எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 16, 2011

தேலி கா மந்திர்   
மாமியார் மருமகள் கோவிலிலிருந்து நாங்கள் அடுத்ததாய் சென்றதுதேலி கா மந்திர்”.  ஹிந்தியில்தேல்என்றால் எண்ணெய்.  ”தேலிஎன்றால எண்ணெய் மொத்த வியாபாரி.  ஒரு எண்ணெய் மொத்த வியாபாரியின் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டப்பட்டதால் இந்த கோவிலுக்குதேலி கா மந்திர்என்ற பெயர் ஏற்பட்டது என்று சொல்கிறது இங்கே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு

பிரதிஹாரா வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மிஹிர போஜா அவர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக் கோவிலின் உயரம் 30 மீட்டர்.  குவாலியர் கோட்டையில் இருக்கும் கட்டிடங்களிலேயே மிக உயரமான கோவில் இது தான்.

கிழக்குப் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே உள்ளே சென்றால் உள்ளே கர்ப்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம் என இருக்கிறது.  இக்கோவிலின் சிறப்பு, இதன் கட்டமைப்பில் தென் இந்திய மற்றும் வட இந்திய பாணிகள் இரண்டுமே உபயோகப்பட்டு இருக்கிறது என்பது.  அத்தனை வருடங்களுக்கு முன்னரே இது சாத்தியமாகி இருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியம்தான்


கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.  கட்டி பல நூற்றாண்டுகள் ஆனதாலும், ஒழுங்கான பராமரிப்பு இல்லாததாலும், பல சிற்பங்கள் சிதிலப்பட்டு கிடக்கிறது


முதலில் விஷ்ணு பகவான் இருந்த கோவிலாகவும் பின்னாட்களில் சிவனுக்கெனவும் இருந்ததாக இங்கே குறிப்புகள் காணப்படுகின்றன

ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோவிலின் வெளியே ஒரு நுழைவாயிலும், இரு சிறிய மண்டபங்களும் கட்டப்பட்டதாம். கோவில் மட்டுமல்லாது இங்கே இருக்கும் பூங்காவும் பராமரிக்கப்படாமல் இருக்கிறது.  நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இவ்விடத்தினை மேலும் கவனம் செலுத்தி பராமரித்தால் நல்லது.


இக் கோவிலின் அருகில் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந் சிங் அவர்களின் நினைவாய் கட்டப்பட்ட ஒரு குருத்வாராவும் இருக்கிறது.  நேரமின்மை காரணமாக அங்கே செல்ல இயலவில்லைஇப்போது புதியதாய் கட்டப்பட்டாலும், இந்த குருத்வாரா இருக்கும் இடத்தின் வாசலிலேயே முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய குருத்வாரா மேடை இப்போதும் இருக்கிறதாம்.  

குவாலியர் கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட ஔரங்கசீப் காலத்தில் இங்கே சிறை பிடிக்கப்பட்ட குரு கோவிந்த் சிங் சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.  பலரது முயற்சியின் காரணமாய் அவருக்கு விடுதலை வழங்கினாராம் ஔரங்கசீப்.  ஆனால் தன்னுடன் சிறையில் இருந்த சுமார் 52 ராஜாக்களையும் விடுதலை செய்தால்தான் தானும் வெளியேறுவேன் எனச் சொல்லி அவர்களையும் விடுவித்ததாய் சிலர் சொல்கிறார்கள்.  நடந்தது குரு கோவிந்த் சிங்கிற்கும், ஔரங்கசீப்பிற்குமே வெளிச்சம்

அட மணி ஆகிவிட்டதே.  ஒலி-ஒளி காட்சி ஆரம்பித்து விடுமே.  வாருங்கள் அங்கு செல்வோம்.  நாங்கள் நேரம் அதிகமாகிவிடும் என்பதால் ஹிந்தி பாஷையிலே தான் பார்த்தோம்.  அதில் இருந்து சில விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்காத்திருங்கள் 

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி


28 comments:

 1. தேலி கா மந்திர், வித்யாசமான பெயர்.
  சரித்திர சிறப்பு பெற்ற கட்டிடங்கள், கோவில்கள் ஆகியவற்றின் பாரமரிப்பில் அரசு கவனம் செலுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 2. @ ராம்வி: பராமரிப்பில் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் இன்னும் நிறைய வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்கள் நம் நாட்டில் இருந்திருக்கும் சகோ....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பாரம்பரியச் சின்னங்களின் மதிப்பு
  இந்தியர்கள் அறியவே இல்லை
  ஒருவேளை அதிகம் இருப்பதனால்
  அலட்சியமா எனத் தெரியவில்லை
  மனம் கவர்ந்த பதிவு த்.ம 3

  ReplyDelete
 4. # ரமணி: நீங்கள் சொல்வது உண்மை தான். அலட்சியம்? இருக்கலாம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. பல தெரியாத இடங்களையும்,புதுப்புது விஷயங்களையும் அழகாக அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்க! வாழ்க!

  ReplyDelete
 6. பெயரோடு பெயர் விளக்கமும் கொடுப்பதற்கு நன்றி.. என்னை மாதிரி ’’ஹிந்தி நஹி மாலும்’’ ஆட்களுக்கு உபயோகமாக இருக்கிறது..

  ஔரங்கசீப் கால வரலாற்று செய்திகளும் சுவாரசியத்தை கூட்டுகிறது.....

  ReplyDelete
 7. சுவாரஸ்யமான பெயர்க் காரணம்..

  தகவல்களும் ரொம்பவே புதுசு.. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. நேரில் பார்க்க இயலா விட்டாலும்
  நேரில் பார்த்தது போல நினைக்கச்
  செய்கிறது தங்கள் பதிவு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. இப்போது கூட நம்ம ஆட்கள் கோவில்ல பைசா வச்சு சுரண்டறது.. சாப்பிட்ட கையை அப்பறதுன்னு டாமேஜ் பண்ணிகிட்டுத்தான் இருக்காங்க..
  பயணம் பல தகவல்களுடன் ஈர்க்கிறது.

  ReplyDelete
 10. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
  http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

  ReplyDelete
 11. புதிய இடம் புதிய தவல்கள்.பகிர்வுக்கு நன்றி!
  வலைச்சரம் மூலம் உங்களை அறிமுகப்படுத்திய ராஜேஷுக்கு நன்றி!

  ReplyDelete
 12. விபரங்கள் புதிது.பகிர்விற்கு நன்றி.தேலி என்றதும் பாலிதின் பைகள் இடம்பெறுமோவென நினைத்தேன்.வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 13. @ ஈஸ்வரன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 14. # பத்மநாபன்: “ஹிந்தி நஹி மாலும்” ஆட்கள் .... :) நானும் தில்லி வந்த புதிதில் அந்த கட்சி தான் பத்துஜி!

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
 15. @ அன்புடன் அருணா: அட இது நல்லா இருக்கு!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 16. # அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 17. @ புலவர் சா. இராமானுசம்: என் பதிவின் மூலம் நீங்களும் அந்த இடம் பற்றித் தெரிந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி ஐயா....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. # ரிஷபன்: சாப்பிட்ட உடனே கையை பக்கத்துத் தூணில் தடவுவதில் நம் மக்களுக்கு ஒரு ஆனந்தம்... அல்ப சந்தோஷம்... :(

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @ மாய உலகம்: என்னை மீண்டுமொரு முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.... மிக்க மகிழ்ச்சியும்....

  ReplyDelete
 20. # கோகுல்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.. உங்களது பக்கத்திற்கும் வருகிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ஓ! நீங்கள் பிளாஸ்டிக் பை என்று நினைத்தீர்களா!

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்திய உங்களுக்கு எனது நன்றி....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. இக்கோவிலின் சிறப்பு, இதன் கட்டமைப்பில் தென் இந்திய மற்றும் வட இந்திய பாணிகள் இரண்டுமே உபயோகப்பட்டு இருக்கிறது என்பது. அத்தனை வருடங்களுக்கு முன்னரே இது சாத்தியமாகி இருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியம்தான்.

  பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 23. # இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. சிற்பவேலைப்பாடுகள் அருமையாகத்தான் இருக்கிறது. அழியாமல் காப்பது என்பது முக்கியம்.

  ReplyDelete
 25. @ மாதேவி: //அழியாமல் காப்பது என்பது முக்கியம்// சரியான கருத்து. ஆனால் நம் மக்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லையென்பது கண்டு வருத்தம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. தேலிகாமந்திரும் இப்பதான் கேள்விப்படுரேன். நான் மத்யப்பிரதேஷ் ஜபல்பூரில் இருந்தேன் அதான் குவாலியர் பத்தி தெரியல்லே. சிற்ப வேலைப்பாடுகளில் என்ன ஒரு நுணுக்கமான கைவேலை செய்திருக்காங்க. ஒலி ஒளி காட்சி பாத்தீங்களா?

  ReplyDelete
 27. # லக்ஷ்மி: ஓ நீங்க ஜபல்பூரில் இருந்தீர்களா? நாங்கள் சென்றது குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா [டிகம்கர்] மாநிலங்களுக்கு...

  நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள்.... ரசித்தோம்.

  அடுத்த பகுதி நாளை வெளியிடுகிறேன்...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....