எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 14, 2011

அதிர்ச்சி தந்த சுற்றுலாப் பயணிகள்                                                                                          
முன்பு மும்தாஜ் வந்துவிட்டால் என்ற பதிவில் நிறைய பேருடன் ஆக்ரா சென்ற அனுபவத்தைப் பற்றி  எழுதியிருந்தேன்.  இந்த பகிர்வினை அதன் தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்

ஒரு முறை இப்படித்தான் எனக்குத்  தெரிந்த ஒரு நபரிடமிருந்து ஃபிப்ரவரி மாதத்தின் கடைசியில் ஒரு கடிதம் வந்திருந்தது.  கடிதத்தின் சாராம்சம் இதுதான்…  

ஏப்ரல் 15-ஆம் தேதி குடும்பத்துடன் தில்லி வருகிறேன்.  புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லவும்.  உங்களுடனேயே தங்க முடியுமா, இல்லையெனில் வேறு ஏதாவது தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யவும்.”

நானும் அறை நண்பரும் ஒரு முழு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததால், நண்பரிடம் ஆலோசித்து விட்டுகவலை வேண்டாம், எங்களுடனேயே தங்கி விடலாம், நான் ரயில் நிலையத்திற்கு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்என்று அவருக்கு பதில் எழுதி விட்டேன்.

ஏப்ரல் 15 அன்று காலையிலேயே ரயில் நிலையத்திற்குச் சென்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தடதடத்து வருவதை காணக்  காத்திருந்தேன்.  வழமை போலவே சில நிமிடங்கள் தாமதமாய் வந்து சேர்ந்த ரயில் நிற்க, அதிலிருந்து அந்த நபர், அவரது மனைவி, மகன், மகள் சகிதம் இறங்கியதும், “வாருங்கள் போகலாம்!” என்றவாறே நகர்ந்தேன்


ஆனால் அவரோ “கொஞ்சம் இருங்க, இன்னும் கொஞ்சம் நண்பர்களும் வருகிறார்கள் எனச் சொல்ல, நானும் நின்றேன்பார்த்தால் அந்த பெட்டியில் இருந்த மீதி 68 பயணிகளில் இவருடைய நண்பர்கள் 21 பேர்!  ஒரு மினி ஊரே வந்து இறங்கியது போலிருந்தது எனக்கு!  எல்லோரும் இறங்கியவுடன் அந்த நபர், ‘வீட்டுக்குப் போகலாமா!’ என்று கேட்க, நான் மயங்கி விழாத குறை...

பின்னர் ஒரு மாதிரி சமாளித்து, “என்ன சார், நீங்க நாலு பேர் தானே வரதா எழுதியிருந்தீங்க?” என்று பரிதாபமாய் நான்  கேட்க, “நான் இங்கே  வருவது பற்றி அவர்களிடம்  சொன்னதால், எல்லாரும் என்னுடனேயே கிளம்பிட்டாங்க!” என்று சாதாரணமாய் பதில் சொல்கிறார்.  பிறகு அவரிடம் இத்தனை பேர் என் வீட்டில் தங்க இடம் இருக்காது என்பதை புரிய வைத்த பின்னர் கரோல் பாகில் இருக்கும் ஒரு தங்கும் விடுதிக்கு தொலைபேசியில் அழைத்தேன்

விசாரித்ததில் அந்த விடுதியில் இடமும் இருக்க, ஒரு பஸ்ஸில் மொத்தமாய் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அவர்களை அங்கு கொண்டு சேர்த்தேன்.  ஒரு வாரத்திற்கு மொத்தமாய் சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்து விட்டு என்னுடைய வீடு வந்து சேர்வதற்குள் என் தாவு தீர்ந்துவிட்டது.


உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இது போன்ற சிலரால், நான் என்னையே மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.  இந்த நிகழ்வுக்குப் பிறகு யாராவதுசுற்றுலாவாக தில்லி வருகிறேன்என்று சொன்னாலே, “எந்த ஹோட்டலில் தங்கப்  போறீங்க?” என்று முன் ஜாக்கிரதையாகவே கேட்டு விடுகிறேன்.

வேறு ஒரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்

வெங்கட்.

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்57 comments:

 1. >>>>>”சுற்றுலாவாக தில்லி வருகிறேன்” என்று சொன்னாலே, “எந்த ஹோட்டலில் தங்கப் போறீங்க?” என்று முன் ஜாக்கிரதையாகவே கேட்டு விடுகிறேன்.>>>>>>>>>>>ரொம்ப முன் ஜாக்கிரதை ....சார்...இப்படி தான் இருக்கணும்.....அப்புறம் இங்க இருந்து போனதுல என்ன அர்த்தம் இருக்கு. ;((((((((((((((

  ReplyDelete
 2. முன் கூட்டியே பணம் அனுப்பி விடுகிறேன்.....ராமானுஜத்தில்...ரூம் போட்டு கொடுக்கவும்...அதையாவது செய்வீங்க தானே..!!!!!!!!!

  ReplyDelete
 3. ”பொதுவாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா”

  ReplyDelete
 4. enna pannurathu avangalukku
  "Yeh Dilli Hey BHAI"
  pattri theriyadu
  Namma oor pola ninathukondu varugiraigal
  ingey ellame PURA Koondugal
  endra NIDHARSANAM vandhapinney
  PURIYUM
  ILLAYA?
  But UNGA "எந்த ஹோட்டலில் தங்கப் போறீங்க?”

  NIchayam (atleast)sila samayam
  GAYAPPADUTHUM

  -DELHI VASI

  ReplyDelete
 5. :-)
  ஹா..ஹா...நல்லா பட்டுட்டீங்க போல...

  ReplyDelete
 6. சேம் ப்ளட்.

  :( ஹோட்டல் புக்கிங் விடுங்க சகோ. வந்தவங்க ஊருக்குத் திரும்ப போகும் வரை அவங்க கூடவே எல்லா இடமும் சுத்தணும்னு நினைப்பாங்க பாருங்க. அதுல நமக்கு பைசாவும் செலவு, நேரமும் செலவு. ஆபிஸுக்கு லீவு போட்டு கூடவே இருக்க முடியுமா?? ராமோஜி ஃபிலிம் சிட்டி ஒரு நாளை மட்டும் முழுசா விழுங்காது... ஆயிரத்துக்குமேல. ஆனா கூட வர்றவங்க பர்ஸை எடுக்கவே மாட்டாங்க. அடுத்தவங்க காசில ஊரு சுத்திப்பாக்கணும்னே திட்டம் போட்டு கிளம்பற கூட்டமும் இருக்கு பாஸ்.

  ஒரு முறை உறவினர் குழு எங்களையும் எல்லா இடத்துக்கும் கூப்பிட வரமுடியாதுன்னு சொல்ல அவங்க எல்லா இடத்தையும் கேன்சல் செஞ்சிட்டு 3 நாளும் வீட்டிலேயே இருந்தாங்க!!!!!! :(((((((

  ReplyDelete
 7. 4 to 5 in தமிழ்மணம்
  2 to 3 in INDLI

  மிகவும் நகைச்சுவையான பதிவு. நன்றாக சிரித்தேன்.

  //இந்த நிகழ்வுக்குப் பிறகு யாராவது ”சுற்றுலாவாக தில்லி வருகிறேன்” என்று சொன்னாலே, “எந்த ஹோட்டலில் தங்கப் போறீங்க?” என்று முன் ஜாக்கிரதையாகவே கேட்டு விடுகிறேன்.//

  நல்ல முன்னெச்செரிக்கை நடவடிக்கை தான்.
  பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் வெங்கட்.
  I like you very much.
  vgk

  ReplyDelete
 8. “எந்த ஹோட்டலில் தங்கப் போறீங்க?” என்று முன் ஜாக்கிரதையாகவே கேட்டு விடுகிறேன்./

  முன்ஜாக்கிரதை முத்தண்ணாவுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. வாங்கன்னு வாய் நிறைய அழைக்கவே பயப்படும் காலமா இருக்கே!!!!!!

  அதுவும் புதுகைத்தென்றலின் பின்னூட்டம்......... ஹைய்யோ!!!!

  ReplyDelete
 10. "ஜில்லுன்னு ஒரு காதல்" படத்துலே சூர்யா-ஜோதிகாவைப் பார்க்க ஒரு பட்டாளமே கிளம்புமே? அதுக்கு உங்க அனுபவம் தான் இன்ஸ்பிரேஷனா? பாவம், உங்களுக்குத் தான் பெர்ஸ்பிரேஷன்! :-)

  ReplyDelete
 11. சரிதான்... ஆனா இப்ப அலைபேசி காலம் வந்தபிறகு.நொடிக்கு நொடி ரன்னிங் கமெண்டிரி கொடுத்துக் கொண்டே தான் வருவார்கள் ..சுதாரித்துக் கொள்ளலாம்...

  ReplyDelete
 12. நல்ல பதிவு.
  நல்ல அனுபவம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அய்யய்யோ அப்போ நான் வந்தாலும் வீட்டுல தங்கவைக்க மாட்டீங்களா...??

  ReplyDelete
 14. அடுத்த லீவுக்கு உங்களை நம்பி டெல்லி வரலாம்னு இருந்தேன் ம்ம்ம்ம்.....வடை போச்சே....

  ReplyDelete
 15. அந்த நண்பர் முன்பே தகவல் தந்திருக்கலாம்...?

  ReplyDelete
 16. ஸலாம் சகோ.வெங்கட் நாகராஜ்,
  இதுபோன்றவர்கள் இருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ.

  இனி இவர்களிடம் நீங்கள் இப்படி கூட பதில் சொல்லலாம்..!

  "என்னிக்கு வர்றீங்க..?"
  "வர்ற வாரம்...அன்னிக்குத்தாங்க"
  "அட.. அன்னிக்குத்தாங்க நானே சென்னை வர்றேன்..!"

  ஆனால் ஒன்று சகோ,
  இவர்களுக்காக உங்கள் அழகிய உதவும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டாம்.

  புதிய இடம், புதிய மொழி என்று தங்கள் உதவி அவசியம் தேவைப்படும் தனித்த சுற்றுலாப்பயணி யாராவது பாதிப்புக்குள்ளாவார்கள் அல்லவா..?

  ReplyDelete
 17. அடப்பாவமே.அந்த நண்பரின் ஊர் எதுவோ?

  ReplyDelete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 19. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 20. மிகச் சரி
  பெரும்பாலானவர்கள் அவர்கள் குறித்த
  சிந்தனையில் மட்டுமே உள்ளார்கள்
  அடுத்தவரின் சூழ் நிலை குறித்து
  சிந்திப்பதே இல்லை
  நீங்கள் எடுத்த முடிவும் சரியே

  ReplyDelete
 21. :))

  இடம் கொடுத்தால் மடம் பிடுங்குதல் என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 22. இதே போலத்தான் என் தோழிக்கும். அமீரகத்தில் இருக்கும் அவளுக்கு தங்கம் வாங்குகிற கும்பல் டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கும்.
  மார்ச் முடிகிற வரை அரண்டு போய் விழி பிதுங்கிவிடும் அவளுக்கு. நல்லவேளை விழித்துக் கொண்டீர்கள்.

  ReplyDelete
 23. @ அப்பாஜி: தங்களது கருத்திற்கு நன்றி. ராமானுஜம் ரூம் தானே செஞ்சுடுவோம்...

  ReplyDelete
 24. # வேங்கட ஸ்ரீனிவாசன்: அதானே... உனக்குத்தான் தெரியுமே :)))

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

  ReplyDelete
 25. :)) உண்மைதாங்க..ஊருக்குபோறேன்னு சொன்னா ரெண்டு மூணு குடும்பம் ஒன்னா சேர்ந்து வரவங்களை எனக்கும் தெரியும்..ஒவ்வொரு முறையும்.. தனித்தனியா வந்தா கவனிக்க வசதியா இருக்கும்ன்னு கெஞ்சுவேன்..

  ReplyDelete
 26. $ அனானி டெல்லி வாசி: தங்களது கருத்து உண்மைதான்... அவர்களைக் காயப்படுத்தும் என்பது புரிகிறது. ஆனால் புறாக்கூண்டில் 21 பேர் என்பது கஷ்டம் - என்னதான் நமது மனது விசாலமாக இருந்தாலும்!

  தங்களது கருத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 27. @ பட்டாபட்டி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பட்டதனால் தான் பதிவு...

  ReplyDelete
 28. # புதுகைத்தென்றல்: சேம் பிளட்... உங்களுக்கு என் கஷ்டம் புரிந்ததில் மகிழ்ச்சி... :)

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 29. $ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினைப் படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 30. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும், கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ துளசி டீச்சர்: சில சமயங்களில் இதுபோலத்தான் ஆகிவிடுகிறது என்பதைக் குறிப்பிடவே இதைப் பகிர்ந்தேன்.

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்...

  ReplyDelete
 32. @ DrPKandasamyPdD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 33. @ சேட்டைக்காரன்: //அதுக்கு உங்க அனுபவம் தான் இன்ஸ்பிரேஷனா? பாவம், உங்களுக்குத் தான் பெர்ஸ்பிரேஷன்! :-)// :))))

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.

  ReplyDelete
 34. @ பத்மநாபன்: //.நொடிக்கு நொடி ரன்னிங் கமெண்டிரி கொடுத்துக் கொண்டே தான் வருவார்கள் ..சுதாரித்துக் கொள்ளலாம்...//

  ஆமாம்... அப்போது சுதாரிக்கவும் முடியாது.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. @ ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 36. # MANO நாஞ்சில் மனோ: //அந்த நண்பர் முன்பே தகவல் தந்திருக்கலாம்...?// அதைத்தான் நானும் சொல்கிறேன். முன்பே கடிதம் மூலம் சொல்லி இருந்தால் அத்தனை பேருக்கும் வேண்டிய ஏற்பாடுகள் செய்து இருக்கலாம்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. தில்லி வரும்போது சொல்லுங்கள்.... :)

  ReplyDelete
 37. @ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. # அமுதா கிருஷ்ணா: அந்த நண்பர் யார் என்று இப்போது சொல்லி என்ன ஆகப்போகிறது :))


  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ அனானி: அன்பு அனானி நண்பரே.. உங்களது கருத்திற்கும் எனக்குச் சொன்ன யோசனைகளுக்கும் மிக்க நன்றி. வேறு என்ன சொல்வது... :)

  ReplyDelete
 40. @ ரமணி: தங்களது வருகைக்கும் என்னுடைய முடிவினை சரி என்று சொன்னதற்கும் நன்றி. நாம் உதவ நினைத்தாலும் சில சமயங்களில் நம்மால் உதவ முடியாது இல்லையா....

  தங்களது கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 41. # மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. @ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. # முத்துலெட்சுமி: உங்களது வருகைக்கும் ஒத்த கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. சூப்பர் காமெடி!! வடிவேல் ஒரு படத்துல ஒருத்தரை டீ குடிக்க கூப்பிட்ட உடனே ஒரு ஊரே பின்னாடி வந்து ஹோட்டலை துவம்சம் பண்ணின சீன் தான் ஞாபகம் வந்தது. அப்புறம் நான் கூட டில்லி வரலாம்னு இருக்கேன்!! ஸ்டேஷனுக்கு வந்துடுங்கோ!! :)) புதுகை அக்காவோட கமண்டும் பயங்கர சிரிப்பு.

  ReplyDelete
 45. பதிவைப் படிக்க ஆரம்பித்தப் பொழுது, அட இப்படி நல்ல மனுஷன் டில்லியில இருக்கும் பொழுது, நாமுதான் குடும்பத்தோடு ஒரு முறை டில்லி போயிட்டு வரலாமே என்று யோசித்தேன். சில வினாடிகளில் அந்த யோசனையை கைவிட வைத்து விட்டீர்களே...:)))))))!

  மற்றவரிடம் உதவிக் கேட்கும்போது அவர்களின் நிலையறிந்து கேட்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளது இந்தப் பதிவு.

  ReplyDelete
 46. @ சென்னை பித்தன்: தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 47. @ தக்குடு: வடிவேல்... :)

  டில்லிக்கு வரப்போறீங்களா? எப்பன்னு சொல்லுப்பா.. ஸ்டேஷனுக்கு வந்துடறேன்... எத்தனை பேர்னு முன்னாடியே சொல்லிட்டா அதுக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்துடலாம்... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 48. @ அமைதி அப்பா: //நாமுதான் குடும்பத்தோடு ஒரு முறை டில்லி போயிட்டு வரலாமே என்று யோசித்தேன். சில வினாடிகளில் அந்த யோசனையை கைவிட வைத்து விட்டீர்களே...:)))))))!//

  வாங்க நண்பரே..... முன்கூட்டியே அறிவித்தால் வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிடலாம்.... கவலைப்படேல்..

  வருபவர்களுக்கு உதவி செய்வதில் பிரச்சனையில்லை... பிரச்சனை சரியான தகவல் சொல்லாமல் வருவது தான். :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி தான் உள்ளது.

  ReplyDelete
 50. @ கோமதி அரசு: //இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி தான் உள்ளது.//

  உண்மைதான்மா..

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 51. இது மாதிரி எக்கச்சக்க அனுபவங்கள் எனக்குண்டு. வடிவேலுவிடம் சிங்கமுத்து 'இங்கே நிக்கிறவன் பூரா நம்மாளுங்க தான்..லாரி பின்னாலே நிக்குது' என்று சொல்வாரே அது போல் ரயிலே பின்னால் நிற்க நீங்கள் மலைத்து நின்ற காட்சி மனதில் ஓடுகிறது :)

  ReplyDelete
 52. @ சந்திரமோகன்: இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கிறதா? ம்ம்ம்ம்...

  தங்களது வருகைக்கும், புரிதலுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்திரமோகன்....

  ReplyDelete
 53. சில கும்பல் இப்படித்தான் நம்மளை 'இ'னா 'வா'னா
  ஆக்கிடுவாங்க.இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டு

  ReplyDelete
 54. @ ராஜி: //’இ’னா ‘வா’னா// :)))

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....