எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 15, 2011

பிரட் பக்கோடாஅதிகாலை மூன்று மணி. அழைப்பொலி கேட்க, தூக்கக் கலக்கத்துடன் கதவினை திறந்தேன். கலங்கிய கண்களுடன் வாசலில் ஒரு சிறுவன். உள்ளே அழைத்து என்ன என்று கேட்ட போது தான் எனக்கு அச்சிறுவன் யார் என்பது நினைவுக்கு வந்தது.

தனது தந்தை திடீரென மார்பு வலி வந்து இறந்து விட்டதாகவும் வீட்டிலே அவனையும் அவனது தாயையும் தவிர வேறு ஒருவரும் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினான். உடனே நான் அவனுடன் அவர்களது வீட்டிற்கு சென்று மற்ற நண்பர்களை அழைத்து ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம்.

இறந்து போனவருக்கு சுமார் 58 வயது. காலை ஒன்பது மணி வாக்கில் இறந்து போனவரின் தாயாரை தில்லியில் உள்ள அவரது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். வந்த உடன் நேராக மகனின் உடல் மீது விழுந்து கதறி அழுதது எல்லோருக்கும் வருத்தமாகவும் பதற்றமாகவும் இருந்தது.

எமன் என்னுடைய உயிரை எடுத்து இருக்கலாமே, நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்றெல்லாம் புலம்பியபடி இருந்தார். அவரை யாராலும் ஆசுவாசப்படுத்த முடியவில்லை. சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்.

மிகுந்த சிரமத்துடன் அவரை ஒருவாறு தேற்றி, ஆக வேண்டிய வேலைகளை முடித்தோம். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு எனது வீடு சென்று குளித்து விட்டு அன்று சாயங்காலமே அடுத்த நாள் காரியத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்க்கு நானும் நண்பர் நரேஷும் சென்றோம்.

பாட்டி உட்கார்ந்து, எதிரே இருக்கும் பம்மி ஸ்வீட்சில் வாங்கிய Bread பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருந்தார். "வாடா! பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி!" என்று எங்களிடம் சொன்னார்என்ன தான் இருந்தாலும் அவருக்கும் பசி என்று ஒன்று இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு.  

நட்புடன்

வெங்கட். 

இது ஒரு மீள்பதிவு…. உண்மையில் நடந்தது…  புனைவு அல்ல….. 

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்


54 comments:

 1. என்ன தான் இருந்தாலும் அவருக்கும் பசி என்று ஒன்று இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு.

  சில நேரங்களில் எனக்கும் திகைப்பு வரும். ஒரு விதத்தில் இப்படி அவர்கள் மனநிலை மாறி இருப்பதும் நல்லதே. உள்ளூர ஒரு குறுகுறுப்பும். உண்மையில் நாம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நாம் அத்தனை அன்னியோன்னியம் இல்லையோ..

  ReplyDelete
 2. ஆம். இறந்தவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அன்று தான் கபகபவென ஜாஸ்தியாகப் பசிப்பதுபோல இருக்கும். மிகவும் யதார்த்தம் தான். பிரஸவ வைராக்கியமும், ஸ்மஸான வைராக்கியமும் என்பார்களே அது தான் இதுவோ!

  தமிழ்மணம்: 3

  ReplyDelete
 3. என்ன சொல்லனு தெரியல்லே.

  ReplyDelete
 4. <<<<<<>>>>>>>>>ரயிலில் வந்தவர்களுக்கு உதவியதில் தங்களுக்கு எரிச்சல் மிச்சம்..!!!! ஆனால் இந்த விஷயத்தில்...அதுவும் அதிகாலையில் உதவி செய்து உள்ளீர்கள்....இதில் தங்களுக்கு "மன திருப்தி" ஏற்பட்டிருக்கும்...நிஜம் தானே !!!!!!!!!

  ReplyDelete
 5. பசி வந்தாள் பத்தும் (பற்றும்) பறந்து போகும்...

  ReplyDelete
 6. ”நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே”
  --திருமூலர்

  ReplyDelete
 7. @ இராஜராஜேஸ்வரி: மயான வைராக்கியம்.... இருக்கலாம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 8. @ ரிஷபன்: // உள்ளூர ஒரு குறுகுறுப்பும். உண்மையில் நாம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நாம் அத்தனை அன்னியோன்னியம் இல்லையோ..// எனக்கும் இருந்திருக்கிறது.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. @ வை. கோபாலகிருஷ்ணன்: //பிரஸவ வைராக்கியமும், ஸ்மஸான வைராக்கியமும் என்பார்களே அது தான் இதுவோ!// ம்ம்ம்ம்... இருக்கலாம்...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. @ லக்ஷ்மி: சரிம்மா..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 11. @ அப்பாஜி: நிஜம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 12. @ கலாநேசன்: //பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...// உண்மை....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 13. @ சென்னை பித்தன்: //”நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே”// எத்தனை அர்த்தம் பொதிந்த வாக்கியம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 14. இது தான் நிதர்சனம்.
  நிறைய யோசிக்க வைத்த நிகழ்வு.

  ReplyDelete
 15. வைரம் பாய்ந்த வைராக்கியம்
  எனபது இதுதானோ??/
  ஆனாலும் கல்லையே கரைய வைப்பவைகள்
  இவ்வுலகத்தில் இருக்கத்தானே செய்கின்றன..

  ReplyDelete
 16. உணர்ச்சிமிகுந்த நிலையில், பாசமுடன் வருவது போலும் அத்தகைய நிலை.
  பசிவந்திடப் பத்தும் பறந்து போகுமாம்..

  என்னசார்.. இந்தவாரம் மீள்பதிவு வாரமா ?

  ReplyDelete
 17. @ சிவகுமாரன்: //இது தான் நிதர்சனம்// உண்மை நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்....

  ReplyDelete
 18. @ DrPKandasamyPhD": //உலக இயற்கை// ஆமாம் ஐயா....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 19. @ மகேந்திரன்: //ஆனாலும் கல்லையே கரைய வைப்பவைகள்
  இவ்வுலகத்தில் இருக்கத்தானே செய்கின்றன..// நிச்சயம் உண்டு நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 20. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்:

  //என்னசார்.. இந்தவாரம் மீள்பதிவு வாரமா ?//

  இல்லை இது தமிழ்மணம் நட்சத்திர வாரம். அதனால் காலையில் ஒரு புதிய இடுகை. மாலையில் ஒரு மீள்பதிவு.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் சார்.

  ReplyDelete
 21. மனசுக்கும் பசிக்கும் சம்பந்தம் இருப்பதில்லையே என்ன செய்ய?

  ReplyDelete
 22. @ ராஜி: அதானே... மனசும் வயிறும் வேறுவேறு தானே.. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது நிஜம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 23. எனக்கும் சென்னை பித்தன் அவர்கள் சொன்ன பாட்டுதான் நினைவுக்கு வந்தது உங்கள் பதிவை படித்தவுடன்.

  ReplyDelete
 24. @ கோமதி அரசு: ஓ உங்களுக்கும் அதே பாடல் நினைவுக்கு வந்ததாம்மா.....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 25. இதுதான் உண்மை உலகமய்யா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. @ புலவர் சா. இராமாநுசம்: //இதுதான் உண்மை உலகமய்யா!// ஆமாம் புலவரே....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.....

  ReplyDelete
 27. இது தான் உலகம்னு சொல்ல முடியாது,அவரவர் சுபாவத்தை பொருத்தது,மகன் போய்விட்டானேன்னு உருகி உருகி ஓரமாய் கிடந்த தாய்களையும் பார்த்திருக்கிறேன்....:(

  ReplyDelete
 28. @ ஆசியா உமர்: எல்லோரும் இப்படி இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது... நினைந்து நினைந்து உருகி, தன்னையே மாய்த்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை சகோ.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 29. போலியான பாசம் முகமூடி கிழிந்து அவல முகம் காட்டியது... அவ்வளவே..
  பசி வந்தால் பத்தும் பறந்து போகும் சரி தான்,
  ஆனால் மனசு சரி இல்லை என்றால் பசி எட்டியே பார்க்காது என்பதும் உண்மை தான்..

  ReplyDelete
 30. @ சூர்யஜீவா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 31. // என்ன தான் இருந்தாலும் அவருக்கும் பசி என்று ஒன்று இருக்கிறதே என்று தோன்றியது எனக்கு.//

  உண்மை வெங்கட்.
  இப்படித்தான் உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

  ReplyDelete
 32. பசியையும் உற‌க்கத்தையும் அவ்வளவு எளிதில் சமாளிக்க இயலாது. வாழ்க்கையின் நிதர்சனம் இது.

  ReplyDelete
 33. நிறைய யோசிக்க வைத்த பகிர்வு.

  ReplyDelete
 34. enga maamanaar iranthathum sudukattukku senruvittu kaariyangalai mudiththuvittu veettukku vanthom.saappidumbothu oruvar marubadiyum payasam kettaar.saappidaamal vethanaiyudan iruntha en maamiyaar paarvaiyileye avarai posukkinaar.

  ReplyDelete
 35. ஒளவைப்பாட்டியின் நல்வழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது.
  "ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்....."

  ReplyDelete
 36. நினைவுகள் இருக்கலாம் சோகத்தை ஒரு நிலையில் மறந்து விடுவது நல்லது..

  ReplyDelete
 37. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்லி வெச்சுட்டுப் போனது நினைவுக்கு வருது..

  ReplyDelete
 38. @ ராம்வி: //இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது// ஆமாம் சகோ...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 39. @ மனோ சாமிநாதன்: //பசியையும் உற‌க்கத்தையும் அவ்வளவு எளிதில் சமாளிக்க இயலாது. வாழ்க்கையின் நிதர்சனம் இது.//

  ஆமாம்.. சமாளிப்பது மிகக் கஷ்டமான ஒன்று தான்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. @ தமிழன்: உங்களுக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது போலும்......

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. @ மாதேவி: உங்களுக்கு ஔவையார், இன்னும் இருவருக்கு திருமூலர்... ம்ம்ம்ம். பெரிய ஆட்கள் தான் நினைவுக்கு வந்து இருக்காங்க... எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொல்லிட்டு போய் இருக்காங்க...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 43. @ பத்மநாபன்: சரிதான் பத்மநாபன் சார்.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. @ அமைதிச்சாரல்: வாயும் வயிறும் வேறவேறதானே...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. //சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார். //

  சரி. வந்து படுங்க.தூக்கிட்டுப்போய் எரிச்சுடலாமுன்னு கூப்புட்டு இருக்கணும்.

  கிழக்குடல் பசி தாங்காது....பாவம்!

  ReplyDelete
 46. @ துளசி கோபால்: //சரி. வந்து படுங்க.தூக்கிட்டுப்போய் எரிச்சுடலாமுன்னு கூப்புட்டு இருக்கணும். //

  நண்பர் நரேஷ் அப்படித்தான் சொன்னார் - “பாட்டி, இப்பதான் ஒண்ணு வாங்கினோம்... இன்னும் ஒண்ணும் வாங்கறது எங்களுக்குக் கஷ்டம் இல்ல கேட்டேளா!” என்று.....

  இருந்தாலும் நீங்கள் சொன்னது போல “கிழக்குடல் பசி தாங்காது பாவம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. ”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று பட்டினத்தார் கூறியுள்ளார். அதுவுமில்லாமல், தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா? அதுதான்.

  ReplyDelete
 48. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு....

  ReplyDelete
 49. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

  ReplyDelete
 50. என்ன சொல்வது, ஒன்றும் சாப்பிடமலும் இருக்க முடியாது, சில பேர் துகக்த்தை வெளியில் ரொம்ப காண்பித்து கொளவார்கள், சில பேர் மனதிலேயே பூட்டி அடக்கி வைத்து விட்டு ஆக வேண்டிய காரியத பார்ப்பாங்க

  ReplyDelete
 51. @ ஆமினா: என்னையும் நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 52. @ ஜலீலா கமல்: உண்மை தான்.... ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....