திங்கள், 10 அக்டோபர், 2011

தண்ணீர்ப் பற்றாக்குறை…
இந்தியா முழுவதுமே குடி தண்ணீர்ப்  பற்றாக்குறை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.  பல கிராமங்களில் குடி தண்ணீர்ப்  பிரச்சினை என்பது மிகவும் தலையாய ஒன்று.  ராஜஸ்தானின் சில கிராமங்களில் பெண்கள் 10-12 கிலோ மீட்டர் நடந்து சென்று நான்கு-ஐந்து குடங்கள் குடி தண்ணீர் எடுத்து வருகிறார்கள்

இந்தத் தண்ணீர்ப்  பற்றாக்குறை என்பது கிராமங்களில் மட்டுமே இல்லை, இந்தியத் தலைநகரிலேயே  இருக்கிறது.  முன்பெல்லாம் 15-20 அடிகளில் இருந்த நிலத்தடி நீர் இப்போது 200 அடிக்குக் கீழேதில்லி மாநகராட்சி நிலத்தடி நீரை உறிஞ்ச போடப்போடும் ஆழ்குழாய் கிணறுகளைத் தடை செய்திருக்கிறது

நகரத்தின் ஒரே தண்ணீர் ஆதாரமான யமுனை, புண்யநதி என்ற நிலையிலிருந்து சாக்கடை என்ற நிலைக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது!  அவ்வப்போது திடீரென தில்லி அரசுக்கு தண்ணீர் பிரச்சனையின் பூதாகாரம் புரியும்.  உடனே யமுனையைச் சுத்தம் செய்ய திட்டங்கள் போட்டு பல கோடி ரூபாய்க்கானப் பணிகளுக்கு ஏலம் விடுவார்கள்.  பல கோடிகளில் சில கோடிகள் போக வேண்டியவர்கள் பைக்குப் போகும்.  யமுனை இன்னமும் மோசமாக ஆகும்.


குடிக்கவும், குளிக்கவும், கழுவவும் தண்ணீர் தேவை என்பது நமக்குப் புரிந்த ஒன்று. சில உணவகங்களிலும், அலுவலகங்களிலும் இருக்கும் குழாய்களில் உணர்வி [SENSORS] வைத்திருப்பார்கள்.   கை கழுவ கையை நீட்டினால் தானாகவே தண்ணீர் வரும்.  சில சமயங்களில் அந்த உணர்வி சரியாக வேலை செய்யவில்லையெனில் தண்ணீர் வராது.  குனிந்து, நிமிர்ந்து, இரண்டு கைகளை பலமாய் நீட்டி தண்ணீருக்குக்காகக் காத்திருப்பது இயற்கை அன்னையிடம்அம்மா தாயே, தண்ணீர் பிச்சை போடுங்கம்மா!”  என்று கேட்பது போல, அதைப் பார்க்கும் எனக்குத் தோன்றும்

இருக்கும் நல்ல நிலத்தடி நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் பலவிதமான ரசாயனப் பொருட்கள் நமது நீர்நிலைகளில் நேரடியாகக் கலப்பதால், சுவை குறைந்து ரசாயனமாக மாறிக் கொண்டு வருகிறது.  குடி தண்ணீரில் ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி கிராம் ஃப்ளோரைட் இருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.  ஆனால் ஹரியானாவில் ஒரு லிட்டருக்கு 48 மில்லி கிராம், தலை நகர் தில்லியில் லிட்டர் ஒன்றுக்கு 32 மில்லி கிராம்!  விளைவு? இந்தியாவில் 14 வயதிற்குக் குறைவான 6 மில்லியன் குழந்தைகளுக்கு ஃப்ளோரைட் சம்பந்தப்பட்ட பல், எலும்புக் கோளாறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

எத்தனை நாட்களுக்குத் தான் இருக்கும் தண்ணீரை கவலையின்றி விரயமாக்குவோம்?  தண்ணீரை விரயமாக்காமல் சிக்கனமாய் செலவு செய்வோம்.  ”பணம் இருக்கிறதுபிஸ்லேரிதண்ணீர் வாங்கிக் கொள்வேன்என்று நினைக்காதீர்கள், அவர்களும் தண்ணீர் எடுப்பது நம் அன்னை பூமியிலிருந்துதானே!  அள்ள அள்ளக் குறையாமல் இருக்க அது என்ன அட்சய பாத்திரமா

தண்ணீர் அதிகம் செலவழிக்காமல் இருக்க கற்றுக்கொள்வோம்.  எங்கானும் தண்ணீர் குழாயிலிருந்து வீணாகக் கொட்டிக் கொண்டு இருந்தால்எனக்கென்ன வந்ததுஎன்று எண்ணாமல் அந்தக் குழாய்க்கு ஒரு அடைப்பான் வாங்கிப்  பொருத்துவோம்தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்க முடியுமோ அதற்க்கான வழிமுறைகளைக் கடைபிடிப்போம்!  மழை நீர் சேகரிப்பிற்கு ஆதரவு கொடுப்போம்!


நல்ல முயற்சிகள் எடுக்கவில்லையெனில் கழுவக் கூட கல்லைப் பயன்படுத்த வேண்டியகற்காலம் வெகு விரைவில் வந்து விடக்கூடிய அபாயம் நம் முன் நின்று கொண்டிருக்கிறது என்பதை உணர்வோம்!

மீண்டும் சந்திப்போம்!


வெங்கட்
புது தில்லி.பின் குறிப்பு-1: இந்தப் பதிவு ஒரு சிறப்புப் பதிவு.  இந்த வாரம் முழுவதும் தினம் தினம் ஒரு சிறப்புப் பதிவு என் பக்கத்தில் வரும்.  காரணம்….  என் மனைவி ஆதி வலைச்சரத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்று இருக்கும் இதே வாரத்தில் என்னையும் தமிழ்மணத்தில் ”இந்த வார நட்சத்திரம்” ஆக தெரிவு செய்து இருக்கிறார்கள்.  அதனால், தினம் தினம் என் பக்கத்திற்கு வந்து பதிவுகளைப் படித்து கருத்துகள் இட்டு, தமிழ்மணத்தில் வாக்கும் அளித்து ஆதரியுங்கள் நண்பர்களே…  


53 கருத்துகள்:

 1. தமிழ்மண நட்சத்திரத்திற்கும் வலைச்சர ஆசிரியருக்கும் மன்ம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்க முடியுமோ அதற்க்கான வழிமுறைகளைக் கடைபிடிப்போம்! மழை நீர் சேகரிப்பிற்கு ஆதரவு கொடுப்போம்!

  அருமையான விழிப்புணர்வு தரும் எச்சரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நட்சட்த்திர வாழ்த்துக்கள்.

  ”நீரின்றி அமையாது உலகு” என்பது தமிழ் மறை. அதை உணர்ந்து முதல் நட்சத்திரப் பதிவு இட்டதற்க்கு நன்றி.

  20/25 வருடம் முன்பு வரை யாராவது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று கூறியிருந்தால் அவரை ஒரு மாதிரி பார்த்திருப்போம். ஆனால், இன்றோ அதுதான் நிலைமை.

  பொதுவாக, மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வருமேயானால் அதன் முதல் காரணம் நீருக்காகத்தான் இருக்கும் என்று கூறுவது உண்டு. . அதைத் தவிர்க்கவாவது நீர் விரயப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. தமிழ்மணத்தில் நட்சத்திரம் பிரகாசித்து ஒளிவிடவும், வலைச்சரத்தில் சரம் சரமாய் தொடுக்கவும் இருவரையும் வாழ்த்துகிறோம்.

  தண்ணீர் சேமிப்பு பற்றிய உங்கள் பதிவு தில்லிவாசிகளுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் எச்சரிக்கை மணியடிக்கும் பதிவு. காகிதத்தை பயன்படுத்தலாம் என்றால் அதைக் காரணம் காட்டி எஞ்சி இருக்கின்ற மரங்களையும் வெட்டி விடுவார்களே! நீர் சேமிப்பும் மழைநீர் சேகரிப்புமே நம்மைக் காக்கும் என்று நன்றாகச் சொன்னீர்கள்.

  (ஆமா! நீங்கள் வெறும் ஸ்டாரா! இல்லை சூப்பர் ஸ்டாரா?)

  பதிலளிநீக்கு
 5. பலே பலே.. தம்பதி சமேதராய் பதிவுலகத்தை இந்த ஒரு வாரம் கலக்கப்போறீங்க.. வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 6. நல்ல விழிப்புணர்வு பதிவு வெங்கட்.

  தமிழ்மண ஆசிரியருக்கும், வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

  இருவரும் நல்ல பதிவுகள் தருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சிறப்பு பதிவுகளை படிக்க ஆவலாய் உள்ளோம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

  அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கேன்:-)

  பதிலளிநீக்கு
 8. வெங்கட்ஜீ! வாழ்த்துகள் பல! இதுக்குப் பேருதான் டபுள் போனான்ஸாவா...? :-)))

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வெங்கட் - தமிழ் மண நட்சத்திரமாகச் சொலிப்பதற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அருமை அருமை
  வலைச்சரத்திலும் தமிழ்மணத்திலும் தம்பதி சமேதராக
  வாய்ப்புக் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி
  ஜமாயுங்கள்

  பதிலளிநீக்கு
 11. முகப்புத்தகம் பார்த்து வந்தேன்... நட்சத்திர வீடாக மாறிவிட்டது...நீரின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த நீர் வாழ்க...

  பதிலளிநீக்கு
 12. நல்லாயிருந்துச்சு நண்பரே..தமிழ்மணத்தில் வோட்டும் போட்டாச்சு!!!

  பதிலளிநீக்கு
 13. தம்பதி இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  தண்ணீர் பற்றிய அருமையான விழிப்புணர்வுப் பதிவு.
  பாராட்டுக்கள்.

  //நல்ல முயற்சிகள் எடுக்கவில்லையெனில் கழுவக் கூட கல்லைப் பயன்படுத்த வேண்டிய ’கற்’காலம் வெகு விரைவில் வந்து விடக்கூடிய அபாயம் நம் முன் நின்று கொண்டிருக்கிறது என்பதை உணர்வோம்!//

  அச்சச்சோ!

  தமிழ்மணம் 11 vgk

  பதிலளிநீக்கு
 14. very good article... creating awareness among the readers abt. the scarcity of water. everything true.... congrats...

  பதிலளிநீக்கு
 15. ஒரு சிறந்த அப்திவு பாராட்டுகள் எதிர்காலத்தில் இந்த உலகத்தில் தண்ணீருக்காக உலக போரேஉண்டாக்க வாய்ப்பு உண்டு என கூறுகிறார்கள் இந்த சமயத்திலாவது தண்ணீரின் உண்மை நிலையை அறிவோம் எலும்பு நோவுகளில் இருந்து இந்த உலகத்தை விடுவிப்போம் ...

  பதிலளிநீக்கு
 16. "நட்சத்திர ஆசிரியர்" ஆக இல்லத்து அமைச்சருக்கு வாழ்த்துக்கள்....
  >>>>>>>>>>>>>>>தண்ணீர் என்றதும் கண்ணீர் வந்து விட்டது...பழைய நினைவுகள்...
  எங்கள் தந்தையார் சொந்த ஊர்....விருத்தாசலம் அருகில்....ஆலடி ...என்ற சிறு கிராமம்...
  1960 - களில் நெய்வேலியில் லிக்னைட் எடுத்த காரணத்தால்...Ground Water Level....குறைந்து...
  அவ்வளவு நிலங்களையும்....வந்த விலைக்கு...விற்று விட்டு...(இன்று போல்..அன்று ஆழ் துளை
  கிணறு வசதி கிடையாது...) கடலூருக்கு வந்து விட்டார்...<<<<<<<<<<<<<<<<<<<இன்றும் ராஜஸ்தானில்
  சில இடங்களில்...குளித்த நீரை....துணி துவைக்க, பாத்திரம் கழுவ என recycle செய்கிறார்கள்...
  அதுவும் இல்லாத பொழுது ...கழுவதற்கு...கல்லை அல்ல....மண்ணை...பயன் படுத்துகிறார்கள்...
  எனவே....சேமிப்போம்...தண்ணீரை...நேசிப்போம்...இயற்கையை ..!!!!! - அப்பாஜி, கடலூர் -N.T.

  பதிலளிநீக்கு
 17. நட்சத்திரமாய் என்றும் ஜொலிக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. ஆகா பெருமைக்குரிய செய்தி!
  இரட்டை வாழ்த்துக்கள்!
  தங்கள் துணைவியாருக்கும் என் வாழ்த்துக்கள்!
  சிறக்க இருவர் பணியும்!
  இன்றைய தங்கள் பதிவு இன்றியமையாத ஒன்று
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 19. @ இராஜராஜேஸ்வரி: பதிவிட்ட உடனே படித்து கருத்துரை இட்டமைக்கும், வாழ்த்துகளை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. # வேங்கட ஸ்ரீனிவாசன்: “நீரின்றி அமையாது உலகு” சரியான வாக்கு சீனு. நீரின் அவசியத்தை உணராமலே இருக்கிறோம்...

  உன்னுடைய வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிடா..

  பதிலளிநீக்கு
 21. @ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... மரங்களையும் தான் தொடர்ந்து அழிச்சுட்டே வராங்களே...

  வெறும் ஸ்டாரா இல்ல சூப்பர் ஸ்டாரா? கேட்டீங்களே ஒரு கேள்வி.....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி..

  பதிலளிநீக்கு
 22. # RVS: ஆமாம் மைனரே... இரண்டு பேருக்கும் ஒரே வாரத்தில் பொறுப்புகள் அமைந்து விட்டது...

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைனரே...

  பதிலளிநீக்கு
 23. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா..

  அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முயல்கிறேன்....

  பதிலளிநீக்கு
 24. # துளசி கோபால்: தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி டீச்சர்... தினமும் பதிவிடுவது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.... ஆனாலும் செஞ்சுடுவோம்....

  தங்களுடைய வருகைக்கு நன்றி. உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன்....

  பதிலளிநீக்கு
 25. @ கே.பி. ஜனா: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார்....

  பதிலளிநீக்கு
 26. # சேட்டைக்காரன்: டபுள் போனான்சா! ஆமாம்...

  தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேட்டை...

  பதிலளிநீக்கு
 27. @ cheena (சீனா): தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 28. # ரமணி: தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பதிவுகளைப் படித்து கருத்திடுங்கள்.....

  பதிலளிநீக்கு
 29. @ பத்மநாபன்: என் வலைப்பூ அவ்வப்போது முரண்டு பிடிக்கிறது, தொடர்பவர்களின் டேஷ்போர்டில் அப்டேட் ஆகாமல்... அதனால் தான் முகப்புத்தகத்திலும் லின்க் கொடுக்கிறேன்...

  தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும், மிக்க நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
 30. # விச்சு: தங்களது முதல் வருகை.... மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து வந்து படியுங்கள்...

  தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 32. # கண்ணன் வருவான்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 33. @ வெளங்காதவன்: தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 34. # மாலதி: தங்களுடைய வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. @ அப்பாஜி: தங்களது வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நிலத்தடி நீரில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மை...

  பதிலளிநீக்கு
 36. # ஷைலஜா:
  @ அப்பாதுரை:

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. # புலவர் சா. இராமானுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவரே....

  பதிலளிநீக்கு
 38. த‌ங்க‌ளுக்கும் துணைவியார் ஆதிக்கும் ம‌கிழ்வான‌ வாழ்த்துக‌ள் ச‌கோ...! முத‌ல் ப‌திவே அத்தியாவ‌சிய‌மான‌தாகிற‌து. ஜொலிக்கும் ந‌ட்ச‌த்திர‌மாய் சிற‌ப்புப் ப‌திவு.

  பதிலளிநீக்கு
 39. நல்ல பதிவு. எனக்கும் தண்ணீரை வீணாக்குபவர்களை கண்டால் கோபம் வரும்

  பதிலளிநீக்கு
 40. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், எங்கள் இருவருக்கும் சொன்ன வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 41. # மோகன்குமார்: //தண்ணீரை வீணாக்குபவர்களை கண்டால் கோபம் வரும்// எனக்கும்தான் மோகன்..

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 42. நல்ல பதிவு.தண்ணீரை கட்டயமாக வீணாக்க கூடாதுதான்.
  வாழ்த்துக்கள் வெங்கட் தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு.

  பதிலளிநீக்கு
 43. வாழ்த்துக்கள் இரண்டு.இல்லமும் மகிழ்ந்திருக்கும்.
  மிக்கமகிழ்ச்சி.

  தண்ணீர் பற்றி மிகவும் பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 44. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சகோ...

  தினம் தினம் இரு பதிவுகள் வரும்... தினமும் படியுங்கள்...

  பதிலளிநீக்கு
 45. # மாதேவி: தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 46. பயனுள்ள பகிர்வு.. "தண்ணீர்ப் பிச்சை" அருமையா சொல்லியிருக்கீங்க.. நிறைய சமயங்கள்ல அப்படித்தான் தோணுது :-))

  பதிலளிநீக்கு
 47. @ அமைதிச்சாரல்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாரல்....

  பதிலளிநீக்கு
 48. //என் மனைவி ஆதி வலைச்சரத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்று இருக்கும் இதே வாரத்தில் என்னையும் தமிழ்மணத்தில் ”இந்த வார நட்சத்திரம்” ஆக தெரிவு செய்து இருக்கிறார்கள். //

  மிக்க மகிழ்ச்சி. இது ஓர் அரிய நிகழ்வு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 49. @ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....