வெள்ளி, 21 அக்டோபர், 2011

பூங்கொத்துடன் வரவேற்பு:

[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி14] 
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4 5  6  7  9   10   11   12 13)


டிக்ரா அணைக்கட்டின் அருகில் நாங்கள்  மதிய உணவை முடித்ததும் எங்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய வண்டிகள் இரண்டு மணி நேர பயணம் கழித்து ஷிவ்புரியில் சேர்த்ததுஅன்று இரவு நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த Madhya Pradesh Tourist Village, Shivpuri தான் நாங்கள் சேர்ந்த இடம்


இறங்கி அறை சாவிகள் வாங்குவதற்கு முன்னர் லாபியில் எல்லோரும் அமர்ந்திருந்தோம்.  வந்திருந்த அனைவருக்கும் ராஜ வரவேற்பு தான்ஒவ்வொருவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார் அந்த தங்குமிடத்தின் நிர்வாகி.  பரவாயில்லையே இப்படி கூட வரவேற்கிறார்களே என்று  எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.
 
வரவேற்பு, அறிமுகங்கள் எல்லாம் முடிந்தபிறகு சிப்பந்திகள் அவரவர் அறைகளில் எங்கள் பைகள் மற்றும் பெட்டிகளைக் கொண்டு சேர்க்க, அரை மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு தேநீர் அருந்தி விட்டு ஷிவ்புரியில் இருக்கும்சத்ரிபார்க்கத் தயாரானோம்.


ஆனால் வருணபகவானின் நோக்கம் வேறாக இருந்தது.  மழை பொழிய ஆரம்பிக்கவே லாபியில் காத்திருந்தோம்.  10-15 நிமிடங்களுக்குள் மழை நின்றுவிட்டது போல தோன்றவே  விரைவில் வண்டிகளில் சென்று அமர்ந்து கிளம்பினோம் வருணபகவானின் விளையாட்டை புரிந்து கொள்ளாமல்

நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து 15 நிமிட தூரத்தில் இருக்கிறது சத்ரி.  வண்டிகளில் எல்லோரும் அமர்ந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்திலேயே பெருமழை தொடங்கிவிட்டது. “விடாது கருப்புஎன்பது மாதிரி நாங்களும் விடாது பயணித்துசத்ரிசென்றடைந்தோம்.  வண்டிகளை விட்டு எவரும் இறங்க முடியா அளவு மழைஅதனால் 15-20 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு தங்குமிடம் திரும்ப முடிவு செய்தோம். 
மாலை முழுவதும் எங்களுக்காய் காத்திருந்தது.  என்ன செய்ய என்று குழம்பியபோது, தங்குமிடத்தில் பொழுதுபோக்கிற்காக, டேபிள் டென்னிஸ், கேரம், மற்றும் செஸ் விளையாட ஒரு அறை இருக்கிறது என சொல்லவே, நாங்கள் அங்கு சென்று டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம்

நன்கு விளையாடி வேர்க்க விறுக்க அறையின் சாவி வாங்க வந்தபோது, “நீச்சல் குளம்பற்றி சொல்லி, ”நீங்கள் அதை உபயோகிக்கலாமேஎனச் சொல்ல, நான் மற்றும் சில நண்பர்கள் அங்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் கும்மாளம் தான்….  எனக்கு பிரச்சனையில்லை.  குளத்தின் அதிகமான ஆழமே ஐந்து அடிதான்ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் குளியலை ரசித்து அறைக்குச் சென்றோம்

அறைக்குச் சென்று மீண்டும் குளித்து அறையின் வழியே வெளியே பார்த்தால் பின்புறம்சாக்யா சாகர்” [Sakhya Sagar] ஆற்றின் அழகிய தோற்றம்.  அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு.  ஆற்றின் அந்தப் பக்கத்தில் அமைந்திருப்பது தான்மாதவ் தேசிய பூங்காஎன்ற பெயர் கொண்ட வனவிலங்குகள் சரணாலயம்


இரவு உணவு முடித்து, ஆற்றினை நோக்கி இருக்கும் கண்ணாடிச் சுவற்றினை மறைத்திருக்கும் திரைச்சீலைகளை விலக்கி ஆறு மற்றும் அட்ர்ந்த காடுகளைப் பார்த்தபடியே இரவினைக்  கழித்தோம்.  மறு நாள் காலை சீக்கிரமாகவே கிளம்பி நம் விலங்கு நண்பர்களைப் பார்க்கப் போக வேண்டும்.  ஒரு புலிகூட இருக்கிறதாம் அங்கே.  நம் கண்ணுக்குத் தென்படுகிறதா இல்லை நாம் வருவோம் என பயந்து ஒளிந்து கொண்டு விடுகிறதான்னு பார்க்கணும்.

நிஜ மான்களை பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு படுத்ததாலோ என்னவோ தெரியவில்லை, கனவில் மானே மானே, உன்னைத்தானே!” பாட்டு.

வனவியல் பூங்காவில் சந்திப்போம்

நட்புடன்
வெங்கட்.
35 கருத்துகள்:

 1. நிஜ மான்களை பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு படுத்ததாலோ என்னவோ தெரியவில்லை, கனவில் “ஓ மானே மானே, உன்னைத்தானே!” பாட்டு.


  அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ”சத்ரி” பார்க்கத் தயாரானோம். ஆனால் வருணபகவானின் நோக்கம் வேறாக இருந்தது. மழை பொழிய ஆரம்பிக்கவே//

  வருண பகவானின் நோக்கம் சரிதான். ஏனென்றால் மழை இல்லையென்றால் “சத்ரி” எதற்கு? அதான்.

  பதிலளிநீக்கு
 3. மழையில் நனையும் குடைப்படம் ரொம்ப அழகாயிருக்கு.

  மழைக்காலங்கள்ல இதான் ஒரு பிரச்சினை. சுத்திப் பார்க்க முடியாம அறைக்குள்ளயே இருந்து மழையை ரசிக்க வேண்டியதுதான் :-)

  பதிலளிநீக்கு
 4. பூங்கொத்து மழையுடன் கூடிய போட்டோ
  அறையிலிருந்து லேக்கின் படம்
  அனைத்தும் அசத்தல்
  நேரடியாகப் பார்ப்பதைப் போலவே இருக்கிறது
  தொடர வாழ்த்துக்கள் த.ம 4

  பதிலளிநீக்கு
 5. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 6. கனவில் “ஓ மானே மானே, உன்னைத்தானே!” பாட்டு//

  -:)

  பதிலளிநீக்கு
 7. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //“மழை” இல்லையென்றால் சத்ரி எதற்கு?// :))) அதானே...

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

  பதிலளிநீக்கு
 9. @ அமைதிச்சாரல்: அடுத்த நாள் விடாக்கொண்டனா பார்த்துட்டோமே.... வரும் பகுதிகளில் அது பற்றி சொல்கிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. புகைப்படங்கள் நான் எடுத்தது. அவற்றைப் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. @ அருள்: தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. சுற்றுலா செல்வது பெரிதல்ல எடுத்த சொல்வது
  பெரிது!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 14. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 15. த.ம.7
  டூரிஸ்ட் வில்லேஜ் பிரமாதமா இருக்கே!
  படிக்கும்போதே பார்த்த திருப்தி!

  பதிலளிநீக்கு
 16. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஹோட்டலில் வரவேற்பு....பூங்கொத்தோடு.!..இயற்கையின் வரவேற்பு....மழையோடு..!!
  //....கனவில் “ஓ மானே மானே, உன்னைத்தானே!” ....//...நினைவில்...நிஜ மான்!!

  பதிலளிநீக்கு
 18. @ அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாஜி!

  பதிலளிநீக்கு
 19. //எனக்கு பிரச்சனையில்லை. குளத்தின் அதிகமான ஆழமே ஐந்து அடிதான். //

  :-))

  பயணமே ஒரு சுவை என்றால் உங்க பயணக் கட்டுரைகள் அதையும் தாண்டி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ...

  பதிலளிநீக்கு
 20. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், தீபாவளி வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ...

  உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 21. நம் விலங்கு நண்பர்களைப் பார்க்கப் போக வேண்டும். ஒரு புலிகூட இருக்கிறதாம் அங்கே. நம் கண்ணுக்குத் தென்படுகிறதா இல்லை நாம் வருவோம் என பயந்து ஒளிந்து கொண்டு விடுகிறதான்னு பார்க்கணும்./

  நம் விலங்கு நண்பர்களைப் பார்க்க என்று போட்டு விட்டீர்கள். நண்பர்கள் பயந்து ஒளிந்து கொள்வார்களா? உங்களிடம் வந்து கை குலுக்கி நன்கு பேசி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. @ கோமதி அரசு: //உங்களிடம் வந்து கை குலுக்கி நன்கு பேசி இருப்பார்கள் என நினைக்கிறேன்.// பார்க்கலாம்.... அடுத்த பகுதியில் தெரிந்து விடுமே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 23. விடாது சிறப்பான பயணம்,அருமை.
  Madhya Pradesh Tourist Village, Shivpuri மற்றும் சாக்ய சாகர் படங்கள் மிக அழகு,வெங்கட்.

  பதிலளிநீக்கு
 24. @ ராம்வி: தங்களது வருகைக்கும், பகிர்வினை ரசித்தமைக்கும், புகைப்படங்களை பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 25. @ "என் ராஜபாட்டை” ராஜா: தங்களது வருகைக்கும் பகிர்வை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. ராமானுஜம் சார் சொல்வது போல் செல்வது எளிது..சொல்வது தான் கடினம்..அதை அழகாய் செய்திருக்கிறீர்கள்...
  இப்படிக்கு,
  ஸ்கூல் லைஃபில் பயண கட்டுரைக்கு பயந்து கொண்டு, நிறைய பயணங்களை கோட்டை விட்ட....

  அன்பன்,
  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 27. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: //ஸ்கூல் லைஃபில் பயணக் கட்டுரைக்கு பயந்து கொண்டு, நிறைய பயணங்களை கோட்டை விட்ட....// :))) இது நல்லா இருக்கு....

  பயணம் செய்து முடித்தவுடனே எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டால் பொறுமையாக ஒவ்வொன்றாய் பகிர்ந்துவிடலாம்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மூவார்....

  பதிலளிநீக்கு
 28. @ முத்துலெட்சுமி: தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி...

  பதிலளிநீக்கு
 29. @ ராம்வி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. காலங்காலமாக பயண இலக்கியம் பற்றி வெகு குறைவான வெளியீடுகளே வந்துள்ளன. இருப்பினும் பயண இலக்கியம் இன்றைய தேவையான இலக்கியத் தேடல்களில் முக்கியமானது. நன்றாக இருக்கிறது உங்களின் தொடர். தொடர்ந்து படிப்பேன். எழுதுங்கள். உங்கள் நடை இயல்பாகப் போகிறது தடங்கலின்றி வாசிக்க. வாழத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. @ ஹரணி: தங்களது வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹரணி சார். தங்களது பாராட்டுகள் என்னை மகிழ்வித்தது. இந்தத் தொடரில் இன்னும் பத்துப் பன்னிரெண்டு பகுதிகள் இருக்கின்றன. வாரம் ஒன்றாக வெளியிட இருக்கிறேன்....

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....