Himachal Pradesh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Himachal Pradesh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 நவம்பர், 2017

நட்டி என்றொரு ரம்யமான கிராமம் - தரம்ஷாலா!

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 4

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2 பகுதி-3

மலைப்பாதையும், மலைத்தொடரும்...

பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்.....

தங்குமிடம் கிடைத்ததும், ஒவ்வொருவராகத் தயாராவதற்குள் தங்குமிட உரிமையாளரிடம் பேசி அன்றைய தினத்தின் பயணத்திற்காக வண்டி தேவை என்றோம். அவர் தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு அலைபேசியில் அழைத்தார். என்னதான் ஹிமாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கேயும் நிறைய சர்தார்ஜிகள் உண்டு. ஹிமாச்சல பிரதேசத்தில் பேசும் மொழிகளில் பஞ்சாபியும் உண்டு! பகாடி என அழைக்கப்படும் மலைப்பகுதி மொழியும் உண்டு. அன்றைய தினம் வேண்டிய வாகனத்தினை அந்த நண்பர் அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட்டார். வாடகையும் சரியாகவே தோன்ற வண்டியை காலை ஒன்பது மணிக்குள் அனுப்பி வைக்கச் சொன்னோம். அதற்குள் அனைவரும் குளித்து தயாராகி விட எங்கள் சுற்றிப் பார்க்கும் படலம் ஆரம்பித்தது! நீங்களும் சுற்றிப் பார்க்க ரெடி தானே? 

வெள்ளி, 3 நவம்பர், 2017

பிட்டூ சுமந்த கதை – காஷ்மீரிலிருந்து தரம்ஷாலா!

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 3

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2

பிரதான சாலைக்கு பின் சாலை! 

தரம்ஷாலா – மலைப்பகுதி என்றால் சாலைகள் எல்லாமே ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும், அந்த மலைப்பகுதியில் இறங்கி தங்குமிடம் தேட வேண்டும் என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான் – அதுவும் முதுகுச் சுமையோடு. நாங்கள் ஐந்து பேர் என்பதால், மூன்று பேர் எங்கள் உடைமைகளை வைத்துக்கொண்டு ஓரிடத்தில் காத்திருக்க, மற்ற இருவர் தங்குமிட வேட்டையைத் துவங்கினோம். வட இந்திய நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் பின்னிரவு தூங்கி நண்பகலில் விழிப்பவர்கள்! காலை நேரங்களில் சாலைகளில் நடமாட்டம் குறைவாகத் தான் இருக்கும். தங்குமிடங்கள் சிலவற்றின் வாசல் கம்பிக் கதவுகள் பூட்டி இருக்க, உள்ளே சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில்! கதவைத் தட்டினாலும் எழுந்திருக்கவில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையுடைய தங்குமிடம் இருக்க அவர்கள் சொன்ன அறை வாடகை எங்களுக்கு ஒத்து வராது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.

புதன், 1 நவம்பர், 2017

எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 2

முதல் பகுதி படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1

படம்: இணையத்திலிருந்து...

தரம்ஷாலா செல்வதற்கு Lakshmi Holidays என்ற நிறுவனத்தின் Volvo பேருந்தில் தான் முன்பதிவு செய்திருந்தோம். நாங்கள் அனைவரும் பேருந்து புறப்படும் என்று சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே புறப்படும் இடத்தில் காத்திருக்க பேருந்து அங்கே இல்லை. தில்லியில் ஒரு பழக்கம். யாருமே சொன்ன சொல்லை காப்பதில்லை! பேருந்து இங்கே இல்லையே, முன்னரே புறப்பட்டு போய்விட்டதோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தபோது கொடுத்திருந்த தொடர்பு எண்ணில் அழைத்து மீண்டும் கேட்க, அவர் சொன்ன பதில் – கவலைப்படாதீங்க, பேருந்து நீங்கள் நிற்கும் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியிலிருந்து புறப்படாது! அப்புறம் எங்கே இருந்து தான் பேருந்து புறப்படும்? அங்கே எப்படிச் செல்வது என்பது தான் அடுத்த கேள்வி!

திங்கள், 30 அக்டோபர், 2017

தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 1

முன் குறிப்பு: சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 அன்று, ”அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்” என்ற தலைப்பில் திங்களன்று என் அடுத்த பயணத்தொடர் தொடங்கும் என்று சொல்லி இருந்தேன். சொன்னபடியே இதோ திங்களன்று தொடங்கிவிட்டேன்! :) என்ன நடுவில் சில வாரங்கள் கடந்து விட்டன! சரி தொடருக்குப் போவோம்!

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்….

பனிபடர்ந்த மலைகளைக் கண்டாலே ஒரு ஆனந்தம் நமக்குள் உண்டாவது, அற்புத உணர்வு இல்லையா? மலைப்பகுதிகள், ஆற்றங்கரை, இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்கள், மரங்களடர்ந்த வனப்பகுதி என எங்காவது செல்லும்போது நம்மை நாமே இழந்து இயற்கையில் ஒன்றிவிட முடிகிறது. பல சமயங்கள், என்னுடைய பயணங்களின் போது, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற உணர்வு வரும். ஆனால் அங்கே இருந்து விட முடிவதில்லையே.  நினைவுகளோடு திரும்பித் தானே ஆக வேண்டியிருக்கிறது.

திங்கள், 1 மே, 2017

ஹனிமூன் தேசம் – மணாலி சென்று வாருங்கள் – பயணம் செய்ய என்ன தேவை....

ஹனிமூன் தேசம் – பகுதி 23

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சம்பா ஓவியங்கள் – என்ன அழகு எத்தனை அழகு!

CHசம்பா – ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். பெரும்பாலான மாவட்டங்கள் மலைப் பிரதேசமாக இருக்க, இந்த மாவட்டம் ஒரு சமவெளியில் அமைந்துள்ளது. ராவி நதியின் சமவெளியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா தளம்.  பழமையான கோவில்கள், அரண்மனையும் இங்கே உண்டு. CHசம்பா மாவட்டம் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது - CHசுக் எனப்படும் மிளகாய் சட்னி, CHசம்பா செருப்பு மற்றும் CHசம்பா ஓவியங்கள்.......

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – காத்திருந்து, காத்திருந்து – உணவக அனுபவம்...

ஹனிமூன் தேசம் – பகுதி 22

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மணிக்கரண் - வெந்நீர் ஊற்றும் நதியும்...

புதன், 26 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – மணிக்கரண் – குருத்வாராவும் கோவிலும் – வெந்நீர் ஊற்று….

ஹனிமூன் தேசம் – பகுதி 21

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

குறுகிய மலைப்பாதையில்....

திங்கள், 24 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – காலை நேரம் – மலைப்பாதையில்….

ஹனிமூன் தேசம் – பகுதி 20

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

காலை வேளை - மலையின் பின்னிருந்து எட்டிப்பார்ர்கும் சூரியன்...

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – மால் ரோடு, மணாலி – ஆப்பிள் பர்ஃபி

ஹனிமூன் தேசம் – பகுதி 19

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மால் ரோடு, மணாலி.....

புதன், 19 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்டனை - யாக்!

ஹனிமூன் தேசம் – பகுதி 18

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

ஹடிம்பா தேவி கோவில்....

திங்கள், 17 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – ஹடிம்பா, பீம் மற்றும் கடோத்கஜன்!

ஹனிமூன் தேசம் – பகுதி 17

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

சுடச்சுட மக்காச்சோளம்! வேணுமா?

சனி, 15 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்று

ஹனிமூன் தேசம் – பகுதி 16

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

ராம் மந்திர் - வசிஷ்ட் குண்ட் அருகே

புதன், 12 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – இன்ப அதிர்ச்சி தந்த கேரள நண்பர்

ஹனிமூன் தேசம் – பகுதி 15

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிச்சிகரத்தின் மேல்...

திங்கள், 10 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – பனிச்சிகரத்தின் மேல் – Solang Valley

ஹனிமூன் தேசம் – பகுதி 14

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

இங்கே வந்ததன் நினைவாக இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்!

சனி, 8 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – உடன் கடோலா – மலைச்சிகரத்திற்கு ஒரு பயணம்

ஹனிமூன் தேசம் – பகுதி 13

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மலைப்பாதையில் இப்படிச் சுமையோடு நடப்பது நமக்குச் சாத்தியமா?

வியாழன், 6 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – பனீர் பரோட்டா - கூடவே இன்னும் சில – காலை உணவு

ஹனிமூன் தேசம் – பகுதி 12

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

விதம் விதமாய் பராட்டா... கூடவே காரசாரமாய் ஊறுகாய்!

புதன், 5 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – பைரவர் தந்த பாடம் – காணாமல் போன மோதிரம்

ஹனிமூன் தேசம் – பகுதி 11

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிபடர்ந்த மலையும் இலைஇழந்த மரங்களும்

திங்கள், 3 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – உடைகளும் வாடகைக்கு…..

ஹனிமூன் தேசம் – பகுதி 10

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிபடர்ந்த மலைகளும், இலை இழந்த மரங்களும்....