஆலு-குந்த்ரு சப்ஜி!
லாலு பிரசாத் யாதவ் – இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் அவசியமில்லை – பீஹார் மாநிலத்தின் முதல்வராகவும், இந்திய அரசின் ரயில்வே துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் பேசும் போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல உண்டு! எதைச் சொல்ல, எதை விட…. இருந்தாலும் இங்கே ஒன்றே ஒன்று மட்டும் - “Jab tak samosa mein rahega aalu, Bihar mein rahega Lalu” – இதன் அர்த்தம் “சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பீஹாரில் லாலு இருப்பான்!” பீஹார் மக்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைவராலும் மறக்கமுடியாத ஒரு அரசியல்வாதி லாலு! இப்பதிவில் பார்க்கப் போவது லாலுவைப் பற்றி அல்ல!

செவ்வாய், 28 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு ஜீரா மற்றும் சில!


ஹனிமூன் தேசம் – பகுதி 7

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


உணவகத்திலிருந்து பனிபடர்ந்த மலைகள்...

திங்கள், 27 மார்ச், 2017

என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவாணன்


சிறுகதைகள் – பெரிய பெரிய விஷயங்களைக் கூட சில பக்கங்களில் சொல்லி விடக்கூடிய வித்தை சிலருக்கு மட்டுமே கைகூடி வரும். நாவல், ஒரு பக்கக் கதை, ஒரு பாரா கதை என பலவும் இருந்தாலும், சொல்ல வரும் விஷயத்தினை சில பக்கங்களில் சிறுகதையாகச் சொல்வதென்பது ஒரு கலை! தலைநகர் வந்த பிறகு தமிழ் சிறுகதைகள் மட்டுமல்லாது வேறு மொழி சிறுகதைகளும், குறிப்பாக வட இந்திய சிறுகதைகள் படிப்பது எனக்கு ஒரு பொழுது போக்காக இருந்தது. அதுவும் ஹிந்தி எழுத, படிக்கக் கற்றுக் கொண்ட பிறகு ஹிந்தியில் சிறுகதைகள் படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்களாக இருந்தாலும் சரி, மாத இதழாக இருந்தாலும் சரி, முதலில் படிப்பது சிறுகதையாகத் தான் இருக்கும்.


ஞாயிறு, 26 மார்ச், 2017

நாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்


கடற்கரை என்றாலே நம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தானே. எத்தனை முறை கரைக்கு வந்து திரும்பும் இந்த அலைகள்…. அலுக்கவே அலுக்காதோ இந்த அலைகளுக்கு?  அலுக்காமல் வந்து திரும்பும் அலைகளை அலுக்காமல் பார்க்க எனக்கும் பிடிக்கும்… ரொம்ப நேரம் உப்புக் காற்றில் நிற்கக் கூடாது என்று சொல்வார்களே என்று அங்கிருந்து அகல மனதில்லாமல் தான் நகர்வேன்…. 


சனி, 25 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர விடாத பைரவர்


ஹனிமூன் தேசம் – பகுதி 6

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


பெண்களுக்கான தொப்பிகள் - மஃப்ளருடன் சேர்ந்து....

வெள்ளி, 24 மார்ச், 2017

பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு!



முகப்புத்தகத்தில் நான் - 14

பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு - 1



ஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை


இந்த வார செய்தி:

காலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி



புதன், 22 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைகள்

ஹனிமூன் தேசம் – பகுதி 5

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


கிடுகிடு பள்ளத்தில் படகை தடாலென்று இறக்கும்போது...

செவ்வாய், 21 மார்ச், 2017

சின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு



அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு அலாதியானது.  எப்போதுமே அவர்களுக்கிடையேயான பாசத்தினை, அன்பினை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடிவதில்லை. என்னவள் எப்போதும் சொல்வதுண்டு, ”ரோஷ்ணி சமயங்களில் நான் சொல்வதைக் கேட்பதில்லை. கேட்டால் எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள், இன்னிக்கு இப்படிச் சொன்னாள், நேற்று இப்படிச் சொன்னாள்” என்று எதையாவது கோபத்துடன் சொல்லும்போது, மகள் சொன்ன பதிலில் சந்தோஷித்து சிரித்து விடுவேன் – என்னவளின் கோபம் பற்றிய கவலைக் கொள்ளாது! பல சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது.

திங்கள், 20 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….


ஹனிமூன் தேசம் – பகுதி 4

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பியாஸ் நதியில் ராஃப்டிங்.....

சனி, 18 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….


ஹனிமூன் தேசம் – பகுதி 3

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!



மலைகளுக்கு இடையே அமைதியாய் ஓடும் பியாஸ்...

வியாழன், 16 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி


ஹனிமூன் தேசம் – பகுதி 2

தொடரின் முதலாம் பகுதி ஹனிமூன் தேசம்– பயணத் தொடர் படிக்க தலைப்பில் சுட்டலாமே!

இலையுதிர் காலம்....  ஆனாலும் மீண்டும் துளிர்த்துவிடும் இந்த மரத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.....

புதன், 15 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – பயணத் தொடர்



சில்லென்று ஒரு பயணம் போகலாமா.....

 வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்!

ஏழு சகோதரிகள் பயணத் தொடரில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வந்த பயணம் பற்றி எழுதிய நான் இப்போது இந்த ஹனிமூன் தேசம் தொடரில் எழுதப் போவது ஒரு வட மாநிலத்தில் உள்ள இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள் பற்றி.  ஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்த உடனேயே இந்தத் தொடரை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம். அதனால் தான் பயணங்கள் முடிவதில்லை – அடுத்த பயணம் போகலாமா? என்ற பதிவு எழுதி இருந்தேன்.

செவ்வாய், 14 மார்ச், 2017

சாப்பிட வாங்க – ராதா வல்லபி


ராதா Bபல்லபி

இந்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் ஒரு பெங்காலி உணவு பார்க்கலாலாமா… இந்த உணவின் பெயர் ராதா வல்லபி! ஏதோ பெண் பெயராக இருக்கே என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு ஒரு புன்னகை பரிசு! நான் வல்லபி என எழுதி இருந்தாலும் பெங்காலிகள் இதைப் படிப்பது Bபல்லபி! என்று தான் – அவர்களுக்கு ”வ”, ”வரலாம் வா, வரலாம் வா” என்றாலும் வராது! வ எல்லாமே Bப தான்! வெங்கட் – Bபெங்கட்! மாதிரி வல்லபி – Bபல்லபி! சரி அது என்ன ராதா Bபல்லபின்னு பார்க்கலாமா….

திங்கள், 13 மார்ச், 2017

ஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….



மதுராவை அடுத்த பிருந்தாவனத்தில் ஒரு ஹோலி கொண்டாட்டம்.....

இன்றைக்கு ஹோலி பண்டிகை. வட இந்தியா முழுவதுமே இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தில் இருந்தவரை கொண்டாடியதில்லை என்றாலும் தில்லி வந்த பிறகு கொண்டாடியதுண்டு. நண்பர்கள் பலரும் குடும்பத்துடன் எனது வீட்டிற்கு வர, எங்கள் வீட்டு மொட்டை மாடியில், ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகள் தூவி ஹோலி விளையாடி இருக்கிறோம். கலர் பொடிகள் தூவிய முகம்/வண்ணமயமான உடைகளோடு தெருத் தெருவாக சுற்றியிருக்கிறேன்.  இப்போதெல்லாம் ஹோலி கொண்டாடுவதில்லை.

ஞாயிறு, 12 மார்ச், 2017

சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்!


சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும் வந்தார்களா? என்று கேள்வி கேட்கக் கூடாது… அவர்கள் நேரில் வந்தார்களா, எந்த உருவத்தில் வந்தார்கள் என்று கேள்வி கேட்டு நேரத்தை எதற்கு வீணாக்குவது! மிகவும் சுலபமாக, எந்த வடிவத்திலும், எப்பொருளிலும் கலைஞர்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் பிள்ளையார் பொம்மை. பிள்ளையாரை கார் ஓட்டச் செய்யலாம், கிரிக்கெட் விளையாட வைக்கலாம், எப்படிச் செய்தாலும் அவர் ஒன்றும் கோபிக்கப் போவதில்லை! 

சனி, 11 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா?



ஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்ததில் நண்பர்கள் சிலருக்கு வருத்தம் என எழுதி இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பது பிடிக்கும் என்றாலும், தொடர்ந்து பயணிப்பதில் சில கஷ்டங்கள் உண்டு. ஒன்று விடுமுறை கிடைப்பதில்லை.  இன்னுமொன்று தொடர்ந்து பயணம் செய்ய போதிய சேமிப்பும் வேண்டும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! அதனால் மூன்று நான்கு மாத இடைவெளியில் சில பயணங்கள் அமையும்படி பார்த்துக் கொள்வது வழக்கம். 

வெள்ளி, 10 மார்ச், 2017

ஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – கழுதை இழுத்த கார்…

இந்த வார புகைப்படம்:

இந்த பைக்ல ஒரு ரவுண்டு போலாம் வாரீகளா?


இந்த வார காணொளி:

ஒவ்வொரு முறை உணவை வீணாக்கும்போதும் இந்த காணொளியை நினைவு கொள்ளுங்கள். விவசாயின் உழைப்பில் உருவாகும் உணவை வீணாக்க உங்களுக்கு உரிமை இல்லை….


இந்த வார குறுஞ்செய்தி:

ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு. அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு!

இந்த வார முகப்புத்தக இற்றை:

இட்லிக்கு நாலு விதமான சட்னி கிடைப்பது வரம்…..
ஆனால் அது ஃப்ரிட்ஜிலிருந்து கிடைப்பது சாபம்!

இந்த வார WhatsApp தகவல்:



Skoda Octavia – 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் – இரண்டு வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை – கார் விற்பனை செய்யும் நிறுவனம் பிரச்சனைகளைத் தீர்க்காததால் இரண்டு கழுதைகளை வைத்து காரை இழுக்க வைத்திருக்கிறார் – இது நடந்தது லுதியானாவில்! வித்தியாசமாய் ஒரு போராட்டம்!


ராஜா காது, கழுதை காது:

தலைநகரின் ஒரு பள்ளியின் வெளியே – தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் பெற்றோர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம்…. தங்கள் மகனின் பிறந்த நாளைச் சொல்லக் கேட்க, இரண்டு பேருக்கும் ஒழுங்கான தேதி நினைவில் இல்லை! – தங்கள் மகனின் பிறந்த நாள் நினைவில் வைத்துக் கொள்ளவே இல்லையே என இருவருக்கும் வாக்குவாதம்! ‘நீதானே பெற்றுக் கொண்டாய், உனக்கு நினைவில் இருக்க வேண்டாமா….” என கணவன் கேட்க, “ஏன் உனக்கும் தானே பிள்ளை இவன், உனக்கு நினைவிலிருக்க வேண்டாமா” என மனைவி கேட்க, பள்ளியின் வாசல் அருகே இருந்த காவலாளி, Birth Certificate-ல இருக்கும் பார்த்து சொல்லுங்கடே….” 

இனிதே முடிந்தது விவாதம்! நல்ல அம்மா, நல்ல அப்பா!

இந்த நாள் இனிய நாள்:

மகளிர் தினக் கொண்டாட்டங்கள் அதிகமாக இல்லாத சில வருடங்களுக்கு முன்னர் இதே மகளிர் தின நாளில் [8-ஆம் தேதி] தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாய் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்த மூன்றாம் நாள் அதாவது 10-ஆம் தேதி என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள துணையாக வர நிச்சயிக்கப்பட்ட நாள்! நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன…..

பொதுவாக இது மாதிரி முக்கியமான நாட்கள் ஆண்களுக்கு நினைவில் இருப்பதில்லை என்ற குறை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. என் மனைவிக்கும்! இந்த முறை நினைவில் வர இங்கேயே எழுதிவிட்டேன்! [ஆனால் 8-ஆம் தேதி அன்று சுத்தமாக நினைவில் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்!].

இந்த வார ரசித்த பாடல்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாடல் பார்க்க/கேட்க வாய்த்தது.  அந்தப் பாடல், “கண்ணம்மா, கண்ணம்மா” என்ற பாடல்.  கேட்ட முதல் முறையே ஏனோ பிடித்தது.  இதோ நீங்களும் கேட்க....


படித்ததில் பிடித்தது:

பயணங்கள்....

பேருந்துப் பயணங்கள் சுகமானவைதான்
எத்தனை நெரிசலானாலும்!

பரிச்சயமில்லா குழந்தைகளின்
பொய் பூசாத புன்னகைகள்…

விரோதம் கலந்திடாத
புதிய மனிதப் பார்வைகள்…

தர்மவானாய், துரையாய்…
பிச்சையளித்த நொடியில் கிடைக்கும்
பதவி உயர்வுகள்….

ஜன்னலோர இருக்கை கிடைத்தால்
முகத்தை வருடும் இலவசக் காற்று….

சுகமானவைதான்
சிறிது நேரமேயானாலும்
பயணங்கள்….
சிரமமான நீண்ட வாழ்வைக்காட்டிலும்!

-    லோகமாதேவி, பொள்ளாச்சி…..

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 9 மார்ச், 2017

ஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 103

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

அடுத்த நாள் காலை எனக்கு தில்லி செல்லும் விமானம் 07.00 மணிக்கு, திருவனந்தபுரம் செல்லும் நண்பர்களுக்கான விமானம் புறப்படுவது 08.00 மணிக்கு. அனைவரும் ஒன்றாகவே விமான நிலையம் சென்று சேர்ந்துவிடுவோம் என தங்குமிடத்திலிருந்து விமான நிலையம் செல்ல 04.30 மணிக்கு வண்டி வரச் சொல்லி இருந்தோம். புறப்பட்டு தயாராக இருக்க, வண்டியும் வந்தது. பதினைந்து நிமிடத்தில் விமான நிலையத்தின் வாசலில் இறக்கி விட்டார் வாகன ஓட்டி.  பாதுகாப்பு சோதனைகள் முடிந்து உள்ளே நுழைந்து ஏர் இந்தியா சிப்பந்தி இருக்கும் இடத்திற்குச் சென்றதும் அந்தப் பெண்மணி சொன்னது, உங்கள் விமானத்தின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது – 08.45 மணிக்கு தான்!

அம்மாடி, இதை முன்னாடியே அலைபேசி மூலம் சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் தூங்கி இருப்போமே என அவரிடம் சொல்ல, ஒரு பொய் புன்னகையை வீசினார் – பொய்யான புன்னகை என்று தெரிந்தால் கொஞ்சம் பயமும், அதே சமயத்தில் கோபமும் வரத்தான் செய்கிறது! வேறு வழியில்லை. நண்பர்களும் அவர்களுக்கான Boarding Pass வாங்கிக் கொண்டு வர, விரிவான பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தினுள்ளே அமர்ந்து பயணம் பற்றிய குறிப்புகளையும், எங்கள் அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம்.



இந்தப் பயணத்தில், என்னைத் தவிர கேரள நண்பர்கள் பிரமோத், சுரேஷ், சசிகுமார் மற்றும் நசீர் ஆகியோரும் இருந்தார்கள். அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது இன்னுமொரு நண்பர் வின்ஸெண்ட்-உம் சேர்ந்து கொண்டார். மொத்தம் பதினைந்து நாட்கள் பயணம். நிறைய இடங்கள், நிறைய பயணங்கள் என மொத்தம் பதினைந்து நாட்களும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. நான் செய்த பயணங்களிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் பயணித்தது இந்த பயணத்தில் தான்.  பயணித்த தொலைவு எவ்வளவு என்ற கணக்கு பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது இப்போது!



விமான வழி, தரை வழி, ரயில் மார்க்கம் யானைச் சவாரி, ஜீப் சவாரி, பேருந்துப் பயணம் என பல வழிகளில் பயணித்த ஒரு பயணம் இது. ஹெலிகாப்டர் பயணமும் திட்டமிட்டிருந்தோம் என்றாலும், தட்பவெட்ப நிலை காரணமாக கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் வாய்க்கவில்லை. வித்தியாசமான மனிதர்கள், இரண்டு நாட்டு எல்லைகள் – சீனா மற்றும் பங்க்ளாதேஷ் எல்லைகளும் பார்க்க முடிந்தது இப்பயணத்தில் தான். பஞ்சாப் மாநிலத்தின் வாகாவில் பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருந்தாலும் இந்த இரண்டு எல்லைகளில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை.

வெவ்வேறு விதமான தட்பவெப்பம், தவாங் [அருணாச்சலப் பிரதேசம்] பகுதியில் பனிப்பொழிவு என்றால், சில இடங்களில் மிதமான குளிர், சில இடங்களில் மழை, வெயில் என மாற்றி மாற்றி அனுபவம் கிடைத்தது. வித்தியாசமான உணவு [மோமோஸ்], சைவ உணவிற்கான தேடல், என கிடைத்த அனுபவங்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  மொத்தம் பதினைந்து நாட்கள் என்பதால் தொடர்ந்து வெளியே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தாலும், யாருக்கும் உடல் நலக் குறைவு ஏற்படாமல் இருந்ததும் நல்ல விஷயம்.

பயணம் நமக்கு பல பாடங்களை, அனுபவங்களைத் தருகிறது என்றாலும் இப்படித் தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்யும் போது உடல் நலக் குறைவு ஏற்படாமல் பயணிப்பது முக்கியம். இந்தப் பயணத்தில் எங்களில் யாருக்குமே பிரச்சனை ஏற்படவில்லை என்பதில் மகிழ்ச்சி.

சரி கொல்கத்தா விமான நிலையத்தில் காத்திருந்த போது பேசியதை இங்கேயும் பகிர்ந்து கொண்டு விட்டேன். நண்பர்களுக்கு விமானத்திற்கு வர அழைப்பு வர அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.  அதற்குப் பிறகு தில்லி புறப்படும் விமானம் பற்றிய அறிவிப்பு வர நானும் விமானம் நோக்கிப் புறப்பட்டேன். கொல்கத்தாவிலிருந்து தில்லி வர சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம்.  இந்த விமானப் பயணத்தில் பெரிதாக அனுபவங்கள் இல்லை. பயணம் முடிந்து விட்டதே என்ற எண்ணம் மனதில் வந்தது தவிர, அடுத்த நாள் முதல் மீண்டும் அலுவலகம் சென்று வேலை பார்க்க வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது.  அது தவிர, பதினைந்து நாட்களாக பூட்டி இருக்கும் வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது!

சரி இந்தப் பதினைந்து நாள் பயணத்திற்கு எவ்வளவு செலவு ஆனது என்று யாரும் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன். ஒரு சிலர் ஊர்களில் அரசுத் துறையின் தங்குமிடங்களில் குறைந்த வாடகையில் தங்கியதால் எங்களுக்குச் செலவு குறைந்தது. ஆனாலும், போக்குவரத்து, உணவு, தங்குமிட வாடகை என அனைத்தும் சேர்த்தால், ஒருவருக்கு நாளொன்றுக்கு, சராசரியாக இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரை செலவு ஆனது.  இதைத் தவிர சொந்த செலவுகளும் இருக்கலாம்.  மொத்தமாக ஒருவருக்கான செலவு சுமார் 36000/- ரூபாய். தனியார் தங்குமிடங்களில் தங்கி இருந்தால் இன்னும் அதிகமாக ஆகியிருக்கலாம்.

கொஞ்சம் செலவு அதிகம் என்று சொன்னாலும், இது போன்ற பயணங்களில் கிடைக்கும் அனுபவங்களுக்காகவும், தொடர்ந்து செய்யும் வேலைகளிலிருந்து கொஞ்சம் மாற்றம் வேண்டியும் பயணிப்பது நல்லது. 

இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள், எடுத்த புகைப்படங்கள் என பெரும்பாலானவற்றை உங்களுடன் இந்தத் தொடரின் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  தொடரின் மொத்த பகுதிகள் [இப்பகுதியையும் சேர்த்து] 103! அனைத்து பகுதிகளுக்குமான சுட்டி, பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது போல வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

தொடரின் மூலம் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்பயணத் தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன். 

ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 8 மார்ச், 2017

பெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….


பெண்மை போற்றுதும்….



இன்று சர்வதேச மகளிர் தினம். இணையம், ஊடகங்கள் என எங்கு பார்த்தாலும் மகளிர் தின வாழ்த்துகளும், கொண்டாட்டங்களும்….. மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்…

ஒரே ஒரு நாள் மட்டுமே மகளிர் தினம் கொண்டாடி விட்டால் போதும் என்று தோன்றவில்லை. சிலர் மகளிர் தினமாகக் கொண்டாடாமல், மகளிர் மாதம் என மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள், சிறப்பு நிகழ்வுகள் நடத்துகிறார்கள். மீதமுள்ள பதினோறு மாதங்களும் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதல்ல….. எல்லா நாளிலும் பெண்களைப் போற்றுவோம். 

என்று ஒரு பெண் நடு இரவில் பயமின்றி தனியாக நடந்து போக முடிகிறதோ அன்று தான் நமக்கு சுதந்திரம் என்று மகாத்மா சொன்ன சுதந்திரம் கிடைத்து விட்டதா என்றால்…. நடு இரவினை விடுங்கள், பட்டப் பகலில் கூட பயமின்றி நடக்க முடிவதில்லை. கண்களாலேயே கற்பழிக்கும் கூட்டங்கள் இங்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை தான் – குறிப்பாக வட இந்தியாவில்.  எத்தனை நிர்பயாக்கள் இங்கே…..

சின்னக் குழந்தைகளைக் கூட சிலர் விட்டு வைப்பதில்லை. பச்சிளம் சிட்டு பாவம் என்ன செய்தது…. கிழவிகளைக் கூட விடுவதில்லை சிலர். இச்சையைத் தீர்க்கும் எந்திரம் அல்ல பெண்கள் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் இந்த காமுகர்கள்….

வருடா வருடம் ஒரே ஒரு நாள் மட்டும் பெண்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டால் தீரப் போவதில்லை பெண்மைக்கு வரும் துயரங்கள். பெண்களை மதிக்கும் உணர்வை ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்களுக்குச் சிறு வயது முதலே சொல்லித் தர வேண்டும். காமம் கொள்வதற்கு நேரம் வரும், அதற்கெனவே சமயம் வரும் என்பதையும் சொல்லித் தரவேண்டும். பெண்மையை போதைப் பொருளாகவே காட்டும் சினிமாவும், ஊடகங்களும் கொஞ்சமாவது மாற வேண்டும். 

இந்த நாளில் மட்டுமல்லாது வரும் எல்லா நாட்களிலும் பெண்மையைப் போற்றுவோம்…..  நேற்று பார்த்த ஒரு குறும்படம், இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நீங்களும் பாருங்களேன்….
  

என்னைப் பற்றி நான்….

தலைப்பில் சொன்ன இரண்டாம் விஷயத்திற்கு வருவோம்…..



மனசு எனும் வலைப்பூவில் எழுதி வரும் பரிவை சே. குமார் அவர்கள் தனது தளத்தில் சக பதிவர்களிடம் கேட்டு வாங்கி “என்னைப் பற்றி நான்” என்ற தலைப்பில் பதிவுகள் வெளியிடுவதைப் பார்த்திருக்கலாம்…. இதுவரை இத்தலைப்பில் ஏழு பதிவுகள் வந்திருக்கின்றன.








[மஞ்சள் வண்ணத்தில் க்ளிக் செய்தால் பதிவரின் வலைப்பூவிற்கும், பச்சை வண்ணத்தில் க்ளிக் செய்தால் “மனசு” தளத்தில் வெளியான “என்னைப் பற்றி நான்” பதிவும் படிக்கலாம்….]

இந்த வரிசையில்…. அடியேனையும் களத்தில் இறக்கி இருக்கிறார் பரிவை சே. குமார்.  அவர் கேட்டபடி எழுதி அனுப்பிவிட்டேன். விரைவில் அவரது தளத்தில்…. இங்கே ஒரு சிறு முன்னோட்டம்….

நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது! கூடவே இன்னுமொன்றும்.  அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை! 
 ”எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டுஅதை உன்னிடம் சொல்வதெப்போ…..நாளை, நாளை மறுநாள்!”
 ….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறது.  மிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம் – எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்……….

மீதியை அவரது தளத்திலேயே படிக்கலாமே…..

மீண்டும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளுடன்…..

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.