செவ்வாய், 11 அக்டோபர், 2011

தில்லியில் தென்னிந்திய உணவகங்கள்
முன்குறிப்பு:  இந்த வாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.  நட்சத்திர வாரத்தில் இரண்டாம் நாள் காலை இந்த பகிர்வு.  தலைநகர் தில்லிக்கு சுற்றுலா வரும் தமிழர்களுக்குப் பயன்படும் என்றே இந்த இடுகையை எழுதி இருக்கிறேன்… இனி பதிவுக்குப் போவோமா!எப்படி தென்னிந்தியர்களுக்கு அரிசி உணவுகள் பிரியமோ அது போலவே வட இந்தியர்களுக்கும் அவர்களது உணவான சப்பாத்தி இல்லாமல் இருக்க முடியாது.  இங்கு இருக்கும் சிலரை சப்பாத்தியே கிடைக்காத ஒரு தமிழகத்தின் கிராமத்தில் விட்டுவிட்டால் அவ்வளவுதான்.  ஆனாலும் அவர்களுக்கும் மாதத்தில் ஒரு முறையாவது நம் தமிழகத்தின் தோசையும் இட்லியும் சாப்பிட ஆசைதான்

தில்லியில் நிறைய உணவகங்கள் இருக்கின்றன.  பெரும்பாலானவை வட இந்தியர்களால் நடத்தப்பட்டாலும் அங்கு கிடைக்கும் உணவு வகைகளில் தென் இந்திய உணவு வகைகளையும் எழுதி வைத்திருப்பார்கள்.  ஆனால் உள்ளே சென்று சாப்பிடும்போதுதான் அங்கு தரப்படும் தோசை என்ற ஒரு வஸ்துவை இப்படிக் கூட செய்யமுடியுமா என்று நம்மை எண்ண வைக்கும்


பெரும்பாலான உணவகங்களில் தோசை செய்பவர்கள் வட இந்தியர்களே. அதனால் நமது ஊர் சுவையோ, ரசனையோ கிடைப்பதில்லை.  எனினும் இந்த இட்லி, தோசையை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்.  இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பாரை கவிழ்த்துக்கொண்டு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்!

கரோல் பாக், முனீர்கா, ராமகிருஷ்ணபுரம் போன்ற சில பகுதிகளில் தமிழர்களாலேயே நடத்தப்படும் நல்ல தென்னிந்திய உணவகங்களும் இருக்கின்றன.  இவற்றில் நல்ல தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும்

தில்லி தமிழ் சங்கத்தின் அருகில் பல வருடங்களாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார் திரு மேத்யூஸ்அது போலவே ஜந்தர் மந்தர் அருகில் ஒரு சிறிய கடையில் இட்லி, விதவிதமான தோசைகள், பொங்கல், உப்புமா, வடை போன்றவை கிடைக்கிறது.  வாகனங்களில் வந்து இங்கே நமது தென்னிந்திய உணவுகளை ஒரு பிடி பிடிக்கும் வட இந்தியர்கள் ஏராளம்.

தமிழகத்திலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் தங்கும் இடமான கரோல் பாக் பகுதியிலும் நிறைய உணவகங்கள் இருக்கின்றன.  இது தவிர சென்னையின் பிரபல உணவகமான ஹோட்டல் சரவணபவன் தில்லியின் ஜன்பத் சாலை மற்றும் கன்னாட் ப்ளேஸ் ஆகிய இடங்களில் இரண்டு கிளைகளைத்   திறந்து மக்களை தம் சுவையான உணவுகளால் வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  அடையார் ஆனந்த பவன் தில்லியின் க்ரீன் பார்க் பகுதியில் ஒரு கிளை திறந்திருக்கிறார்கள்.  அங்கும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.  அதனால் இப்போது திலக் நகர் பகுதியில்  இன்னுமொரு பிரிவும் திறந்து விட்டார்கள்

உணவுகளின் விலை மட்டும் கொஞ்சம் அதிகமே.  இரண்டு இட்லி சாப்பிட வரிகளுடன் சேர்த்து ரூபாய் 40 வரை ஆகும்.  சட்னி, சாம்பாருக்குத் தாளிக்கிறார்களோ இல்லையோ, இட்லி, தோசைக்கு வாட் வரி என்றெல்லாம் தாளித்து விடுகிறார்கள்! சரவண பவனில் இரண்டு பேர் சென்று ஆளுக்கு பூரி சைஸ் இருந்த ஒரு அடை மற்றும் அவியல் சாப்பிட ரூபாய் 250 ஆனது, அதுவும் ஏழு-எட்டு வருடங்களுக்கு முன்பே, என்றால் பாருங்களேன்

என்னதான் நிறைய உணவகங்கள் இருந்தாலும், நல்ல சுவையான தமிழகத்தின் உணவு வகைகளை ஏற்ற விலையில் கொடுக்கக் கூடிய உணவகங்கள் இங்கே இல்லாதது ஒரு குறையே.

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.59 கருத்துகள்:

 1. சுவையான பதிவுதா. டில்லி வரும்போது உபயோகப்படும்.

  பதிலளிநீக்கு
 2. //இரண்டு இட்லிக்கு ஒருபக்கெட் சாம்பாரை கவிழ்த்துக்கொண்டு சாப்பிடுபவர்களும்இருக்கிறார்கள்//

  இதற்காகவே டெல்லிக்கு வரலாம் போலிருக்கே! ஹீ...ஹீ... நல்ல பதிவு. நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நட்சத்திரபதிவில் சுவை மிகுந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நட்சத்திரப் பதிவருக்கு இரண்டாம்நாள்
  வாழ்த்துக்கள்
  டெல்லி வரும் நம்மவருக்கு நல்ல பதிவு

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. கரோல் பாக்-ல் “காவேரி ரெஸ்டிரெண்ட்”-ல் தென்னிந்திய உணவு நன்றாகவே இருக்கும். மோதி பாக்-ல் சற்று வித்யாசமாக கர்நாடக உணவு “கர்நாடகா பவன்”-ல் கிடைக்குமே, நாமே சில தடவை அதில் உண்டுள்ளோமே, அதைக் குறிப்பிடவில்லையே. பொதுவாக, தமிழ்ர்கள்/மலையாளிகள் தவிர்த்து நடத்தப்படும் உணவகங்களில் “சாகர்”, “தக்ஷின்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், இவற்றில் சில கிளைகளில் நன்றாக (தமிழ் flavour-டன்) இருக்கும்; வேறு சிலவற்றில் வாயில் வைக்க முடியாது. அனுபவஸ்தர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. Delhila tamil sangathila Geetanjali restaurant saapadu nalla irukum, apram Rohini and Janakpurila , namma oorulernthu poyi ange settle aanavanga chinna chinna hotel vaichi irukangaga, athula oru sila hotels seyara dosai and idli nalla irukum.Aaana intha hotels ellam naan 2001lernthu 2005kulla naan ange irunthappo paarthathu, saapitathu.

  Nice post. I love to come back to delhi, but not getting a suitable oppurtunity

  பதிலளிநீக்கு
 7. டில்லி டில்லி,
  அருமை!

  தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. தமிழ்நாடு பவன், ஆந்திரா பவன் விட்டுட்டீங்களே, இங்கே நியாயமான விலையில் சுவையான தமிழக உணவுகள் கிடைக்கும்.....!

  பதிலளிநீக்கு
 9. தமிழ்மணம் 8 to 9
  இன்ட்லி 3 to 4

  நல்ல சுவையான பதிவுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. ரசித்து சாப்பிட நினைத்தாலும் விலையை பார்த்தால் சுவை போய்விடும் போல இருக்கே?

  பதிலளிநீக்கு
 11. // இரண்டு இட்லி சாப்பிட வரிகளுடன் சேர்த்து ரூபாய் 40 வரை ஆகும். //

  //சரவண பவனில் இரண்டு பேர் சென்று ஆளுக்கு பூரி சைஸ் இருந்த ஒரு அடை மற்றும் அவியல் சாப்பிட ரூபாய் 250 ஆனது, அதுவும் ஏழு-எட்டு வருடங்களுக்கு முன்பே//

  அடேயப்பா... தில்லி ரொம்ப காஸ்ட்லி தான்.. நமக்கு ஒத்து வராது போலயே..

  தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. ஏவ்.....ஏவ்......ஏவ்........முன்பு ராமானுஜம் லாட்ஜில் ...ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தார்கள்...
  இப்போது நடத்துவதில்லை...மிக சுவையாய் இருக்கும்......பில்லும்...ஏற்று கொள்ளும் படியான விலையில் இருக்கும்....அது போல் ஏதேனும் கரோல் பாகில் இப்போது உள்ளதா...?

  பதிலளிநீக்கு
 13. தில்லி ஹோட்டல் சாப்பாடு பற்றி புலம்ப ஆரம்பித்தால் அது மஹாபாரதம் ஆகிவிடும் சகோ. என் மகளின் டவுட் ஒன்று இருக்கு சொல்றேன் கேளுங்க. ஹைதையிலும் அதே மொஹல் உணவுதான், தில்லியிலும் அதேதான். அப்படி இருக்க ருசி மாறுவது ஏன்? பில்லும் ஏறுவது ஏன்?”

  :((

  தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. நல்லதாய் ஒரு இடம் கிடைத்தால் சொல்லுங்கள்.ஒரு ஹோட்டல் ஆரம்பித்து விடலாம்.அங்கு தோசையினை பார்த்தாலே மொட மொடவென்று இருக்கும்.

  பதிலளிநீக்கு
 15. நட்சத்திர வாழ்த்துக்கள்! தில்லில 2 நாள் தங்கின அனுபவம் உண்டு. நீங்க சொல்லும் 'தீவட்டி' கொள்ளை ஹோட்டலுக்கு எல்லாம் போகலை. பதிவுல இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்த்து இருக்கலாம். ஆரம்பிக்கர்துக்குள்ளையே முடிச்ச மாதிரி இருந்தது!!!

  பதிலளிநீக்கு
 16. டில்லி வந்தா உமக்கு சொல்லிட்டுதான் வருவேன், மரியாதையா சாப்பாடு வாங்கி தரணும், ஊரையும் சுத்தி காட்டனும் ஹி ஹி, பதிவு அருமை...!!!

  பதிலளிநீக்கு
 17. வெங்கட்ஜீ! நானு தில்லிக்கு வந்தா கரோல் பாக் ஹோட்டல் ராமானுஜத்துலே தான் தங்குறது. அப்படியே ஆர்யசமாஜ் ரோட்டுலே இருக்கிற அகர்வால் கடையிலே பஞ்சாபி தாலி! அப்பாலிக்கா ஒருவாட்டி கனாட் பிளேஸ்லே மெட்ராஸ் ஹோட்டல்லே இட்லி சாப்பிட்டேன்; இனி போவேன்...? ஊஹும்! :-) சரோஜினி நகருலே செக்டர் 2 மார்க்கெட்டுலே சங்கம்-னு ஒரு சின்ன ஹோட்டல் இருந்திச்சே, இன்னும் இருக்கா? சவுத் இண்டியன் சாப்பாடு செமையா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள்.
  நானும் ஆந்திரா பவனை விட்டுவிட்டீங்களேனு நினைச்சேன்.கரோல் பாக் சதன் ஸ்டோர் அருகிலிருக்கும் அமராவதி ஹோட்டல் சீப்& பெஸ்ட்.தில்லி ரயில்வே ஸ்டேசனுக்கு எதிரில் (பாகர்கஞ்னு நினக்கிறேன்)திருநெல்வேலிகாரர்கள் நடத்தும் தமிழ்நாடு ஹோட்டல் கொஞ்சம் சுமாரா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 19. டில்லிக்கு வந்தால் சுவைத்திடுவோம் :)

  பதிலளிநீக்கு
 20. நல்ல பயனுள்ள செய்திகள் தரும் பதிவு.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 21. @ முத்துலெட்சுமி: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 22. # லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 23. @ ரேகா ராகவன்: தில்லிக்கு வாங்க! சாப்டுடுவோம்....

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. # இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 26. # வேங்கட ஸ்ரீனிவாசன்: கரோல் பாகில் நாம் இருக்கும்போது இருந்த ஹோட்டல்களில் முக்கால்வாசி மூடிவிட்டார்கள்.... ராமானுஜம் கூட முழுக்க முழுக்க தங்கும் விடுதி ஆகிவிட்டது.

  கர்நாடகா பவன், ஆந்திரா பவன், தமிழ்நாடு பவன்... இவற்றில் இருக்கும் ஓட்டல்கள் முன்பு இருந்தது போல் இல்லை..... ஆந்திரா பவன் கூட்டத்தில் சாப்பிடுவது கஷ்டம்....

  உனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

  பதிலளிநீக்கு
 27. @ குருநாதன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. தில்லி தமிழ் சங்கத்தில் ஹோட்டல் இல்லையே.... தில்லியைப் பொறுத்தவரை எந்த ஹோட்டலும் நிறைய நாட்கள் இருப்பதில்லை - பெரிய ஹோட்டல்கள் தவிர....

  தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. # சென்னை பித்தன்: வருகைக்கும், கருத்திற்கும், த.ம. வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. @ கோகுல்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 30. # பன்னிகுட்டி ராம்சாமி: எனது பக்கத்தில் உங்களது முதல் வருகை... தமிழ்நாடு பவன், ஆந்திரா பவன், கர்நாடக பவன் இவற்றிலும் அவ்வப்போது காண்டிராக்ட் மாறி விடுகிறது.... சுவை முன்போல இல்லை... :)

  தங்களது வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 31. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும், வாக்குகளுக்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 32. # ராம்வி: கையில காசு வாயில தோசை... :) இங்கே அப்படித்தான்... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @ ஸ்வர்ணரேக்கா: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  இங்கே எல்லாமே விலை அதிகம்தான்... ஒன்றும் செய்வதற்கில்லை... :(

  பதிலளிநீக்கு
 34. # அப்பாஜி: ராமானுஜம் இப்போது வெறும் தங்கும் விடுதி தான். நல்ல சிற்றுண்டி கிடைத்து வந்தது அங்கு. 1991-94 வரை மூன்று வருடங்களுக்கு மேல் காலையும் மாலையும் அங்கே தான் சிற்றுண்டியும் காபியும்.... ம்... மெஸ்கள் கூட குறைந்து விட்டது... பெரிய பெரிய ஹோட்டல்கள் வந்துவிட்டன...

  பதிலளிநீக்கு
 35. @ புதுகைத்தென்றல்: //ஹைதையிலும் அதே மொஹல் உணவுதான், தில்லியிலும் அதேதான். அப்படி இருக்க ருசி மாறுவது ஏன்? பில்லும் ஏறுவது ஏன்?”// ஏன்னா இது தலைநகர்.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 36. # அமுதா கிருஷ்ணா: இடம் பார்க்கவா? :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. @ தக்குடு: இரண்டு நாட்கள் தங்கி இருந்தீங்களா? சரி... இன்னும் நிறைய ஹோட்டல்கள் பற்றி எழுதி மக்களைக் கலங்கடிக்க வேண்டாமேன்னு தான்....

  தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 38. # MANO நாஞ்சில் மனோ: அடுத்த இந்தியப் பயணத்தின் போது தான நீங்க வர முடியும்! வாங்க.. பார்த்துடுவோம் ஒரு கை!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @ சேட்டைக்காரன்: மதறாஸ் ஹோட்டல் சாப்பாடு.... ஒன்றும் சொல்வதற்கில்லை.... நிறைய ஹோட்டல்கள் இப்போது இல்லை. ராமானுஜத்திலும் வெறும் தங்கும் வசதி தான் இப்போது.. முன்பெல்லாம் அங்கு காலை-மாலையில் சிற்றுண்டி கிடைக்கும்... அவற்றில் தான் எத்தனை சுவை....

  பதிலளிநீக்கு
 40. # திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: அமராவதி ஹோட்டல் ஆரம்பித்த புதிதிலேயே சாப்பிட்டு இருக்கேன்... அதற்கு ஒரு தனி கதை இருக்கிறது. பிறிதொரு சமயத்தில் அந்த அனுபவத்தினைப் பதிவிடுகிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. @ மாதேவி: சுவைத்திடுங்கள்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 42. # ரத்னவேல்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.....

  பதிலளிநீக்கு
 43. டெல்லியில் இட்லி க்கு ஏகப்பட்ட கடைகளை காட்டிவிட்டீர்கள்...ஆனா நாங்க வந்தா நேரா உங்க வீட்டுக்குத்தானே வருவோம்...

  சரவணபவன் மஸ்கட்டிலும் கடை விரித்துள்ளார்கள்...இங்கு சட்னி என்றாலே கொப்பரை தேங்காய் தான் எல்லாக் கடையிலும் ..எந்த நாட்டுக்கு / மாநிலம் போனாலும் சரவணபவ்னில் மட்டும் இளந்தேங்காய் சட்னி சிறப்பு....

  பதிலளிநீக்கு
 44. # பத்மநாபன்: சரவணபவன் சாம்பார்-மினி இட்லிக்கு என்றே ஒரு கும்பல் இங்கு இருக்கிறது .....

  தில்லி வந்தா எங்க வீட்டுக்குத்தானா.... ம்.... பார்க்கலாம்.... எப்ப வரீங்கன்னு :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. பயனுள்ள பகிர்வு. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 46. பயணங்களில், வடக்கத்திகள் இட்லி தோசைன்னு பெயர் எழுதிவச்சதும் என்னையறியாமல் அதுலே போய் விழுவேன். வாயில் போட்டதும் வண்டவாளம் தெரிஞ்சுரும். அப்பவாவது புத்தி வருமா? ஊஹூம்..... வேற ஊர்லே மறுபடி இதேதான்.

  ஆமாம்.... சரவணபவன் மூணு இடத்துலே முந்தி இருந்துச்சே. கரோல்பாகில் தேசபந்து குப்தா சாலையில் ஒன்னு.

  வம்பே இனி வேணாம். தில்லி வந்தால் அங்கே நமக்கு இப்ப ரெண்டு வீடு இருக்கு இட்லிக்கு:-))))))

  பதிலளிநீக்கு
 47. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி....

  பதிலளிநீக்கு
 48. # துளசி கோபால்: கரோல் பாக்-ல் இருந்த சரவணபவன் மூடிவிட்டார்கள் சில வருடங்கள் முன்பு.....

  இட்லி சாப்பிட இரண்டு வீடுகள் தில்லியில்.... வாங்க வாங்க!

  பதிலளிநீக்கு
 49. தமிழன் தடுக்கி விழறதே இட்லி சாம்பார்லதானே.. :-))

  மும்பையில் ஓரளவு பரவால்லை. உடுப்பி ருசியோட இனிப்பான சாம்பார் கிடைக்குது :-)

  தாமதமான நட்சத்திர வாழ்த்துகள் சகோ..

  பதிலளிநீக்கு
 50. வாழ்த்துக்கள் தமிழ்மண நட்சத்திரத்திற்கு.

  சுவையான அறிமுகங்கள்.

  பதிலளிநீக்கு
 51. திலக் நகர் அடையார் ஆனந்த பவன் மூடி மூனு நாலு மாசத்துக்கு மேல ஆச்சு சார்!!!!!!

  பதிலளிநீக்கு
 52. @ அமைதிச்சாரல்: //தமிழன் தடுக்கி விழறதே இட்லி சாம்பார்லதானே....:)//

  அதானே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாரல்...

  பதிலளிநீக்கு
 53. # கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 54. @ பாலச்சந்தர் திருமலை: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. திலக் நகர் A2B மூடிவிட்டார்களா.... அந்தப் பக்கம் சென்று நாளாயிற்று.... தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 55. ஸ்ரீ பாலாஜி என்றொரு உயர் தர தென்னிந்திய சைவ உணவகம் புது தில்லியில், ஆல் இந்திய மெடிக்கலுக்கு பின்புறம் கெளதம் நகர் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த நமது தமிழ் அன்பரால் நடத்தப்படுகிறது. அருமையான சுவையில் மிகவும் சுத்தமான உணவு கிடைக்கிறது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் சாபிடத்தூண்டும். அவர்களது போன் நம்பர் 08750917335, 8750917305.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட்.!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....