ஏர்போர்ட்டில்
இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா
விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார்
”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான
இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.
மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019
பூக்கள் பூக்கும் தருணம்....
பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும். இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் அதாவது கடுங்குளிர் சற்றே குறைந்து மிதமான சூழலில் மலர்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற வாரத்திலிருந்தே என்னவர் அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் மலர்கள் பூத்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். காண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். இந்த மாதம் தான் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருக்கும் முகல் கார்டனிலும் மலர்களைக் காண அனுமதி வழங்குவார்கள். அங்கு சென்று வந்த பின் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
Labels:
அனுபவம்,
தில்லி,
புகைப்படங்கள்,
பொது,
மீள் பதிவு
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
என்றும் இருபத்தி எட்டு
தில்லி
வந்த
முதல்
நாள்
என்னை
அலுவலகத்திலிருந்து
கரோல்
பாக்
அழைத்துச்
சென்றவர்
பத்மா.
பத்தொன்பது
வருடங்கள்
கழிந்திருந்தாலும்,
அன்று
எப்படி
இருந்தாரோ
அப்படியே
இன்றளவும்
இருக்கிறார்.
என்
மேல்
அபரிமிதமான
அன்பை
பொழிந்து
பாசத்தைக்
கொட்டும்
ஒரு
நல்ல
உள்ளம்.
பக்த பிரகலாதனுக்கு மார்க்கண்டேயனுக்கு வயது
எப்படி
என்றும்
பதினாறோ,
அது
போலவே
பத்மாவிற்கு
இடுப்பளவு
என்றும்
இருபத்தி
எட்டு.
அவரது
உடலில்
எந்த
மாற்றமும்
இல்லை.
அவர்
கல்லூரியில்
படித்த
காலத்தில்
தைத்த
உடைகள்
இன்றும்
அவருக்கு
கச்சிதமாக
பொருந்துகிறது
என்றால்
பார்த்துக்
கொள்ளுங்களேன்!
எங்கள்
அலுவலகத்தில்
அவரைப்
பார்த்தால்
பொறாமைப்
படாதவர்களே
கிடையாது!.
நான்
அவரை
விட
சிறியவனாக
இருந்தும்,
அன்று
பென்சில்
போல
இருந்தவன்,
இன்று
தொப்பையும்
தொந்தியுமாக
காணப்படுகிறேன்.
அவரோ
"அன்று
பார்த்த
கண்ணுக்கு
அழிவில்லாமல்
அப்படியே
இருக்கிறார்".
இத்தனைக்கும்
இந்த
கால
கட்டத்தில்
பத்மாவிற்கு
திருமணம்
முடிந்து
ஒரு
குழந்தையும்
பிறந்து,
அக்குழந்தையே
இன்று
எட்டாம்
வகுப்பில்
படிக்கிறது!
. பொதுவாக
கல்யாணம்
ஆனவர்கள்
சந்தோஷத்தில்
குண்டாகி
விடுவார்கள்
என்று
சொல்வது
போல்
இல்லாமல்,
இப்போதும்
அப்படியே
இருக்கிறார்.
மற்றவர்கள்
பொறாமைப்படும்படியாக
இருப்பவர்
"உடம்பெல்லாம்
அப்படியே
இருந்து
என்ன
பண்றது?
தலயிலே
இருந்த
முடியெல்லாம்
கொட்டி
'சொட்டையாகி'
விட்டதே!"
என்று
ஒரேயடியாக
கவலைப்படும்
பத்மா
என்று
எங்களால்
செல்லமாக
அழைக்கப்படும்
பத்மநாபன் [என்னுடைய பகிர்வுகளில் ஈஸ்வரன் என்ற
பெயரில் கருத்துகள் இடுபவரும் இவரே!] அண்ணாச்சியை
என்னத்தைச்
சொல்லி
தேற்றுவது?
"அண்ணாச்சி!
இந்த
Fevicol - ஐ
தலையில்
தேய்க்க
முடியுமான்னு
ஒண்ணு
கேட்டு
சொல்லுதேளா!
நமக்கும்
தலையில
முடி
முளைச்ச
மாதிரி
ஆச்சுல்லா!"
மீண்டும்
சந்திப்போம்
வெங்கட்
புது
தில்லி.
பின் குறிப்பு: இன்று ஞாயிறு மாலை. தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் என்று என்னைத் தெரிந்தெடுத்து
கடந்த 10.10.2011 திங்கள் முதல் இன்று வரை இந்த ஏழு நாட்களில், காலையில் ஒரு புதிய
பகிர்வும், மாலையில் ஒரு மீள்பதிவும் ஆக 14 இடுகைகள் போட்டு இருக்கிறேன். இந்த வாரம் முழுவதும் என் பக்கத்திற்கு வந்து பதிவுகளைப்
படித்த, கருத்தளித்த, வாக்குகள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி வழக்கம்போல்
வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பகிர்வுகள் தொடரும்.
இந்த வார
தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்
Labels:
அனுபவம்,
தமிழ்மணம் நட்சத்திர வாரம்,
மீள் பதிவு
சனி, 15 அக்டோபர், 2011
பிரட் பக்கோடா
அதிகாலை மூன்று மணி. அழைப்பொலி கேட்க, தூக்கக் கலக்கத்துடன் கதவினை திறந்தேன். கலங்கிய கண்களுடன் வாசலில் ஒரு சிறுவன். உள்ளே அழைத்து என்ன என்று கேட்ட போது தான் எனக்கு அச்சிறுவன் யார் என்பது நினைவுக்கு வந்தது.
தனது தந்தை திடீரென மார்பு வலி வந்து இறந்து விட்டதாகவும் வீட்டிலே அவனையும் அவனது தாயையும் தவிர வேறு ஒருவரும் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினான். உடனே நான் அவனுடன் அவர்களது வீட்டிற்கு சென்று மற்ற நண்பர்களை அழைத்து ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம்.
இறந்து போனவருக்கு சுமார் 58 வயது. காலை ஒன்பது மணி வாக்கில் இறந்து போனவரின் தாயாரை தில்லியில் உள்ள அவரது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். வந்த உடன் நேராக மகனின் உடல் மீது விழுந்து கதறி அழுதது எல்லோருக்கும் வருத்தமாகவும் பதற்றமாகவும் இருந்தது.
எமன் என்னுடைய உயிரை எடுத்து இருக்கலாமே, நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்றெல்லாம் புலம்பியபடி இருந்தார். அவரை யாராலும் ஆசுவாசப்படுத்த முடியவில்லை. சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்.
மிகுந்த சிரமத்துடன்
அவரை ஒருவாறு தேற்றி, ஆக வேண்டிய வேலைகளை முடித்தோம். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு எனது வீடு சென்று குளித்து விட்டு அன்று சாயங்காலமே அடுத்த நாள் காரியத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்க்கு நானும் நண்பர் நரேஷும் சென்றோம்.
பாட்டி உட்கார்ந்து, எதிரே இருக்கும் பம்மி ஸ்வீட்சில் வாங்கிய Bread பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருந்தார். "வாடா! பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி!" என்று எங்களிடம் சொன்னார். என்ன தான் இருந்தாலும் அவருக்கும் பசி என்று ஒன்று இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு.
நட்புடன்
வெங்கட்.
இது
ஒரு மீள்பதிவு…. உண்மையில் நடந்தது… புனைவு
அல்ல…..
இந்த வார
தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்
Labels:
அனுபவம்,
தமிழ்மணம் நட்சத்திர வாரம்,
மீள் பதிவு
வெள்ளி, 14 அக்டோபர், 2011
குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.
முதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.
இந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது.
நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க,
நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் "குரங்காட்டி" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? " என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.
நட்புடன்
வெங்கட்
பின்
குறிப்பு: இது ஒரு மீள்பதிவு…
இந்த வார
தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்
Labels:
தமிழ்மணம் நட்சத்திர வாரம்,
பொது,
மீள் பதிவு



