வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஓ மானே மானே… உன்னைத்தானே...


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி - 15]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14)இரவு முழுவதும் கனவில் மானே மானே…” என்று ஒரே மான்கள் கூட்டம் தான்.  அதனால் ஆர்வமுடன் மாதவ் தேசிய பூங்கா செல்ல அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தயாரானோம்.  ஆக்ரா-மும்பை மற்றும் ஜான்சி-ஷிவ்புரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு 156 சதுர கிலோமீட்டர்.  எங்களது வண்டிகளில் இரண்டும், மத்தியப்பிரதேச சுற்றுலா துறையின் ஒரு திறந்த ஜீப்பிலுமாக  பயணதைத்  தொடங்கினோம்.

வருடத்தின் எல்லா நாட்களும் திறந்திருக்கும் இப்பூங்காவில் நிறைய விலங்குகள் இருக்கின்றனவாம்.  பூங்காவின் நுழைவாயிலில் இருக்கும் தகவல் மையத்தில் செல்லும் நபர்கள் எண்ணிக்கை, வண்டி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனுள் செல்வதற்கான நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு வன இலாகா ஊழியர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

உள்ளே நுழைந்து மெதுவாக பயணத்தினைத் தொடங்கினோம்.  வேகமாகவோ, ஒலி எழுப்பியபடியோ சென்றால் விலங்குகள், பறவைகளைப்  பார்க்க முடியாது என்பதால் மெதுவாகவே வண்டிகள் நகர்ந்தன.  வன இலாகா ஊழியர் மூவாயிரத்திற்கும் அதிகமான மான்கள், எண்ணிலடங்கா மயில்கள், காட்டுப் பன்றிகள், பறவைகள், ஒரு புலி, நீல்காய் என்று அழைக்கபடும் மானினம் என பல விலங்குகள் இருப்பதாய் சொன்னார்.


சுத்தமான காற்று, பாழ்படுத்தப்படாத இயற்கைச் சூழல் என்று அதிகாலையில் நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால்.  தில்லியின் மாசுபட்ட காற்றினை சுவாசித்த எனக்கு இது மிகவும் புத்துணர்வு ஊட்டுவதாய் அமைந்தது. பூங்காவில் நுழைந்து பயணித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் பார்த்தது 1919-ஆம் வருடம் கட்டப்பட்ட Sakhya Sagar Sailing Club. 


இந்த கட்டிடம் குவாலியர் மஹாராஜா அவர்களால் முக்கிய புள்ளிகள் தங்குவதற்காக கட்டியது.  கட்டிடத்தின் பாதி சாக்யா ஆற்றினுள் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறதுஇந்த இடத்தில் இருந்து ஆற்றின் முழு அழகையும், பல்வேறு பறவைகள், ஆற்றில் இருக்கும் முதலைகள் போன்றவற்றையும் காண முடிகிறது


அங்கிருந்து கிளம்பி வனத்தினுள் செல்லும் போது வழியில் பார்த்ததுஷூட்டிங் பாக்ஸ்”.  1936-ஆம் வருடம் சாக்யா சாகர் ஆற்றில் கட்டியிருக்கும் அணையின் மீது கட்டப்பட்டது இந்த அறை.  இங்கிருந்தபடியே வனத்தில் இருக்கும் புலிகளைக் கொல்வார்களாம்என்னே அவர்களது வீரம்!  புலிகளைக் கொல்வது தவிர இங்கிருந்தபடியே பறவைகள், அணைக்கட்டின் கற்களில் வந்து படுத்திருக்கும் முதலைகள் ஆகியவற்றைக் கண்டு களிப்பார்களாம் அரசர் மற்றும் அவரது பரிவாரங்கள்.


வனத்தினுள் அடுத்து வருவது George Castle.  இதன் பின்னும் ஒரு கதை இருக்கிறதுஜிவாஜி ராவ் சிந்தியா அவர்களால் 1911 –ஆம் வருடம் கட்டப்பட்டது இக்கட்டிடம். ஆங்கிலேய அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்த வழியே புலி வேட்டைக்காக வரும்போது ஒரு இரவு தங்குவதற்காகக் கட்டப்பட்டதாம் இந்த இடம்.  இதில் வேதனை என்னவென்றால் அரசர் வரும் வழியிலியே புலியைக் கொன்று விட்டதால் இங்கு வரக்கூட இல்லைஇந்தக் கட்டிடத்தில் தரையில் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய கற்கள் [tiles] பதிக்கப்பட்டுள்ளன.  பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்ட இக் கட்டிடத்தில் இப்போது யாரும் வசிப்பதில்லை என்று சொல்வதிற்கில்லை.  நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்.   


இரண்டும் மணி நேரத்திற்கு மேல் சுத்தமான காற்றையும் இயற்கைச் சூழலையும் பார்த்து ரசித்தோம்.  எங்களது மொத்த பயணத்தின் போது நாங்கள் நிறைய மான்களையும், மயில்களையும் பார்க்க முடிந்தது.  ஒரு சில பறவைகள், ஒரு காட்டுப் பன்றி, சில லங்கூர் வகை குரங்குகள் ஆகியவையும் கண்ணுக்கு புலப்பட்டன.       

மொத்தத்தில் ஒரு சுகானுபவம் அது.  இருக்கும் ஒரு புலியையும் காண முடியவில்லை என சிலருக்கு வருத்தம்.  இந்தப்  புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!

அடுத்ததாய் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இருக்கும்பதையா குண்ட்என்ற இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்… 

மீண்டும் சந்திப்போம்..

வெங்கட்.

42 கருத்துகள்:

 1. இப்படி புலிகள் எல்லாத்தையும் வேட்டையாடித்தான் கடைசியில் ஒரே ஒரு புலி மட்டும் அங்கிருக்கோ?

  ஆனாலும் பதிவுலகப் புலியைக் கண்டு பேச நிஜப்புலி சந்திப்புக்கு வரலைன்றது..... மோசம்:-)))))

  பதிலளிநீக்கு
 2. @ துளசி கோபால்: //ஆனாலும் பதிவுலகப் புலியைக் கண்டு பேச நிஜப்புலி சந்திப்புக்கு வரலைன்றது..... மோசம்:-)))))// அதானே.. :))

  தங்களது வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி டீச்சர்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் பாஸ்
  பல தகவல்களை அறிய முடிந்தது நன்றி

  பதிலளிநீக்கு
 4. இனிமையான டூர் அனுபவம்.புதிய தகவல்கள்.நல்ல பகிர்வு..

  பதிலளிநீக்கு
 5. திறந்த ஜீப் பயணம் என்ன ஒரு சுகம்?அதற்கீடாய் ஒப்பிடமுடிவது ரயில் பயணம் மட்டுமே.

  பூங்காவின் பூங்காற்றை நிரப்பிக்கொண்டு
  பதையா குண்டுக்குத் தயாராகிவிட்டோம் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 6. //நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்.//

  அவங்களுக்காவது பயன்படுதே...

  ரெண்டு புலிகளும் சந்திச்சிருந்தா புலிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாமே :-))))

  பதிலளிநீக்கு
 7. மொத்தத்தில் ஒரு சுகானுபவம் அது./

  பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இந்தப் புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!/

  ஓடி ஒளிந்த புலிக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 9. பூங்காவைச் சுத்திப்பாத்துட்டோம்.அடுத்து பதையா குண்ட் போகத்தயார்!

  பதிலளிநீக்கு
 10. 4 to 5 in தமிழ்மணம்.

  தங்களுடனேயே அந்த பூங்காவைச் சுற்றிப்பார்த்த சுகானுபவம் கிடைத்தது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 11. //இந்தப் புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!//

  ஆம் வெங்கட்.அந்த புலி பயந்துபோய் விட்டது.ஹா..ஹா..

  சுகமான சுற்றுலா.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் கூடவே பயணித்த சுகம் போல இருக்கு, வரலாற்று செய்திகளும் நன்றி...!!!

  பதிலளிநீக்கு
 13. "இப்போது யாரும் வசிப்பதில்லை என்று சொல்வதிற்கில்லை. நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்."

  அவையளுக்கு இயற்கை வாழ்க்கை அலுத்துவிட்டது போல :)

  பதிலளிநீக்கு
 14. பஹூத் அச்சா ஹை வெங்கட்ஜீ! :-)

  அடுத்த வாட்டி புலியை குளோஸ்-அப்புலே போட்டோ எடுத்துப் போடுங்க! :-)

  பதிலளிநீக்கு
 15. இந்தப் புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!

  ஹா..ஹா..

  இப்போது யாரும் வசிப்பதில்லை என்று சொல்வதிற்கில்லை. நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்.

  அய்யோ.. என்ன கேஷுவலாய் சொல்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 16. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @ சுந்தர்ஜி: ஆமாம்.. ஒரு திறந்த ஜீப் மட்டுமே இருந்ததால் இருந்த அத்தனை பேரும் மாறி மாறி அமர்ந்து அதன் சுகத்தினை அனுபவித்தோம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மனதுக்கு நிறைவான பயணப்பதிவு நண்பரே
  பகுதி 15, விட்டவைகளை மெல்ல படித்து விடுகிறேன்

  பதிலளிநீக்கு
 20. @ அமைதிச்சாரல்: //புலிவர் சந்திப்பு நடத்தி இருக்கலாமே!// :)) வந்திருந்தா நடத்தி இருக்கலாம்... :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. @ இராஜராஜேஸ்வரி: ஓடி ஒளிந்த புலிக்கு எதுக்கு பாராட்டு சகோ? :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. @ ராம்வி: பயந்து தான் போய் விட்டது போல! தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 25. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே......

  பதிலளிநீக்கு
 26. @ மாதேவி: //அவையளுக்கு இயற்கை வாழ்க்கை அலுத்துவிட்டது போல :)// இருக்கலாம்.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. @ சேட்டைக்காரன்: //அடுத்த வாட்டி புலியை குளோஸ்-அப்புலே போட்டோ எடுத்துப் போடுங்க! :-)// போட்டுருவோம்.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை...

  பதிலளிநீக்கு
 28. @ ரிஷபன்: எங்களுடன் வந்த வன இலாகா ஊழியர் சொன்னார், மாலை ஐந்து மணிக்கு வந்தால், George Castle -ல் விலங்குகளைப் பார்க்கலாம் எனச் சொன்னார்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. @ A.R. ராஜகோபாலன்: மற்ற பகுதிகளையும் படிக்கிறேன் என்று சொன்னது மகிழ்வித்தது நண்பரே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. இனிமையான அனுபவம் ...நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 31. அனுபவத்துடன்
  தகவல் களஞ்சியமாய்
  அழகிய பதிவு நண்பரே.

  பதிலளிநீக்கு
 32. கொஞ்ச நேரம் அந்த சுத்தமான காற்றை சுவாசித்தது போல் புத்துணர்ச்சி தருவதாக இருந்தது உங்கள் பதிவு..

  பதிலளிநீக்கு
 33. நாங்களே நேரில் வந்ததைப் போன்ற உணர்வை உங்கள் வர்ணனையும், எழுத்துநடையும் உண்டாக்குகிறது. பகிர்விற்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 34. எங்களையும் கூடவே கூட்டிப்போயிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 35. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் பதிவை ரசித்து கருத்து பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 36. @ மகேந்திரன்: தகவல் களஞ்சியம் - உண்மைதான் எனக்கு நினைவில் இருந்தாலும் ஒரு இடத்தில் சேமித்து வைக்கவும் பயன்படுமே என்றுதான் இத்தொடரினை எழுதுகிறேன் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. @ பந்து: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 38. @ ராஜி: தங்களது வருகையும் பதிவினை ரசித்தமையும் என்னை மகிழ்வித்தது சகோ...

  பதிலளிநீக்கு
 39. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 40. இனிமையான அனுபவம்.


  சே.குமார்
  மனசு

  பதிலளிநீக்கு
 41. @ சே. குமார்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....