இந்த வார ஃப்ரூட் சாலட் - ”லைவ் ரிலே கொஞ்சம் டிலே!” வெள்ளிக்கிழமைக்கு பதில் சனிக்கிழமையில்! :)
இந்த
வார காணொளி:
கருத்துள்ள காணொளி....
பாருங்களேன்.
இந்த வார குறுஞ்செய்தி:
உங்களுக்கு மதிப்பில்லை என நீங்கள் உணரும் தருணத்தில் மௌனமாக
இருந்திடுங்கள்….. காலப்போக்கில் உங்களின்
மௌனம் அதீத மதிப்பை அங்கே பெற்றுத் தரும்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
உதவி செய்ய கரம் பெரிதாய் இருக்கத் தேவையில்லை ! மனம் பெரிதாய் இருந்தால் போதும்
!
இந்த வார WhatsApp தகவல்:
வரவு என்பது கண்ணீர் போல.... ஒரே
இடத்துல தான் வருது....
செலவு என்பது வியர்வை போல....
எங்கிருந்தெல்லாமோ வருது.....
இந்த வார படமும் கவிதையும்:
கம்பீரமாய் அமர்ந்து சிரிக்கிறார்
மாப்பிள்ளை
கல்யாணமான மகிழ்வில்.
மணப்பெண்ணின் கவலையெல்லாம்
அன்றைய தொலைக்காட்சித் தொடர்நாடகம்
என்னவாகியிருக்கும் என்பதில் தான்.
நிலாமகள், நெய்வேலி.
குறிப்பு: புகைப்படக் கவிதைகள்
எழுதச் சொல்லிக் கேட்டதற்கு, வந்த கவிதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அனுப்ப விருப்பமிருப்பவர்கள் அனுப்பலாம்….
இந்த வார புகைப்படம்:
சூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த புகைப்படம்.... என்ன ஒரு ஒய்யாரப் படுக்கை!
படித்ததில் பிடித்தது:
நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
நீ . . .நீயாக இரு !
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார்
. . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அனைத்தும் அருமை..
பதிலளிநீக்குஅதிலும் அந்தக் குழந்தை - நெகிழ்ச்சி..
வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஉதவி செய்ய கரம் பெரிதாய் இருக்கத் தேவையில்லை ! மனம் பெரிதாய் இருந்தால் போதும் !//
பதிலளிநீக்குஉண்மை.
அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநாம் நாமாக இருப்போம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅநைத்தையும் ரசித்துப்படித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குநீ . . .நீயாக இரு !
பதிலளிநீக்குநீ ...தீயாகவும் இரு... என்றும் சொல்லலாம் :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குஅருமை....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குஅனைத்தையும் ரசித்தேன். இற்றையையும், குறுஞ்செய்தியையும் அதிகமாய் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஒவ்வொன்றாய் ரசித்து படித்தேன் வெங்கட்!!. எல்லாமே அருமை தான்! அந்த சிறு குழந்தையின் முயற்சியும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனின் முகமும் எத்தனையோ கவிதகளை சொல்கிறது! அந்தப் புகைப்படம் எடுத்தவருக்குத்தான் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்!
பதிலளிநீக்குஅப்புறம் அந்த புத்தர் சிலைகள்! மிக அழகு!
'நீ நீயாக இரு! ' அதுவும் அருமை!!
ஆமாம்... புகைப்படம் எடுத்தவருக்கும் வாழ்த்துகள் சேரும்..
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
தாமதமாக இருந்தாலும் வழக்கம்போல அருமை. ஒய்யாரமாக படுத்திருக்கும் புத்தன்.அடடா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவழக்கம்போல் பழக்கலவை இனித்தது. அதுவும் ‘நீ நீயாக இரு’ என்ற தங்களுக்கு பிடித்த கவிதை எனக்கும் பிடித்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅனைத்தையும் ரசித்தோம் ஜி! நீ நீயாக இரு பிடித்தது! அது போல் இற்றையும், குறுஞ்செய்தியும் மிகவும் ரசித்தோம்..புகைப்படம் அழகு!!! இதற்கு முன் இட்ட கமென்ட் எங்கோ காணாமல் போய்விட்டது! அது மொபைலிலிருந்து முயற்சி செய்ததால் இருக்கலாம்..தலைமையகத்தில் அதான் சென்னையில் வீட்டில் இணையம் சரியாக இல்லை அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை...ஜி ஒவ்வொன்றாகப் படித்துக் கருத்து இடுகிறோம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஎன்னாலும் பணிச்சுமை காரணமாக அனைவருடைய பதிவுகளும் படிக்க முடிவதில்லை. சில சமயங்களில் இப்படி ஆவது இயல்புதானே...