புதன், 12 அக்டோபர், 2011

டிக்ரா அணை


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 13](மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5   6   7   8   9   10   11   12 )

சென்ற பகுதியில் உங்களை அணைக்கட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா, வாருங்கள் நண்பர்களேஒரு படகு சவாரி செய்யலாம்

படகு சவாரி செய்வதற்கு முதலில் டிக்ரா அணை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லவா?  குவாலியரிலிருந்து கிளம்பிய நாங்கள் நகர எல்லை தாண்டி வெளியே வரவே 30 நிமிடத்திற்கு மேல் ஆனது.  தேசிய நெடுஞ்சாலை செல்லும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நடுநடுவே பலகைகளில்டிக்ராஎத்தனை தூரம் என்கிற விவரங்கள் இருந்தன.  ஒரு கிளை சாலையில் திரும்பிய பிறகு தான் ஆரம்பித்தது தொல்லை.

நெடுந் தொலைவு வரை ஒரு அறிவிப்புப் பலகை கூட இல்லை. ஆங்காங்கே சாலைகள் பிரிந்து செல்கிறது ஒரு வித அறிவிப்பும் இல்லாமல்.  ஒரு வழியாய் பதினைந்து இருபது நபர்களிடமாவது  வழி கேட்டு, சில சமயங்களில் தவறான வழி சொன்னாலும், தட்டுத் தடுமாறி குவாலியர்-டிக்ரா இடையிலான 23 கிலோ மீட்டர் தொலைவினை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தோம்.


பயணக் களைப்பினைப் போக்கிக்கொள்ள, மத்திய பிரதேச சுற்றுலாத் துறையின் “Wind and Waves Restaurant”-இல் குளிர்பானங்கள் அருந்திய பிறகு படகுத்துறை நோக்கி சென்றோம்.


டிக்ரா அணைக்கட்டு [Cha]சம்பல் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ளது.  மலைகளுக்கு நடுவில் இருக்கும் அழகிய ஆற்றில் இதைப் பார்க்கும்போது நன்றாக இருந்ததுஆற்றங்கரையில் ஒரு பெரிய படகினையே அலுவலகமாக செய்து வைத்திருந்தனர்

நான்கு பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும், 20 பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும் இருந்தன.  எல்லோரும் சேர்ந்து பயணம் செய்யவே விரும்பியதால், ஒரு பெரிய படகில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டோம்.   பயணம் செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப் படுத்தியது நல்லது எனத் தோன்றியது.  பல இடங்களில் இது இல்லாமல் பலியான உயிர்களின் நினைவு வந்து போனது.

விசைப்படகில் எல்லோரும் அமர்ந்து கொண்டபின் படகின் ஓட்டுனர்கள் [இரண்டு பேர்கள்] படகினை செலுத்தினர்.  அவர்கள் இருவருமே பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளவில்லைஒரு வேளை பெரிய நீச்சல்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டிருப்பார்களோ   என்னவோ?

10 நிமிடங்கள் விசைப்படகில் பயணம்.  அணைக்கட்டின் அருகே சென்று பிறகு ஆற்றின் மறு கரை அருகே சென்று ஒரு வட்டம் அடித்து சுற்றிலும் இருக்கும் மலைகளை தரிசித்துத்  திரும்பி வந்தோம்.  ஆற்றில் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாலம் இருக்கிறது.  பாலத்தின் இரு புறங்களிலும் ஆற்றுக்கு சென்று வந்ததன்  அடையாளமாக பல பிளாஸ்டிக் குப்பிகள், வறுவல் பாக்கெட் கவர்கள் என்று சகல  குப்பைகளையும்  விட்டுச் சென்றிருக்கின்றனர் வந்து சென்றவர்கள்.

படகு சவாரியை நன்கு ரசித்து, முன் சொன்ன “Wind and Waves Restaurant”-இல் மதிய உணவு முடித்து எங்களது அடுத்த இலக்கான ஷிவ்புரி செல்ல தயாரானோம்குவாலியர் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிவ்புரி. சிந்தியா ராஜாக்களின் கோடைக்கால வாசம் இந்த ஷிவ்புரியில் தானாம்

ஷிவ்புரியில் மாதவ் தேசிய பூங்கா [வனவிலங்கு சரணாலயம்], சத்ரி என்று பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன.  அடுத்தடுத்த  பகுதிகளில் அவை பற்றி எழுதுகிறேன்

குலாலியர்ஷிவ்புரி பயணம் முடிந்து மீண்டும் சந்திப்போம்..   

நட்புடன்

வெங்கட்.

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்43 கருத்துகள்:

 1. டிக்ரா அணைக்கட்டு [Cha]சம்பல் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளுக்கு நடுவில் இருக்கும் அழகிய ஆற்றில் இதைப் பார்க்கும்போது நன்றாக இருந்தது. ஆற்றங்கரையில் ஒரு பெரிய படகினையே அலுவலகமாக செய்து வைத்திருந்தனர்./

  அருமையாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான தகவல்களும் படங்களும்.
  வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

  2 to 3 in Tamilmanam
  1 to 2 in Indli

  பதிலளிநீக்கு
 3. >>>>>>>>>>பயணம்செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப்படுத்தியது நல்லது எனத் தோன்றியது. <<<<<<<<<<<<<
  நமக்கு தான் .....இந்த ஹெல்மெட் போடுவது...காரில் பெல்ட் போட்டு கொள்வது....படகு பயணத்தில் சேப் ஜாக்கெட் போட்டு கொள்வது...அவசியம் என
  இதெல்லம் தெரியுமே..:(((((((((((((((( நட்சத்திர பதிவில் ...நான்கு நன்கு வந்து விட்டது...ச்ச்ச்சச்ச்ச்ஸ் ....அப்பா...இப்பவே கண்ணை கட்டுதே...!!! தொடர்க...தொடர்ந்து வருகிறோம்......(நட்சத்திர ஆசிரியர்..அடுத்த வாரம்...தாஜ்-ல் ட்ரீட் ....சரியா !!!!!!!!!)

  பதிலளிநீக்கு
 4. ஒரு வேளை பெரிய நீச்சல்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ?//

  தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் போலும்.

  அருமையான பகிர்வு வெங்கட்.

  பதிலளிநீக்கு
 5. //பிளாஸ்டிக் குப்பிகள், வறுவல் பாக்கெட் கவர்கள்//

  நம் மக்கள் பொதுவாக க்ஷேத்ராடணம் சென்றால் எதையாவது விட்டு விட்டு வரவேண்டும் என்பதை இப்படித் தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

  படகு சவாரி பட்ங்கள் எங்கே? எடுக்கவில்லையா? அல்லது அனுமதி இல்லையா?

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...

  புது புது தகவலுடன் நட்சத்திர வாரம் களை கட்டுகிறது....

  பதிலளிநீக்கு
 7. மத்திய பிரதேசம் என்றாலே எதோ மத்தியில் உள்ள பெரிய வறண்ட மாநிலம் என்றிருந்தேன் ... உங்கள் சுற்றுலா பகிர்வுகள் அதை மாற்றிவிட்டது .. கோவில்கள் சிற்பங்கள் புராதன கலைநயம் மிக்க கட்டிடங்கள் , அணைகள் என முழுமையான சுற்றுலா சுற்றி காட்டிக்கொண்டிருக்கிறிர்கள்..நன்றியும் வாழ்த்தும் .....

  பதிலளிநீக்கு
 8. தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.,

  சுற்றுலா கட்டுரை நல்லா வந்திருக்கிறது..தொடர்கிறேன்

  நிகழ்காலத்தில் சிவா

  பதிலளிநீக்கு
 9. அருமையான தகவல்களும் படங்களும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. படங்களும் விளக்கங்களும் படிப்பவர்களையும் கூடவே கூட்டிச்செல்வதுபோல இருந்தது.

  பதிலளிநீக்கு
 11. டிக்ரா அணைக்கட்டு பற்றிய தகவல் அருமை.படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கு வெங்கட்.

  பதிலளிநீக்கு
 12. களை கட்டுது நட்சத்திர வாரம்..

  லைஃப் ஜாக்கெட்டுகளைக் கொடுத்தாலும் வாங்கி மடியில் வெச்சுக்கிட்டு பயணம் செய்யறவங்களை என்ன செய்யறது :-)))

  பதிலளிநீக்கு
 13. நாமும் படகில் இனிதாய் பயணித்து வந்தோம்.

  பதிலளிநீக்கு
 14. நீங்க கொடுத்துவச்சவங்க
  எங்களுக்கும் எடுத்துச் சொல்வது
  மிகவும் நன்றே!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 15. பயணம் செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப் படுத்தியது நல்லது எனத் தோன்றியது. பல இடங்களில் இது இல்லாமல் பலியான உயிர்களின் நினைவு வந்து போனது.

  உண்மைதான்.. ஹைதராபாத் போனபோது இதே போல லைப் ஜாக்கட் போட்டு ஏரியில் ஸ்பீட் போட்டில் போன அனுபவம் நினைவுக்கு வந்தது. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 16. குடையை வாங்கி பிடிங்க தலைவரே...

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பயண அனுபவம் நாங்கள் பெற்றது போலே உணர்ந்தோம் அருமை சார்

  பதிலளிநீக்கு
 18. நம்ம ஊர் தேக்கடி போலுள்ளது
  படங்களும் பதிவும் அருமை
  த.ம 13

  பதிலளிநீக்கு
 19. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. # வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...

  பதிலளிநீக்கு
 21. @ அப்பாஜி: தாஜ்-ல ட்ரீட்.... :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
 22. # கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 23. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 24. # வேங்கட ஸ்ரீனிவாசன்: படகில் போகும்போதும் படங்கள் எடுத்தோம்... பகிரவில்லை.. :)

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

  பதிலளிநீக்கு
 25. @ சங்கவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 26. # பத்மநாபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!

  மத்தியப் பிரதேசத்தில் சிற்பங்கள் நிறைய இருக்கு.... இந்த முறை மிக அருகே சென்றும் சில இடங்களைப் பார்க்கமுடியவில்லை....

  பதிலளிநீக்கு
 27. @ நிகழ்காலத்தில்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 28. # MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. @ சே. குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  பதிலளிநீக்கு
 30. # லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 31. @ ராம்வி: படங்களை ரசித்தது மகிழ்ச்சியினைத் தந்தது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 32. # அமைதிச்சாரல்: ஓ... களைகட்டுதா.... மகிழ்ச்சி....

  லைஃப் ஜாக்கெட் மடியில் வைத்துக்கொள்ளும் மக்கள்.... ம்ம்ம்ம்... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 33. @ வேடந்தாங்கல் கருன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 34. # மாதேவி: அட நீங்களும் படகில் வந்தீங்களா! நான் பார்க்கவே இல்லை பாருங்க..... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 35. @ புலவர் சா. இராமநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா... நீங்களும் ரசிப்பதற்குத் தானே பகிர்கிறேன்....

  பதிலளிநீக்கு
 36. # ரிஷபன்: அப்பாடா... தமிழ்மண நட்சத்திர வாரத்தில் உங்கள் வருகை இல்லையே என யோசித்தேன்... வந்து பகிர்வினைப் படித்து உங்கள் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. # ரெவெரி: //குடையை வாங்கி பிடிங்க தலைவரே//// ஹா...ஹா... ஹா.... :))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 38. @ ஐ.நா.ரமேஷ்பாபு: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே....

  தங்களது இனிய கருத்திற்கும் மிக்க நன்றி!!!

  பதிலளிநீக்கு
 39. # ரமணி: தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....