எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, September 22, 2011

கோட்டையில் ஒலியும் ஒளியும்:
மாலை 07.30 மணி.  கோட்டையை  சுற்றி இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன.  எங்கள் குழுவில் உள்ள பதினான்கு பேர் தவிர இன்னுமொரு இருபது பேர் கூட்டத்தில் இருந்தார்கள்.  படிக்கட்டுகளில் எங்களுக்கென விரிக்கப்பட்டிருந்த நீளமான பாய்களில் அமர்ந்திருந்தோம்

நிசப்தமான அந்த வெளியில், ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கப்பட்டு கோபாச[cha]ல் என்கிற சூத்ரதாரி மூலம் கதை சொல்லப்படுகிறது.  அந்த சூத்திரதாரியின் குரலாய் ஒலிப்பது அமிதாப் பச்சன் அவர்களின் கம்பீரமான குரல்

அவரது குரலில், ஆங்காங்கே எரியும் விளக்குகளில் இக்கோட்டையில் நடந்த நிகழ்வுகள் பலவும் உயிரூட்டம் பெற்று, நம் கண்முன்னே நடந்தேறுவது போல  விரிகிறது. பார்க்கும் எல்லோரையும்  குவாலியர் நகரம் தோன்றும் காலத்திற்கு  அழைத்துச் செல்கிறது இக்காட்சி.

ராஜ்புத் அரசர் சூரஜ் சென் வேட்டைக்குப் புறப்பட்டு வழி தவறி தனியாய் மலைகள் சூழ்ந்த காட்டுக்குள் வருகிறார்.  அவருக்கு தொண்டை வறண்டு, ஒரு துளி தண்ணீர் கிடைத்தால் கூட தனது ராஜ்ஜியத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு தண்ணீர் தாகம்அப்படி தாகத்துடன் வந்து கொண்டு இருக்கும்போது, யாருமே இல்லாத அக்காட்டில் அவர் சந்திப்பதுகுவாலிபாஎன்கிற முனி ஸ்ரேஷ்டரை

தன்னுடைய தண்ணீர் தாகத்தினைச் சொல்லி தண்ணீர் கிடைக்குமா எனக்கேட்ட மன்னர் சூரஜ் சென் அவர்களுக்கு முனிவர் வழி நடத்திச் சென்று காண்பித்தது ஒரு குளம்குளத்தில் இறங்கி தாகம் தீர அவர் குடித்தது குளிர்ந்த, சுவை மிகுந்த, மருத்துவ குணம் நிறைந்த நீர்.  என்ன ஆச்சரியம்…  அவருக்கு நீண்ட நாட்களாய் இருந்த தொழுநோய் நீங்கியதாம் அந்தத் தண்ணீரை அருந்தியவுடன்

நன்றிக்கடன் செலுத்த விரும்பிய மஹாராஜா, முனிவரின் விருப்பத்திற்கிணங்க, அங்கேயே ஒரு பெரிய குளம் கட்டி, பக்கத்திலேயே கோட்டையையும் கட்டி, அந்த நகரத்தின் பெயரையும் முனிவரின் பெயரை மூலமாகக் கொண்டு குவாலியர் என்று வைத்தாராம்இக் கோட்டையைச் சுற்றி நிறைய மாளிகைகளும், கோவில்களும் கட்டி இருக்கின்றனர் ராஜ்புத் அரசர்கள்

இப்படி இருந்த சந்தோஷமான வாழ்க்கையில் தீங்கு வந்தது துருக்கிய படையெடுப்பின் மூலம். அதன் பிறகு முகம்மது கஜினி மற்றும் மற்ற முகலாய ராஜாக்களின் படையெடுப்புகள் பற்றி அவ்வளவு அழகாய் இந்த ஒலி-ஒளிக்காட்சியில் காண்பித்தார்கள்.  அதிலும் முக்கியமாய் ஒரு காட்சி.

முகலாய மன்னர்கள் ராஜ்புத் மன்னர் மீது படையெடுக்க, அவர்கள் தோற்கும் நிலையில் மன்னரின் மனைவிகள், அரண்மணையில் இருந்த பெண்கள் அனைவரும்ஜௌஹர்என்ற அரண்மணையின் பகுதியில் ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதனுள் பாய்ந்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டநிகழ்ச்சி பற்றிய காட்சிகளை ஒலியும், ஒளியும் கொண்டு நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.   மாண்ட பெண்களின் அழுகுரல்கள், கேட்கும் எல்லோரையும் வருத்தியது உண்மை.

தோல்வி ஏற்பட்டாலும் சில காலத்திற்குப் பின் தோமர்கள் இக்கோட்டையில் கோலோச்சுகிறார்கள்.  தோமர்கள் காலத்தில் தான் குவாலியர் சிறந்து எல்லா இடங்களிலும் தன்னுடைய புகழைப் பரப்பிக் கொண்டு இருந்ததாம்.  தோமர்களில் மிகவும் புகழ் பெற்ற ராஜா மான்சிங் காலத்தில் நடந்த சில இனிமையான நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த ஒலி-ஒளி காட்சியில் 10 நிமிடத்திற்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள்

அக் கதையில் ராஜா மான்சிங் காதல் கதையும் வருகிறது.  காதல் நம் எல்லோருக்குமே பிடித்தது தானே.  அக்காதலும் மற்ற சுவையான விஷயங்களும் அடுத்த பகுதியில்… அதுவரை நீங்கள் காதலித்துக் கொண்டு இருங்கள், கல்யாணம் ஆனவர்கள் எனில் தத்தமது கணவன்/மனைவியை. ”கல்யாணம் ஆகாதவர்கள்?” எனக் கேட்பவர்களுக்கு, வரப் போகும் வாழ்க்கைத் துணை பற்றிய கனவில் இருங்கள்

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.


46 comments:

 1. வெங்கட்ஜீ! இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ-ன்னு தோணுது. கோர்வையாக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கீங்க ஜீ!

  ReplyDelete
 2. @ சேட்டைக்காரன்: வாங்க சேட்டை. இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். ஒலி-ஒளி காட்சியில் சொன்ன சில விஷயங்கள் தான் அடுத்த பகுதியில் தொடர்கிறது...

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டைஜி!

  ReplyDelete
 3. சுவையான தகவல்கள். நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. # வை. கோபாலகிருஷ்ணன்: பாராட்டிய உங்களுக்கு எனது நன்றி.

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. ரொம்பவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்! அதுவும் அமிதாப் பச்சனின் குரல் என்றால் கதை நடந்த அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடும் வசீகரத்தன்மை உடையது! தமிழ் நாட்டை விட்டு வெளியில் செல்ல‌ச் செல்ல, இந்தியாவின் எத்தனை கதைகளை நாம் அறிந்து கொள்ள‌ முடிகிற‌து!
  அனுபவப் ப‌கிர்வுக்கு இனிய நன்றி!

  ReplyDelete
 6. ஒலியும் ஒளியும் என்றாலே நம்ம அமீதாபின் குரல்தான் அத்தாரிட்டின்னு இருக்கு போல! கோல்கொண்டா கோட்டையிலும் சோம்நாத் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் அமிதாபின் கம்பீரமான குரல்தான் கேட்டேன்.


  அருமையான பதிவு. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
 7. அமிதாப் குரலிலா? அமர்க்களமா இருந்திருக்கும். அவர் குரலின் வசீகரமே தனி..

  ReplyDelete
 8. நாங்களும் அங்கியே உக்காந்திருப்பதுபோல ஒரு பிரமை ஏற்பாட்டது. அவ்வளவு சுவாரசியமான பகிர்வு.

  ReplyDelete
 9. ஆங்காங்கே எரியும் விளக்குகளில் இக்கோட்டையில் நடந்த நிகழ்வுகள் பலவும் உயிரூட்டம் பெற்று, நம் கண்முன்னே நடந்தேறுவது போல விரிகிறது//

  அமர்க்களமாய் ஏற்கெனவே க்ண்டு ரசித்த காட்சிகளை கண்முன் கருத்தில் கொண்டுவந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. குவாலியர் பெயர்க் காரணம் இதுவரை கேள்விப் படாதது. எங்களையும் அப்படியே ஒலியும் ஒளியும் காண அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்று! நன்று!

  //அதுவரை நீங்கள் காதலித்துக் கொண்டு இருங்கள்//

  ஏனய்யா வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்.

  ReplyDelete
 11. @ மனோ சாமிநாதன்: அமிதாப் அவர்களின் குரல் வசீகரம்.... என்ன சொல்வது... வார்த்தைகள் வரவில்லை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. # துளசி கோபால்: நிறைய இடங்களில் அமிதாப் பச்சன் அவர்கள் குரல் தான் ஒலி-ஒளி காட்சிகளில்...

  அடுத்த பகுதியும் சீக்கிரமே போட்டு விடுகிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. @ கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. # லக்ஷ்மி: ரசித்து படித்தமைக்கு நன்றிம்மா...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 15. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 16. # ஈஸ்வரன்: அட வயித்தெரிச்சல் வந்துடுச்சா! சாரி அண்ணாச்சி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  ReplyDelete
 17. நீங்க பாட்டுக்கு பாக்க வேண்டிய இடங்கள் லிஸ்ட்ல ஒவ்வொரு ஊரா சேத்துட்டே போறீங்க.. நேரம் மற்றும் பணத்திற்கு தான் வழி பண்ணணும்!

  ReplyDelete
 18. பார்த்ததை கேட்டதை அழகா பகிர்ந்துள்ளீர்கள்.வீடியோ கிளிப்பிங் ஏதாவது இருந்தால் இணையுங்கள்.

  ReplyDelete
 19. @ ப[B]ந்து: அடடா! ஆமாம் நேரம் மற்றும் பணத்திற்கு வழி பண்ணத்தான் வேண்டியிருக்கும்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 20. # திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நாங்கள் கொன்டு சென்றது எல்லாமே டிஜிட்டல் கேமரா என்பதால் இரவில் வீடியோ அவ்வளவு நன்றாக வராது என்பதால் எடுக்கவில்லை. யூட்யூப்-ல் சில நிமிடங்கள் காணொளி இருக்கிறது. ஆனால் அவ்வளவு நன்றாக இல்லை....

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 21. சுவையான தகவல்கள்... நல்ல பதிவு...

  ReplyDelete
 22. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 23. நல்ல விவரிப்பு. புத்தகமாய் தொகுக்க பொருத்தமா இருக்குனு தோணுது. தொடருங்கள்

  ReplyDelete
 24. குவாலியர் கோட்டையை பற்றி அருமையான தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 25. @ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 26. # அப்பாவி தங்கமணி: //புத்தகமாய் தொகுக்க பொருத்தமா இருக்குனு தோணுது// ம்... என்ன சொல்கிறது... மிக்க நன்றி சகோ...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. //அக் கதையில் ராஜா மான்சிங் காதல் கதையும் வருகிறது. காதல் நம் எல்லோருக்குமே பிடித்தது தானே.//

  LOVE by knowing the real meaning of it...

  ReplyDelete
 28. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 29. உங்கள் வார்த்தைகளில் காட்சிகள் கண் முன்னே விரிகிறது. சேட்டையை வழிமொழிகிறேன்!! :-))

  ReplyDelete
 30. நல்ல வர்ணனை. மிகவும் ரசித்தேன்,

  ReplyDelete
 31. சுவையான தகவல்கள்

  ReplyDelete
 32. # RVS: // சேட்டையை வழிமொழிகிறேன்!! :-))//

  சேட்டைக்கு சொன்ன பதிலே உங்களுக்கும். ஒலி-ஒளியில் வந்த சில காட்சிகள் அடுத்த பகுதியில்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே...

  ReplyDelete
 33. அமிதாப் குரலே வா? அவர் குரலில் மிமிக்ரியா ?

  ReplyDelete
 34. @ DrPKandaswamyPhD: ரசித்தமைக்கு நன்றி ஐயா.

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. # கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலாநேசன்.

  ReplyDelete
 36. @ மோகன் குமார்: அமிதாப் குரலேதான் மோகன். மிமிக்ரி இல்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 37. ராஜாக்களின் காலத்துக்கே கொண்டு போய்விட்டீர்கள், முடிந்தால் மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் வாங்கி படியுங்கள் அதிலும் ராஜ்புத் மன்னர்கள் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார்...

  ReplyDelete
 38. # MANO நாஞ்சில் மனோ: ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது படித்தது. இப்போது அவ்வளவாக நினைவில்லை. மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது உங்கள் பின்னூட்டம். வாங்குகிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

  ReplyDelete
 39. சுவாரஸ்யமாகச் சொல்லீருக்கிறீர்கள்.

  ReplyDelete
 40. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  ReplyDelete
 41. உங்கள் பதிவு நன்றாக உள்ளது. தொடருங்கள் பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 42. # கோவைக்கவி: உங்களது முதல் வருகைக்கு முதலில் எனது நன்றி.

  எனது பதிவினைப் படித்து பாராட்டியமைக்கும் அழகிய கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. ஒலி ஒளி காட்சி விரிகிறது...

  ReplyDelete
 44. குவாலியர் கோட்டையின் கதை அறிந்து கொண்டேன் நன்றி.

  முந்தைய பயண பதிவுகளையும் படிக்க வேண்டும்,
  22ம் தேதிதான் ஊரிலிருந்து வந்தேன். இன்றுதான் நெட் சரியாக வேலை செய்கிறது.

  ReplyDelete
 45. @ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

  ReplyDelete
 46. # கோமதி அரசு: உங்கள் பயணம் எப்படி இருந்ததும்மா! நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....

  என்னுடைய மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் என்று சொன்னதே மகிழ்ச்சியாக இருக்கிறது. படித்தபின் உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....