ஞாயிறு, 7 மே, 2017

பூக்களும் வண்ணத்துப் பூச்சிகளும்!


சமீபத்தில் தில்லியிலிருந்து வந்திருந்த நண்பரின் குடும்பத்தினரும் நாங்களும் திருவரங்கத்தில் அமைந்திருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்கா சென்று வந்திருந்தோம் என்று எழுதி இருந்தேன்.  நமது சக வலைப்பதிவர் கீதா ஜி கூட, புகைப்படங்களே எடுக்கவில்லையா என்று கேட்டிருந்தார்!  புகைப்படம் எடுக்காமலா?  இதோ இந்த ஞாயிறில், வண்ணத்துப் பூச்சிப் பூங்காவில் எடுத்த பூக்களின் படங்கள் மற்றும் சில படங்கள்!

சனி, 6 மே, 2017

சில்க் தோடு – பிள்ளை பிடிக்கும் ஆசிரியர்கள் – ராஜா காது கழுதைக் காது!





திருவரங்கத்து வானம்....
நேற்று மாலை எடுத்த புகைப்படம்


திருவரங்கம் வந்ததிலிருந்து பார்த்த/கேட்ட சில விஷயங்களை இங்கே அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவும் ஒரு மாதிரி திருவரங்கம் டைரிக்குறிப்பு தான்! அதிகமான பணிச்சுமை இருந்த தலைநகர் நாட்களில் இருந்து வித்தியாசமாக நேரத்தினைப் பிடித்துத் தள்ள வேண்டியிருப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது! உண்பதும் உறங்குவதும், மாலை/காலை நேரத்தில் நடைப்பயணமாக வீதி உலா வருவதும் நன்றாக இருக்கிறது! இங்கே சமையல் வேலையும் இல்லை என்பதால் இன்னும் நிம்மதி! சின்னச் சின்ன வேலைகள் செய்யாமல் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்!  இன்று சின்னச் சின்ன செய்திகளாக சிலவற்றை பார்க்கலாம்!

வெள்ளி, 5 மே, 2017

கேசரி, I am waiting.... – கொழுக்கட்டையான புட்டு


படம்: கேசரி...
படம் இணையத்திலிருந்து...

கேசரிக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம்! கேசரி பிடிக்கும் என்றாலும் ஒவ்வொரு முறை கேசரி கிடைக்கும்போதும், வைராக்கியம் கொள்வேன் – இனிமே சத்தியமா கேசரி சாப்பிடக் கூடாது என்ற வைராக்கியம் தான். ஆனாலும் ஏனோ என்னை இந்த கேசரி விடுவதே இல்லை!  ஏற்கனவே திருவரங்கம் வந்திருந்த ஒரு முறை, பக்கத்து வீட்டிலிருந்து பிறந்த நாள் ஸ்பெஷலாகக் கிடைத்த பச்சை கேசரி பற்றி வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். இந்த பயணத்திலும் கேசரி என்னை விடுவதாக இல்லை!

வியாழன், 4 மே, 2017

காதல் எக்ஸ்பிரஸ் – சத்திரம் - பெட்டவாய்த்தலை வழி முக்கொம்பு!


படம்: இணையத்திலிருந்து....


முக்கொம்பு – திருச்சியில் இருக்கும் மூன்று சுற்றுலாத் தலங்களில் [கோவில்கள் அல்லாத!] முதலாவது கல்லணை, இரண்டாவது முக்கொம்பு, இப்போது மூன்றாவதாக வண்ணத்துப் பூச்சி பூங்கா! இந்த இரண்டாவது இடத்திற்கு சில முறை சென்றதுண்டு. கல்லூரி சமயத்தில் நெய்வேலியிலிருந்து ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி வந்தபோதும் இங்கே சென்றிருக்கிறேன் – கல்லூரி தோழர்கள்/தோழிகளோடு! அதன் பிறகு பல முறை குடும்பத்தினரோடு. ஒவ்வொரு முறை செல்லும்போதும், இனிமேல் இங்கே வரக்கூடாது என்று பேசியபடியே தான் திரும்புவோம்! சரியான பராமரிப்பு இல்லை, குரங்குகள் தொல்லை மற்றும் காதலர்கள் தொல்லை!

புதன், 3 மே, 2017

பயணங்கள் முடிவதில்லை – ஒரு கருத்துக் கணிப்பு



அதிகரித்திருக்கும் பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுதுவது இயலாத ஒரு விஷயமாக இருக்கிறது. பதிவுகள் எழுதுவதற்காக நேரமும் செலவிட வேண்டியிருக்கிறது. Blogger மூலம் நான் தொடரும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் பெரும்பாலும் வாசித்து விடுகிறேன் – அவர்கள் எனது பதிவுகளை வாசிக்கிறார்களோ இல்லையோ, கருத்து சொல்கிறார்களோ இல்லையோ, அனைவரது பதிவுகளையும் வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். Controversial பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் அனைத்திலும் நான் படித்ததன் அடையாளமாக தமிழ்மண வாக்கு அளிக்கிறேனோ இல்லையே, கருத்துரை எழுதாமல் வருவதில்லை. வலையுலகில் எப்போதுமே ஒரு Give and take policy இருப்பது கண்கூடு! நீங்க படிச்சா, நானும் படிப்பேன்! இருந்தாலும் பரவாயில்லை! நான் அப்படி இல்லை!

செவ்வாய், 2 மே, 2017

உழைப்பாளிகள் – எலுமிச்சை/பனீர் சோடா – கொடுக்காப்புளி - ஜிகிர்தண்டா


சீனிப் புளியங்கா, கோணப்புளியங்கா, கொடுக்காப்புளி - எந்தப் பெயரில் அழைத்தாலும் ஒரே சுவை!

திங்கள், 1 மே, 2017

ஹனிமூன் தேசம் – மணாலி சென்று வாருங்கள் – பயணம் செய்ய என்ன தேவை....


ஹனிமூன் தேசம்பகுதி 23

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!