செவ்வாய், 4 அக்டோபர், 2011

சூரியனார் கோவில்:

சூரியனார் கோவில் என்றதும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது நம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோவில் தான்.  அடுத்ததாய் ஒடிசா மாநிலத்தில் பூரி அருகே இருக்கும் கோனார்க்

இது போன்று இந்தியாவில் பல இடங்களில் இருக்கலாம்.  மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அழகிய பூங்காவின் நடுவே கோனார்க் சூரியனார் கோவில் அமைப்பிலேயே அமைந்துள்ளது தான் விவஸ்வான் மந்திர் என்று அழைக்கப்படும் சூரிய பகவானுக்கான கோவில்

முற்றிலும் கோனார்க் சூரியனார் கோவில் போலவே இது  அமைக்கப்பட்டுள்ளது.  சமீப காலத்தில், அதாவது 1986-ஆம் வருடம் தான் [G]கன்ஷ்யாம் தாஸ் [B]பிர்லா அவர்களால் ஆதித்ய பிர்லா ட்ரஸ்ட் மூலம் கட்டப்பட்டது இந்த கோவில்.  அழகாய் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலில் நிறைய சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பார்க்க முடிகிறது

சுற்றிலும் பல சிற்பங்களைக் காண முடிந்தது.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அச் சிற்பம் யாருடையது என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு.  ஆதி சங்கரர், கபீர் தாஸ், சந்த் ஞானேஷ்வர், துளசி தாஸ், வால்மீகி, சூர்தாஸ் போன்ற மகான்கள், வாயுதேவன், குபேரன், ஈஷானதேவன், சூர்ய தேவன், மித்ரா, வருணதேவன் போன்ற பலரது முழு உருவச் சிலைகளை   கோவில் கோபுரத்தில் செதுக்கி வைத்துள்ளார்கள்சிற்பங்கள் அனைத்துமே மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியுடனும் செதுக்கப்பட்டு இருக்கிறது.  Sandstone என்றழைக்கப்படும் மணற்கற்களால் வெளிப்புறமும் கோவில் உள்ளே வெள்ளை சலவைக் கற்களாலும் கட்டப்பட்ட இக்கோவில் உள்ளே சூரிய பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் வெளியே விற்றுக் கொண்டு இருந்த அவரது புகைப்படத்தினை படம் பிடித்து கீழே போட்டு இருக்கிறேன்


10-15 படிகள் மீதேறி மேலே சென்றால் கோவிலுக்குள் செல்லலாம்.  படிகளுக்கு மேலே ஏறி கோவிலைச் சுற்றி வந்தால் மேலே சொல்லியுள்ள அனைத்து சிற்பங்களையும் நீங்கள் பொறுமையாய் ரசித்துப் பார்க்கலாம்.  ஒரு தேரின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது இது.  தேரை இழுத்துச் செல்ல ஒரு பக்கத்தில் நான்கு குதிரைகளும், மற்ற பக்கத்தில் மூன்று குதிரைகளும் இருக்கின்றன.  சூரிய பகவான் தேரில் 7 குதிரைகள் என்பதை இது குறிக்கிறது.  பெரிய பெரிய தேர் சக்கரங்கள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது நன்றாக இருந்ததுகோவில் இருக்கும் பூங்கா பலவித  பூச்செடிகள், மரங்கள் என அழகாக காட்சியளிக்கிறது.   மயில்களின் அகவல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததுநாங்கள் சென்ற போது இரு மயில்கள் அழகாய் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.  படம் எடுக்க எல்லோரும் செய்த அமளி துமளியில் விரைவாக ஓட்டம் எடுத்து, பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டதுஅப்படி ஓடிக் கொண்டு இருந்த ஒரு மயிலின் படம் கீழே.  நாங்கள் அங்கிருந்து திரும்பும் வரை அதன் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது.  மனிதர்களைக் கண்டு தான் எவ்வளவு பயம் இந்த மயிலுக்கு.


காலையிலேயே சூரிய பகவானின் தரிசனம் பெற்று மீண்டும் தான்சேன் ரெசிடென்சி வந்து அறையைக் காலி செய்து மூன்று இன்னோவா கார்களில் தொடர்ந்தது எங்கள் பயணம், அடுத்த இலக்கான டிக்ரா அணைக்கட்டை நோக்கி

அடுத்ததாய் உங்களை டிக்ரா அணைக்கட்டின் படகுத் துறையில் சந்திக்கிறேன். ஒரு உல்லாசப் படகுச் சவாரி செல்லக்  காத்திருங்கள்

மீண்டும் சந்திப்போம்.
வெங்கட்.

பின்குறிப்பு:  இது எனது 175-ஆவது பதிவு...  

58 கருத்துகள்:

 1. அருமையான மனம் கவர்ந்த பகிர்வு.

  சிற்பங்கள் அழகிலும் மயிலின அழகிலும் சொக்கித்தான் போனேன்.

  பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து பதிவிட்ட உடனே கருத்துரை அளித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பதிவும் புகைப்படங்களும் அருமை! அருமை! அந்த புகைப்படங்களே சூரியனார் கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியாக உள்ளன. இது போன்ற கோயில்களே நம் கலாசாரப் பொக்கிஷங்கள். அழகாகப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்க. வாழ்க.

  பதிலளிநீக்கு
 4. முன்பு கலைப்பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய
  அவசியம் குறித்து ஒரு பிரச்சார கையேடு படைத்தேன்
  அதில் ஒரு வரி " பண்டை புராதன சின்னங்களுக்கான
  பெருமை முன்னோர்களுடையது அதை பராமரிக்காது
  குப்பையாக வைத்திருக்கும் சிறுமை " நம்முடையது
  என இருந்தது.சிறு வயதில் படித்ததாயினும்
  அந்த வாசகம் எனக்கு மறக்கவில்லை
  இங்காவது தூய்மையாக பராமரிக்கிறாற்கள் என அறிய
  மிக்க மகிழ்ச்சி படங்களும் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள் த.ம 3

  பதிலளிநீக்கு
 5. பிர்லா கோவில்களில் (மந்திர்களில்) எல்லாமே இந்த அமைப்புகள் தான் போலிருக்கிறது. சூரியனார் கோவில் என்றால் இது ஒரிய, சரியாகக் கூறினால், கலிங்க கலைவடிவமா? ஹிமாசல் மாநில சம்பாவில் ”லக்ஷ்மிநாராயண் மந்திரில்” அருகிலே ஒரு 9-10 நூற்றாண்டின் கோவிலும் இருந்தது. அதில் கூட இதே போன்ற கலைவடிவம் தான். நாங்கள் (நானும் பத்துவும் training நேரத்தில்) பார்த்துள்ளோம். அந்த கோவிலில் கலிங்க கலை வடிவம் என்றால் அது ஹிமாசல் வரை பரவியுள்ளதா? அல்லது கலிங்க கலை வடிவம், கனிஷ்கரின் கலை வடிவம் பின்னர் குப்தர்களால் விந்திய பிரதேசத்தில் மேலெடுத்துச் செல்லப் பட்டபோது ஹிமாசலிலும் பரவியிருக்குமோ என்னவோ. விசாரித்து தான் பார்க்க வேண்டும். படங்கள் அருமை. ப்கிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. சூரியனார்கோயில் பதிவு விளக்கங்கள் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. பகிர்வும் படங்களும் செம அருமை.. வடக்கே அனேகமா பிர்லா குடும்பத்தினர் கட்டிய கோயில்கள்தான் மெஜாரிட்டி எண்ணிக்கைன்னு நினைக்கிறேன் ..

  175-க்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. நான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயிலை
  நேரில் பார்த்துள்ளேன்
  இது என் போன்ற நேரில்பார்க்க இயலாத வர்களுக்கு
  நல்ல பதிவு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. அருமையான பயண கட்டுரை, எங்களை உங்களுடனே அழைத்து செல்கிறது...!!!

  பதிலளிநீக்கு
 10. சூரியனார் கோவில் பதிவு ஒளிர்கிறது. நல்ல பயணக் கட்டுரை தல. :-)

  பதிலளிநீக்கு
 11. அழகான கோவில், அருமையான விளக்கங்கள். படங்கள் எல்லாம் அருமை.

  நேரில் பார்ப்பது போனற அனுபவம் ஏற்பட்டது.

  175வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 12. தூய்மையான கோயில். அருமையான சிற்பங்கள். அழகிய பதிவு. பாராட்டுக்கள்.

  தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுக்கும் பாக்யம் இன்று கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 13. சூரியனார் கோயில் ரொம்ப அழகாக இருக்கின்றது.

  அழகில் நீண்ட தோகையாரும் சூரியனாருக்குப் போட்டியாக ....

  பதிலளிநீக்கு
 14. # ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... மற்ற கோவில்கள் போலில்லாமல் இங்கே பராமரிப்பு நன்றாக இருந்தது. சுத்தமாக இருக்கும் கோவிலைப் பார்த்தால் மனதில் அமைதியும் தானாகவே வருகிறது...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணாச்சி...

  பதிலளிநீக்கு
 15. @ ரமணி: // "பண்டை புராதன சின்னங்களுக்கான
  பெருமை முன்னோர்களுடையது அதை பராமரிக்காது
  குப்பையாக வைத்திருக்கும் சிறுமை "// எத்தனை உண்மை இவ்வரிகளில்....

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. # வேங்கட ஸ்ரீனிவாசன்: நீயும் பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சியும் ஹிமாசல் போன போது இது போன்ற கோவிலைப் பார்த்தீர்களா? அண்ணாச்சி ஒன்றும் சொல்லவேயில்லை...

  வரலாற்றுக் குறிப்புகள் பார்த்தால் தான் தெரியும் உனது சந்தேகத்திற்கு விளக்கம்....

  உனது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றிடா சீனு...

  பதிலளிநீக்கு
 17. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 18. # அமைதிச்சாரல்: வடக்கே பிர்லா மந்திர் நிறைய....

  தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. @ புலவர் சா. இராமானுசம்: உண்மை ஐயா... பார்த்துவிட்டு வந்தது அடுத்தவர்களுக்கும் பயன்படட்டுமே என்று தான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. # MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி மக்கா!

  பதிலளிநீக்கு
 21. @ RVS: ஒளிர்கிறதா? :)) வார்த்தை விளையாட்டை ரசித்தேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே...

  பதிலளிநீக்கு
 22. # கோமதி அரசு: தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும், இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா..

  பதிலளிநீக்கு
 23. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது கருத்துரை என்னை மகிழ்வித்தது. உங்களது தொடர்ந்த வருகைக்கும், தமிழ்மணம் 10/10 - க்கும், மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 24. # மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அருமையான விளக்கங்கள்...அருமையான படங்கள்...

  175-ஆவது பதிவு ..வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 26. எனக்குத் தெரிந்தது முதலில் சொன்ன இரண்டு கோவில்தான்.மூன்றாவது கோவில் பற்றிச் சொன்னதற்கு நன்றி.
  படகு சவாரிக்குக் காத்திருக்கிறேன்.
  175க்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. @ ரெவெரி: தங்களது தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 28. # சென்னை பித்தன்: நாங்களும் புதியதாகத் தோன்றியதினால் தான் சென்றோம்.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 29. கோனார்க் கோனார்க் என்று படித்திருக்கிறோம் ...இவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடம் என்பதை உங்கள் பதிவு முலம் தான் தெரிகிறது அருமையாக எடுத்து பதித்துள்ளீர்கள்.. தோகை மயிலும் அருமை.....

  பதிலளிநீக்கு
 30. @ பத்மநாபன்: கோனார்க் போன்ற மாடலே இப்படி இருக்கிறது... இதை விட இன்னும் பழமையான கோனார்க் கோவில் எப்படி இருக்கவேண்டும்.... நமது நாட்டில் இருக்கும் எல்லா இடங்களையும் பார்க்கவே ஒரு ஜென்மம் பற்றாது..... இல்லையா பத்துஜி!

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
 31. வெங்கட் ! நான் சிலமுறை கோனாரக் சென்று வந்திருக்கிறேன். அற்புதமான கோவில் அது. உங்கள் விவரங்களும் படங்களும. இந்தக் கோவிலையும் காணும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 32. 175 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்!

  பதிலளிநீக்கு
 33. கோனார்க் மட்டும் தான் தெரியும் (சென்ற வட்ருடம் சென்றேன்). இன்னொரு சூரிய கோவிலைப் பற்றிய தகவலுக்கு நன்றி.

  175க்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. # மோகன்ஜி: இக்கோவிலில் எனக்குப் பிடித்ததே இதன் கலை நுணுக்கமும், பராமரிப்பும் தான் ஜி!

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
 35. @ கலாநேசன்: கோனார்க் நான் சென்றதில்லை... அதன் குறையை இது ஓரளவு போக்கியது....

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சரவணன்....

  பதிலளிநீக்கு
 36. சூரியனார் கோவில் பற்றிய தகவல் படங்கள் மிக அருமையாக இருக்கு.
  175 க்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 37. # ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும், இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராம்வி.....

  பதிலளிநீக்கு
 38. Power Star- இன் (நெய்வேலி மண்ணின் சொந்தகாரர்) 175 பதிவிற்கு ...வாழ்த்துக்கள்.... வெங்கட் நாகராஜ் சார்....
  சூரியனை போல் ....என்றும் பிரகாசிக்கட்டும்...தங்களது பதிவுகள்!!!!
  - அப்பாஜி, கடலூர்.

  பதிலளிநீக்கு
 39. @ அப்பாஜி: தங்களது இனிய வருகைக்கும் சந்தோஷமளிக்கும் தங்களது கருத்திற்கும் மிக்க நன்றி.

  அப்பாஜி நீங்க கடலூரா? எங்க? ஓ.டி-யா என்.டி-யா?

  பதிலளிநீக்கு
 40. அனைத்துப் படங்களும் அருமை. ஒரு சின்ன சமாசாரம் கூட விடாமல் எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. # வல்லிசிம்ஹன்: உங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி மேடம்....

  பதிலளிநீக்கு
 42. அடாடாடா...... அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே அழகு!

  அருனையான விவரிப்புக்கு நன்றி.

  உண்மையில் நாங்க இங்கே நியூஸியில் ஒரு கோவில் சூரியனுக்குக் கட்டி இருக்கணும். பொழுதன்னிக்கும் இப்படி ஓயாத குளிர் வாட்டுனா... அவரை வரவழைக்க வேறு வழி என்னன்னு யோசிக்கிறேன்:-)

  பதிலளிநீக்கு
 43. @ துளசி கோபால்: ஆமா டீச்சர்... அதிலும் கோவில் சுற்றுச் சுவர்களில் இருக்கும் சிலைகள் ரொம்ப அழகு. நிறைய படம் எடுத்தேன். தனியா பிகாசா-வில் தான் போடணும்.

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. உங்க‌ ப‌ய‌ண‌க்க‌ட்டுரைக‌ள் நாங்க‌ளும் உங்க‌ அனுப‌வ‌ங்க‌ளைப் பெற‌ உத‌வுது ச‌கோ... ம‌கிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 45. # நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 46. சூரியனார் கோவில் நீங்க சொன்னதுபோல நம்மூர்ல பார்த்திருக்கேன். ஆனா மத்தியபிரதேசத்தில் கோனார்க் இந்த கோயிலைப்பற்றி விரிவான கட்டுரையும் படங்களும் பகிர்ந்தமை மிக சிறப்பு வெங்கட்....

  நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்... தூய்மையுடன் பார்க்கவே கொள்ளை அழகு....சிலைகளின் முகத்தில் தெரியும் புன்னகை கூட தெரிகிறது அழகாக...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

  பதிலளிநீக்கு
 47. சுவாரஸ்யமான பதிவு!
  புகைப்படங்கள் அத்தனையும் தெளிவும் அழகுமாய் இருக்கின்றன!
  175 ஆவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 48. @ மஞ்சுபாஷிணி: இத்தனை நாட்கள் மற்ற நண்பர்களின் பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் காணும்போது எனக்குத் தோன்றும், “நம்ம பக்கம் எல்லாம் வர மாட்டேன் என்று இருக்கார்களே!” என... இன்று அந்த நினைப்பு அகன்றது... மிக்க நன்றி சகோ.

  சிலைகள் வடித்த விதம் மிகவும் அருமையாகவும் தத்ரூபமாகவும் இருந்தது.

  தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. # மனோ சாமிநாதன்: புகைப்படங்களைப் பார்த்து பாராட்டும் சொன்னது மகிழ்வளிக்கிறது...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 50. @ நாடோடிப் பையன்: உங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும், படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்....

  பதிலளிநீக்கு
 51. நான் கூட தலைப்பைப் பார்த்ததும் ஆடுதுறை அருகே உள்ள சூரியனார் கோவிலைப்பற்றிய பதிவு என எண்ணினேன். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த அழகிய கோவில் பற்றி பதிவு இட்டமைக்கு நன்றி. ஒ! அந்த மயில் புகைப்படம் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 52. # வே. நடனசபாபதி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  தங்களது இனிய கருத்திற்கும் புகைப்படத்தினைப் பாராட்டியதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 53. @ அருள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்

  பதிலளிநீக்கு
 54. Wow super iruvar eluthi iruppathum ore mathiri irukku !!!!!

  But neenga silaogalai innum nunukkama favanichu itukkeenga. Nan mayilaithsn sutu iruken pslaphotokkalil .. Venkat sago 😃

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....