இது வரை வெளிவந்திருக்கும் எங்களது
மின்புத்தகங்கள்… (Updated on 10 February 2023)
2009-ஆம் ஆண்டிலிருந்து “சந்தித்ததும் சிந்தித்ததும்”
என்ற தலைப்பில் வலைபூவில் எழுதி வருகிறேன். எழுத ஆரம்பித்த பிறகு இரண்டாயிரத்தி
ற்கும் அதிகமான பதிவுகளை இதுவரை எழுதி இருக்கிறேன். இந்த ஆண்டுகளில் வலைப்பூவில் எழுதிய சில
பதிவுகளை – குறிப்பாக பயணத் தொடர்களை மின்புத்தகங்களாகவும் வெளியிட்டு
இருக்கிறேன். WWW.FREETAMILEBOOKS.COM தளத்திலும், WWW.PUSTAKA.CO.IN மற்றும் WWW.AMAZON.IN (www.amazon.com மற்றும் அமேசானின்
மற்ற 11 ரீஜினல் தளங்களிலும் கூட கிடைக்கும்) தளங்களிலும் எனது சில மின்புத்தகங்கள்
உண்டு. முதல் தளத்தில் இருப்பவை அனைத்தும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும்
விதத்தில் உள்ளவை. மற்ற இரண்டு தளங்கள் வழி வெளியிட்ட மின்னூல்கள் பணம் செலுத்தி
படிக்கும் வகையில் உள்ளது. ஒரு மின்னூலை
புஸ்தகாவிற்குக் கொடுக்க அவர்களே அமேசான் தளத்திலும் சேர்த்திருக்கிறார்கள். அந்த
வகையில் எனக்கு இதுவரை எந்தவித வரவும் இல்லை :) ஒரே ஒரு முறை, புத்தாண்டு
சமயத்தில் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரம் அனுப்பி வைத்தார்கள்! அதை இது வரை
பயன்படுத்தவும் இல்லை! அப்படியே இருக்கிறது! ஒரு வருட முடிவில் ஐந்நூற்று சொச்சம்
கணக்கில் செலுத்தியதாக சொன்னார்கள் – யார் கணக்கு என்பது புரியாத புதிர்! இரு முறை
எழுதிய பிறகும் பதில் இல்லை! போகட்டும் என விட்டு விட்டேன். சரி விடுங்கள்,
எதிர்பார்ப்பு வைத்துக் கொள்வது சரியல்ல. எதிர்பார்ப்பு இருந்தால் தான்
ஏமாற்றங்கள் நம்மை தொல்லை செய்யும்.
இதுவரை நான் எழுதியதை மின்புத்தகமாக வெளியிட்டது
போலவே எனது இல்லத்தரசி எழுதிய பதிவுகளையும் மின்புத்தகங்களாக வெளியிட்டு
இருக்கிறேன். நண்பர்கள் சிலர் எனது
பக்கத்தில் வெளியிட்ட கட்டுரைகள் சிலவும் மின்புத்தகங்களாக வந்திருக்கிறது.
வெளியிட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை பயணம் குறித்தவை என்றாலும், கவிதைகள்,
சமையல் குறிப்புகள், கட்டுரைகள் என மற்றவையும் உண்டு. இதுவரை நான் வெளியிட்ட
அனைத்து புத்தகங்களும் - எனது, இல்லத்தரசி மற்றும் நண்பர்கள் எழுதியது என அனைத்து
மின்புத்தகங்களுக்குமான சுட்டிகளை தொகுத்து இங்கே சேர்த்து இருக்கிறேன் -
வாசகர்களின் வசதிக்காக! எங்கள் வெளியீடாக வந்த அனைத்து மின்புத்தகங்களுக்கான
இணைப்புகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி. வாருங்கள் புத்தகப் பட்டியலைப்
பார்க்கலாம் – இதுவரை இந்தப் புத்தகங்களை படித்திராதவர்கள் தரவிறக்கம் செய்து
படிக்கலாமே!
மின்புத்தகம் 1: ஏரிகள் நகரம் -
நைனிதால்:
உத்திராகண்ட் மாநிலத்தின் தலைநகரம் டேராடூன்
என்றாலும் நைனிதால் மிகவும் விரும்பப்படும் ஒரு சுற்றுலாத்தலம். பலரும் இங்கே சென்று சூழலை அனுபவித்து
வருவார்கள். அந்தப் அப்குதிக்குச்
சென்று வந்த பின் எழுதிய சில கட்டுரைகளை தொகுத்து, மின்புத்தகமாக வெளியிட்டு
இருக்கிறேன். இது வரை 49081 பேர் இந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம்
செய்திருக்கிறார்கள். இது எனது முதல் மின்புத்தகம். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள
சுட்டி…
மின்புத்தகம் 2: மத்தியப் பிரதேசம்
அழைக்கிறது:
மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு ஒரு பயிற்சிக்காக
சென்றபோது கிடைத்த அனுபவங்களை இந்த இரண்டாவது மின்புத்தகத்தில் சொல்லி
இருக்கிறேன். பயணத்தின் ஒரு
பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும்
பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற மையத்திற்குச் சென்றிருந்தோம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு அங்கே
இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம்
நிச்சயம் தோன்றும். 10586 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம்
செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை
தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 3: தேவ் பூமி ஹிமாச்சல்:
மூன்றாவதாக வெளியிட்ட இம்மின்னூலில், தேவ் பூமி என
அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்ட பயணம் பற்றிய குறிப்புகள்,
பார்க்க வேண்டிய இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து
கொண்டிருக்கிறேன். ”ஹிமா” எனும் வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும்
பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர்
சூட்டினார்களாம். 8051 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 4: பஞ்ச த்வாரகா:
புஸ்தகா நிறுவனத்தின்
மூலமாகத் தான் எனது நான்காவது மின்னூலாக “பஞ்ச துவாரகா” வெளிவந்தது. இந்தப் புத்தகத்தில் பஞ்ச துவாரகா என
அழைக்கப்படும் ஐந்து துவாரகா – குஜராத்/ராஜஸ்தான் மாநில கோவில்களுக்கு
செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். நானும் நண்பர்களும் சென்ற போது
எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள், அந்த இடங்களில் எடுத்த
புகைப்படங்கள், சாப்பிட என்ன கிடைக்கும், பயணம் செய்ய என்ன தேவை போன்ற பல
விவரங்கள் இப்புத்தகத்தில் உண்டு. புஸ்தகா நிறுவனமே இந்தப் புத்தகத்தினை அமேசான்
தளத்திலும் வெளியிட்டார்கள்.
பஞ்ச
துவாரகா – புஸ்தகா தளத்தில்…
பஞ்ச துவாரகா
– அமேசான் தளத்தில்…
மின்புத்தகம் 5: சாப்பிட வாங்க:
உத்திரப் பிரதேசத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக
அலஹாபாத், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் போது காலை வேளையில் பால் [அ]
தயிரில் தோய்த்த ஜாங்கிரிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான்
இருக்கிறது என சுவைத்தும் பார்த்திருக்கிறேன். பாலில் ஜாங்கிரியா? படிக்கும்போதே
குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்….. ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த
வரவேற்பும், ரசிகர்களும் உண்டு! வித்தியாசமான சில உணவு வகைகள், உணவு சம்பந்தமான
அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மின்புத்தகமாக
வெளியிட்டது இந்த மின்னூல். 9331 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம்
செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 6: கோவை2தில்லி – அனுபவக்
கட்டுரைகள்:
இல்லத்தரசியின் முதலாம் மின்புத்தகம் - அவரது
வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மின்புத்தக வடிவில்
வெளியானது. ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக
மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது! மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின்
ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத,
அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்! கோவை, தில்லி என மாற்றி மாற்றி
அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார். புத்தகம் இதுவரை 4798 முறை தரவிறக்கம்
செய்யப்பட்டு இருக்கிறது. புத்தகத்தினை கீழே உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
கோவை2தில்லி–
அனுபவக் கட்டுரைகள்
மின்புத்தகம் 7: முகம் காட்டச்
சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு:
பயணங்களில் என் கூடவே வருவது எனது டிஜிட்டல் காமெரா –
Canon DSLR. பயணக் குறிப்புகள் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது நிறைய
நிழற்படங்களும் எடுத்து கட்டுரைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி எடுத்த சில நிழற்படங்கள் மிகவும்
பிடித்தமானதாக இருக்கும். நிழற்படங்களுக்குப் பொருத்தமாக, வலையுலக நண்பர்கள்
எழுதிய கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன்.
கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கிட்டத்தட்ட 3242 பேர் இந்தப் புத்தகத்தினை
தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி
கீழே.
மின்புத்தகம் 8: இரு மாநிலப் பயணம் -
குஜராத் தியு பயணக் கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. குஜராத் மற்றும் தியு ஆகிய இரண்டு இந்திய பிரதேசங்களுக்குச்
சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்து “இரு மாநில பயணம் - குஜராத் தியு பயணக்
கட்டுரைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே...
இரு மாநிலப் பயணம் -
குஜராத் தியு பயணக் கட்டுரைகள்
மின்புத்தகம் 9: ராஜாக்கள் மாநிலம் -
ராஜஸ்தான் பயணக் கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் புஷ்கர்
நகரங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த
மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே...
மின்புத்தகம் 10: ஷிம்லா ஸ்பெஷல் -
ஷிம்லா பயணக் கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லா, குஃப்ரி மற்றும் நார்கண்டா
பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த
மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே...
மின்புத்தகம் 11: கடைசி கிராமம் - பயணக்
கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் திபெத் எல்லையில் உள்ள chசித்குல்,
கல்பா போன்ற சில கிராமங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து
இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே...
மின்புத்தகம் 12: ஹனிமூன் தேசம் - பயணக்
கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ மணாலி பகுதிகளுக்குச் சென்று
வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு
இருக்கிறேன். புத்தகத்தினை
தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...
மின்புத்தகம் 13: இரண்டாம் தலைநகரம் -
பயணக் கட்டுரைகள்:
அமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம்
வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச், டல்ஹவுஸி,
கஜ்ஜியார், ஜோத் போன்ற இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத்
தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே...
மின்புத்தகம் 14: பீஹார் டைரி - பயணக்
கட்டுரைகள்:
பீஹார் டைரி” என்ற என்னுடைய பதினான்காவது மின்னூல்
இப்போது அமேசான் தளத்தில்.... பீஹார் டைரி மின்னூல் வழி நான் உங்களை அழைத்துச்
செல்லப் போவது பீஹார் மாநிலத்திற்கு! அங்கே தலைநகர் பட்னா, Gகயா, Bபுத் Gகயா,
அபாபுரி போன்ற சில இடங்களுக்குச் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலில். தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே…
மின்புத்தகம் 15: அருவிகள் நகரம் –
ஜார்க்கண்ட் உலா
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரை
அருவிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள். தலைநகர் ராஞ்சியிலிருந்து சில கிலோமீட்டர்
தொலைவு பயணித்தால் நிறைய அருவிகள் உண்டு. வனப்பகுதிகள், மலைப்பாங்கான பிரதேசம்,
ஏரிகள் என மிகவும் ரம்மியமான இடங்களைக் கொண்ட மாநிலம் ஜார்க்கண்ட். ஜார்க்கண்ட்
மாநிலத்தின் தலைநகர் ராஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், பீஹார்
மாநிலத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவங்களை இந்த மின்னூலில் பகிர்ந்து
கொண்டிருக்கிறேன். தரவிறக்கம் செய்ய
சுட்டி கீழே…
மின்புத்தகம் 16: அரக்கு பள்ளத்தாக்கு
(ஆந்திரப் பிரதேசம்)
அரக்கு பள்ளத்தாக்கு பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் இருக்கும் ஒரு சிறப்பான இடம்
அரக்கு பள்ளத்தாக்கு. அங்கே சென்று வந்த போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை
என்னுடைய அடுத்த மின்னூல் “அரக்கு பள்ளத்தாக்கு” வழி சொல்லி இருக்கிறேன். ஐந்து
நாட்கள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும்
சென்ற போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூல் வழி நீங்கள் அறிய முடியும். மின்னூல்
தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...
மின்புத்தகம் 17: திரிவேணி சங்கமம்
(உத்திரப் பிரதேசம்)
2012-ஆம் ஆண்டு இரண்டு நாள் பயணமாக வாரணாசி மற்றும்
ப்ரயாக்ராஜ் என அழைக்கப்படும் (இ)அலஹாபாத் நகரத்திற்குச் சென்று வந்தபோது கிடைத்த
அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட மின்னூல் இது. திரிவேணி சங்கமம் மின்னூல்
தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...
மின்புத்தகம் 18: ஏழு சகோதரிகள்-பாகம் 1
(மணிப்பூர், நாகாலாந்து)
ஏழு சகோதரிகள்… இப்படி அழைக்கப்படும் மாநிலங்கள் எவை
என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்களை
ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள். அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம்,
அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிப்புரா ஆகியவை.
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு நிறைய பேர் வருவதில்லை.
”ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பிலேயே இங்கே சென்று வந்த
போது கிடைத்த அனுபவங்கள் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். இந்த முதல் பாகத்தில்
மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பயணித்தபோது கிடைத்த அனுபவங்களை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவிறக்கம் செய்ய சுட்டி...
மின்புத்தகம் 19: ஏழு சகோதரிகள்-பாகம் 2
(அசாம்)
ஏழு சகோதரிகள் - பாகம் 2... முதல் பாகத்தில் ஏழு
சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து
மாநிலங்களைப் பற்றிப் பார்த்தோம் என்றால் இந்த இரண்டாம் பாகத்தில் அசாம்
மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். காமாக்யா கோவில் மற்றும்
காசிரங்கா வனப் பயணம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இந்தப் பகுதியில் எழுதி
இருக்கிறேன். வாருங்கள் ஒரு உற்சாக வனப்பயணம் சென்று வருவோம்! புத்தகத்தினை
தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே....
மின்புத்தகம் 20: ஏழு சகோதரிகள்-பாகம் 3
(அருணாசலப் பிரதேசம்)
ஏழு சகோதரிகள் - பாகம் 3... முதல் பாகத்தில் ஏழு சகோதரிகள் என
அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைப் பற்றிப்
பார்த்தோம், இரண்டாம் பாகத்தில் அசாம் மாநில அனுபவங்கள் என்றால் இந்த மூன்றாம்
பாகத்தில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்.
சீன எல்லைப் பகுதி, கிராமிய திருவிழாக்கள், அழகான ஏரிகள், பனிபடர்ந்த மலைச்சிகரம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இந்தப்
பகுதியில் எழுதி இருக்கிறேன். வாருங்கள் ஒரு உற்சாக பயணம் சென்று வருவோம்!
புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே....
மின்புத்தகம் 21: ஏழு சகோதரிகள்-பாகம் 4
(மேகாலயா, திரிபுரா)
ஏழு சகோதரிகள் - பாகம் 4... முதல் பாகத்தில் ஏழு சகோதரிகள் என
அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைப் பற்றிப்
பார்த்தோம், இரண்டாம் பாகத்தில் அசாம் மாநில அனுபவங்கள் என்றால் மூன்றாம்
பாகத்தில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்.
இந்த தொடரின் கடைசி மற்றும் நான்காம் பாகம் பாகமாக மேகாலயா மற்றும் திரிபுரா
அனுபவங்கள். . வாருங்கள் ஒரு
உற்சாக பயணம் சென்று வருவோம்! புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி
கீழே....
மின்புத்தகம் 22: ஆதியின்
அடுக்களையிலிருந்து…
இல்லத்தரசியின் இரண்டாம் மின்னூல். வலைப்பூவில்
எழுதிய சமையல் குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மின்னூல். வட இந்திய,
தென்னிந்திய சமையல், இனிப்பு/கார வகைகள் மற்றும் பொடி வகைகள் குறித்த குறிப்புகள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள
சுட்டி கீழே…
மின்புத்தகம் 23: ஜெய் மாதா தி!…
ஜம்முவின் அருகே இருக்கும் கட்ரா எனுமிடத்திலிருந்து
நடைப்பயணமாக மலைமீது ஏறிச் சென்று அன்னை வைஷ்ணோ தேவியைத் தரிசிக்க சென்ற போது
கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட மின்னூல் – அமேசான் தளத்தில் வெளியானது. புத்தகத்தினைத் தரவிறக்கம் செய்து
கொள்ள சுட்டி கீழே…
மின்புத்தகம் 24: இரு பயணங்கள்
இல்லத்தரசியின் கைவண்ணத்தில் உருவான மற்றுமொரு
மின்னூல் – தமிழகத்திலுள்ள சிறுமலை என்ற இடத்திற்கும் கோவை-கேரளா என்று இரு
இடங்களுக்கும் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மின்னூலாக
வெளியிட்டு இருக்கிறோம். அமேசான் தளத்தில் இருக்கும் இந்த மின்னூலைத் தரவிரக்கம்
செய்து கொள்ள முகவரி கீழே…
மின்புத்தகம் 25: கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
அமேசான் தளம் வாயிலாக வெளியிட்ட எனது மற்றுமொரு
மின்னூல். நண்பர்களுடன்
சபரிமலைக்குச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட நூல். விலை ரூபாய் 50/-. மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ள
முகவரி கீழே.
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
மின்புத்தகம் 26: விஜயவாடா சுற்றுலா
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரம் மற்றும் அந்த
நகரின் அருகில் இருக்கும் சில இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள்
இந்த மின்னூலில் - அமேசான் வெளியீடு. விலை ரூபாய் 50/-. மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே.
மின்புத்தகம் 27: பாந்தவ்கர் வனம்
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர், நர்மதா நதி,
பாந்தவ்கர் வனம் என மூன்று நாட்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் “பாந்தவ்கர்
வனம்” என்ற தலைப்பில் இப்போது மின்னூலாக – அமேசான் தளத்தில் – விலை ரூபாய் 70/-. மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள
சுட்டி கீழே.
மின்புத்தகம் 28: அந்தமானின் அழகு
சமீபத்தில் எழுதிய அந்தமானின் அழகு பயணக் கட்டுரைகள்
தற்போது மின்னூலாக! அமேசான் தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே.
மின்புத்தகம் 29: லாக்டவுன் ரெசிபீஸ்
இல்லத்தரசியின் நான்காவது மின்னூல். லாக்டவுன் சமயத்தில் செய்து சுவைத்த சிற்றுண்டி வகைகளைத் தொகுத்து
மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி
கீழே…
மின்புத்தகம் 30: ரத்தபூமி
(குருக்ஷேத்திரம்)
ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரம் பற்றிய பயணக்
கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு – கீதோபதேசம், குருக்ஷேத்திரப் போர், பீஷ்மர் வதம்
போன்ற பல தகவல்களைச் சொல்லும் மின்னூல். தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 31: ஏழைகளின் ஊட்டி
தமிழகத்தின் ஏற்காடு பகுதிக்கு, குடும்பத்துடன் சென்ற
போது பார்த்த இடங்கள், அனுபவங்கள் ஆகியவற்றைச் சொல்லும் பயணக் கட்டுரைகள் அடங்கிய
மின்னூல். தரவிறக்கம் செய்து
கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 32: கல்யாணக் கனவுகள் (கதை
மாந்தர்களின் கதைகள்)
தொடர்ந்து பயணம் பற்றி எழுதிக் கொண்டு இருந்த நான்,
இந்த மின்னூல் வழி நான் சந்தித்த சில கதை மாந்தர்களைப் பற்றி உங்களுடன் கதைக்க
வந்திருக்கிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருமே ஏதோ ஒரு
விதத்தில் ஒரு கதை மாந்தர் தான். அவர்கள் வாழ்க்கை நம்மில் பலருக்கு ஒரு பாடம்!
அப்படிச் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் பல அனுபவங்களை அடைந்தவர்கள் – அவர்களை நான்
அறிந்தவரை, அவர்கள் பற்றிய தகவல்களை கதை போலவும் (வார்த்தை பயன்பாட்டினை
கவனிக்கவும் – கதை போல!) சொல்ல முயன்றிருக்கிறேன்! மின்னூலை தரவிறக்கம் செய்து
கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 33: ஓரிரவில்... ஒரு ரயிலில்
(பயணங்கள் பலவிதம்)
கடந்த முப்பது வருடங்களாக தலைநகர் தில்லியில் வாசம்
என்பதால் அவ்வப்போது தமிழகம் வந்து செல்வது வழக்கம். ஆரம்ப காலகட்டங்களில்
தில்லியிலிருந்து இரயில் பயணங்கள் – சென்னை வந்து சேரவே 33 மணி முதல் 36 மணி நேரம்
வரை ஆகும். அதன் பிறகு நெய்வேலி/திருச்சி நோக்கி பயணிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு
முறை பயணிக்கும் போதும் கிடைக்கும் அனுபவங்கள் அதிகமாகவே இருக்கும். சில முறை
சுவாரஸ்ய அனுபவங்கள் என்றால், சில முறை பயணிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள்
தொந்தரவு, வேதனை தருபவை. அப்படி கிடைத்த அனுபவங்களை தொகுத்து இந்த மின்னூல் வழி உங்களுடன்
பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். மின்னூலை தரவிறக்கம் செய்து
கொள்ள சுட்டி கீழே.
மின்புத்தகம் 34: என் இனிய நெய்வேலி
இருபது வயது வரை நான் இருந்த நெய்வேலி நகரம்,
திறந்தவெளி சுரங்கங்களைக் கொண்டது. ஆனால் நம் மனது என்னும் சுரங்கமோ, மூடி
வைக்கப்பட்ட ஒன்று.
'மனச் சுரங்கத்திலிருந்து' என்ற அடையாளத்தோடு நான்
பிறந்த நகரமான நெய்வேலி நினைவுகளை அவ்வப்போது எனது வலைப்பூவில் எழுதி வந்திருக்கிறேன்.
ஊரின் சிறப்புகள், நினைவுகள், நிகழ்வுகள், மனிதர்கள் என பலவற்றையும் “மனச்
சுரங்கத்திலிருந்து என்ற அடைமொழியுடன் எழுதி இருக்கிறேன். நெய்வேலி – பிறந்தது
முதல் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை கிட்டத்ட்ட இருபது வருடங்கள் நான் வாழ்ந்த
ஊர். பல வித அனுபவங்களைத் தந்த எனது ஊர் பற்றி, சந்தித்த மனிதர்கள் குறித்து,
நடந்த நிகழ்வுகள் எவை என பலவும் இந்த மனச் சுரங்கத்திலிருந்து தொகுப்பில் உண்டு.
அமேசான் தளத்தில் வெளி வரும் எனது 25-ஆவது மின்னூல். மின்னூலை தரவிறக்கம் செய்து
கொள்ள சுட்டி கீழே...
மின்புத்தகம் 35: கிட்டூ’ஸ் கிச்சன்
இந்த நூல் ஒரு சமையல் குறிப்பு நூல் – கடந்த முப்பது
வருடங்களாக தில்லி வாசம் என்பதாலும், பெரும்பாலான நாட்களில் சுயம் பாகமாக சமையல்
என்பதாலும் வட இந்திய சப்ஜிகளைத் தான் அதிகம் சமைப்பது வழக்கம். இப்போது அமேசான்
தளத்தின் வாயிலாக வெளியிடும் இந்த மின்னூலில் பகிர்ந்து கொண்டிருக்கும் எல்லா
குறிப்புகளுமே வட இந்திய சமையல் முறைகள் தான் – சப்பாத்தி மற்றும் பூரிக்கு
தொட்டுக்கையாக இந்த சப்ஜிகளைச் செய்து சுவைக்கலாம்! சாதத்துடனும் சேர்த்து
சாப்பிடலாம்! மின்னூலை
தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே...
மின்புத்தகம் 36: Adhi’s Kitchen Recipes
எனது இல்லத்தரசியின் இந்த மின்னூலில் எளிதில்
செய்யக்கூடிய வகையில் இனிப்புகள், குக்கீஸ்கள், கேக்குகள், சிற்றுண்டிச்
செய்முறைகள் என பல்சுவை கதம்பமாக இருக்கிறது.
வலைப்பதிவராக இருந்து, மின்னூல்களை வெளியிடுவதற்கு அடுத்த கட்டமாக யூட்டியூப் சேனலும் துவக்கி காணொளி சமையல் பகிர்வுகளை வெளியிட்டு வருகிறார். இந்த மின்னூலில் சேனலில் வெளியிட்ட செய்முறைகளையும் தந்திருக்கிறார். கூடவே காணொளிகளுக்கான சுட்டிகளும் நூலில் இணைப்பு தந்திருக்கிறார். மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…
மின்புத்தகம் 37: சம்மர் ஸ்பெஷல்!
நம் முன்னோர்கள் அடிக்கின்ற வெயிலை வீணாக்காமல்
வத்தல் அல்லது வடாம், ஊறுகாய் என செய்து வருடத்திற்கும் அதை சேமித்துக்
கொள்வார்கள் இல்லையா! இது அவசரத்திற்கு நிச்சயம் உதவும். அது போல் நாமும் நம்மால்
முடிந்ததை செய்து வைப்போமே!! அந்த வகையில் இந்த புத்தகத்தில் சம்மர் ஸ்பெஷலாக
வத்தல்/வடாம், ஊறுகாய், ஜூஸ், ஜிகிர்தண்டா, ஃபலூடா, ஸ்ரீகண்ட் என்று சில எளிதான
இனிப்புகள், சிற்றுண்டிகள் என செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
”ஆதியின் அடுக்களையிலிருந்து” தொடரில் இது நான்காம் நூல்!
தரவிறக்கம் செய்ய சுட்டி - சம்மர் ஸ்பெஷல்
மின்புத்தகம் 38: மஹா கும்பமேளா - ஒரு
பயணம்
2014-ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசம் - ப்ரயாக்ராஜ்
எனும் அல்ஹாபாத் நகரில் நடந்த மஹா கும்பமேளா குறித்த தகவல்கள், படங்கள், கிடைத்த
அனுபவங்கள் என அனைத்தும் கொண்ட மின்னூல். தரவிறக்க்ம செய்ய சுட்டி கீழே.
மின்புத்தகம் 39: மேகங்களின் ஆலயம் மேகாலயா
ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான
மேகாலயா மாநிலத்திற்கு நண்பர் சுப்ரமணியன் அவர்கள் சென்று வந்த ஒரு பயணம் - நான்கு
இரவு ஐந்து பகல் - போது கிடைத்த அனுபவங்களையும் தகவல்களையும் சுவைபட எழுதி
இருக்கிறார். இயற்கை எழில்
கொஞ்சம் இடங்களைக் குறித்த தகவல்கள் இதில் உண்டு. மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி
கீழே!
மின்புத்தகம் 40: கடந்து வந்த பாதை
கடந்து வந்த பாதை எனும் இந்த மின்னூல் வழி நண்பர்
திரு சுப்ரமணியன் பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தின்
விருத்தாஜலம் நகருக்கு அருகே இருக்கும் சிறு கிராமம் முகாசா பரூர் என்பது. அந்த
சிறு கிராமத்திலிருந்து விட்டு விலகி தமிழகத்தின் சில ஊர்களில் படித்து பணி
நிமித்தம் தலைநகர் தில்லி வந்தது, பணியில் சேர்ந்தது, தில்லியில் கிடைத்த பல்வேறு
அனுபவங்கள், நட்பு, தில்லியின் தட்பவெப்பம், அலுவலக அனுபவங்கள் என நிறைய விஷயங்களை
நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தனது திருமணம் வரை நிகழ்ந்த பல விஷயங்களை அவர்
சொல்லி இருப்பதிலிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். பல
தகவல்களை உள்ளடக்கிய இந்த மின்னூல் உங்களுக்கும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள
உதவியாக இருக்கும் – குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள செயல்முறை.
மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
கடந்து வந்த பாதை (Tamil Edition) eBook : Subramanian, R,
Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store
மின்புத்தகம் 41: கல்லூரி முதல் கல்யாணம்
வரை
கல்லூரிப் பருவத்தை எல்லோராலும் அவ்வளவு எளிதில்
மறக்க இயலாது. கல்லூரியில் பயின்ற நாட்கள், அங்கு கிடைத்த நட்புகள், செய்த
கலாட்டாக்கள் என்று பொக்கிஷமாக மனதின் ஆழத்தில் பொதிந்து போன ஆயிரம் விஷயங்கள்
வரிசை கட்டி நிற்கும். 20 வருடங்கள் கழிந்த பின்னும் மனதில் பசுமையாய் படர்ந்துள்ள
கல்லூரி நினைவுகளை எழுத ஆரம்பித்து அது பல பகுதிகளாக விரிந்து தற்போது மின்னூலாக
உருவெடுத்துள்ளது. இந்த மின்னூலில் கல்லூரி நாட்களில் துவங்கி கல்யாணம் வரையுள்ள
அனுபவங்களை எழுதியிருக்கிறார் எனது இல்லத்தரசி.. வாசித்து நிறை குறைகளை பகிர்ந்து
கொள்ளுங்களேன். மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
கல்லூரி முதல் கல்யாணம் வரை (Tamil Edition) eBook : Venkat,
Adhi: Amazon.in: Kindle Store
மின்புத்தகம் 42: அவரும் நானும்
குடும்பச் சூழலால் இளம் வயதில் திருமணமாகி இல்லற
வாழ்க்கையைப் பற்றிய எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் இருந்த ஒரு பெண்ணும்,
காலத்தின் கட்டாயத்தால் ஏற்றுக் கொண்ட பெண்ணை கரம்பிடித்த ஆணும் தான் இந்த நூலின்
கதாபாத்திரங்கள். திருமணமான புதிதில் மிகவும் இனிமையாக இருந்த இவர்கள்
வாழ்க்கையில் இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல ஏற்பட்ட புரிதலும், அன்பை
வெளிப்படுத்திய தருணங்களும், சந்தித்த நிகழ்வுகள், உணர்வுகள் என்று ஒவ்வொரு
பகுதியிலும் விவரிக்கப்பட்டுள்ளது.
மின்புத்தகம் எழுதியது எனது இல்லத்தரசி. வாசித்து
நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன். மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
அவரும் நானும் (Tamil Edition) eBook : Venkat, Adhi,
Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store
மின்புத்தகம் 43: சில்லுனு சில ரெசிபீஸ்
கோடைக்காலங்களில் சில்லென்று ஒரு ஜூஸோ, ஐஸ்க்ரீமோ
எல்லோருக்குமே சாப்பிடத் தோன்றும். அப்படி எங்கள் வீட்டில் சட்டென்று செய்த சில
ஜூஸ் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றின் செய்முறைகளை தான் இந்த புத்தகத்தில்
தந்துள்ளேன். பெரும்பாலும் இவை யாவும் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து செய்த
ரெசிபிக்கள் தான். உடலுக்கு கெடுதல் விளைவிக்காததாகவும், கணிசமான செலவிலும்
செய்யப்பட்டது என்றும் சொல்லலாம். வெயிலுக்கு ஏற்ற 25 ரெசிபிக்களை கொண்ட
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரெசிபிக்களை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து
பார்த்து நிறை குறைகளை சொல்லுங்களேன். மின்புத்தகம் எழுதியது எனது இல்லத்தரசி.
மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
சில்லுனு சில ரெசிபீஸ் (Tamil Edition) eBook: Venkat, Adhi:
Amazon.in: Kindle Store
மின்புத்தகம் 44:
தெய்வம் தந்த பூவே
நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களில் தான் எத்தனை எத்தனை கதைகள் வியாபித்துள்ளன! ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளம்! அன்றாடம் சந்திக்கும் மனிதர்களால் நம் பொழுதுகள் கடந்து செல்கின்றன! அப்படியான மனிதர்களை கதையின் நாயகர்களாகக் கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பாக வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு தான் “தெய்வம் தந்த பூவே”. பதினைந்து சிறுகதைகளை
தன்னகத்தே கொண்ட தொகுப்பு. அமேசான் தளத்தில் வெளியீடு. மின்புத்தகம் எழுதியது எனது இல்லத்தரசி. மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
தெய்வம் தந்த பூவே - சிறுகதைத் தொகுப்பு
மின்புத்தகம் 45: யாரிவள்
நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் தான் எத்தனை விதம்! அப்படியொரு சராசரிப் பெண்ணின் கதை தான் யாரிவள்! ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும் போதும் உங்களுக்கும் உங்கள் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமாக தான் இருக்கும்!இன்றைய தலைமுறையினர் சிறிய விஷயத்திற்கெல்லாம் சட்டென்று மனமுடைந்து விடுகின்றனர்! இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நெடியதாக இருக்க, தாங்களாகவே பாதையை குறுக்கிக் கொண்டு விடுகிறார்கள்! இந்தப் பெண்ணின் கதையை வாசிக்கும் போது உங்களுக்குள் தன்னம்பிக்கை துளிர்க்குமானால் அதுவே என் வெற்றியாக இருக்கும்! இந்தப் புத்தகமும் அமேசான் தளத்தில் வெளியீடு. மின்புத்தகம் எழுதியது எனது இல்லத்தரசி. மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!
அமேசான் தளத்தில் வெளியிட்ட மின்புத்தகங்களை,
கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க
முடியும். இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க
விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/கணினியிலோ தரவிறக்கம்
செய்து வாசிக்கலாம். அமேசானில் கணக்கு
வைத்திருந்தால் போதும். கிண்டில்
அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.
இன்னும் சில தொகுப்புகளை மின்னூலாக்கும் முயற்சியில்
இறங்கி இருக்கிறேன். மின்னூல்கள் வெளி வந்த பிறகு அவை இப்பட்டியலில்
சேர்க்கப்படும்.
இது வரை இந்த மின்னூல்களை வாசிக்காத நண்பர்கள்
இருந்தால், வாசித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லலாமே!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
அடேங்கப்பா ஒரு மூச்சில் மொத்த கோட்டையும் தாண்டி விட்டீர்கள் போல.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்குஅருமை. வாழ்த்துகள் உங்கள் அனைத்தும் பயண்ப் பதிவுகளும் மின்னூல் வடிவிலும் வரவேற்புபெரும் என்பதில் இல்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஅனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் சூப்பர் idea... நல்ல தொகுப்பு. இருவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.
நீக்குஅருமை. நிறையப் புத்தகங்கள் எழுதி தமிழுக்கு அருமையான சேவை செய்து வருகிறீர்கள். நானும் அமேசான் கிண்டில் அன்லிமிடெட் வைத்திருக்கிறேன். படிக்கப் பார்க்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குமுடிந்த போது மின்னூல்களை படித்து உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். மனம் நிறைந்த நன்றி வெங்கடராமன் ஜி.
நீக்கு